ஊழலை வெளிக்கொண்டு வந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம்: கேரளத்தில் தான் இந்த கொடுமை
ஊழலை வெளிகொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி, பணியிட மாற்றம் செய்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சாந்தாமணி, கேரள மாநில அரசின் பால்வளத்துறையில் டி.ஓ (Directory officer)-ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள ஓர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.ஏழு கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை சாந்தாமணி கண்டுபிடித்துள்ளார். இதனால், கூட்டுறவு சங்கத்தில் உள்ள அதிகாரிகளும், ஆளும் சி.பி.எம் பிரமுகர்களும், சாந்தாமணிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சாந்தாமணிக்கு எதிராக பல்வேறு பொய் புகார்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சாந்தாமணியை ஆலத்தூர் பகுதிக்கு பணி இடமாற்றம் செய்துள்ளது கேரள அரசு. இது பழங்குடி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே மாற்ற வேண்டும் என்று நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவந்த நிலையில், பழங்குடி மக்கள், தாய்குல சங்கம், கேரள அ.தி.முக. உள்...