தூத்துக்குடியில் திருமண வீட்டில் தகராறு! தூங்கிக் கொண்டிருந்தவரை கொலை செய்த 6 பேர் கைது - தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.!

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் I பெருமாள்நகரைச் சேர்ந்த சங்கர் மகன் ராமநாதன் (எ) ரமேஷ் (20) என்பவர் கடந்த 28.08.2021 அன்று இரவு தனது நண்பரான சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தை துரை மகன் டேவிட் (23) என்பவரது வீட்டு மொட்டை மாடியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் 29.08.2021 அன்று அதிகாலையில் மொட்டை மாடியில் ராமநாதன் (எ) ரமேஷ் மர்ம நபர்களால் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமநாதன் (எ) ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பத...