Posts

Showing posts from January, 2022

திமுக இரண்டாவது கட்ட பட்டியல் வெளியீடு

Image
 திமுக ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் கூட்டணி பலத்தோடும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குகிறது.  உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுகவில் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் வேலூர் மாநகராட்சி உள்பட வடக்கு மாவட்ட நகராட்சிகளும், தென் மாவட்டங்களை சேர்ந்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டியலை இங்கு கிளிக் செய்து காணலாம்.

"எங்கள் குழந்தைகளை வளர்த்தெடுப்பதுதான் எங்களுக்கு முக்கியம்” - எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

Image
“தற்போதைய தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. எதிர்வரும் தேர்தல் குறித்து அப்போது முடிவெடுப்போம். எங்கள் குழந்தைகளை வளர்த்தெடுப்பதுதான் எங்களுக்கு முதன்மையானது” “அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து அவதூறு பேசிய நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வருத்தம் தெரிவித்துவிட்டார்; தவறு செய்யாதவர்கள் இல்லை!” - எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி.

அதிமுக மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Image
உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக தை அமாவாசை நாளான இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.  ஏற்கனவே இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிமுகவின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் வேலூர் மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், திண்டுக்கல், கும்பகோணம், ஈரோடு மாநகராட்சி, தஞ்சாவூர் மாநகராட்சி, ஓசூர் மாநகராட்சி,  நாகர்கோவில் மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் குன்னூர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், தென்காசி, உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை இங்கு கிளிக் செய்து காணலாம். டவுன்லோடு செய்தும் பார்க்கலாம். 

நெல்லையில் தேர்தல் பகையால் தீர்த்து கட்டப்பட்ட திமுக பிரமுகர். முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்; பரபரப்பு தகவல்கள்

Image
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் திமுக 38 வார்டு செயலாளராக இருந்தவர் அபே மணி என்ற பொன்னுதாஸ் ( வயது 38 ). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பொன்னுதாஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.  பொன்னுதாஸின் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உடற்கூறாய்வுக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொலை செய்யப்பட்ட  பொன்னுதாசின் தாயார் பேச்சியம்மாள் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளார். இதற்கான நேர்காணலில் தாயார் பேச்சியம்மாள் கலந்து கொள்ள நிலையில் உட்கட்சி பூசலில் ஏற்பட்ட மோதலால் நடந்த கொலை என போலீசார் சந்தேகிக்கின்றனர் மேலும் வரும் 1ம் தேதி பாளையங்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ்,  குத்தகைக்கு எடுத்து திறக்க உள்ளார்.  இதனால் தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையா என்ற அடிப்படையிலும் காவல்துறையினர்  விசாரணையை தொட...

கூலி உயர்த்துவதில் தொடரும் இழுபறி: விசைத்தறியாளர்கள் 2000 பேர் ஆர்ப்பாட்டம்

Image
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் அவிநாசி அருகே உள்ள தெக்கலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.  இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்கள் வேலை. அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவேயில்லை. வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வால் இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலபேர் வேறு தொழிலை தேடியும், இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி சொத்துக்களை இழந்து தவித்து வருகின்றனர்.   கடந்த 20...

பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா!

Image
  மத்தியப் பிரதேசம்: பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி! தான் தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா வராது என கடந்தாண்டு மே மாதம் பிரக்யா சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!

"கூட்டத்தை விட்டு வெளியே போ" - கரூர் காங்கிரஸ் - திமுக லடாய் -காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வெளியேற்றிய கரூர் திமுகவினரால் சர்ச்சை.!

Image
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த தன்னை திமுக., வினர் வெளியேற்றிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://twitter.com/airwindraj/status/1488068599776382976?t=aC1xz4dBmvBF0HPXTPL1-Q&s=19 கரூர் மாவட்ட திமுக., அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பி, அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜோதிமணி இதுகுறித்து கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுக.,வினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன்னை வெளியேற சொல்வது தான் திமுகவின் கூட்டணி தர்மமா? இது தான் திமுக., வில் பெண்களுக்கு தரும்  மரியாதையா...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 1,650 பறக்கும் படைகள் அமைப்பு- 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பறிமுதல்!

Image
தகுதியான ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Image
மக்கள் நீதி மய்ய ஈரோடு வடகிழக்கு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு..., மக்கள் நீதி மய்யம் கட்சி கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் முதல்கட்டமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஜி.சி.சிவக்குமார் வேட்பாளர்களின் பட்டியிலை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.  அதன் விவரம் வருமாறு. கோபி நகராட்சியில் 1வது வார்டு எஸ்.சத்தியமூர்த்தி. 2வது வார்டுதாரா பேகம், 4வது வார்டு எம்.திலகா, 8வது வார்டு வி.பிரதீப்குமார், 9வது வார்டு சி.மணிகண்டன், 10 வது வார்டு ஜெ.டோனி. 12 வது வார்டு என்.கே.சக்தி, 15 வது வார்டு பி.சதீஸ்குமார், 22வது வார்டு ஜி.பி.கார்த்திகேயன், 23 வது வார்டு ஜி.எஸ்.தீபா, 26 வது வார்டு எ.தங்கராஜ், 27வது வார்டு கே.பி.மணிகண்டன், 30 வது வார்டு எ.அமுதா, லக்கம்பட்டி பேருராட்சி 2வது வார்டு ஆர்.கோகிலா, 13 வது வார்டு பி.குணசேகரன், நம்பியூர் பேரூராட்சி 10வது வார்டு ஆர். பனிமலர், சத்தியமங்கலம் நகராட்சி 4வது வார்டு என். விக்னேஷ், 23 வது வார்டு மாணி...

தை அமாவாசை - கடற்கரை பகுதிகளில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.!

Image
தூத்துக்குடியில் தை அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான கடற்கரைகளில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆண்டுதோறும் தை அமாவசை நாளில் கடற்கரையோரங்கள், ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும்  அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரை, ஆற்றங்கரை  பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும்  அதிக அளவில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்து வருகின்றனர். இதனை முன்னிட்டு 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரை பகுதிக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.  இந்...

ஆன்லைனில் ‘ப்ரீ பயர்’ விளையாடும் குழந்தைகள் - பெற்றோர் கண்காணிக்க எஸ்.பி.ஜெயக்குமார் வேண்டுகோள்.!

Image
ஆன்லைனில் ‘ப்ரீ பயர்’, ரம்மி போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் வைத்திருக்கும் பணத்தைதிருடி செல்போனில் இணையதளத்திற்கு செலவு செய்து "ப்ரீபயர்” போன்ற ஆன் லைன் விளையாட்டுக்களில் விளையாடி வருவதாக போலீஸ் துறைக்கு தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் சிறுவர்கள் தங்களை அறியாமல் மூழ்கி தங்களது படிப்பையும், நேரத்தையும் வீணடித்து வருகின்றனர். இது அவர்களது உடல் நலத்தையும், வாழ்க்கை யையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். மேலும் வாலிபர்கள் உள்பட பலர் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட் டுக்களில் விளையாடி விட்ட பணத்தை பெற்று விடலாம் என்று மேலும், மேலும் வட்டிக்கு கடன் வாங்கி விளையாடி தற் கொலை செய்து வருவதை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. எனவே, பொதுமக்கள் தங்களது பிள்ளைகள் மீது அடிக்கடி கவனம் செலுத்தி இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களில் ...

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் -60 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Image
தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டியில் குப்பை கிடங்கில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள்.!

Image
ஆண்டிபட்டி , ஜன. 31- இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற சந்தேகத்தில் மோசமான கட்டிடத்தில் ஆண்டிபட்டியில் குப்பை கிடங்கில் இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வேலப்பர் கோவில் சாலையில் ஆண்டிபட்டி பிட் 1 மற்றும் பிட் 2 ,உள்ளிட்ட 2 கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அருகிலேயே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது .சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு வருவாய் துறை சார்ந்த சான்றிதழ் பெறுவதற்கு, விண்ணப்பங்கள் பெறுவதற்கும், அரசின் சலுகைகள் பெறுவதற்கும் தினந்தோறும் இங்கு வருவது வழக்கம்.  இந்த இரண்டு கட்டிடங்களும் மிகவும் பழமையானவை. இப்ப விழுமோ? எப்ப விடுமோ? என்ற அச்சத்தில்  உயிர் பயத்துடன் இங்கே அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இதற்கு அருகாமையிலேயே பெரிய சாக்கடை ஓடுவதால் கொசுத்தொல்லை ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.  மேலும் இதன் அருகிலேயே சிறுநீர் கழிக்கும் இடமும் இருப்பதால் மூத்திர வாடையில் தான் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில் குப்பை கிடங்காக காட்ச...

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

Image
  இராமேஸ்வரம் பிப் 01 இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆடி மற்றும் மகாளய அமாவாசைகளில் குரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிக்காததால் இந்த தை அமாவாசையில்  அனைத்து பக்தர்களும் மொத்தமாக ராமேஸ்வரத்தில் குவிந்தனர் தன்னோடு வாழ்ந்து முடித்த முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்  இதனால் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் நிர்வாகம் சார்பில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வழிகாட்டுதல் முறைகளை கடைபிடித்து அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர் இதில்  645 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

தாராபுரத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி

Image
 திருப்பூர்: சாலக்கடை பாலத்தில் முன்னே சென்ற வாகனத்தை முந்திச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர். திருப்பூர் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் வழியாக கோவை நோக்கி வேகன்ஆர் வாகனம்  சென்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.  அதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், குலசேகர பட்டினம் தெருவைச் சேர்நத ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் (61) அவரது சகோதரி பிரேமலதா (45) மற்றும் பிரேமலதா மகள் சுபத்ரா ஆகியோர் பயணம் செய்தனர் அவர்களது வாகனம், முன்னே சென்ற வாகனத்தை முந்திச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து குப்புற கவிழ்ந்தது. இதில் கல்யாணசுந்தரம், பிரேமலதா ஆகியோர் பலியானார்கள். டிரைவர் நாகராஜூம் பலியானார். கோவை வேளாண் கல்லூரியில் படித்து வரும் சுபத்ராவை கல்லூரி விடுதியில் விடுவதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. பலியான கல்யாணசுந்தரம் மற்றும் பிரேமலதா ஆகியோர் சகோதரர்கள். பிரேமலாதவின் மகள்  சுபத்திரா (19) பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூலனூர் போல...

அதிமுக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல் வெளியீடு:

Image
தமிழக அரசியல் களம் இன்று காலை முதல் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழக அரசியலில் எதிர்க்கட்சியான அதிமுக -பாஜக கூட்டணியில் சீட்டு ஒதுக்குவதில் முரண்பாடு ஏற்ப்பட்டது.  இதனால் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில் உடனடியாக அதிமுக தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.  இந்த பட்டியலை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இங்கே கிளிக் செய்யவும்.

திருப்பூர் மாநகராட்சி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: முன்னாள் துணை மேயர் செந்தில்குமார், 22 வயது மாணவிக்கு வாய்ப்பு

Image
 திருப்பூர் மாநகராட்சியில், திமுக கட்சியுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதில் 25 வது வார்டில் வக்கீல் பூபேஷ் போட்டியிடுகிறார். 30 வது வார்டில் ஜி.முத்துலட்சுமி, 48 வது வார்டில் விஜயலட்சுமி கோபால்சாமி, 51 வது வார்டில் கே.செந்தில்குமார், 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.  இதில் 51 வது வார்டில் போட்டியிடும் கே செந்தில் குமார் ஏற்கனவே திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். 55வது வார்டில் போட்டியிடக்கூடிய தீபிகா அப்புக்குட்டி 22 வயதான சட்டக்கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.    

பாஜக தனித்து போட்டி - அண்ணாமலை

Image
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  #LocalBodyElections #AIADMK #BJP #Annamalai

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றம்!

Image
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு! #CBI | #MaduraiHC | #Thanjavurcase

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

Image
மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு! கடந்த 28ம் தேதி பாஜக இளைஞரணி நிர்வாகி வினோஜ் மீதும் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் கருத்து பதிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்

கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த கணவன் - மிளகாய் பொடி தூவிஅடித்துக் கொன்ற மனைவி!

Image
தென்காசி அருகே கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த கணவனை முகத்தில் மிளகாய் பொடி தூவி கட்டையால் அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் ( 40). கொத்தனார் . இவரது மனைவி நாச்சியார் ( 35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், முருகனுக்கு வெறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை நேற்று முன்தினம் முருகன் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் நாச்சியாருக்கும், முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகன் அழைத்து வந்த பெண்ணை நாச்சியார் தாக்க தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் கை கலப்பாகியுள்ளது.. அப்போது, அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சண்டையை தடுத்து சமாதானம் செய்துள்ளனர். அதன் பின்னர் அன்று இரவு முருகன் குடித்து விட்டு வந்து மனைவி நாச்சியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரும் மாறி மாறி தகாத வார்த்தைகளில் பேசி சண்டையிட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம்டைந்த நாச்சியார் முருகன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி வீட்டில் இருந்த கட்டையை கொண்டு சரமாரி...

திருப்பூரில் பாதாள சாக்கடைத் திறப்பு விழுந்த நபர் பரிதாப பலி

Image
 திருப்பூர் எம்எஸ் நகர் பகுதியில் மூடப்படாத சாக்கடை குழியில் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை கால்வாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் 18 வது வார்டு உட்பட்ட எம்எஸ் நகர் அருகே உள்ள பள்ளிவாசல் தெரு வி.ஆர்பி.நகரில் இதேபோல பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதன் திறப்புகள் மூடப்படாமல் இருந்திருக்கின்றன.  இந்தநிலையில் நேற்று அந்த வழியாக சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதில் குப்புற விழுந்து உள்ளார். அதிகாலை 4 மணிக்கு அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் உள்ளே விழுந்த அவரின் கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  போலீசாருக்குு தகவல் தெரிவிக்கப்பட்டு வடக்கு போலீசார் வந்து அவரது பிணத்தை மீட்டு அவர் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர் யார் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என இன்னும் தெரியவில்லை.  பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த நிலையில் அதன் சிறப்புகள் மூடப்படாமல் இருந்தது இந்த உயிரிழப்புக்கு காரணம் என அந்...

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலரை கண்டித்து நாளை த.மா.கா சார்பில் ஆர்ப்பாட்டம்.!

Image
தமிழக அரசின் உத்தரவுக்கு விரோதமாகவும், தமிழக முதல்வரின் உத்தரவுக்கு எதிராகவும் நடந்து வரும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (31.01.2022) கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் தமிழகத்தில் கரோனா  கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து  ஆலய வழிபாடுக்கு இருந்த தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து இந்துக்களின் மிக முக்கிய நாட்களில் ஒன்றான தை அமாவாசை தினத்தன்று பிரசித்திபெற்ற திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் சுவாமி கோயிலில் பத்திர தீபம் மற்றும் இரவு சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் மட்டும் சுவாமி புறப்பாடு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே மிகு...

உள்ளாட்சி தேர்தல் - முதல் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க.

Image
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க.  முதற்கட்டமாக, கடலூர், விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. 

கடலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமை அறிவிப்பு

Image
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கட்சிகள் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் அதிமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில்,  கடலூர் மாநகராட்சியின் மாநகராட்சி மாநகராட்சி மன்றவார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகர உட்பட்ட நகராட்சிமன்ற வார்டு உறுப்பினர் மன்ற வார்டு உறுப்பினர் மன்ற வார்டு உறுப்பினர்ஆகியபதவிகளுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாளை காலைக்குள் மற்ற வேட்பாளர் பட்டியல்களை தலைமை அனுப்பும் என தெரிகிறது.  அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து காணலாம்: லிங்க் இதோ: கிளிக் பண்ணுங்க

காந்தியை கொலை செய்தது கோட்சே’ - அப்படி சொல்லக் கூடாது என தடுத்த காவல்துறை அதிகாரிகளால் சர்ச்சை - தலைவர்கள் கண்டணம்.!

Image
' கோவையில் காந்தியின் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, காந்தியை கொலை செய்தது கோட்சே என முழக்கமிட கூடாது என காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.                  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சிவானந்தா காலனியில், காந்தி நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்தார். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள். உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்தபோதே, ‘காந்தியை கொலை செய்தது கோட்சே’ என்கிற பகுதியை வாசிப்பதற்கு இடையூறாக மாநகர காவல்துறை துணை ஆணையரும், காவல்துறை ஆய்வாளரும் பாதியில் தடுத்துள்ளனர். ‘காந்தியை ...

சென்னிமலை எக்கட்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள கல்குவாரிகள் நேரடியாக உண்மை அறியும் குழுவால்- கள ஆய்வு

Image
ஈரோடு மாவட்டம் - பெருந்துறை வட்டம் - சென்னிமலை ஒன்றியம் - எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள 9 கல் குவாரிகள் தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்குவதாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மற்றும் பல்வேறு ஆதாரங்களுடன் தொடர்ந்து ஊர் மக்கள் புகார் அளித்து வந்தனர். எனவே 9 கல் குவாரிகளும், பெரியநாயகி அம்மன் எம்சாண்ட் தொழிற்சாலை (1), பானு கோபால் கிரஷர்(1) ஆகியவை என்னென்ன சட்டவிதிகளை மீறி உள்ளனர் என்பதை நேரடியாக பார்த்து, கள ஆய்வு செய்தனர். எக்கட்டாம்பாளையம் ஊர்மக்களின் அழைப்பின் பேரில் கள ஆய்வுக்கு வருகை தந்த உண்மையறியும் குழுவில்,   தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர். ஈசன், கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர முகிலன், அமராவதி ஆற்றில்  மணல் கொள்ளையை சட்டப் போராட்டம் மற்றும் மக்களை திரட்டியும் போராடி தடுத்து நிறுத்திய சாமானிய மக்கள் கட்சி நிறுவனர் முனைவர் ப. குணசேகரன்,  திண்டுக்கல் காளிப்பட்டி குளம் உட்பட பல்வேறு குளங்களின் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திய நேர்...

நெல்லையில் காந்தியடிகளின் நினைவு தினம் - தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்தார்

Image
நெல்லை,ஜன.30- காந்தியடிகளின் 74 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை  கோட்டூர் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் ,மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் உதயகுமார்,ராஜகிளி ஐயப்பன், கவி பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ரயில்வே கிருஷ்ணன்,பரணி இசக்கி,கே.எஸ்.மணி, மண்டலத் தலைவர்கள் எஸ்.எஸ்.மாரியப்பன் கோட்டூர் முருகன், ரசூல் மைதீன், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.மாரியப்பன்,சம்சா செய்யது உட்பட பலர் கலந்து கொண்டனர்

முன்னாள் பாஜக தலைவர் மற்றும் போலீஸ் SP மீது பெண் சப் இன்ஸ்பெக்டர் பலாத்கார புகார்.!

Image
முன்னாள் பாஜக தலைவர், மற்றும் காவல் துறை கூடுதல் எஸ்பி உட்பட பலர் தன்னை கும்பல் பலாத்காரம் செய்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பில்வாராவில் உள்ள பிரதாப்நகர் காவல் நிலையத்தில் பலடா உட்பட 12 பேர் மீது புகாரளித்திருப்பது அம்மாநிலத்தில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது புகாரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த காவல்துறை கூடுதல் எஸ்பி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  ஜெய்ப்பூர்: பில்வாராவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சனிக்கிழமை அளித்துள்ள புகாரில், அஜ்மீரைச் சேர்ந்த முன்னாள் பாஜக தலைவர் பன்வர் சிங் பலடா தன்னை 2018 ஆம் ஆண்டு முதல் பலமுறை கற்பழித்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், அமைதியாக இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் குற்றம் சாட்டி புகாரளித்துள்ளார்.  மேலும் அவர் தனது புகாரில் ஏஎஸ்பி அந்தஸ்த்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் குப்தா மற்றும் அரசியல்வாதியின் ஊழியர்கள் உட்பட மேலும் 11 பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரும் மற்றவர்களும் தன்னை ஒவ்வொரு முறையும் அ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : கோவில்பட்டி நகராட்சியில் மதிமுகவிற்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு

Image
  கோவில்பட்டி நகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  மேலும் கடம்பூர், விளாத்திகுளம், புதூர் பேரூராட்சிகளிலும் மதிமுகவுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. 1.கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்: 11,15,19,20,24,26 2.கடம்பூர் பேரூராட்சி வார்டு எண்:10 3.விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு எண்:2 4, புதூர் பேரூராட்சி வார்டு:15

மத துவேசத்தை வீழ்த்தி, சகோதரத்துவத்தை பரப்புவோம்!" - பினராயி விஜயன்

Image
  "காந்தியடிகளின் நினைவு நாளான இன்று மத துவேசத்தை வீழ்த்தி, சகோதரத்துவத்தை பரப்புவோம்!" - பினராயி விஜயன் காந்தியடிகளை படுகொலை செய்த வகுப்புவாத சக்திகள், மதத்தின் பெயரால் மக்களை இன்றும் பிளவுபடுத்துகின்றனர்!” என பினராயி விஜயன் சூளுரை #MahatmaGandhi | #PinarayiVijayan

திருப்பூர் பெண் தாயம்மாளுக்கு பிரதமர் பாராட்டு!

Image
இளநீர் விற்று கிடைக்கும் வருமானத்தில், பள்ளி ஒன்றுக்கு 1 லட்சம் நன்கொடை அளித்த திருப்பூரை சேர்ந்த தாயம்மாளுக்கு மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு!  தாயம்மாள் போல உதவி செய்வதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும் என பிரதமர் மோடி பெருமிதம். அவர் தனது உரையில் இந்தியா கேட் அருகே உள்ள அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவு சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் நிறைய பேர் தனது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அமர் ஜவான் ஜோதி வீரமரணமடைந்த வீரர்களுக்கு சிறந்த மரியாதை என பல தியாகிகள் எனக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு நாடுகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இந்த போஸ்ட் கார்டுகள் வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இளநீர் வியாபாரம் செய்யும் தாயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். வறுமையில் வாடும் நிலையிலும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடை அளித்தார். இதை செய்ய அவருக்கு மிகப் பெரிய மனம் வேண்டும் என்று தெரிவித்தார்.

"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை"- காந்தியடிகளின் நினைவுநாளில், முதலமைச்சர் உறுதி.!

Image
மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! - என காந்தியடிகளின் நினைவு நாளில் அவருடைய சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உறுதிமொழி.

கன்னியாஸ்திரிகளை மிரட்டி பைக் மற்றும் செல்போன் பறிப்பு.! – ஒருவர் கைது.!

Image
கன்னியாஸ்திரிகளிடம் செல்போனையும் பைக்கையும் பிடுங்கி வைத்துக் கொண்டு 10 நாட்களாக மிரட்டிய இந்து அமைப்பின் நிர்வாகி கணேஷ்பாபுவை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது , கொலை மிரட்டல், வழிப்பறி, மற்றும் பெண்களை துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

திருப்பூரில் திமுக, அதிமுகவில் மேயர் சீட் யாருக்கு? பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் எந்த கட்சியில் யார் போட்டியிடப் போகிறார்கள், வார்டுகள் எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. திருப்பூர்  மாநகராட்சியை பொருத்தவரை மாநகராட்சி எல்லைக்குள் மூன்று தொகுதிகள் வருகிறது. இதில் 21 வார்டுகள் கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வசம் உள்ளது. 29-வார்டுகள் கொண்ட திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வசம் உள்ளது. மேலும் 10 வார்டுகள் கொண்ட பல்லடம் தொகுதியும் அதிமுக வசம் உள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக திருப்பூர் மேயர் பதவியைக் கைப்பற்றுவதற்காக தீவிர திட்டம் தீட்டி வருகிறது. அதே நேரத்தில் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதாக கூறி திருப்பூர் மாநகராட்சி பதவிகளை கைப்பற்ற அதிமுகவினரும் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளிலும் இன்னமும் வார்டு வாரியாக எந்த கட்சி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தெரியவில்லை.  இந்த விவரங்கள் இன்று அல்லது நாளை தெரியவரும். இந்த நிலையில் திருப்பூர் திமுகவில்...

நெல்லையில் பயங்கரம்.! -திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை.!

Image
திருநெல்வேலி : பாளையங்கோட்டை 38வது வார்டு திமுக செயலாளர் பொன்னுதாஸ் ( எ) அபயமணி பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நெல்லை மாநகர 38வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்கிற அபே மணி, அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் பாளையங்கோட்டையிலுள்ள அவரின் வீட்டின் அருகே சென்றபோது, ​​அங்கு வந்த மர்மநபர்கள் மணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடி உள்ளனர். சத்தம் கேட்டு வந்த பொன்னு தாஸின் தாயார் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இரவு 11 மணி என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், போலீசார் அபேமணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் மதுபான பார் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டு இருக்ககூடும் ...

2020ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியீடு.!

Image
BREAKING தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் தேர்வு 2020ம் ஆண்டிற்கான தமிழகத்தின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. #PoliceStation

ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு.!

Image
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும் QR-ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும், ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் தொடரும் நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், மண்டல, வட்டார அளவில் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. ரேஷன்பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, இதனை தடுக்கும் விதமாக குடும்ப தல...

தூத்துக்குடி மாநகராட்சியில் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த பட்டதாரி பெண்.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி 28வது வார்டில் போட்டியிட இளம்பெண் ஒருவர் முதல்முதலாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது.  மாநகராட்சில் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு படிவங்களை பெற்றுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.  இந்நிலையில் இன்று  தூத்துக்குடி மாநகராட்சி  28வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட முகம்மது சாலிபுரத்தைச் சேர்ந்த முகம்மது பாபு மகள் தன்வீர் சமீனா (24) என்ற இளம்பெண் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  இவர் தூத்துக்குடி தனியார் மகளிர் கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் தனது வேட்பு மனுவை உதவி தேர்தல் அலுவலர் ரங்கராஜனிடம் வேட்பு மனுவை அளித்தார்.  மனுவை தாக்கல் செய்த பின்னர் அவர் கூறுகையில், படிக்கின்ற காலத்தில் அதிக அளவில் எங்களது பொதுமக்களுக்கு சேவை செய்துள்ளேன். தற்போது நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக செயல்ப...

சத்தியமங்கலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான அனைத்து கட்சி கூட்டம்.!

Image
புஞ்சைபுளியம்பட்டி, மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள், கோவிட்- 19 வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து கட்சிக் கூட்டம்.  எதிர்வரும் 19ம் தேதி நடத்தவுள்ள நகர்பற உள்ளாட்சி களுக்கான தேர்தல் நடத்தை விதிகள்குறித்தும் .கோவிட் - 19 வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில், நகராட்சி ஆணையர்  சக்திவேல்  தலைமையிலும், சத்தியமங்கலம் நகராட்சியில் நகராட்சி பொறியாளர் சிவக்குமார் தலைமையிலும்  நடைபெற்றது. மேற்படி கூட்டங்களில், புஞ்சை புளியம்பட்டியில் காவல் ஆய்வாளர்  வேலுச்சாமி, மற்றும் இரண்டு நகராட்சிகளில் நகராட்சிமேலாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், தேர்தல் பணி அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகி களும் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், கருத்துக் களையும் கேட்டு அறிந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால், தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்கவும்,   வேட்புமனு தாக்கலின் போது கடைபிடிக்கக் வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மற்று...