Posts

Showing posts from February, 2024

*மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படிகெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன்அவர்களால் ரூ.10000 நன்கொடை வழங்கப்பட்டது*

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.K. A. செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி சூரியம்பாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் திருவிழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் மற்றும் அவர்களால் ரூ.10000 நன்கொடை வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர் திரு. தங்கமணி(சங்கீதா) மற்றும் கோயில் பூசாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

*நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றதுஅதனை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு நமது சங்கத்தின் மாநில நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் முன்னிலையில் விழா குழு நிர்வாகிகளிடம்அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது *

Image
  நம்பியூர் சந்தன நகர் ஸ்ரீ சந்தன கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது அதனை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு நமது சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார் மற்றும் போலநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து தலைவர் திரு சோமு நாடார் அவர்கள் தலைமையில் நமது சங்கத்தின் சார்பாக அன்னதானத்திற்கு அரிசி வழங்கப்பட்டது நமது நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் முன்னிலையில் விழா குழு நிர்வாகிகளிடம் வழங்கிய மகிழ்ச்சியான தருணம். இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார் ஈரோடு மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சாரதி நாடார், கோவில் விழா குழுவின் தலைவர் மற்றும் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

கடைப் பெயர் இல்லாமல் ரசீது கொடுத்த உணவகம் ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!

Image
 கடைப் பெயர் இல்லாமல் ரசீது கொடுத்த உணவகம் ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு! கடைப் பெயர் மற்றும் கையெழுத்து இல்லாத ரசீது கொடுத்த உணவகம் ரூ.30ஆயிரம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.  தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சார்ந்த சிவஞானம் என்பவர் மில்லர்புரத்திலுள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கியுள்ளார். அதற்கு உணவகத்தின் ஊழியர் ரசீது கொடுத்துள்ளார். அதில் எந்த விதமான கடைப் பெயரோ, முத்திரையோ, கையெழுத்தோ இல்லாமல் உணவிற்கான தொகை மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை பெற்றுள்ளனர்.  அப்போது புகார்தாரர் உண்மையான பில் எனில் முறைப்படி ஜி.எஸ்.டி. விவரங்களோடு இருக்க வேண்டும். இல்லையெனில் ஜி.எஸ்.டி. போட்டு பணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். அதற்கு உணவகத்தின் ஊழியர் இதை உணவக உரிமையாளரிடம் தெரிவிப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். வெற்று பில்லை வழங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிவஞானம் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ...

கோவையில் குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தி்ல் ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் புதிய கிளையை துவக்கியது

Image
கோவை குனி யமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில்  குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தி்ல் கிடைக்கும் வகையில் ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் (First Cry.com) தனது புதிய கிளையை துவக்கியது… பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பிரத்யேக மெலிதான ஆடைகள்,விதவிதமான தொட்டில்கள்,குழந்தைகளுக்கான பிரத்யேக மெத்தைகள் என பிறந்த குழந்தைகள் முதல் சுமார் ஆறு மாதம் ஆன குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில்  (First Cry.Com) ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது..தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்நிறுவனத்தின் கிளைகள் கோவையில் காந்திபுரம்,ஆர்.எஸ்.புரம்,அவினாசி சாலை என நகரின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில் ஃபர்ஸ்ட் க்ரை டாட் காம் பிரம்மாண்டமாக தனது கிளையை துவங்கியுள்ளது.. புதிய ஷோரூம் துவக்க விழா அதன் பங்குதாரர்கள் ஷபீக் அகமது,சஷார் அகமத்,மற்றும் முகம்மது ஜுனூன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர...

கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

Image
கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கலந்து கொள்ளக்கூடிய அனைத்து இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்ணீர் பாட்டிலை கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக தேர் திருவிழாவிற்கு வந்திருந்த அனைத்து சமுதாய மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தண்ணீர் பாட்டில் வழங்கினார்கள் இந்த நிகழ்வு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோவையில் வாழக்கூடிய அனைத்து இந்து முஸ்லிம்  சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற சாட்சியோடு இந்த நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் தலைவர் அமானுல்லா, முத்துவல்லி ஜாபர் அலி , பொருளாளர் பக்கீர் முகமது, செயற்குழு உறுப்பினர்கள் ஆஷிக் அஹமது, முகமது இப்ராஹிம், ஷாஜகான், இதயத்துல்லா, நிஜாமுதீன், நவ்ஷாத் அலி, மற்றும் மகா சபை உறுப்பினர்கள் அசாருதீன், சாதிக், முஸ்தபா, என அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வில் வந்திருந்த பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கினார்கள்

கோவை சின்னவேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Image
கோவை சின்னவேடம்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில்  நடைபெற்ற  அறிவியல் கண்காட்சியில், அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ்,என  துறை சார்ந்த மாதிரிகளோடு பண்டைய கால  தமிழ்பாரம்பரிய  வாழ்க்கை முறையை காட்சி படுத்திய அறிவியல் கண்காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.. கோவையில்  பள்ளி மாணவ,மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள  ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்றது.. அறிவியல் மேதை சர்.சி.வி ராமன்  பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இதில், மழலையர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு  வரையிலான மாணவ- மாணவிகள் , அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் என அனைத்துத் துறைகளிலும்   அறிவியல் படைப்புகளையும் மாதிரிகளையும்  உருவாக்கித் தங்கள் தனித் திறன்களை வெளிக்காண்பித்தனர்- இதில் காற்றாலை மின்உற்பத்தி, எரிமலைகள் இயங்கும் விதம், சூரியக் குடும்பம், மண் அரிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் புதுவகையான மாதிரிகள்  செய்து கண் காட்சியில் காட்சிப்படுத்தினர்.மேலும் நமது தமிழ் பாரம்பரிய  பண்டைய...

டிரைவிங் லைசன்ஸ் இனி பதிவு தபாலில் தான் அனுப்பப்படும்... முகவரியை உறுதி செய்கிறது போக்குவரத்து துறை

Image
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசாணை எண் (D)738, உள் (போக்குவரத்து-7) துறை நாள் 24.05.2022, அரசாணை எண் (ப) எண் 1050 உள் (போக்குவரத்து-7) துறை நாள் 04.09.2023 மற்றும் போக்குவரத்து ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண்:02/2024 யில் கீழ்க்காணும் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. a) 28.02.2024 முதல் அனைத்து ஒட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக்கூடாது. b) வாகன் மற்றும் சாரதி மென்பொருளின் தவறான அலைபேசி எண் மற்றும் முகவரி தவறாக குறிப்பிட்டு தபால் துறையினரால் திரும்ப பெற்று இருந்தால் அவற்றை மென் பொருளில் சரிசெய்வதற்கு உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி, திருத்தம் செய்யப்பட்ட பின்னரே ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். c) விண்ணப்பதாரர் வெளியூர் சென்று இருந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக அவரது ஓட்டு...

தூத்துக்குடி - கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பைக்கில் திரும்பிச் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.!

Image
தூத்துக்குடி - கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு பைக்கில் திரும்பிச் சென்ற இளைஞர்  வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.! தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வடிவேல் முருகன் (28). இவர் கொலை வழக்கு தொடர்பாக இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கியுள்ளனர். இதையடுத்து வடிவேல் முருகன் பைக்கை அங்கேயே போட்டுவி்ட்டு காட்டிற்குள் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் மர்ம நபர்கள் அவரை விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   முன் விரோதம் காரணமாக இந்த காெலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.  இது தொடர்பாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராமலட்சுமி...

தூத்துக்குடி : ரூ. 17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!

Image
 தூத்துக்குடி : ரூ. 17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!  பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் . வ.வு.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக கொள்கலன் முனையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஹரித் நௌகா திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலையும் ,10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் சுற்றுலா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வாஞ்சி மணியாச்சி -திருநெல்வேலி மற்றும் மேலப்பாளையம் - ஆரல்வாய்மொழிப் பகுதியை உள்ளடக்கிய கிமானியாச்சி - பாதையை இரட்டிப்பாக்கும் நாகர்கோவில் ரயில் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் பிரதமர் அறிவித்த ரூ 4,586 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நான்கு சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர். பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவக்கப்பட்டு வளர்ச்சியடைந்த இந்தியாவின் சாலை வரைபடத்திற்கு அடிக்கல் நா...

பிரதமர் மோடியின் வாகனத்தில் வந்து விழுந்த செல்போன்... உரியவரிடம் எடுத்து தர சொன்ன மோடி

Image
 பூ வுடன் சேர்ந்து பிரதமர் வாகனத்தில் விழுந்த செல்போனால் பரபரப்பு ஏற்பட்டது. அதை பாதுகாப்பு வீரர்களை அழைத்து உரியவரிடம் எடுத்துக் கொடுக்க சொன்னார் பிரதமர் மோடி. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெறும் திடலுக்கு வந்த போது திறந்த வெளி வாகனத்தில் பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என மூவரும் திடலை சுற்றி மேடைக்கு வந்தார்கள்.  அப்போது பிரதமரை வரவேற்கும் விதமாக பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். அப்போது பூ உடன் செல்போன் ஒன்று பிரதமர் சென்ற வாகனத்தின் மீது வந்து விழுந்தது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பதறினர்.  இதனை கவனித்த பிரதமர் மோடி செல்போனை எடுத்து கொடுக்க சொல்லி சைகை காட்டுகிறார். அதன் பின்னர் செல்போனை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி பிரதமரை வரவேற்கும் போது அருகில் செல்போனில் படமெடுத்த தொண்டரின் செல்போனை எதிர்பா...

குலசேகரப்பட்டணம் வின்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ராக்கெட் ஏவ திட்டம் : 18 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவிப்பு.! - மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

Image
 குலசேகரப்பட்டணம் வின்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை ராக்கெட் ஏவ திட்டம் : 18 கிலோ மீட்டர் வரை கடலுக்குள் ஆபத்தான பகுதியாக இஸ்ரோ அறிவிப்பு.! - மீனவர்களுக்கு எச்சரிக்கை.! இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-   துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டணம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, உத்சேமாக 28.02.2024 அன்று அட்ச தீர்க்க ரேகைகளிலிருந்து (Launch pad Coordinates: Latitude 08° 22' North, Longitude 78° 02' East) ஒரு ரோகினி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200)) ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் மூலம் (ஸ்ரீஹரிகோட்டா Satish Dhawan Space Centre, SHAR) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேர்வில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை துாண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரை கடலுக்குள் விரிந்து கிடக்கும் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28.02.2024 அன்று காலை 09.30 மண...

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்: ஆட்சியர் தகவல்

Image
 தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்: ஆட்சியர் தகவல் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு  1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து நூற்று தொன்னுற்று ஒன்பது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது. மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும். 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள் இரயில் நிலையங்கள், மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் உள்ள 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .   எனவே அனைத்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு; தீவிரபோ...

ஸ்டெர்லைட் : "தமிழக அரசு உறுதியாக உள்ளதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது" மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி.!

Image
 ஸ்டெர்லைட் : "தமிழக அரசு உறுதியாக உள்ளதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது"  மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி.! தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி "ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. நீதிமன்றத்தில் வலுவான வாதத்தை முன்வைத்துள்ளது. எந்த வகையிலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இயங்காது" என தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய அலுவலக பணிக்கு ஒரு வாகனத்தினை அரசாங்க மின் சந்தை மூலம் நேரடியாக வாங்குவதற்கும் நகர்புற வாழ்வாதார மையத்தின் சேவை கட்டணம் மூலம் மேற்கொள்ளவும் மாமன்ற அனுமதி வேண்டப்படுகிறது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. இருந்தாலும், பல்வேறு பணிகளை தொய்வின்றி உங்கள் ஆதரவோடு நிறைவேற்ற...

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறையின் சார்பில் கருத்தரங்கம்

Image
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறையின் சார்பில் எச்.ஐ.கிரெசென்டோ (HI-CRESCENDO) எனும் மாபெரும் கருத்தரங்கு நடைப்பெற்றது.  கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையின் சார்பில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக எச்.ஐ.கிரெசென்டோ  (HI-CRESCENDO) எனும் .எம்பவரிங் ஸ்டார்ட் அப்ஸ்,எனும் மாபெரும் கருத்தரங்கு     கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஏ.பொன்னுசாமி துவக்கி வைத்த இதில் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சத்தை தலைமை அதிகாரி கே. கருணாகரன், மற்றும்  கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுடைய சிறப்பு விருந்தினர்கள் தீபக் , ஸ்ரீகாந்த், தங்கபாண்டியன்,சந்து நாயர், ஜி.எஸ்.குமார், கிஷோர் சந்திரன், சுதாகர், ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையா...

*கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில்கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது*

Image
 கெட்டிச்செவியூர் ஊராட்சியில் தான்தோன்றி அம்மன் வளாகத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கலைமகள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11 ஆம் ஆண்டு கபாடி தொடர் போட்டி நடை பெற்றது. மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K. A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. மகுடேஸ்வரன் அவர்கள் வெற்றி பெற்ற ராஜ் நவீன் பிரதர்ஸ் AMKC கோபி அவர்கள் அணிக்கு முத்தான முதல் பரிசு ரூ.10000 வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர் திருமதி. தெய்வானை மற்றும் கபடி வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

இரண்டு ஆண்டில் 92 அரசு பேருந்துகள் ஜப்தி... விபத்து இழப்பீடு பெறுவதில் தொடரும் தாமதம்...அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய கோரிக்கை

Image
திருப்பூர் மாவட்டத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் இரண்டு ஆண்டில் 92 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இழப்பீடு பெற தாமதமாவதால் விபத்துகளில் சிக்குபவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக முடங்குகிறது. எனவே  அரசு பஸ்கள் அனைத்துக்கும் இன்சூரன்ஸ் செய்யயப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலைப்போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது என்று பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான், நாட்டிலேயே அதிக அளவில் வாகன விபத்துக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதமும் இங்கே நிலவுகிறது. ``தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இருக்கின்றன. ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1.3 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். இதில் சுமாராக பாதி அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. இருந்த போதிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மாநிலம் முழுக்க கிராமங்கள் வரை சேவைகளை வழங்கி வருகிறது. ` அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படாமல் இருப்பது, விபத்துகால இழப்பீடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை வாழ்வாதார பிரச்சினைக...

திருப்பூரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம்

Image
 திருப்பூரில் 233 வது மற்றும் 234 வது தொகுதிகளாக திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் சென்றார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் என் மக்கள் என்ற பெயரில் நடை பயண யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில் அனைத்து தொகுதிகளையும் முடித்து விட்ட நிலையில் 233 மற்றும் 234 வது தொகுதிகளாக, திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளில் அவர் இன்று நடைப்பயணம் மேற்கொண்டார். திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தனது நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இடையே கைகொடுத்து உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார். நடை பயணத்திற்கு வந்த அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  அப்போது பேசிய பாஜக தலைவர்  அண்ணாமலை, 'திருப்பூர் என்றால் பீனிக்ஸ் பறவை போல் உழைத்து முன்னேற கூடிய மக்கள் இருக...

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

Image
 திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பேச அனுமதிக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1575 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கப்பட்டுள்ள நிலையில் 821 லட்சம் உபரி பட்ஜெட் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  பட்ஜெட் உரையை மேயர் தினேஷ்குமார் வாசித்து முடித்த பிறகு, பிரதான  எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் திமுகவின் கூட்டணி கட்சி கவுன்சர்களுக்கு வாய்ப்பளித்ததாக கூறி எதிர்க்கட்சி குழு தலைவர் அண்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, ' மாநகராட்சி பொதுமக்களுக்கு 100% வரி உயர்வு செய்துள்ளதாகவும்,  பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், இது குறித்து மாமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிக்க...

மாநில புதுமைப்பெண் பயிலரங்கத்திற்கு திருப்பூர் மாணவி தேர்வு

Image
 மாநில புதுமைப்பெண் பயிலரங்கத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவி. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக  கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் மூன்று நாட்கள் ( 27.02.2024 முதல் 29.02.2024 வரை ) மாநில அளவிலான பெண்களின் மேம்பாட்டுக்கான பயிலரங்கம் நடைபெறுகிறது. இப்பயிலரங்கத்தை துவக்கி வைப்பதற்காக அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலா கலந்து கொள்ள இருக்கிறார்கள், மாநில நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்குகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்தில் இருந்து 120 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து மொத்தம் எட்டு பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவி ஜெயலட்சுமி ( விலங்கியல் துறை ) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒ...

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே... பிரதமர் மோடி பேச்சு

Image
திருப்பூர் அருகே உள்ள பல்லடம் மாதப்பூரில் இன்று நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இதற்காக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் மைதானத்துக்கு அவர் வந்தார்.  பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது. 2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக. தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும்,  தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள். தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட...

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர் கோரிக்கை

Image
தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர் கோரிக்கை.. வாள் வீச்சு போட்டியில் கலந்து கொண்ட  கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி வாள் வீச்சு வீராங்கனையான ஜெப்ரிலின் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறையை சேர்ந்த ஜிஜோ நிதி ஆகியோர் தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது அவதூறு பரப்பி வருவதாக  கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் நிர்வாகி  தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு வாள் வீச்சு  போட்டியில் கலந்து கொண்ட   கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஜெப்ரிலின் வாள் வீச்சு போட்டியில் தமிழத்திற்கு  பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.அதே நேரத்தில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும்  அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறையை சேர்ந்த ஜிஜோ நிதியுடன் சேர்ந்து பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.அவரது மாவட்டத்தில் அவருக்கும...

கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் மார்ச் 1-ல் துவக்கம்

Image
கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் மார்ச் 1 – ல் துவக்கம் பிரிமியர் மில்ஸ் குழுமத்தால் நன்கொடையாக வழங்கப்படுகிறது. ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகள், சமூக மேம்பாட்டிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் புகழ்பெற்று விளங்குகிறது. கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி அதன் திறப்பு விழாவினை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இது குறித்து பிரிமியர் மில்ஸ் குழும இயக்குனர் திருமதி கவிதா சந்திரன் கூறியதாவது :- தரமான கல்வியின் மூலம் முன்னேற்றத்தினை ஊக்குவிப்பது மற்றும் எதிர்காலத் தலைமுறைனருக்கு அதிகாரமளித்து முன்னேற்றத்தை ஏற்ப்படுத்துவது என்பது பிரிமியர் மில்ஸ் குழும நிறுவனத்தின் நோக்கமாகும். மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் ஆவலுக்கிடையே நடைபெறும் இந்த பள்ளி கட்டிட திறப்பு விழா, பல மாத கால உன்னிப்பான திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்பின் உச்சத்தை நினைவுபடுத்துகிறது. மார்ச் 1 - ம் தேதி நடைபெற...

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம். வெறிச்சோடிய வட்டாச்சியர் அலுவலகம். பொதுமக்கள் ஏமாற்றம்..

Image
  தமிழகம் முழுவதும்,தமிழ்நாடு வரு வாய்  துறை அலுவலர்கள் சங்கம் சார் பில், தொடர் வேலை நிறுத்த போராட் டம் நடை பெற்று வருகிறது.அதன்ஒரு பகுதியாக,சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்,  சத்திய மங்கலம் வருவாய் வட்டாட்சியர் மாரி முத்து தலைமையில், வருவாய் துறை அலுவலர்சங்கத்தினர், கீழ்கண்டகோரிக்கைகளை வலியுறுத்தி கால வரை யற்வேலைநிறுத்தப்போராட்டத் தில்,  ஈடுபட்டுள்ளனர்.துணை வட்டா ட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாது காப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும்.வருவாய் மற்று ம் பேரிடர் மேலாண்மைத் துறை யில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலி யாக உள்ள அலுவலக உதவியா ளர் பணியிடங்களைஉடன் நிரப்பிட வே ணடும்.அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிட ஙகளை உட னடியாக ஏற்படுத்திட வேண்டும்.அனைத்து மாவட்டங்களி லும் பேரிடர் மேலாண்மைப் பணிக் கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03. 2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணி யிடங்களை மீண்டும் வழங்கிட வேண் டும். 2024 பாராளு...

*ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட, நம்பியூர் மற்றும் பவானிசாகர் பகுதியின் பேரூர் கழக, ஒன்றிய செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பி எல் ஏ -2), வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்களின் தேர்தல் ஆலோசனைக்கூட்டம்*

Image
 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்  தொகுதிகுட்பட்ட, நம்பியூர் மற்றும் பவானிசாகர் பகுதியின் பேரூர் கழக, ஒன்றிய செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பி எல் ஏ -2), வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்களின் தேர்தல்  ஆலோசனைக்கூட்டம்  நம்பியூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டமானது நம்பியூர் ஒன்றிய செயலாளரும், பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நெசவாளர் அணிச்செயலாளரும் , கோபி சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளருமான பி.சச்சிதானந்தம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள்(பி எல் ஏ -2) பணிகள் குறித்து ஆய்வு செய்தும்,  ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னிமலை, மாநில பொது குழு உறுப்பினர் கீதா முரளி,சரஸ்வதி பழனிசாமி,மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன்,மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ப. அல்லாபிச்சை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர். பி. எஸ். பழனிசாமி, நம்பியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் நந்தகுமார் செந்தில்குமார் ராஜே...

தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு பணம் பறிப்பு: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் செல்போனை பறித்த இளஞ்சிறார் உட்பட 4பேர் கைது!

Image
தூத்துக்குடியில் லிப்ட் கேட்டு பணம் பறிப்பு: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் செல்போனை பறித்த இளஞ்சிறார் உட்பட 4பேர் கைது! தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கூகுள்பே மூலம் ரூ.75ஆயிரம் மற்றும் செல்போனை பறித்த இளஞ்சிறார் உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி சிலுவைபட்டி ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் மகன் அந்தோணி ரிக்சன் (21). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஜவுளிக்கடைக்கு சென்றுவிட்டு பைக்கில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் தன்னை ஸ்டேட் பாங்க் காலனியில் விடுமாறு லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து ரிக்சன் அந்த நபரை பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார்.  ஸ்டேட் பாங்க் காலனி அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த 3பேர் மற்றும் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் ஆகிய 4பேரும் சேர்ந்து ரிக்சனை அடித்து உதைத்து பீர் பாட்டிலால் தாக்கி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் அவரது செல்போனை பிடுங்கி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.74,500 பணத்தை குகூள்பே மூலம் எடுத்துள்னர். பின்னர்...

தூத்துக்குடி : பிரதமர் திறந்து வைக்கவிருக்கும் வெளி துறைமுகத்திற்கும் வ.உ.சிதம்பரனார் பெயர் - கனிமொழி MP கோரிக்கை.!

Image
 தூத்துக்குடி : பிரதமர் திறந்து வைக்கவிருக்கும்  வெளி துறைமுகத்திற்கும் வ.உ.சிதம்பரனார் பெயர் - கனிமொழி MP கோரிக்கை.! தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், நாளை பிரதமர் அவர்களால் திறக்கப்படவிருக்கும்  வெளி துறைமுகத்திற்கும் கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ( செவ்வாய்கிழமை) தமிழகம் வருகிறார். இன்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மதுரை செல்லும் அவர் நாளைய தினம் (புதன்கிழமை) காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில் குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் 28-ந்தேதி ...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கியிருந்த 302டன் மண் துகள்கள் அகற்றம் - மேயர் நடவடிக்கை.!

Image
 தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கியிருந்த 302டன் மண் துகள்கள் அகற்றம் - மேயர் நடவடிக்கை.! இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சி தரைவழி, கடல்வழி மற்றும் ஆகாய மார்க்கம் என மூன்று வழி போக்குவரத்து வசதிகளை பெற்று மணற்பாங்கான கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள நகரமாக இருப்பதால் சாலைகளில் மண் தூசி துகள்கள் அதிகப்படியாக சேர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  மேலும், தேசிய காற்று தூய்மை திட்டத்தின் தமிழ்நாட்டில் கவனம் செலுத்த வேண்டி பட்டியலிடப்பட்டுள்ள 4 நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சாலை ஓரங்களில் சேரும் மண் துகள்களை கூடுதல் கவனம் செலுத்தி அகற்ற மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரால் அறிவுறுத்தப்பட்டதன் பேரில் முதற் கட்டமாக மாபெரும் சிறப்பு சாலை தூய்மை பணி 22.02.2024 முதல் 24.02.2024 வரையிலான மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.  மேற்படி 3 நாட்களில் நகரின் பிரதான சாலைகளான எட்டையாபுரம் ...

கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை பணியமர்த்த வேண்டும்*

Image
 *கோவில்பட்டி இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை பணியமர்த்த வேண்டும்* தென்னக இரயில்வே மதுரை கோட்டம் கோவில்பட்டி இரயில் நிலையம் பயணச்சீட்டு கொடுக்கும் அறையில் தமிழ் மொழி அறிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் கோவில்பட்டி இரயில் நிலையத்திற்கு வருகை தந்த மதுரை கோட்ட முதன்மை பொறியாளர்  கார்த்திக்யிடம் மனு கொடுக்கப்பட்டது. தென்னக இரயில்வேயில் மதுரை கோட்டத்தில் அதிகமான வருமானம் ஈட்டித்தருவது கோவில்பட்டி இரயில்வே நிலையமாகும். தூத்துக்குடி, விருதுநகர் திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் கோவில்பட்டி மார்க்கமாக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையத்தில் ஒரேயொரு பயணச்சீட்டு கொடுக்கும் அறை இருப்பதாலும் தமிழ் தெரியாத பணியாளர் பணிபுரிவதாலும் இரயில்வே பயணிகள் பயணச்சீட்டு பெறுவதில் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள் எனவே ...

நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் - நடிகர் பிரசாந்த்

Image
 நான் அரசியலுக்கு வருவதை காலம் தான் முடிவு செய்யும் - நடிகர் பிரசாந்த்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள ஞானமலர் பெட்ரோல் பங்கில் வைத்து தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசத்தை (ஹெல்மெட்) வழங்கி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.  இதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் "தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்புவுடன் செல்வதை அறிவுறுத்தும் வகையிலும், அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்றம் மூலமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.. இதற்கு முன்பு பல்வேறு நல்ல விஷயங்களை ரசிகர் மன்றம் செய்து இருந்தாலும் , இது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய விஷயம் என்பதால் வெளிப்படையாக செய்து வருகிறேன்...

ஈரோடு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி நகராட்சி பகுதியில், ரூபாய் 95 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி துவக்கி வைத்தார்..

Image
 ஈரோடு மாவட்டம்,, நீலகிரி நாடாளு மன்றத் தொகுதி, பவானிசாகர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சை புளி யம்பட்டி நகராட்சி பகுதியில்,திமுகழக துணை பொதுச்செயலாளரும், நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினருமான  ஆ.இராசா எம்.பி.கீழ்க்கண்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, வளர்ச்சி பணிகளை துவக்கி வைத் தார். முதலில், பள்ளி மேம்பாட்டு மானியம்- மூலதன பணி - 2023-2024ன் கீழ் வார்டு எண்.09 ஜவஹர் மெயின் ரோடு நகராட்சி துவக்க பள்ளியில், (காவல் நிலையம் அருகில்) ரூ.83.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டுதல் பணிக்கு அடிக்கல் நாட்டியும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021-2022ன் கீழ் வார்டு எண் 07 காளமேகம் வீதியில் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுதல் பணி க்கு. அடிக்கல் நாட்டியும் மொத்தம் ரூ. 95 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உடன், திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்ல சிவம்,நகர்மன்ற தலைவர் தி.ஜனார்த் தனன்,  நகர்மன்ற துணைத் தலைவர் பி.ஏ. சிதம்பரம் நகரப் பொறியாளர்,, திமு கழக ...

தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Image
தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (26.02.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 610 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார். முன்னதாக, ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 19 மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (...

தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை : லாரிகள் செல்லத்தடை! ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவும் 2 நாட்கள் தடை

Image
தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை : லாரிகள் செல்லத்தடை! ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவும் 2 நாட்கள் தடை! தூத்துக்குடிக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு  தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக இரண்டு நாட்களுக்கு  வாகனங்கள் செல்ல தடை விதித்து வஉசி துறைமுக ஆணையம் அறிவித்துள்ளதுடன் . மீனவர்கள் கடலுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய தினங்களில் துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்திட துாத்துக்குடி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீன்பிக்கச்செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மீனவர்கள் கடலுக்கு யாரும் கடலுக்கு எனவே. மேற்குறிப்பிடப்பட்டுள்ள மீன்பிடிக்க செல்லக்கூடாது என்பதனை தங்களது சங்கத்தை சார்ந்த அனைத்து மீனவர்களும் அறிந்திடும் வண்ணம் அறிவிப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன்...

தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு!

Image
 தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு!  தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி வட்டம், சங்கரப்பேரி கிராமம், சர்வே எண்கள் :101,102,103,104, மற்றும் 105/2-ல் உள்ள மொத்தம் ஹெக்டேர் 14.36.0க்கு ஏக்கர் 35 சென்ட் 40 விஸ்தீரணமுடைய நிலம் தூத்துக்குடி முனிசிபாலிட்டிக்கு சொந்தமான குப்பை புதைக்குமிடமாக இருந்து வந்தது. பின்னர் சர்வே எண்கள்.104 மற்றும் 105/2ல் திருவள்ளுவர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன்க்கும், காவல்துறைக்கும் ஒதுக்கியது போக மேற்படி சர்வே எண்களில் உள்ள 11.93.5 ஹெக்டேர் (ஏக்கர் 29 சென்ட் 48) நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தூத்துக்குடி முனிசிபாலிட்டி தீர்மானம் மூலம் ஒப்படைத்தது. அதன் பின்பு மேற்படி நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் LIG-1, LIG-11, EWS-A, EWS-B, என சுமார் 1050 வீட்டு மனைகள், வணிக வளாகங்கள், சமுதாய கூடம், பூங்கா மற்றும் சிறுவர் பள்ளி முதலியவைகளாக ப...