பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை
பெற்றோர்களை தாக்குவது பெரும்பாவம் இனியாவது தாய் தந்தையை போற்றுகின்ற நிலையை உருவாக்குவோம். இல்லையேல் முதுமையில் நாமும் படாதபாடு படுவோம் என்பது உறுதி சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை உலகிலேயே பெற்றோரையும் முதியோரையும் போற்றிப் பாதுகாத்த மனிதநேய பண்பின் புகலிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் தற்பொழுது அது முற்றிலும் சீர்குலைந்து நம்மை உலகிற்கு அறிமுகம் செய்த தாய் தந்தையரை சொத்துக்காகவும் பொருளுக்காகவும் தொடர்ந்து பலர் வீட்டை விட்டு துரத்துவதும், அடித்து உதைத்து தாக்கப்படுவதும் கொலை செய்வதுமான சம்பவங்கள் அடிக்கடி இரக்கமற்ற முறையில் அரங்கேறி வருவது மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் சொத்துக்காக மகன் தனது தந்தையை அடித்து உதைக்கும் காட்சியும், தேனி மாவட்டத்தில் தனது சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் சம்பவமும் மயிலாடுதுறை மணல்மேட்டில் தனது தாயை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவமும் மனதை மிகவும் உருக்குகிறது. நாகரிகமும் பண்பாடும் வளர்ந்த பிறகும் கூட மனிதத் தன்மையை இழந்து நாம் நிற்கின்றோம் என்பதையே இது காட்டுகின்றது....