தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு சிறுவா்கள் முதல் பொியவா்கள் வரை கருத்துக்கள் தொிவிக்கலாம் - மேயா் ஜெகன் பொியசாமி.!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் பயன்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்ட பின்பு ஆணையர் ப்ரியங்கா சென்று விட்டார். அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் முன்பு காத்திருந்த பொதுமக்களிடம் எந்த ஊர் எங்கே செல்கிறீர்கள் என்று அனைவரது கருத்துக்களை கேட்டுக் கொண்டு அனைவருக்கும் டீ வாங்கி கொடுத்து அவர்களுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு பேருந்து வசதிகள் எப்படி உள்ளது உங்களுக்கு ஏதாவது பேருந்து நிலையத்தில் குறைகள் உள்ளதாஎன்று பயணிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகும் பேருந்து நிலையத்தை...