Posts

Showing posts from July, 2019

தங்க நகைக்கு ஆடித்தள்ளுபடி: திருப்பூரில் அடிச்சு தூக்கும் நகைக் கடைக்காரர்கள்

Image
    துணிக்கடைகளில் ஆடித் தள்ளுபடி வழங்கப்படுவதை போல, திருப்பூரில் உள்ள 200 நகை கடைகளிலும் தங்க நகைக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்படும் என திருப்பூர் நகை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.   இது குறித்து திருப்பூர் நகை வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில்குமார், கார்த்திகேயன், பிரகாஷ், ராஜமாணிக்கம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' திருப்பூர் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று இந்த தள்ளுபடி அறிவித்து இருக்கிறோம். தங்க நகைகளுக்கு கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 1000 ரூபாயும் தள்ளுபடி அளிக்கப்படும். ஆடி 18 வரை வழங்கப்படும் இந்த தள்ளுபடி விலையில்,  திருப்பூரில்  உள்ள 200 நகை கடைகளில் பொதுமக்கள் நகைகள் வாங்கலாம். தமிழ்நாட்டில் முதல்முறையாக வழங்கப்படும் இந்த தள்ளுபடி திருப்பூரில் மட்டுமே வழங்கப்படுகிறது. தள்ளுபடி காலத்தை நீடிப்பது குறித்து பொதுமக்கள் ஆதரவை பொறுத்து முடிவெடுக்கப்படும், என்றனர்.

உலகில் அருளாட்சி மலர்ந்து அமைதியும் செழிப்பும் உருவாகும் - மகாலட்சுமி சாமிகள் பேச்சு 

Image
திருப்பூர் தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஆடி அமாவாசை குருபூஜை விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த குருபூஜை விழாவில் மகாலட்சுமி சாமிகள் ஆன்மிக கொடி  ஏற்றினார். தொடர்ந்து மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாக பூஜைகள் நடைபெற்றன. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து மகாலட்சுமி அம்பாளுக்கு அபிஷேக பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மகாலட்சுமி சாமிக்கு குருபூஜை நடந்தது. இதில் சாமிக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதையடுத்து அன்னதானத்தை மகாலட்சுமி சாமிகள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் மகாலட்சுமி சாமிகள் பேசும்போது, ' உலகில் நடக்கும் அநீதிகள் முடிவுக்கு வந்து கல்கி அவதரித்து விட்டார். தென் தமிழகத்தில் அவதரித்து உள்ளதாக பல ஆன்மிகவாதிகளும், அறிஞர்களும் தெரிவித்து இருக்கின்றனர். இதை அறிந்து அனைவரும் சத்திய வழியில் நடக்க வேண்டும். விரைவில் இந்த உலகில் அருளாட்சி உருவாகி அமைதியும் செழிப்பும் உருவாகும். என்றார்.  இந்த நிகழ்ச்சியில், அன்னலட்சுமி, சிவகாசி ஐங்கரன், சூர்ய...

சங்ககால நெடுங்கல் கண்டுபிடிப்பு

Image
 பழைய மற்றும் நுண்கற்காலத்தில் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டிருந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தினர் தம் இனக்குழுவில் இறந்தவர்களை இயற்கையாக அழியும் வண்ணம் அப்படியே விட்டுவிட்டனர். பின்பு வந்த புதிய கற்காலத்தில் தான் (கி.மு. 3000 முதல் 1000 வரை) தமக்கென நிலையான குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு குழிவீடுகளிலும், வட்டம் மற்றும்  நீள்வட்ட வடிவிலான புல் வேய்ந்த கூரைவீடுகளிலும் வாழத் தலைப்பட்டனர். இம்மக்கள் கால்நடை வளர்ப்பினிலும்  வேளாண்மையிலும் ஈடுபட்டனர். இம்மக்கள் தாம் விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறுவதற்காக "வளமை வழிபாட்டையும் "  தாய்த்தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டனர். வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் புதிய கற்காலக் கருவிகளையும் நிலத்தில் நட்டு வழிபட்டார்கள். இப்புதிய கற்கால மக்கள் தான் முதன்முதலில் இறந்தவர்களைத் தம் வீடுகளுக்கு அருகில் குழி தோண்டி அடக்கம் செய்யும் முறையைத் தொடங்கித் தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தனர்.  இதற்கு அடுத்து வந்த பெருங்கற்காலத்தில் தான்  (கி.மு.1000 முதல் கி.பி. 100) வரை மக்கள் தம் குடியிருப்புகளுக்கு வெள...

தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக்குங்க.. - ம.ஜ.மு.க., கோரிக்கை

Image
திருப்பூர் : அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்க மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பில் அரசு பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்க கோரிக்கை  தொடர்பாக திருப்பூர் புக்ஷ்பா தியேட்டர் ஜங்சன் அருகே தனியார் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் இப்ராஹிம் பாக்ஷா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது,  பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியை அரசு பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வலியுறுத்தி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம்.அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தை விடுத்து வடமாநிலங்களில் இந்தி மொழி பிரதானமாக உள்ள நிலையில் இந்தி மொழி கற்ப்பது அவசியமாகிறது எனவும், சிபி எஸ் சி போன்ற பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் இந்தி மொழி கட்டாயமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர் பல்வேறு முக்கிய பணிகள் தேங்கி நிற்ப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் எ...

திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Image
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்போதுள்ள மருத்துவர்களும் , மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்படுவர் எனவும் ஆங்கில மருத்துவமே பெருமளவில் பாதிக்ககூடிய அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் மாணவர்களின் மருத்துவக்கனவை கலைக்க கூடிய நீட் , நெக்ஸ்ட் தேர்வுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்கிளை சார்பில் 150 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.  

சீரியல் செட், கலர் கலர் கோலங்கள்: கலக்கல் விழா நடத்திய திருப்பூர் போலீஸ்!

எப்போதுமே சின்சியர் ஆபீஸரா இருக்கும் போலீஸ்காரங்க. போலீஸ் ஸ்டேஷனில் சீரியல் செட், கலர் கோலங்கள் சகிதம் ஒரு கலக்கல் விழா நடத்தி இருக்காங்க...   வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=CKHczgQkFqI&t=17s

ரூ.4.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

Image
திருப்புர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 29/07/2019 கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 348 மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.79,000 மதிப்பில் நவீன செயற்கை அவயத்தினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, மற்றும் மடத்துக்குளம் ஆகிய வட்டங்கனைச் சோர்ந்த 7 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.3355 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ...

பூமிப் பந்தை புரிந்து கொள்வோம்

Image
சுப்ரீம் மொபைல்ஸ், தமிழ்ப் பண்பாட்டு மையம், அரிமா சங்கம் இணைந்து நடத்திய பூமிப் பந்தை புரிந்து கொள்வோம் எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நிகழ்வு  குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது. சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் VAR.செந்தில்குமார் வரவேற்றார். தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில் ஒருங்கிணைத்து நடத்தினார். இப் பயிற்சி வகுப்பில்  4-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு  மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கினார். பூமியின் வடிவம், வடிவம் கண்டறியப்பட்ட விதம்,நில நடுக் கோடு,அட்சக் கோடு,தீர்க்க கோடு,ஆர்க்டிக் வட்டம்,கடகக் கோட்டு வட்டம்,மகரக் கோட்டு வட்டம்,அண்டார்டிக் வட்டம் எனும் கற்பனைக் கோடுகள் ஏன் வரையப்பட்டுள்ளன, அவற்றின் அளவுகள், துருவங்களின் வானிலை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் நேரம் கணக்கிடும் முறை, நேரங்கள் எவ்வாறு நாடுகளுக்கிடையில் மாறுபடுகிறது காலம் என்பது சமமா, பூமியின் நடுப்பகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது, தேச...

திருப்பூரில் மரக்கன்றுகள் நடும் விழா

Image
திருப்பூர் வனம் இந்தியா மற்றும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு சார்பாக 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன்   துவக்கி வைத்தார்.     திருப்பூர் கே.வி.ஆர் நகர், கருவம்பாளையம் பகுதியில் வனம் இந்தியா மற்றும் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  சு.குணசேகரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.விழாவுக்கு வனத்துக்குள் திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் கிளாசிக் சிவராமன், போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் அன்பக்கம் திருப்பதி வரவேற்றார். இந்த விழாவில், சண்முகசுந்தரம், நர்மதா டையிங் சுப்பிரமணி, கே.டி.சி., பள்ளி நாராயணமூர்த்தி, ஓ.கே.கந்தசாமி, மனோஜ், பி.ஈஸ்வரன், எம்.எஸ். பழனிசாமி, சுரேந்திரன், பக்தவச்சலம், சிவபாலன், குமாரவடிவேல், ஈஸ்வரமூர்த்தி, குணசேகரன்,அசோக் குமார், மகேஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.  விழாவில் எம்.எல்.ஏ.,சு....

தி மனோகரன் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Image
தி மனோகரன் அறக்கட்டளை மற்றும் லட்சுமியம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 2018-19 ம் ஆண்டில் திருப்பூரில் உள்ள 12 அரசு, மாநகராட்சிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிக்கும் விழா பல்லடம் ரோடு, லட்சுமி கல்யாண மண்டபத்தில் நடந்தது.விழாவுக்கு எவெரெடி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கிரிஸ்டல் வெங்கடாசலபதி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் டி.ஆர்.விஜயகுமார், கோவை ராமகிருஸ்னா கல்லூரியின் தமிழ் துறை தலைவர் என்.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ -மாணவியர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ5000, ரூ3000, ரூ2000, வீதம் ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பொது தேர்வில் 90% மேல் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிற்பதே இவ்விழாவின் நோக்கம் என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.

மும்பையில் 700 பேருடன் நட்டாற்றில் சிக்கிய ரயில்: மீட்புப்பணிக்கு நீச்சல் தெரிந்தவர்களை தேடும் அரசு 

Image
மும்பையில் கனமழையால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மகாலட்சுமி எக்ஸ்பிரஸில் 700 பயணிகள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக  மகாராஷ்டிர மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளித்தது. இந்த நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுத்த மழை தற்போது மீண்டும் அடித்துக்கொட்ட தொடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விமானங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராய்காட் பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்றைய தினம் ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அந்தேரி, தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள் மற்றும் தண்டவாளங்களி...

திருப்பூர் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி : மக்கள் மறியல்

Image
திருப்பூரை அடுத்த வாவிபாளையம்  படையப்பா நகரை சேர்ந்த நடேசன் பனியன் தொழிலாளி, இவரது மகன் லோகேஷ் 4 வயது,  கடந்த 14 ஆம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் லோகேஷ்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இதனிடையே  படையப்பா நகர் பகுதியில் குடிநீர் , சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தாலேயே நோய்த் தொற்று ஏற்படுவதாலும் இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  கூறி ஆவேசமடைந்த பொதுமக்கள், சிறுவனின் உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டியும்,  அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும்,  ஊத்துக்குளி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால்  1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து செய்து தருவ...

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 

திருப்புர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30.07.2019 செவ்வாய் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் திருப்புர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பத்துடன் வந்து பயன் அடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் (UDID) (Unique ID for Persons with Disabilities)  தனித்துவ அடையாள அட்டை மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்திட விண்ணப்பங்கள் பெறப்படும். வருமான வரம்பின்றி முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை எடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுட...

தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்

புதிய மாவட்டங்களான தென்காசி மற்றும் செங்கல்பட்டுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 18-ம் தேதி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1966-ம் ஆண்டில் இருந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்றை பட்டியலிட்டார். இதே போன்று தமிழகத்தில் மேலும் இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறிய அவர், திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்றார். இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விரைவில் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில்,  செங்கல்பட்டுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் சுந்தர் தயாளனும், தென்காசிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜான் லூயிசும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலை துறையினர் அழைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் காரிப் 2019-ல் பயிர் காப்பீடு மஞ்சள், மரவள்ளி, வாழை, வெங்காயம், தக்காளி மற்றும் மா-பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்ட வட்டாரங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்துள்ள மஞ்சள், வாழை, மா, மரவள்ளி மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் 30.09.2019 மற்றும் தக்காளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய 31.08.2019 கடைசி நாள். மஞ்சள் பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.3685 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.9702. வாழை பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.4070 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.10053. வெங்காயம் பயிருக்கு காப்பீடு செய்ய  பிரீமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1920 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.4742. மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1510 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.3730. தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1350 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.3335. மா பயிருக்கு காப்பீடு செய்ய ஒர...

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Image
திருப்புர்  மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில்,  இன்று (26.07.2019) மாதாந்திர விவசாயிகள் குறைடம் தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முந்தைய கூட்டங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக மாவட்ட ஆட்சித்தலைவர் மனுதாரர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றுள்ள 87 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவார் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலார் ஆர்.சுகுமார், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணவர்தினி, இணை இயக்குநர் (வேளாண்மை) வளார்மதி, மாவட்ட ஆட்சியரின் நோர்முக உதவியாளார் (வேளாண்மை)ஆனந்தகுமார், துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத் து...

வள்ளி கும்மி அரங்கேற்றம்

Image
நவீன் பிரபஞ்ச நடனக் குழுவின் திருப்பூர் அணி சார்பில் வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி மங்கலத்தில் உள்ள மேற்கு ரோட்டரி மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ் துவக்கி வைத்தார். ஸ்கை சுந்தர்ராஜ், வாழ்க வளமுடன் மன்ற தலைவர் கந்தசாமி, பல்லடம் வனாலயம் அறங்காவலர்கள், மேற்கு ரோட்டரி சங்கத்தினர்கள் உடன் இருந்தனர். இந்த அரங்கேற்ற நிகழ்வில் மொத்தம் 25 பெண்கள் கலந்துகொண்டார். முதலில் அனைவரும் ஒன்றாக குழுப் படம் எடுத்துக் கொண்டனர். முதலில் குத்து விளக்கை ஏற்றி கணபதிக்கு மரியாதையை செலுத்திவிட்டு அனைவரும் பெரியவார்களிடம் சலங்கையை கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று சலங்கையை வாங்கினர். அதன் பிறகு நடராஜரை வணங்கிவிட்டு அரங்கேற்ற நிகழ்விற்கு ஆயத்தமானார்கள். நவீன் பிரபஞ்ச நடனக் குழு ஆசிரியர் நவக்கரை வி.நவீன்  வள்ளியை, வேடன் வேடமிட்டு வந்து முருகன் திருமணம் செய்த நிகழ்வினை வள்ளியின் பிறப்பு முதல் ஒவ்வொரு நிகழ்வாக ராகத்துடன் பாடினார். அந்த பாடலுக்கு ஏற்ப அவர்கள் நடனமாடினார். வள்ளியின்  கதையை ஒவ்வொரு நிகழ்வுகளையும் கதையாக சொல்லிவிட்டு பின்ப...

3 பெண்களை அனாதையாக்கிய கொலைகாரர்கள்: நெல்லையில் சோகம்

Image
நெல்லை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் வசித்து வந்தார். கணவர் முருகு சந்திரன், பணிப்பெண் மாரி ஆகியோருடன் அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை‌ செய்துவிட்டு தப்பிச் சென்றனர். மூவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்தக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மாரியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12, 10, 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பே கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் மாரியம்மாள்தான், தன் பிள்ளைகளை படித்து வைத்து வந்துள்ளார்.வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு ஓய்வின...

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26.07.2019 அன்று காலை 10.30 மணிக்கு  பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியார்  வளாகதில் 4வது தளம் அறை எண் 439, ல் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  தனியார் துறையை சார்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான தகுதியுள்ளவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுபவார்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். எழுதப் படிக்கத் தொரிந்தவார்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவார்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். அன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும்பொழுது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வி தகுதி இருப்பின் பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்  தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. அனைவரு...

அத்திவரதரை திமுகவினர் அதிகமாக தரிசனம் செய்கிறார்கள் - தமிழிசை தூத்துக்குடியில் பேட்டி

Image
  தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தரராஜன், 'பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு  பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத மக்கள்  வருத்தப்படுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அதிக அளவில் ஆர்வத்துடன் மக்கள் சேர்ந்து வருகிறார்கள் என்ற அவர். பாரதிய ஜனதா  கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் 50 நாட்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து பட்டியலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு இந்தியை திணிக்கும் எண்ணத்தில் ஒருபோதும் இல்லை, அதிகாரிகள் செய்த தவறால் அஞ்சல் துறை, ரயில்வே துறையில் சில தவறுகள் நடந்து விட்டது என கூறிய அவர்,  அவ்வாறு இந்தியை திணிக்கும் நிலை ஏற்பட்டால்  தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதற்கு எதிராக  அரசிடம் குரல் கொடுக்கும் என்றார். கஸ்தூரிரங்கன் தலைமையில் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை கல்விக் கொள்கையில் பல்வேறு ஆசிரியர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் என பல பேர் கொண்ட குழுவினர் ஆராய்ச்சி செய்து புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கை வெள...

திருப்பதி சென்று விட்டு வரும்போது சோகம்: அரசு பஸ் மோதி சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

Image
சென்னை நங்கல்லூரை சேர்ந்தவர் முனி கிருஷ்ணா. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு தங்களுடைய காரில் நள்ளிரவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரிக்கு அருகே கன்னமெட்டு என்ற பகுதி உள்ளது. அந்த  இடத்தில் பகுதியில் அந்த பகுதியில் முனி கிருஷ்ணாவின் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக அரசு  பேருந்து ஒன்று திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்து எதிரில் வந்து கொண்டிருந்த முனி கிருஷ்ணாவின் காரின் மீது பலத்த வேகத்தில் மோதியது. இதில் முனி கிருஷ்ணா, குமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த பயணிகள் சிலரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் இரு பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நகரி போலீஸார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி சென்று விட்டு திரும்பி வரும்போது 4 பேர் பலியான சம்பவம் சோகததை ஏற்பட...

குழந்தைகளை தூங்க வைத்து விட்டு கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி - நெஞ்சம் பதற வைக்கும் வீடியோ காட்சி

Image
சென்னை நெற்குன்றம், சக்தி நகர் 24 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் என்ற சுனில், இவரது மனைவி காயத்ரி. நாகராஜ் ஒரு ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் இருந்ததால் நாகராஜுக்கும் மனைவி காயத்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுத்துவது வழக்கம்.  நாகராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு ஆட்டோ டிரைவரான மகேந்திரன் ஆகிய இருவரும் நண்பர்கள். நாகராஜின் மனைவி காயத்திரியும், மகேந்திரனின் மனைவி பானுவும் தோழிகளாக இருந்தனர். இந்த நிலையில் மகேந்திரனுக்கு காயத்திரியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் நாகராஜ் மகேந்திரனை கொன்று விடுவேன் என்று நண்பர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  இதையடுத்து 2 நாட்களுக்கு முன், காயத்திரி, பானு இருவரும் சேர்ந்து நாகராஜை கொல்ல முடிவு செய்துள்ளனர். போதையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை, அவரது மனைவி காயத்திரி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இந்த காட்சியை அவரது தோழி வீடியோ எடுத்துள்ளார். அந்த பதைபதைக்க செய்யும் வீடியோ காட்சியில் காயத்திரி தனது கணவன் நாகராஜை, அவர் மீது ஏறி உட்கார்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்குகிறார். அப்போது நாகராஜ் துட...

திமுக முன்னாள் மேயர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

Image
தி.மு.க.வை சேர்ந்த  முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மறை  மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:  தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கழகம் பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல - ஆண்களுக்கு நிகராக, சமமாகப் பொறுப்புகளை வழங்கும் இயக்கும் என்பதற்கிணங்க, 1996ல் நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரி கழக பணியிலும், பொதுமக்களுக்கான பணியிலும் அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றி தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரையும் பெற்ற அவர், எளிமைக்கு இலக்கணமானவர். மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தியவர். 2011-ல் நடைபெற்ற கழக கழக முப்பெரும் விழாவில் தலைவர் கலைஞர் அவர்களால் “பாவேந்தர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டவர். கழக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட மகளிர் அணித் தலைவர், மற...

அமைதிப்படை ஸ்டைலில் முதல்வரான குமாரசாமி ஆட்சி காலி: பெங்களூருவில் 144 தடை

Image
அரசியல் சதுரங்கம் ஆட ஆட பரபரப்புக்கு பஞ்சமில்லாத பவர்புல் விளையாட்டு. பணமும், பதவி ஆசையும் பாதாளம் வரை பாயும் களம் இது. இப்போதைக்கு அரசியல் களத்தில  அதிரடி மாற்றங்களை உருவாக்கி தேசிய அளவில் தலைப்பு செய்தியாக உருவாகி உள்ளது கர்நாடக அரசியல். தனி மெஜாரிட்டி இல்லா விட்டாலும், அதிக சீட் பிடித்த பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவிய கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆச்சரியங்கள் தான் பரிசாக கிடைத்தது. காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியை பிடித்து அமைதிப்படை ஸ்டைலில் முதல்வராக இருந்தார் குமாரசாமி.  இந்த நிலையில், குமாரசாமி அரியணையை அசைக்க பாஜக எடுத்த அஸ்திரங்கள் அனைத்துமே பிரம்மாஸ்திரம் என மாறி விட குமாரசாமி அரியணையை துறந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். ஆம்,  கர்நாடகாவில் 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த முதல்-மந்திரி குமாரசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்தனர். 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாரதிய ஜனதா...

நெல்லையில் பதற்றம்: திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டி படுகொலை

Image
நெல்லையில் திமுகவை சேர்ந்த முன்னாள்  மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் நேரில் விசாரணை... நெல்லை மாநகராட்சி திமுக முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி, மாநகராட்சியின் முதல் மேயர் இவர் தான், நெல்லை - ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரி எதிர்புறம் குடியிருந்து வருகிறார். அவருடைய கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற பொறியாளர். உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் வீட்டில் இருக்கும் போது இன்று பிற்பகல் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் சரவணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்து பிரச்சணையா? குடும்ப தகராறா அல்லது வேறு ஏதும் காரணமா என...

திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார்

Image
கணவர் கொலை மிரட்டல் விடுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு.   திருப்பூர் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிமொழி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்த நிலையில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலம், மாண்டியாவை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்து தனது மகளுடன் வாழ்த்து வந்த ராணி என்ற பெண்ணை இன்ஸ்பெக்டர் மணிமொழி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ராணி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் 'திருமணத்துக்கு பிறகு மணிமொழிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக  அறிந்த ராணி, மணிமொழியுடன் இதுகுறித்து கேட்டதாகவும்,  இதன் காரணமாக இன்ஸ்பெக்டர் மணிமொழி ராணியையும், அவரது மகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறினார். இதனையடுத்து திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீரபாண்டி ப...

திருப்பூரில் 15வது மாபெரும் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி

திருப்பூர் கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் கடந்த 15 வருடங்களாக  கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடத்தி வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 15 வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 26,27,28,29 ஆகிய தேதிகளில் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்ய கார்த்திக் திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது.      இக்கண்காட்சியில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல், ஆர்.எம்.சி கான்கிரீட், கதவு, ஜன்னல், கிராணைட், டைல்ஸ், மின்சாதன பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், குளியலறைப் பொருட்கள், சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருட்கள், சமையலறை அலங்காரம், உட்புற வெளிப்புற அலங்காரம், பெயிண்ட், கட்டுமான துறையில் புதிதாக வந்துள்ள செங்கல்லுக்கு பதிலாக ஏ ஏ சி பிளாக்குகள், சிமெண்ட் பூச்சுக்கு பதிலாக ஜிப்சம் பூச்சு, தானியங்கி மின்சாதன பொருட்கள், கூலிங் டைல்ஸ்கள், இயற்கையை பாதிக்காத வகையில் பசுமையை பாதுகாக்கும் வகையிலான கட்டுமான பொருட்கள், ரெடிமேடு நீச்சல் குளம்  ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்கு அமைக்க உள்ளனர்.       திருப்...

திருப்பூர்: மறியல் செய்ய பஸ் முன் உருண்டு புரண்ட பெண்

Image
                    திருப்பூரில் மறியல் செய்வதற்காக  பஸ் முன்புறம் உருண்டு புரண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது திருப்பூர் அருகே நாச்சிபாளையம் கிராம மக்கள் 3 மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து  சீரான குடிநீர் வழங்க  கேட்டு காங்கேயம் சாலையில்  காலி குடங்களுடன் மறியல் போராட்டம். ரெங்கபாளையம், வண்ணாந்துறை புதூர், புளியாண்டம்பாளையம், வெள்ளி மலை, ஏரிப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு . திருப்பூர், பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  ரெங்கபாளையம், வண்ணாந்துறை புதூர், புளியாண்டம்பாளையம், வெள்ளி மலை, ஏரிப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  5000 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதிகளில் கடந்த 3 மாத  காலமாக குடிநீர் வழங்கவில்லை, குடிநீர் சீராக வழங்ககோரியும், பல இடங்களில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ள பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர கோரியும்  பல முறை...

தூத்துக்குடி பனிமய மாதா பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது

Image
தூத்துக்குடியில்  உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என ஆலய பங்கு தந்தை குமார் ராஜா கூறியுள்ளார். திருவிழா குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருவிழா வரும் 26 ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கஉள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா வின் திருவுருவ பவனி மற்றும் கூட்டு திருப்பலி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

500 மருத்துவர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாமி தரிசனம் செய்தார்..  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 210 கோடி ரூபாயில் தாய் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும்  திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் தனியாக குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும்  திருவண்ணாமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

பல்லடத்தில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க விழா;  122 பேருக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  - அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்.

Image
தமிழ்நாடு அரசு, கூட்டுறவுத்துறை சார்பில் பல்லடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கால்நடை பராமரப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொப்பரை கொள்முதல் மையத்தை துவக்கி வைத்தும், 122 பயனாளிகளுக்கு 2 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் மற்றும் கடன் உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன்,  திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்,  சங்கங்களின் மாநில பதிவாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய கூடுதல் பதிவாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் சோழவந்தான் செல்லப்பாண்டி வரவேற்று பேசினார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது கூறியதாவது: உழைப்பாளர்கள் நிறைந்த மாவட்டமான திருப்பூருக்கு வந்ததில் பெருமை அடைகிறேன். அம்மாவின் அரசு இந்த மாவ...

பல்லடம் தொகுதியில் 2581 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி - பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில்அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Image
பல்லடம் தொகுதியில் 2581 மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார திருப்பூர், ஜூலை.22- திருப்பூர், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம், வீரபாண்டி, கனபதிபாளையம், அருள்புரம், சாமி கவுண்டம்பாளையம், கரடிவாவி ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.    விழாவில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 9 பள்ளிகளை சேர்ந்த 2581 மாணவ - மாணவிகளுக்கு  விலையில்லா மடிக்கணினி களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல். ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வரவேற்றார். அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:  அம்மா அவர்கள் தான் இந்த மடிக்கணினி திட்டத்தை கொடுத்தவர். கடந்த 2011 ஆம் ஆண்டில் இ...

வீரமாத்தியம்மன் திருக்கல்யாண விழா 

Image
 திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிலம்பாத்தாள், பெத்தாயம்மன் சாமிகளும், அவர்களுக்கு காவலாக கருப்பண்ணசாமியும் அருள்பாலிக்கிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெறும். இதில் பல்வேரு ஊர்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.  இந்த ஆண்டு திருக்கல்யாண விழாவையொட்டி, ஞாயிறன்று தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.  திங்கள் கிழமை வெங்கக்கல் மேட்டில் இருந்து அரிசி மாற்றி, அம்மை அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  புதன்கிழமை காலையில் மீண்டும் ஹோம பூஜைகள் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டு, சிலம்பாத்தாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் தீக்குழி பாயும், நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இதில் மஞ்சள், பூவினால்  சாமி செய்யப்பட்டு, பாரம்பரியமாக பாதுகாத்து வரும் நகைகள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பனை குருத்தோலை, வாழை மட்டையால் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் திருக்கல்யாண பூஜைகள் செய்யப்பட்டது.  ...

சென்னையில் காதலர்க்கு அருளும் முருகன் கோவில் 

Image
தமிழ் மக்களின் பெரும் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு நிறைய கோவில்கள் இருக்கின்றன. ஆனால் சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் குமரன் தான் காதலர்க்கு அருளும் ஆபத்பாந்தவனாக அருள்பாலிக்கிறார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய், தானே குறத்தி பெண்ணான வள்ளியை காதலித்து திருமணம் செய்த முற்போக்கு கடவுள் முருகனது குன்றத்தூர் மலை, சினிமா சூட்டிங்குகளுக்கு மட்டும் இல்லாமல் நிஜத்திலும், காதல் திருமணங்கள் ஏராளமாக நடந்தேறும் முக்கிய  தலமாக விளங்குகிறது. சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பலரது காதல் திருமணங்கள் இங்கு தான் நடந்தேறி உள்ளன. இன்னமும் நடந்து வருகின்றன. . அதே நேரத்தில் பெற்றோர் பார்த்து வைத்து நடத்தும் திருமணங்களும் இங்கு ஏராளமாக நடக்கிறது. ஆக மொத்தம் தம்பதியருக்கு அருள்பாலிக்கும் அன்புக்கடவுளாக வீற்றிருக்கிறார் குன்றத்தூர் குமரன். இந்த மலையில் உள்ள அரச மரத்தின் கிளைகளில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் கட்டியதன் வாயிலாக குழந்தை வரம் கிடைத்துள்ளது என்கிறார்கள். இங்குள்ள வில்வ மரத்தடியில் வில்வ விநாயகர் வீற்றி...

ரூ.1,50 லட்சம் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட தெருவிளக்குகளதிறப்பு

Image
பல்லடம் தொகுதிக்கு உட்பட கரைப்புதூர் ஊராட்சி,, பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமம் முதல், அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையம் வரை ரூ.1,50 லட்சம் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட தெருவிளக்கினை எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் கே.எம்.நிட்வேர் கே.எம்.சுப்பிரமணியம், விஷ்னு பிரபு பிராசஸ் விஷ்னு பிரபு, கொங்குடு டையர்ஸ் பழனிசாமி, கிளீன் டெக்ஸ் பிராசஸ் செல்வகுமார், கிருபா கலர்ஸ் தேவராஜ் மற்றும் கரைப்புதூர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற செயலாளர் காந்திராஜன் உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 

Image
திருப்பூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியில் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில், பொது செயலாளர்  எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில்  காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு பொதுமக்கள்  170 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டை, ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதை எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார்.   திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அனுப்பர்பாளையத்தில் நடந்த விழாவில், மாநகர் மாவடட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இலவச சேலை, அன்னதானம வழங்கப்பட்டது. இதில் ஈஸ்வரன், கோபால்சாமி, சித்திக், கதர் தங்கராஜ், ரத்தினமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.    கர்மவீரர் காமராஜர் சமூக நலப்பேரவை சார்பில், காமராஜரின் 117 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில், பேரவை தலைவர் ரத்னா ஜெ.மனோகர் தலைமையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்பு வழங்கப...

விவசாயத்திற்கு மாற்றாக மீன் வளர்க்கும் தொழில் : தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது பணித்துறை மற்றும் ஊராட்சியில் உள்ள 885 குளங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் விவசாயத்திற்கு மாற்றாக மீன் வளர்க்கும் தொழிலை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்துரி கூறியுள்ளார். நாட்டில் நாள் தோறும் 12 புள்ளி 3 மில்லியன் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவைகளில் பெரும்பாலனவை மீன்வளர்ப்பு மூலமாகவே மேற்கொள்ளபடுகின்றன. நாட்டில் 80 சதவீதம் மீன்கள் நன்னீர் வளர்ப்பு மூலம் மேற்கொள்ளபடுகின்றன.நன்னீர் மீன் வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மீன் வளர்ப்போர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். உள் நாட்டு மீன் உற்பத்தியை ஊக்கு விக்கும் வகையில் அவர்களுக்கு நடத்தப்படும் இரண்டு நாள் பயிற்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், இந்திய கெண்டை மீன்களின் தூண்டும் முறை இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டறிந்த விஞ்ஞானிகளான பேராசிரியர்கள் ஹிரா லால் செளத்ரி மற்றும் அலி குன்கி ஆகியோரின் நினைவாக தேசிய மீன...

அத்திவரதர் வைபவம் ; தரிசனம் நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு

Image
அத்திவரதர் வைபவம் தினந்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசனம் நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வெளியூர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவண்ணமே இருக்கும் நிலையில் இரவு 10 மணி நேரம் வரை தரிசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிகாலை 4:30 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு 5 மணி முதல் அத்திவரதரை தரிசிக்க தரிசிக்கலாம். பின் இரவு 9:30 மணி வரை கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டு 10 மணி வரை பொதுமக்கள் தரிசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு

Image
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு ஸ்காட்லாந்து கே.சிவக்குமார், ஆணையர் சிவக்குமார் பங்கேற்பு       திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீர் மேலாண்மை கருத்தரங்கு சமுத்ரா கிராண்ட் மகாலில் நடந்தது. திருப்பூர் மாநகர கமிஷனர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். மழை நீர் சேகரிப்பு மையத்தை சேர்ந்த ஸ்காட்லாந்து கே.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மழைநீர் சேகரிப்பு, அதன் பயன்கள், மழை நீர் சேகரிக்க மேற்கொள்ள வேண்டிய நவீன வழிமுறைகள் குறித்து பேசினார். இந்த கருத்தரங்கில் திருப்பூர் சார்ந்த தொழில் அமைப்பினர், சமூக அமைப்பினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் டீ தலைவர் ராஜா சண்முகம், ஏ. இ. பி.சி., சக்திவேல், கிளாசிக் சிவராமன், குமார் துரைசாமி, டையிங் சங்க முருகாசமி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள் சபியுல்லா, வாசுக்குமார்,  செல்வநாயகம், கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் ரவி, ஆறுமுகம், சிக்கண்ணா கல்லூரி மோகன் குமார், எம்பரார் பொன்னுசாமி, உஷா ரவிக்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பூரில் அரசு - வேம்பு திருக்கல்யாணம்

Image
திருப்பூர் பழைய பஸ் நிலையம் பின்புறமுள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது.நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவிலில் அரசு, வேம்பு மரங்கள் ஒருங்கிணைந்து வளர்ந்து உள்ளது. இந்த கோவிலில் அரசு, வேம்பு மரங்கள் தெய்வமாகவே வணங்கப்படுகிறது. இந்த மரத்தினடியில் சித்தி விநாயகர், கன்னிமார், ராகு கேது உள்ளிட்ட சாமி சிலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலில் இன்று காலை அரசு, வேம்பு திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதையொட்டி, விஷேஷ யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அரசு வேம்வு திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் அரச மரம் சிவனாகவும், வேம்பு மரம் பார்வதியாகவும் பாவிக்கப்பட்டு, அரச மரத்துக்கு பட்டு வேட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் புடவையில் நகைகள், வளையல்கள் சாத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதி பெரியவர் ஒருவர் அரச மரத்தை வணங்கி வேப்பமரத்துக்கு தாலிகட்டினார். அப்போது பக்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என்றும், 'ஓம் சக்தி, பராசக்தி' என்றும் கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் சாமிதரிசனம...

திருப்பூர் எம்.பி.என்., எலெக்டரானிக்ஸ் கடையில் தீ விபத்து

Image
திருப்பூர் மாநகராட்சி அருகே பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பாத்திரக்கடை செயல்பட்டு வருகிறது.  இன்று மாலை கடைக்கு பின்புறம் இருந்த பாத்திர சேமிப்பு குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதனை கண்ட கடை ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் எரிந்து சேதமானது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தீ விபத்து காரணமாக திருப்பூர் காமராஜ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

திருப்பூர் போலீசுக்கு நடுரோட்டில் அடி உதை ; போதை வாலிபரால் பரபரப்பு

Image
திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே குடிபோதையில் இருந்த வாலிபருக்கும் போக்குவரத்து போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்லும்  வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு.   திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே குடிபோதையில் இருந்த வாலிபருக்கும் போக்குவரத்து போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் நடுரோட்டில் தரதரவென இழுத்து செல்லும்  வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது முரளி குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.  இதையடுத்து  அங்கு பணியில் இருந்த போக்குவரத்து...

திருப்பூர் பெரியகோவில் தெரியுமா?

https://www.youtube.com/watch?v=EdQJQde-ur0