Posts

Showing posts from November, 2019

வேப்பூர் அருகே சேப்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

Image
வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.      நிகழ்ச்சிக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் ஞானஜோதி தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராஜசேகர் டெங்கு கொசுவை தடுக்கும் வழிமுறைகள், நிலவேம்பு கசாயம்,  பப்பாளி இலையின் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். பின்னர், பி.டி.ஓ., காமராஜ் உத்தரவை தொடர்ந்து, ஊராட்சியில் சுகாதார பராமரிப்பு பணிகள் செய்து, தெருக்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் ஊராட்சி செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திமுக வாபஸ் வாங்கி விட்டு தேர்தலை  சந்திக்கலாம் - அமைச்சர் தங்கமணி

Image
வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திமுக வாபஸ் வாங்கி விட்டு தேர்தலை  சந்திக்கலாம் , அதிமுக தயாராக உள்ளதாக ஈரோட்டில் தமிழக மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி பேட்டி.     ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள டெக்ஸ்வேலியில் நடைபெற்ற தென்னிந்திய முதன்மை ஜவுளி கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.விழாவில்  ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் இளம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ,  எப்போது உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது்.யார் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டு அதிமுகவை குறை சொல்வதை மக்கள் அவர்களை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்றார். வேண்டுமென்றால் உச்ச நீதி...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 ஆவது பட்டமளிப்பு விழா

Image
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 ஆவது பட்டமளிப்பு விழா. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.     அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி .அன்பழகன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன்  வரவேற்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு  பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற 57470 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.   இதில் 37 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றவர்கள். பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் ஆண்டறிக்கை வாசித்து பேசுகையில் பல்கலைகழகத்தின் புதிய வசதிகளாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைப்பை ஏற்படுத்த ஐஆர்ஐஎன்எஸ் அமைப்பை பெற்றுள்ளது. மேலும் நூலகத்தில் உள்ள புத்தகங்களின் தொகுப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில்  பதிவாளர்கள், பேராசிரியர்கள், பிரமுகர்கள், துறை தலைவர்கள், மாணவ மாணவிகள் ...

திருநீலக்குடிசோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

Image
திருநீலக்குடிசோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.   திருவிடைமருதூர் தாலுக்கா திருநீலக்குடி அருள்மிகு வேதாந்த நாயகி சமேத சோழீஸ்வரர்  திருக்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்தசபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திரு மன்றத்தின் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. எட்டாம் திருமுறை யான திருவாசகத்தில் உள்ள அத்தனை பாடல்களும் முற்றோதல் செய்யப்பட்டது. குறிப்பாக சிவபுராணம், கீர்த்தி திருஅகவல், திருஅண்டப்பகுதி, போற்றித் திருஅகவல் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவம்பாவை ,திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, அன்ன பத்து ,குயில் பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளி எழுச்சி, செத்திலாப் பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப்பத்து ,அருள்   பத்து ,கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, அச்சப்பத்து, பிடித்த பத்து, திருப்படை எழுச்சி...

திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையம் திறப்பு விழா 

Image
திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையம் திறப்பு விழா திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் திறந்து வைத்து வைத்தார்.     திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில், தெற்கு எம்.எல்.ஏ., நிதி ரூ. 20 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையத்தினை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் பிடிப்பதற்கான ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  உதவி ஆணையர் வாசுக்குமார், சடையப்பன், முன்னாள் கவுன்சிலர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.       

வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு 

Image
வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு  ஈரோடு மாவட்டம் பவானி மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி சங்கமேஸ்வரர் திருக் கோவிலில் கடந்த 43 வருடங்களாக வாழ்ந்து வந்த வேதநாயகி யானை நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தது. நேற்று அதனை திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வழிபட்டு செல்கின்றனர்.  

ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

Image
ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.   கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்  கீரப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புடையூர் ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று இரவு முழுவதும்  கன மழை அதிகமாக பெய்ததில்  புடையூர் ஊராட்சியில் உள்ள  பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளதால் விடிய விடிய பொதுமக்கள் தூங்காமல் அவதியடைந்து இருந்தனர்.     பின்னர் வீட்டிற்குள் புகுந்த மழை நீரை வெளியே இரைத்து கொட்டினார்கள். பின்னர் இந்த அவல நிலை குறித்து கீரப்பாளையம் ஊராட்சி அலுவலருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னிடம் ஏன் புகார் தெரிவிக்கிறார்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என பொதுமக்களிடையே அலட்சியமாகப் பேசியுள்ளார்.       இதனால்ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி அனைத்தையும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு வேறு கிராமத்திற்கு செல்வதாக தெரிவித்தனர்...

திருப்பூர் தெற்கு தொகுதியில்  ரூ.1.71 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள்  எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்

Image
திருப்பூர் தெற்கு தொகுதியில்  ரூ.1.71 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள்  எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.      திருப்பூர் மாநகராட்சியில் பெரியகடைவீதி, செரங்காடு, பொன் நகர்,  உள்ளிட்ட  பகுதிகளில் 1.71 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப்பணிகள், கட்டிடங்கள் திறப்பு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி 44 வது வார்டு கே.ஜி., கார்டன் பகுதியில் தெற்கு எம்.எல்.ஏ., நிதி, ரூ.16.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை ஆகியவற்றை திருப்பூர் தெற்கு எம்,எல்.ஏ., சு.குணசேகரன் திறந்து வைத்தார். இதே போல 44, 44 வது வார்டுகளுக்குட்பட்ட பெரியக்கடை வீதியில் ரூ.80 லட்சம் மதிப்பில்  மறு தார்த்தளம் அமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் காட்டும் பணிகளை எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். 39 வது வார்டுக்குட்பட்ட பொன் நகர் குறுக்கு வீதிகளில் ரூ.39.30 லட்சம் மதிப்பில் தார் ரோடு புதுப்பிக்கும் பணிகளையம், 49 வது வார்டு பகுதியில் உள்ள செரங்காடு 2 வத...

கொள்ளிடம்  ஒன்றிய  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.கவில் ஐக்கியம்

Image
கொள்ளிடம்  ஒன்றிய  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.கவில் ஐக்கியம் கொள்ளிடம் ஒன்றிய தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர். ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ். இவர் தலைமையில் பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி சீர்காழி எம்.எல்.ஏ பாரதி தலைமையில் ஒன்றிய செயலாளர் நற்குணன் முன்னிலையில் கொள்ளிடத்தில் நடைபெற்ற விழாவில் 300 க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.கவில் இணைந்தனர். முன்னதாக கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு அ.தி.மு.கவில் இணைந்தனர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க வில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். சீர்காழி தொகுதி இணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மீனவரணி செயலாளர் நாகரத்தினம், பேருர் கழக செ...

பவானி கோவில் யானை மரணம்: பொதுமக்கள் பாசப்போராட்டம்

Image
பவானி கோவில் யானை மரணம்: பொதுமக்கள் பாசப்போராட்டம்   பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றது இதன் காரணமாக கடந்த சில நாட்களாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாததால் அசதியில் சோர்வுற்று இருப்பதால்  பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.   சங்கமேஸ்வரர் கோவில் யானை.   யானை வேதநாயகி யானை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பவானி குமாரபாளையம் பொதுமக்களால் விலைக்கு வாங்கப்பட்டு  கோவிலுக்கு நன்கொடையாகவழங்கப்பட்டது  அதனைத்தொடர்ந்து திருவிழாக்கள் மற்றும் திருவீதி உலாவுக்கும் இந்த யானை உற்சவ மூர்த்திகளை சுமந்து வளம் வந்த இந்த யானைக்கு வேதநாயகி எனப் பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வேதநாயகி யானை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில்  யானைகளின் சிறப்பு மருத்துவர் டாக்டர் மனோகரன் அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் கோவையில் இருந்து வந்து சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர் .     இந்நிலையில் யானை  இன்று அதிகாலை 05.10 மணிக்கு  இறந்துவிட்டது.தகவலறிந்த பொதுமக்கள் இறந்து போன வேதநாயகிக்கு அஞ்ச...

வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு சீல்

Image
வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு சீல்  திருப்பூர் மாநகராட்சில் ஓராண்டுக்கு மேலாக வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு திருப்பூர் மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் தங்கவேல் ராஜ் தலைமையில்  திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி

Image
கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி - படுகாயங்களுடன் மூன்று பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி     கடலூர் திருப்பாதிபுலியூர், கம்மியம்பேட்டை பகுதி சுசிலா நகர் ரயிஸ்மில் தெரு பகுதியை சேர்வர் நாராயணன் என்பவர் தனது மனைவி மாலா மற்றும் மருமகள் மகேஷ்வரி பேத்தி தனஶ்ரீ,யுவஶ்ரீ,உட்பட 6 பேர் சிமென்ட் ஷீட் பொருத்திய ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.     இந்நிலையில் இன்று இரவு பெய்த தொடர் மழையில் சுவர் ஊறி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பச்சிளம் பெண் குழந்தை தனஶ்ரீ மற்றும் மாலா,மகேஷ்வரி ஆகிய 3 பேர் உயிர் இழந்தனர்,      சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் இடிந்து விழுந்து கிடந்த சுவற்றை அப்புறப்படுத்தி சுவற்றின் அடியிலிருந்த நாராயணன் ரஞ்சிதா யுவஸ்ரீ ஆகிய மூன்று பேரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாலா ,மகேஸ்வரி ,தனுஸ்ரீ ஆகியோரின் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவ...

சாராய வியாபாரி வடபாதி ராயபிள்ளை தடுப்பு காவலில் கைது

Image
வேப்பூர் அருகிலுள்ள சிறுபாக்கம்,  வடபாதி பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ராயபிள்ளையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.      கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா சிறுபாக்கம் அருகிள்ள வடபாதி ஏரிக்கரையில்  கடந்த 12.11.2019 தேதி சிறுபாக்கம் காவல்  உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு கண்காணித்தனர். அப்போது டிஎன், 77ஏ ,,4874 என்ற எண்ணுள்ள டிவிஎஸ் எக்ஸ் எல் என்ற  இருசக்கர வாகனத்தில் 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்த வடபாதி ராமசாமி மகன் ராயபிள்ளை (வயது 56 ) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.    மேலும் இவ்வழக்கு குறித்து வேப்பூர் காவல் நிலைய  ஆய்வாளர்  கவிதா  விசாரணை மேற்கொண்டார். அதில் ராயபிள்ளை மீது சிறுப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையங்களில்  5  வழக்குகள் உள்ளன. அதனால்  இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிந...

வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  பேரணி

Image
வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது.     கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின்பேரில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.     சிறப்பு அழைப்பாளராக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கொசுவால் பரவும் நோய்கள் குறித்தும் டெங்கு காய்ச்சல் பரவும் விதங்கள் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மற்றும் சுகாதார நலக் கல்வி வழங்கினார். மேலும் முதிர் கொசுக்களை அழிக்கும் விதமாக வேப்பூர் பகுதி முழுவதும் டயர்கள் தேவையற்ற பொருட்கள் தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. பின்னர் பப்பாளி இலை சாறு நிலவேம்பு கசாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ராஜ்மோகன் காவல் ...

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

Image
அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது     ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி ,என், பாளையம் ஒன்றியத்தில் பெருமுகை, கணக்கம்பாளையம், கொண்டயம்பாளையம், புஞ்சைதுறையம் பாளையம், நஞ்சை புளியம்பட்டி இந்த ஐந்து ஊராட்சிகளில் தார் சாலை அமைத்தல் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் சிறு பாலம் அமைத்தல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய கட்டிடம் அமைத்தல் என 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணி  தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் இ.எம்.ஆர். ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணியைதொடங்கி வைத்தார் இதில் டி.என். பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்அகமது முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஹரிபாஸ்கர் மற்றும் தங்கராசு அலமேலு ஜெயராமன் கிருஷ்ணவேணிமுத்துக்குமார் நித்தியா யுவராஜ் முனியப்பன் மூர்த்தி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்      

திறந்தவெளி தொட்டிகள் வைத்திருந்த டையிங் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Image
திறந்தவெளி தொட்டிகள் வைத்திருந்த டையிங் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவியதை அடுத்து வாரம் தோறும் கொசு ஒழிப்பு, நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில், முதலிபாளையம் ஊராட்சியில் தீவிர டெங்கு தடுப்பு, மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 182 பேர் பணிகளில் ஈடுபட்டனர். இதில் பணியாளர்கள் நீர்த்தேக்க தொட்டிகளை, தூய்மை செய்தல், குப்பைகள் அகற்றுதல், கொசு மருந்து தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் மீனாட்சி நகர் பகுதியில் உள்ள டையிங் நிறுவனம் ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் இருந்த நிலையில், அங்குள்ள டையிங் திறந்தவெளி தொட்டிகளில் ஏராளமான கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே கொசு மூலம் நோய் பரவ காரணமாக இருந்த  டையிங் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினார் 

Image
முதலமைச்சாின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாமில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினார். ஈரோடுமாவட்டம்  டி.என். பாளையம் அருகே கள்ளிப்பட்டியில் டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட அந்தியூா் சட்டமன்ற தொகுதியில் அரசு சாா்பில் முதலமைச்சாின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் அந்தியூா் சட்டமன்ற உறுப்பினா் ராஜாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆகியோா் வழங்கி சிறப்புரையாற்றினா். இதில் இளைஞர் பாசறை ஹரிபாஸ்கர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.    

மரக் கன்றுகள் பராமரிப்பு செய்த பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

Image
கோவில்பட்டியில் மரக் கன்றுகள் பராமரிப்பு செய்த பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி‌ மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் 50 மரக்கன்றுகள் நடும் திட்டம் முடிவடைந்த நிலையில், தேசிய பசுமைப்படை சார்பில்,  அந்த மரக்கன்றுகளுக்கு பராமரிப்பு நிதியும் மற்றும் பராமரிப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது. கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலை பள்ளியில் வைத்து நடந்த விழாவிற்கு, மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பவனந்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் மற்றும் முன்னாள் ரோட்டரி துணை ஆளுனர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார 30 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களிடம், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகள் பராமரிப்பு நிதி மற்றும் பராமரிப்பு ...

கார் டயர் வெடித்து விபத்து - இருவர் பலத்த காயம்

Image
கார் டயர் வெடித்து விபத்து - இருவர் பலத்த காயம்.     கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர்   அருகே திருவண்ணாமலையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையிலே ஏறி  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.     இதில் காரில் பயணம் செய்த  திருவண்ணாமலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் திருமூர்த்தி இருவரும் பலத்த காயம் அடைந்து காரின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த அவ்வழியே  சென்ற பொதுமக்கள் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேப்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடியை மர்மநபர்கள் கிழித்ததால் பரபரப்பு 

Image
வேப்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடியை மர்மநபர்கள் கிழித்ததால் பரபரப்பு போலிசார் விசாரணை.      கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  வேப்பூர் அடுத்த கீரம்பூர் கிராம பஸ் நிறுத்தம் அருகில் கடந்த ஆகஸ்ட் மாதம்  வி.சி.க. தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகள் கொடியேற்றினார்கள்  அந்த  கம்பத்திலிருந்த கொடியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ இறக்கி துண்டு துண்டாக  கிழித்தனர்.  இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அச்சாலையில் கூடினார்கள் இது குறித்து தகவலறிந்த  வேப்பூர் சப் – இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் சம்பவ இடத்திற்கு சென்று  கிழிந்த விடுதலை சிறுத்தைகள்  கட்சி கொடியை பறிமுதல் செய்தார். இது குறித்து திட்டக்குடி டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா  உள்ளிட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.   இந்நிலையில், பா.ம.க., மாவட்ட செயலர் கார்த்திகேயன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேலன்  தலைமையிலானவர்கள், வேப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று  வ...

பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.2.18 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்கி வைத்தார் 

Image
பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.2.18 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்கி வைத்தார்    திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.2.18 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்கி வைத்தார். காட்டூர் ஊராட்சி, சோழியப்பக்கவுண்டன் புதூரில் ரூ.18.66 லட்சம் மதிப்பிலான  சாலை அமைக்கும் பணிகளை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அழகுமலை ஊராட்சி, கோவில்பாளையம் கருப்பராயன் கோவில் பகுதியில் ரூ.39.96 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள், இதே ஊராட்சியில் ரூ.18.78 லட்சத்தில் கோவில்பாளையம் புதூரில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் அவர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் உள்ள கொடுவாய் அய்யம்பாளையம் பகுதியில். ரூ.24.28 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், கண்டியன் கோவில் ஊராட்சியில் முதியநெரிச்சல் பகுதியில் ரூ.54.85 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், இதே ஊராட்சியில் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் ...

நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Image
நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சியைச் சேர்ந்தது கருத்தலக்கம்பட்டி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சமுதாய கூடம் வேண்டும் என்று நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதை பரிசீலித்த அவர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதன்பேரில் அதற்கான பூமிபூஜை நேற்று கருத்தலக்கம்பட்டி விநாயகர் கோயில் அருகில் நடந்தது. ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வடக்கு ஒன்றியசெயலாளர் வெள்ளைச்சாமி, ஊராட்சி செயலாளர் கலிபுல்லா, ஊர் அம்பலம் ரவிக்குமார், மணிவண்ணன் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள், பொறுப்பாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா

Image
நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா நடந்தது   திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நந்தி சிலைக்கு பால்,பழம், பன்னீர், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அங்குள்ள மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

அ.ம.மு.க சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை  வருகின்ற 29 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்

Image
அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை இன்று முதல் வருகின்ற 29 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கழக சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை இன்று முதல் வருகின்ற 29 ஆம் தேதி வரை பெறவேண்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்கள் ஆணைக்கிணங்க பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற படிவங்கள் வழங்கும் விழாவில் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு செந்தமிழன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் கரிகாலன் ஆகியோரும் கழக உறுப்பினர்களுக்கு ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு படிவங்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தாம்பரம் நாராயணன் பகுதி செயலாளர்கள் ஆலந்தூர் லட்சுமிபதி மடிப்பாக்கம் ராஜேந்திரன் செம்மஞ்சேரி குணசேகரன் ஒன்றிய கழக செயலாளர் காளிதாஸ் நகரக் கழகச் செயலாளர்கள் தாம்பரம் கிருஷ்ணமூர்த்தி  பம்மல் ஜெய கோபி அனகாபுத்தூர் பிரகாஷ் உள்ளிட்ட ...

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

Image
மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி நகராட்சியில் ஸ்ரீ தேவி தியேட்டர் முன்பு   உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பழனிவேல், மோகன்குமார், நடராஜ், பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. புளியம்பட்டி பகுதி பொறுப்பாளர் பிரபாகரன், ராம்குமார், ஆனந்தராஜ், மற்றும் புளியம்பட்டி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது

Image
நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது     திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோவில்பட்டியைச்  சேர்ந்தவர் கணேசன், (36).கூலித்தொழிலாளி. இவரது மனைவி சீத்தாலெட்சுமி(31).நேற்று  சீத்தாலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக  நத்தம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சத்திரப்பட்டி பகுதியில் சென்ற போது  பிரசவ வலி அதிகரித்ததும் வேனில் வந்த  மருத்துவ உதவியாளர் சேகர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் வண்டியை நிறுத்தி ஆம்புலன்சிற்குள்ளேயே பிரசவம் பார்த்தனர். அப்போது அழகான பெண் குழந்தை ஒன்று சீத்தாலெட்சுமிக்கு பிறந்தது.தாயும், குழந்தையும் காஞ்சரம்பேட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்..  

முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Image
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மண்டலத்தில்நடைபெற்ற நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.94 முதல் 100 வரை மதுக்கரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும், வார்டு எண்.92 சுகுணாபுரம் மைல்கல் பகுதியிலும், வார்டு எண்.91, 92-க்குட்பட்ட நரசிம்புரத்திலும் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இவ்விழாக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி  தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.சண்முகம் அவர்கள்,வி.பி.கந்தசாமி அவர்கள், கஸ்தூரி வா...

கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை

Image
கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை ஈரோடுமாவட்டம் கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அம்மா கால் சென்டரில் புகார் அளித்தும். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதானல் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்களுக்கும். கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும். போக்குவரத்து க்கும் இடையூறு ஏற்படுகிறது. சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுந்தப்பாடி இந்து முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் முருகேசன். மாவட்ட துணைதலைவர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் காவல்நிலையத்தில் இன்று 24.11.2019 காவல் ஆய்வாளர் கண்ணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் நகர பொது செயலாளர் கண்ணன் நகரதுணைதலைவர் மாதேஸ் மற்றும் நகர. கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

திட்டக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
திட்டக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மங்களூர் ஒன்றிய செயலாளர் நிதி உலகநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வராசு காந்தி நகர் செயலாளர் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சேகர் கலந்து கொண்டார். மருத்துவமனையில் நவீன வசதி கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் வார்டில் இருக்கும் கழிவறையில் கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்  உடனே தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். ஆண் நோயாளிகளுக்கு கட்டுப்போட ஆன் பணியாளர் கடந்த 10 ஆண்டுகளாக நியமிக்கப்பட வில்லை ஆகையால் உடனே நியமிக்க வேண்டும்.   மேலும் ஆண் வார்டில் மேற்குப் புறத்தில் புதர்ச் செடி கொடி வளர்ந்து உள்ளதால் கொசு உருவாகி அது மூலம் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது ஆகையால் அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் மருத்...

ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம்  

Image
ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம்  அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் புதுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூட்டை உடைத்து, நேற்றிரவு புகுந்த கொள்ளையர்கள் சாமி கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை தூக்கி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்  இதற்கிடையே இதற்கு அடுத்துள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம், கொண்டத்து காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து, சாமி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை எடுத்துச் சென்று விட்டனா். இதற்கு அடுத்து மலையடிப்புதூர் உள்ள புதுமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்று விட்டனா். உண்டியலின் பூட்டை உடைக்க முடியாத தால்.அப்படியே விட்டுச் சென்று விட்டனா். சத்தியமங்கலம் அருகே அடுத்தடுத்த கிராமங்களில் ஓரே நாளில் மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவில் கொள்ளைகளில் வட மாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போ...

தமிழர் விடியல் கட்சியின் சார்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழா

Image
பழனி அருகே மானூரில் தமிழர் விடியல் கட்சியின் சார்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. பழனி அடுத்த மானூர் ஆத்துப்பாலம்  இளமாறன் தோட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் சார்பாக இலங்கை விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக டைசன் மற்றும் இளமாறன் தலைமை ஏற்றனர். பிரபாகரனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரிப், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் தமிழர் கட்சியின்  தலைவர் வெண்மணி, மற்றும் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, ஆகியோரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவாக ஜீவானந்தம்,பழனி மணி, கணேஷ் குமார், கருப்புசாமி, பிரவீன், ஆகியோரும் கலந்து கொண்டனர். கட்சித் தலைவர்கள் கூறுகையில் மேதகு பிரபாகரன் ஒரு இனத்தின் தலைவன் ஒரு இனத்துக்காக போரா...

குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

Image
சத்தியமங்கலம் அடுத்துள்ள தேவாங்க புறத்தில் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல். சத்தியமங்கலம் அடுத்துள்ள தேவங்கபுரம் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் முதலமைச்சரிடம் மாவட்ட ஆட்சியரிடம் சத்தியமங்கலம் தாசில்தார் இடமும் இங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என மனு அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் திடீரென செல்போன் கோபுரத்துக்கு உபயோகப்படுத்தும் ஜெனரேட்டர் வந்து இறங்கியுள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை 11 மணியளவில் சத்தியமங்கலம் டு பண்ணாரி சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவலறிந்து சத்தியமங்கலம் காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் பொதுமக்களிடையே மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடக்காது என உத்தரவின் பெயரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி

Image
இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி ' விவ்ஸ் 2019 ' ஈரோட்டில் நடத்துகிறது ஈரோடு , டெக்ஸ்வேலியில் நவம்பர் 27 முதல் 30ம் தேதி வரை வீவ்ஸ் 2019 தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கலாகாட்சியை 2 - வது ஆண்டாக இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து நடத்துகின்றன . கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்நிகழ்ச்சியின் முதல் பதிப்பு நடைபெற்றது இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 2வது ஆண்டாக இந்தக் கண்காட்சி , தென்னிந்தியாவின் மிகப்பெரிய மொத்த ஜவுளி சந்தையான  ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெறுகிறது . ' வீவ்ஸ் தமிழ்நாட்டில் நடைபெறும் கனாகாட்சிகளில் முதன்மையாள ஜவுளி கண்காட்சி ஆகும் . இது இந்த தொழில் தொடர்பான சமூகத்தினரின் ஆர்வத்தை தூண்டுவதுடன் , அதன் பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நேர்மறையான உணர்வை கொண்டு வருகிறது | கைத்தறி பவர்தறி தொழில் துறையை ஊக்குவிப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் நிகழ்ச்சியாக விங்ஸ் உள்ளது மேலும் இந்த கண்காட்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த இருக்கிறார்...