Posts

Showing posts from May, 2020

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் எகிறுது பாதிப்பு... தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா... இன்று மட்டும் 13 பேர் பலி

Image
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக 500 முதல் 800 வரை இருந்த  நோயாளிகள் எண்ணிக்கை, நேற்று 938 ஆனது. இன்றைய கொரானா பாதிப்பு தமிழ்நாட்டில் ஆயிரம் பேரை தாண்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்  பாதிப்பு எண்ணிக்கையானது 1149 ஆக அதிகரித்து உள்ளது.   இதன்மூலம் தமிழகத்தில் இன்று வரை நோய் பாதிப்பு உடையவர்கள் எண்ணிக்கை 22,333 ஆக உள்ளது. 12,807 பேருக்கு சோதனை நடத்தியதில் 1,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 173 ஆக அதிகரித்து உள்ளது. இன்னும் 6,710 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் 84, செங்கல்பட்டில் 85, திருவள்ளூரில் 47, திருவண்ணாமலை 45, காஞ்சிபுரம் 16, சேலம் 13 பேர் உள்பட தமிழகத்தில் 1054 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுதவிர வெளிநாட்டிலிருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்துவந்த 95பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 11,00க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றா...

இனி இ-பாஸ் தேவையில்லை... பஸ்கள் ஓடும்...70 நாள் முடக்கத்துக்கு விடுதலை

Image
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்ய, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலும், 26.5.2020 மற்றும் 30.5.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 1) ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும...

கொரோனா காலத்தில் அயராத பணி: கோபி போலீசாருக்கு பாராட்டு

Image
ஈரோடு மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் பொருட்டு, ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிவப்பு மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டத்தை பச்சை மண்டலமாக மாற்ற கடந்த இரண்டு மாதங்களாக காவலர்கள் 24 மணி நேரமும் ஓய்வின்றி, உறக்கமின்றி, கடுமையாகவும், திறமையாகவும் பணியாற்றியுள்ளனர். இச்சிறப்பான பணியினை பாராட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க   பள்ளி கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் ,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன், போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் கோபி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரப்படுத்தினார்கள். இது ஈரோடு மாவட்ட காவல் துறையின் சிறந்த பணிக்கு மேலும் ஒரு மைல்கல்லாக இந்நிகழ்வு அமையப்பட்டது என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து இன்பதுரை எம்எல்ஏ அறிக்கை

Image
தாமிரபரணி ஆறு− கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4-ம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து இன்பதுரை எம்எல்ஏ அறிக்கை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியான திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறட்சியைப் போக்குவதற்காக தாமிரபரணி ஆறு − கருமேனியாறு −நம்பியாறு இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.  இந்த திட்டத்தை சாத்தான்குளம் இடைத்தேர்தலின்போது மாண்புமிகு அம்மா அவர்கள்  அறிவித்தார்கள். மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட பாசன திட்டத்தின்மூலம் செயல்படுத்தபடும் இத்திட்டத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை  மத்திய அரசு ரூபாய் 872 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றலாம் என்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயலாக்குவதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் சுமார் 17002 ஹெக்டேர் புதிய பாசன பரப்பு உள்பட மொத்தம் 23400 ஹெக்டேர் நிலங்கள் பாசன வச...

தமிழகத்தில் இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா... 6 பேர் பலி

Image
தமிழகத்தில் மட்டும் 678 பேர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேர் மற்றும் கேரளாவில் இருந்து வந்த ஒருவர் என 817 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 18,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  சென்னையில் இன்று 558 பேர் உள்பட 12,203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 6 பேர் மரணம் அடைந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது. 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். இன்று மட்டும் 11,231 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 4,42,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்னும் கொரோனா அறிகுறி உடன் 5,771 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.    

வேகமா போகாதீங்கன்னு சொன்னது குத்தமாடா...மளிகை கடைக்காரரை வெட்டி விட்டு அரிவாளுடன் அளப்பறை செய்த சுள்ளான்கள்... கொத்தாக தூக்கிய போலீசார்

Image
திருப்பூர் பாலையக்காடு கோல்டன் நகர் அருகில் உள்ள சூர்யா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.  நேற்று மாலை இவரது மளிகை கடை உள்ள பகுதியில், என்.ஆர்.கே. புரதத்தை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சத்தம் எழுப்பிக் கொண்டு சென்றுள்ளனர். இதை பார்த்த ராஜேஷ் அந்த சிறுவர்களை ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இனிமேல் இப்படி வேகமாக இந்த பகுதியில் செல்லக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.  அப்போது அவர்கள் சத்தம் இல்லாமல் சென்று விட்டு பின்னர் நண்பர்களுடன் வந்து தகராறு செய்துள்ளனர்.  அரிவாள் கம்பு சகிதம் இருசக்கர வாகனத்தில் வந்து ராஜேஷ் ஐ அடித்து உதைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை வ...

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா... 15,510 ஆனது மொத்த பாதிப்பு

Image
தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் மட்டும் 710 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 710 பேர், வெளிமாநில, மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் இன்று 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் 15,512 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 5 பேர் இறந்ததுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 103 ஆக உள்ளது. இன்று மட்டும் 12,155 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் இதுவரை 3,97,340 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.   இதுவரை 7491 பேர் குணமடைந்து வீடு சென்று விட்ட நிலையில், இன்னும் 7915 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 17 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 6 பேர் மற்றும் விழுப்புரத்தில் 4 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளது தெரிய வருகிறது.          

வச்சாம்பாரு ஆப்பு... திருட்டுநகையை அடகுவைத்த கடையிலேயே அரிவாளுடன் சென்று தெறிக்கவிட்ட பலே திருடன்... பணம், நகையை அள்ளிச்சென்றவனை அலேக்காக தூக்கிய போலீசார்

Image
திருப்பூரின் முக்கிய பகுதியான குமரன் ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திருப்பூரில் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அட்டிகா கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் புகுந்த நபர் அரிவாளை காட்டி மிரட்டினார். வீடியோ இதோ: ஹெல்மெட் அணிந்து இருந்த அந்த நபர் நிதி நிறுவன பெண் ஊழியரை அரிவாளை ஓங்கி மிரட்டுவதும், மற்ற்றொரு ஊழியரை பணம் நகையை எடுத்து தர சொல்லி மிரட்டிய காட்சிகள் பதைபதைப்பை ஏற்ப்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு, சாவகாசமாக நடந்து சென்றான். இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுபூலுவபட்டி, காவடிபாளையம் பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பது தெரியவந்தது. இவர் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டு அந்த நகைகளை இதே அட்டி...

திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது

Image
சென்னை: நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சி ஒன்றில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகள் மற்றும் அரசு பதவிகளில் உள்ளது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல்கள் வெளியாகின. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் கல்யாண சுந்தரம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதைதொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பேட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

கந்துவட்டிக்காரர் மாதிரி நடந்துக்காதீங்க பஜாஜ்... இ.எம்.ஐ., கட்ட அரசு அறிவித்த கொரோனா கால விலக்கு கொடுங்க...திருப்பூரில் பொதுமக்கள் போராட்டம்

Image
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு கொடுத்த பணத்திற்கு  வட்டிக்கு மேல் வட்டி கேட்டு சிரமப் படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்  முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தொழில் நகரமான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் இஎம்ஐ கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி காலக்கெடு வழங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மாதம் வரை இஎம்ஐ கேட்டு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவித்து இருந்தது. இந்நிலையில் திருப்பூர் அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ தொகையை கட்டுமாறு குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளது. மேலும் வங்கிகளில் போதுமான இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இஎம்ஐ கட்டணத்தைச் செலுத்...

7 மணி வரைக்கும் ஆட்டோ ஓடும்: தமிழக அரசு சொல்லிருச்சு

Image
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) ஆட்டோ , சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை . பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். ...

சிற்றிதழ்களுக்கு உதவ அரசு முன் வர வேண்டும்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்

கடந்த இரண்டு மாத காலமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை அரசின் கவனத்திற்கும் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் இவ்வூடகங்களின் உரிமையாளர்கள் கொண்டு வந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரும் நிறுவனங்களினால் நடத்தப்படும் இத்தகைய ஊடகங்களே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் போது சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய வளர்ச்சிக்காக சிற்றிதழ்கள் ஆற்றி வரும் தொண்டு அளப்பரியதாகும். ஆனால் மத்திய – மாநில அரசுகளின் சார்பில் அளிக்கப்படும் விளம்பரங்கள் எதுவும் சிற்றிதழ்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அரசு நூலகங்களுக்கும் இவை வாங்கப்படுவதில்லை. இலக்கிய வளர்ச்சி ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு சிற்றிதழ்கள் தொடர்ந்து இழப்புகளுக்கு நடுவே நடத்தப்படுகின்றன. இந்தக் காலக்கட்டத்திலாவது மத்திய – மாநில அரசுகள் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையில் குறைந்த அளவு 40 விழுக்காடாவது சிற்றிதழ்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். அரசு நூலகங்களுக்கும் இவை வாங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

திட்டக்குடி ஜமாத் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது 

Image
  கடலூர் மாவட்டம்  திட்டக்குயில் ஜமாத்துலா சார்பில் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் கொரோனா நிவாரான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.     நிகழ்ச்சிக்கு தமுமுக மமக தலைவர் சலிம் ஹாஜியார் தலைமை தாங்கினார்.   துணை தலைவர் ஜாண்பாஷா ஹாஜீயார்,செயலாளர் அஜிஸ் பாய் கட்டிட கமிட்டி செயலாளர் எம்.ஹச் அஸ்கர்அலி முன்னிலை வகித்தனர்.   சிறப்பு அழைப்பாளராக பள்ளி இமாமும் தமுமுக கடலூர் மாவட்ட உலாமா அணி பொருளாலர் மொளலானா நஜீருல்லாஹ் மிஸ்பாஹி, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமிது கலந்து கொண்டு 3000 மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், வேட்டிசட்டை சேலை மற்றும் 500 ரூபாய் நிதி 50 பேருக்கு வழங்கப்பட்டது.   இதில் கட்டிட கமிட்டி நிர்வாகிகள் தஸ்தகீர் பாய்,ஜாஹிர் உசேன், ஜமாத் நிர்வாகிகள் ஐயூப்பாய், ஜாபர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம்

Image
  கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக,  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆணையாளர் தாணு மூர்த்தி  உத்தரவுப்படி, துப்புரவு அலுவலர் மணிவண்ணன்  தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில் குமார், கார்த்திக் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஸ்வநாதன், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அடங்கிய குழுவினர் மாஸ்க் அணியாமல் அதாவது முகவுரை அணியாமல்  பொது இடங்களில் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தது வருகின்றனர். இதில் நேற்று (20.05.2020) வரை 495 நபர்களுக்கு 49 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று (21.05.2020) ஒரு நாள் மட்டும் 9 கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 504 நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராதம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு இலவசமாக முகவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாஸ்க் அணியாமல் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும...

திருப்பூரில் ரூ.29 லட்சம் மதிப்பில் சாலை பணிகளை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ கே.என்.விஜயகுமார் துவக்கிவைத்தார்

Image
திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியத்துக்குட்ப்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நகர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி  ரூ.3.50 லட்சம் மதிப்பிலான  பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள், ரூ.26.33 லட்சம் மதிப்பில் மாரப்பன்பாளையம் புதூர் முதல் ஊர் எல்லை வரை ஓரடுக்கு ககப்பி மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை  திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ  அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, துணை சேர்மன் தேவிஸ்ரீ நந்தகுமார், யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்யா மகராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பொங்குபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா வடிவேல், ஒன்றிய உதவி பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ,பொங்கு பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்புசாமி, நிர்வாகிகள் வேலுசாமி, துரைசாமி, லோகநாதன், பரமசிவம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஜெயகுமார், வார்டு உறுப்பினர்கள்  மயில்...

உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதியில் மணிமண்டபம் கட்ட தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கோரிக்கை

Image
  தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ளது.   தஞ்சை பெரிய கோயில் மூலம் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகறியச் செய்த ராஜராஜ சோழனுடைய சமாதி கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது.   அந்த இடத்தில் மணி மண்டபம் கட்ட மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம.  சேயோன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் . அவர் விடுத்துள்ள அறிவிப்பில் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :   உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலை தந்த  மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் உள்ளது.  உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ராஜராஜ சோழனுடைய சமாதி மிகவும் சிறிய அளவில் கவனிப்பாரற்று உள்ளது.   சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், ராஜேந்திர சிம்மன், உய்யக்கொண்டான், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் நித்தி வினோதன்,  ராஜகேசரி என பல பட்டங்களைப் பெற்ற ராஜராஜ சோழன் கிபி 985 முதல் கிபி 10 14 வரை சோழப்பேரரசை ஆண்டார் . தனது உழைப்பால் தஞ்சை பெரிய கோயிலை கட்டி அதன்மூலம் சைவத்தையும், தமிழையும், தமி...

திருப்பூரில் 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், 12-வது வார்டுக்குட்ப்பட்ட வலையங்காடு பகுதியில் நான்காவது கட்டமாக 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகளை திருப்பூர் மாநகர் மாவ்ட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீதிராஜன், பழனிவேல், ஹரிஹரசுதன், கிளை அம்மா பேரவை செயலாளர் ராஜா, கிளை செயலாளர் ரவிக்குமார், ராயபுரம் கணேஷ், பாசறை நிர்வாகிகள் ஷாஜகான், அருண், சிலம்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.     

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்.எல்.ஏ., மீண்டும் நியமனம்

Image
  தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:~   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.    கடந்த மூன்றாண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக பதவி வகித்த இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   இன்பதுரையுடன் கன்னியாகுமரி எம்எல்ஏ எஸ்.ஆஸ்டினும் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக நியமிக்கபட்டுள்ளார். இவர்கள் இருவரும் வருகிற 2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை  மனோன்மணியம் பல்கலைகழக ஆட்சிமன்ற பேரவை உறுப்பினர்களாக பதவி வகிப்பார்கள்.   இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.              

ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் மில்லில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 210 பணியாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் 

Image
  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் மில்லில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த (ஆண்கள், பெண்கள்  மொத்தம்- 210) பணியாளர்கள்  இரவு 9.30 மணிக்கு 4 பேருந்துகளிலும் மற்றும் இன்று காலை 10.30 மணிக்கு 3 பேருந்துகளிலும் உரிய அனுமதியுடன் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு    வருவாய்க் கோட்டாட்சியர்  ஜெயராமன்  மற்றும்  வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன்,  சிறுவலூர் காவல் ஆய்வாளர்  சோமசுந்தரம் மற்றும் நம்பியூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மன் பழனிச்சாமி மற்றும் மேலாளர் சபரிநாத்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.ஆர். பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்  கே. எம். மகுடேஸ்வரன்  தலைமையில் மற்றும் ஏ.ஜி.எம். விஸ்வநாதன்  மற்றும் ஜி.எம். பாலசுப்பிரமணியம், டி. எம். ரஞ்சித்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்   நவாப்ஜான் சுகாதார ஆய்வாளர்  செல்வராஜ் சுகாதார செவிலிய...

அன்னூரில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அம்பாள் பழனிசாமி, செளகத் அலி வழங்கினார்கள்

Image
அன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் 120 "துப்புறவு பணியாளர்"களுக்கு செயல் அலுவலர்  செந்தில் குமார் லைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களின் கொரணா நிவாரணப் பொருட்கள் அடங்கிய கிப்ட் பெட்டிகள் அன்னூர் ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி,அன்னூர் நகர கழக செயலாளர் செளகத் அலி ஆகியோர் வழங்கினர்.

கோபியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மளிகை பொருட்கள், முககவசம் வழங்கப்பட்டது

Image
ஈரோடு வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோபி நகருக்கு உட்பட்ட ராமர் எக்ஸ்டென்சன், மின் நகர், திருமால் நகர் ஆகிய பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண  பொருட்களாக 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், முககவசம் ஆகியவை மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாநில செயலாளர் ஜனகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர்  பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் முனுசாமி ஆகியோரது ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் அஜீத்குமார் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் அமைப்புசாரா மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரூ.30 லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள்: கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

Image
திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியத்துக்குட்ப்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நகர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி  ரூ.3.50 லட்சம் மதிப்பிலான  பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள், ரூ.26.33 லட்சம் மதிப்பில் மாரப்பன்பாளையம் புதூர் முதல் ஊர் எல்லை வரை ஓரடுக்கு ககப்பி மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை  திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ  அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, துணை சேர்மன் தேவிஸ்ரீ நந்தகுமார், யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்யா மகராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பொங்குபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா வடிவேல், ஒன்றிய உதவி பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ,பொங்கு பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்புசாமி, நிர்வாகிகள் வேலுசாமி, துரைசாமி, லோகநாதன், பரமசிவம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஜெயகுமார், வார்டு உறுப்பினர்கள்  மயில்...

திருப்பூரில் 500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,சார்பில், மாநகராட்சி 50வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்.  ஏழை எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி  தொகுப்புகளை வழங்கினார். நிகழ் ச்சிக்கு வார்டு கிளைச்செயலாளர் தம்பி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரத்தினகுமார், நீதிராஜன், ஹரிஹரசுதன், ஷாஜகான், பரமராஜன், கருவம்பாளையம் துரைசாமி ஆகியோர் கலந்து கொண் டனர்.  

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமனம்.

Image
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமனம். தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:~  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த மூன்றாண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக பதவி வகித்த இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்பதுரையுடன் கன்னியாகுமரி எம்எல்ஏ எஸ்.ஆஸ்டினும் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக நியமிக்கபட்டுள்ளார். இவர்கள் இருவரும் வருகிற 2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை  மனோன்மணியம் பல்கலைகழக ஆட்சிமன்ற பேரவை உறுப்பினர்களாக பதவி வகிப்பார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிராங்குளம் கிராமத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்று வந்த 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 30 பேர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தனர்.     கொரோனா வைரஸ் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் 20 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது அதனால் அங்கு வேலை செய்து வந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு லாரியின் மூலம் சென்றனர்.   இதில் வேப்பூர் அடுத்த காஞ்சிராங்குளம் சேர்ந்த 30 பேர் வந்திருந்தனர் அவர்களை அரசு தொழுதூர் நாவலர்நெடுஞ்செழியன் தனியார் கல்லூரியில் தணிமை படுத்தப்பட்டு 14 நாட்கள் பரிசோதனை செய்து வந்தனர்.   பரிசோதனையில் அவர்களுக்கு  கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது இதையடுத்து அந்த 30 பேரும்  வீட்டிற்கு அணுப்பிவைக்கப்பட்டனர்.   இந்நிலையில் ஊராட்சிமன்ற தலைவர் பணச்செல்வி பெரியசாமி அவர்களின் வீட்டிற்கு சென்று அரிசி, பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.   அதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.   உடன் ஊராட்சிமன்ற துணைதலைவர் வேளாங்கண்ணி மணிகண்டன்,செயலர் சிவா, வார்டு உறுப்பினர...

மாஸ்க் போட்டு நடிப்பாங்களா... சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி

Image
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்தவாரத்தில் பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கு அரசு அனுமதி கொடுத்து இருந்தது.  இந்நிலையில் இன்று தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.  இந்த உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.  சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்த வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர் நடிகையர் தவிர அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் முக கவசம் அணிய வேண்டும்.  பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட இடங்களிலும், பொது இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.   கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக ‘பாண்டியன் ஸ்டோர், அதே கண்கள், அரண்மனைக் கிளி, பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜா உள்ளிட்ட...

உள்ளாட்சித்  தேர்தல் முன்விரோதம்; இருவேறு சமூகத்தினரிடையே மோதல்...

Image
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 50 நாட்கள் கடந்து நடைமுறையில் இருந்து வருகிறது.     ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேர்தல் முன்விரோத காரணமாக  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தர்மநல்லூர் கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு வேறு சமூகத்தினருக்கு  இடையே பயங்கர மோதல் கழி கட்டை கல் போன்ற ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.     இதில்  10 க்கும் மேற்பட்டோர் காயம் இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான கம்மாபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து இருதரப்பிலும் 12 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.      காயமடைந்தவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் வலையங்காட்டில் கொரோனா நிவாரணம்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், 12-வது வார்டுக்குட்ப்பட்ட வலையங்காடு பகுதியில். நான்காவது கட்டமாக 1050 பேருக்கு கொரோனா நிவாரணமாக அரிசிப்பைகளை திருப்பூர் மாநகர் மாவ்ட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், நீதிராஜன், பழனிவேல், ஹரிஹரசுதன், கிளை அம்மா பேரவை செயலாளர் ராஜா, கிளை செயலாளர் ரவிக்குமார், ராயபுரம் கணேஷ், பாசறை நிர்வாகிகள் ஷாஜகான், அருண், சிலம்பரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பூரில் ரூ.4.41 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்: சு.குணசேகரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

Image
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்ப்பட்ட, மாநகராட்சி 35-வது வார்டு, கே.பி.என். காலனியில் 3 வது வீதி விரிவு, வி.கே.ஆர். தோட்டம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4.41 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அர்பன் பாங்க் தலைவர் பி.கே.எஸ்.சடையப்பன், உதவி ஆணையர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் சந்திரசேகர், சுகாதார அலுவலர் பிச்சை, முன்னாள் கவுன்சிலர்கள், மூர்த்தி, கண்ணப்பன், ராசாமணி, கிட்டு, பன்னீர்செல்வம், ஆண்டவர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர். 

ராதாபுரம் தொகுதி தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

Image
  வள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தார்   கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பொதுப் பணித்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளியூரை அடுத்த தெற்கு கருங்குளத்தில் புதிய நீர்த்தேக்க திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தும் என அறிவித்திருந்தார்.   தெற்கு கருங்குளம் கிராமத்தின் மேற்குப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதியிலிருந்து மழைக்காலங்களில் வரும் வெள்ள நீர் அப் பகுதியில் தேங்கி  இயற்கையாகவே அங்கு ஒரு நீர்த்தேக்கம்  அமைந்துள்ளது. அந்த நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்தி அங்கு புதிய அணைக்கட்டு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ராதாபுரம் தொகுதியின் தெற்கு பகுதியிலுள்ள பழவூர், செட்டிகுளம், லெப்பைகுடியிருப்பு ஆவரைகுளம்,  வடக்கன்குளம்,கருங்குளம், சிதம்பரபுரம் − யாக்கோபுரம், காவல்கிணறு உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமை...

மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் 

Image
  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அருண் மற்றும் ராஜேஷ் இருவரும்  திமுக இளைஞரணி மாநில தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.    அந்த  கோரிக்கையை ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நேரில் சென்று வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்த மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி ,ஆண்டிபட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் பொண்ணு துரை, பொறுப்புக் குழு உறுப்பினர் சுப்புராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.    

பவானி ஆற்றோரம் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Image
பவானி ஆற்றோரம் பழனிபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் பிரபு35, இவர் 300 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பவானி போலீசாருக்கு  ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தபோது தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர்  சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உதவி ஆய்வாளர் வடிவேல் குமார் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று  ஆற்றோரம் பதுக்கி வைத்திருந்த  ரேஷன் அரிசியை  பறிமுதல் செய்து அரிசி கடத்தல் தடுப்பு அதிகாரி  முகமது தாரிக் அவர்களிடம் ஒப்படைத்தனர்  இதனால்  அப்பகுதி  பரபரப்புடன் காணப்பட்டது. மேலும் இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்

திருப்பூரில் 2000 இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா சேலைகள்

Image
பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சி பகுதி மற்றும் முதலிபாளையம் ஊராட்சிப்பகுதி ஹவுசிங் யூனிட்டில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்லடம் எம்.எல்.ஏ. வின் சொந்த நிதியிலிருந்து  சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும், பல்லடம் எம்.எல்.ஏ.,வுமான கரைப்புதூர் ஏ.நடராஜன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.என். விஜயகுமார் ஆகியோர் 2000 இஸ்லாமிய பெண்களுக்கு விலையில்லா சேலைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் டி.எஸ்.பி.முருகவேல், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், மங்கலம் சில்வர் வெங்கடாசலம், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் முருகசாமி,  ஒன்றிய கவுன்சிலர் கல்பனா வேலுசாமி, முதலிபாளையம் ஊராட்சி தலைவர் மயூரிபிரியா நடராஜ், ஊராட்சி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர் காசிம், சின்னப்புதூர் சௌந்தரராஜன், சிராஜ்தீன், முத்துசாமி, மூர்த்தி, மணி, இடுவா...

39 மகளிருக்கு ரூபாய் 11 லட்சத்து 20,000 ரூபாய் கொரோனா சிறப்பு கடன்; விண்ணப்பள்ளி ஊராட்சி வாலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டது

Image
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பவானிசாகர் ஒன்றியம், விண்ணப்பள்ளி ஊராட்சி வாலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழு 39 மகளிருக்கு ரூபாய் 11 லட்சத்து 20,000 ரூபாய் கொரோனா சிறப்பு கடன்,  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் வழங்கினார். ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பார்த்திபன், கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா,சார்பதிவாளர் ஸ்ரீதர்,மகளிர் திட்ட உதவி அலுவலர் அன்பழகன்,சங்கத்தலைவர் கஸ்தூரி, செயலாளர் கோவிந்தராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் பழனிச்சாமி, வரதராஜ் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயமணி கணேசன், மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமிபழனி, பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் கே.துரைசாமி, ஒன்றிய துணைத்தலைவர் பாலன்,சங்க இயக்குனர்கள்  செல்வம்,மணியன், ஜீவா,மணி, ரேவதி ,பால்ராஜ் ,பழனிச்சாமி, வேலுச்சாமி சங்கத் தலைவர்கள் நல்லூர் மூர்த்தி ,தொப்பம்பாளையம் ஆறுமுகம்,சங்க செயலாளர்கள் பழனிச்சாமி, அன்பரசன்,ராஜாமணி, தங்கவேல் பவானிசாகர் வட்டார சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி அகிலாண்டேஸ்வரி,ஊராட்சி செயலாளர் ரங்கநாதன்,  தாமோதரன்,சுப்ப நாயக்கர், பெரிய சாத்தனூர் பழனிச்...

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 210 பணியாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் 

Image
  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் மில்லில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த (ஆண்கள், பெண்கள்  மொத்தம்- 210) பணியாளர்கள் நேற்று  இரவு 9.30 மணிக்கு 4 பேருந்துகளிலும் மற்றும் இன்று காலை 10.30 மணிக்கு 3 பேருந்துகளிலும் உரிய அனுமதியுடன் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு    வருவாய்க் கோட்டாட்சியர்  ஜெயராமன்  மற்றும்  வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன்,  சிறுவலூர் காவல் ஆய்வாளர்  சோமசுந்தரம் மற்றும் நம்பியூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி,   ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மன் பழனிச்சாமி மற்றும் மேலாளர் சபரிநாத்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.ஆர். பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்  கே. எம். மகுடேஸ்வரன்  தலைமையில் மற்றும் ஏ.ஜி.எம். விஸ்வநாதன்  மற்றும் ஜி.எம். பாலசுப்பிரமணியம், டி. எம். ரஞ்சித்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்   நவாப்ஜான் சுகாதார ஆய்வாளர்  செல்வர...

3 பேர் பலி... இன்றும் 536 பேருக்கு கொரோனா.. நாடு முழுவதும் ஒரு லட்சத்தை நெருங்குகிறது நோய் பாதிப்பு

Image
தமிழகத்தில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 364 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.  தமிழகத்தில் மொத்த பாதிப்பு 11,760 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 7114 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உள்ளது.  இதன்மூலம்  நாடு முழுவதும் 96,169 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்தை எட்டி விடும் நிலையில் நோய்ப்பரவல் வேகம் குறையாமல் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது.  இன்று 3 பேர் மரணமடைந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது.  இந்தியாவிலேயே அதிகளவு தமிழ்நாட்டில் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 85 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 7648 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

உடுமலை கிளை நூலகம் எண் 2 சார்பில் 6 வது வாரமாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

Image
  திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் 6 வது வாரமாக உடுமலை ருத்ரப்பா நகர் பகுதியில் பொது மக்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.      இந் நிகழ்ச்சிக்கு நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் சுப்பிரமணி ஸ்டாலின். வாசகர் வட்ட உறுப்பினர்கள்  ஆனந்தன், பாலகிருஷ்ணன், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர்.சைக்கிள் மூலம் வீடு வீடாக  சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஒருவாரத்துக்கு 1000 பேருக்கு மதிய உணவு- முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தனர்

Image
திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 16வது வார்டு பாண்டியன் நகரில் வாழும் புலம்பெயர்ந்த நெசவாளர் மற்றும் பனியன் தொழிலாளர்கள் சேர்ந்த 1000 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு மத்திய உணவு வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,கே.என்.விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை 16வது வார்டு கிளை சார்பில் ரேவதி குமார் (எ) குத்துக்குமார் செய்திருந்தார், நிகழ்ச்சியில் வடக்கு தொகுதி பொறுப்பாளர் ஜெ.ஆர்.ஜான், பகுதி செயலாளர் பட்டுலிங்கம், செயற்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, கிளை பொறுப்பாளர்கள் வீராசாமி, கிருஷ்ணன், , நாராயணன்,  விஜயா, கணேஷ், அனிதா,பாமா முத்துக்குமார், 17வது வார்டு பொறுப்பாளர்கள் இமானுவேல், கார்த்திக், கோபால், 27வது வார்டு கிளை செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் நீதிராஜன், பழனிக்குமார், ஹரிஹரசுதன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், பாசறை ஷாஜகான், அருண் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்

Image
  திமுக தலைவர் ஸ்டாலின்  ஆணைக்கிணங்க ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமையில்  வழங்கப்பட்டது.   மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியினை  கரியப்பன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.   மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்க உத்தர சாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் உதவி செய்தனர்.   இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பி.கே.விஸ்வநாதன் துணைத் தலைவர் வெங்கடாசலம் மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் தென்றல் ரமேஷ் முன்னாள் நகர செயலாளர் மாரிமுத்து மற்றும் ஊராட்சி செயலாளர்கள், மூர்த்திகுமார், மற்றும்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.