Posts

Showing posts from September, 2020

ஜாலியாக உலாவிய புலி...கேமராவில் சுட்ட புகைப்படக்காரர்

Image
காட்டுயிர் காப்பக பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் கானக புகைப்படக் கலைஞர்கள் அந்த வாய்ப்பை வரமாக பெற்றவர்கள். நாள் கணக்கில் வாரக்கணக்கில் காத்திருந்து கானக உயிரினங்களை படமெடுத்து அவற்றின் நடவடிக்கைகளை உலகத்துக்கு சொல்வார்கள். அந்த வகையில் செப்டம்பர் 30-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கபினி வனப்பகுதியில், உற்சாகமாக நடை போட்ட புலி ஒன்று, கானுயிர் புகைப்படக்காரர் பிரசன்ன கவுடாவின் கேமரா கண்களில் சிக்கியது. அடர் வனத்தில் ஒய்யார நடை நடக்கும் புலியின் கம்பீரத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்.. #TamilAnjal #Prasannagowda #Muruganandhan    

நாங்குநேரியில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை: மாஸ்க் அணிந்த 12 பேர் கும்பல் வெறிச்செயல்

Image
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை. ஊர் முழுவதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி 12 பேர் கொண்ட முகக் கவசம் அணிந்த கும்பல் வெறிச்செயல்.   2019 நவம்பர் மாதம் மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் அதே ஊரை சேர்ந்த வாண்மதி என்பவரைவ காதல் திருமணம் செய்த 10 நாட்களில் மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் டவுண் வயல்தெருவில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2020 மார்ச் மாதம் நம்பிராஜன் மனைவி வாண்மதி உறவினர்கள் நாங்குநேரி ஹோட்டலில் வைத்து ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை நம்பிராஜன் தரப்பினர் கொலை செய்தனர். இதற்கு பழியாக இன்று பிற்பகல் மறுகால்குறிச்சியில் நம்பிராஜன் தாயார் சண்முகதாய் மற்றும் சகோதரி சாந்தி ஆகியோரை தலை துண்டித்து கொலை செய்துள்ளனர். 12 பேர் கொண்ட மர்ம கும்பல் முக்கவசம் அணிந்து ஊர் முழுவதும் பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடி குண்டுகளை வீசி கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். சண்முகத்தாய் தலையை வெட்டி ஊர் மத்தியில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்க...

நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை

Image
நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .  நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வடிவு கருவுற்று மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 4-வது முறையாக கருவுற்று ஐந்து மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டள்ளது. இதனால் கணவன் –மனைவி இருவரும் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர் . குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் நேற்று இரவு இருவரும் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் இந்நிலையில் காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்த போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் . உடனடியாக தச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இ...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக உயர் மட்ட ஆக்சிஜன் சிகிச்சை கருவி: அமைச்சர் கடம்பூர்  ராஜூ

Image
  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழு லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன நீராவி சலவை இயந்திரம் மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதியையும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் 170 பேருக்கு தலா இரண்டு சிறப்பு சீருடைகளையும்  வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.     இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு நவீன நீராவி சலவை இயந்திரம், கொரோனா பரிசோதனை முடிவு குறுஞ்செய்தியும், தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர், வேறு எந்த மாவட்டங்களில் இல்லாத வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்வதற்காக மூன்று  ஆர்.டி. பி. சி. ஆர் பரிசோதனைகள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று பாதிக்கப்பட்ட 12,000 பேருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்...

திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்த்தில் தீ விபத்து... கூரை வீடு சேதம்

Image
  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தனலட்சுமி 32 இவரது கூரை வீட்டில் நேற்று  மாலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.     அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க  முற்பட்டனர் தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கட்டில், பீரோ ,டிவி, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உட்பட சுமார் 2 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

பாலூர் ஊராட்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர்

Image
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டன. பெரியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கபசுர குடிநீர் வாங்கி அருந்தினர்.துப்புரவு பணியாளர் திரு. விஜயகுமார் அவர்கள் கபசுர குடிநீரின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் எடுத்துரைத்தார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

Image
  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டமும், உறுப்பினர் படிவம் மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (23.09.2020) மாலை 6 மணியளவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் திருமதி கிருஷ்ணவேணி ஜலந்தர் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. தேவகிராணி ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.   நிகழ்வில் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு உறுப்பினர் படிவங்களும், உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன.

ராதாபுரம் தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் இன்பதுரை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

Image
  ராதாபுரம் தொகுதி முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ராதாபுரம் தொகுதியில் முதல்கட்டமாக வள்ளியூர் ஒன்றியம் அடங்கார்குளம், அச்சம்பாடு ஊராட்சிகள் மற்றும் ராதாபுரம் ஒன்றியத்திலுள்ள க.உவரி, ஆனைகுடி,உறுமன்குளம்.கும்பிகு ளம் ஆகிய ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூ.4.41கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.   இந்நிலையில் ராதாபுரம் தொகுதி உறுமன்குளம் ஊராட்சி பெட்டைகுளத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 1400 மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.    இந்நிகழ்ச்சியில்  ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ எஸ் இன்பதுரை  கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி குடிநீர் இணைப்பு வழங்கும் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.   தொடர்ந்து வள்ளியூர் ஒன்றியம் அச்சம்பாடு ஊராட்சி பகுதிகளில் இத் திட்டத்தின் மூலம் அமைக்கபட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை இன்பதுரை எம்.எல்.ஏ துவக்கிவைத்தார்.   இந் நிகழ்ச...

வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாள் – எஸ்.பி.ஜெயக்குமார்  தலைமையில்  ஆலோசனைக் கூட்டம்

Image
  வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.     கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் ஊர்வலம் செல்வதற்கான தடை பற்றியும், ஜாதி ரீதியான கோஷங்கள் எழுப்ப கூடாது, நீதிமன்ற உத்தரவுபடி டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க கூடாது மற்றும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில் திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர்  பாரத், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் சதிஸ்நாராயணன், நாடார் பாதுகாப்பு பேரவை  ஓடைசெல்வம், சொர்ணவேல்,  கிளாஸ்டன், ஏ.சி துரை, அற்புதராஜ், அஸ்வின் மற்றும் செல்வநாதன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

தட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

Image
  சொக்கன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கில் தூண்டுதலின் பேரில்  கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்திநாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்   தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த செல்வன் என்ற வாலிபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்பார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கில் தூண்டுதலின் பேரில்  கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை உடனே கைது செய்யவேண்டும், கொலை செய்யப்பட்டு இறந்த செல்வனின் மனைவி ஜீவிதாவுக்கு அரசு வேலை உடனே வழங்க வேண்டும், நிவாரண உதவியாக 50 லட்ச ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.   நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக...

சட்டமன்ற உறுப்பினர் காரை சேதப்படுத்திய வழக்கு இருவர் கைது

Image
  தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி நேரத்தில் இருவரை விரைந்து கைது செய்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.        மெய்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டுபத்துப் பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     இது குறித்து சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெய்குமார் நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டு பிடித்து விரைவில் கைது செய்ய தனிப்படைகள் அமைத்தார்.   மேற்படி தனிப்படையினர் 6 மணி நேரத்தில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஜின்னா (27) என்பவரையும்,   தண்டபத்து கணேசன் மகன் செல்வநாதன் (41) ஆகிய இருவரை...

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி

Image
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டார். இதில், கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பலர் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது :- கொரோனா ஊரடங்கு காலத்தில் தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. அந்தத் திட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் 15-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 5 தொகுதிக்கு...

குடியாத்தம் நகரத்தில் இந்து தேசிய கட்சிமாணவர்களுக்கு சான்றிதழ்

வேலூர் மாவட்ட குடியாத்தம் நகரத்தில் உள்ள  இந்து தேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானத்தன். இவர் யோகா பயிர்ச்சி ஆசிரியர். சிறந்த யோகா பயிற்ச்சி  மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செ.சத்திஷ்குமார் சான்றிதழ் வழங்கினார் உடன் மாவட்ட துணை தலைவர் சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர்  டீ.தட்சணாமூர்த்தி  மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜெ.கார்த்தி பி.கம். பள்ளிகொண்டா நகர தலைவர் கு.குணசேகரன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுனர்.  

ஏலகிரி மலையில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்

Image
  நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை பிஜேபி நிர்வாகிகள் கொண்டாடினர். தொடர்ந்து,   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அத்தனாவூர் பஸ் நிலையம் அருகில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் சி.கவியரசு தலைமையில்  கொடியேற்றி பாரத் மாதா கி ஜே, இரும்பு மனிதர் நரேந்திர மோடி வாழ்க, போன்ற கோஷங்களை எழுப்பி. இனிப்பு வழங்கி அன்னதானம் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.   இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் கோ வெங்கடேசன் மாவட்ட தலைவர் வாசுதேவன் மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன் மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி ஒன்றிய தலைவர் முரளி ஒன்றிய பொதுச் செயலாளர் ரவி மாவட்ட செயலாளர் கலை சோமசுந்தர பாரதி, அசோகன் சரவணன், ஒன்றிய துணைத் தலைவர் மாரிமுத்து மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கலையரசு மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

குடியாத்தம் நகரில் கால்வாய்களை தூர்வார வேண்டும்இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் தலித் குமார் கோரிக்கை

Image
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் குடியாத்தம் நகரில் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்டத் தலைவர் இரா.சி.தலித் குமார் கேட்டுகொண்டார்.   இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் :   வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், குடியாத்தம் நகரில் கழிவுநீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்களை நகராட்சி நிர்வாகமும், போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். மழை அதிக அளவில் பொழியும் என்று எதிர்பார்க்கும் நிலையில் சீரமைப்பு நடவடிக்கை உடனே தேவை. சில நிமிடங்கள் மழை பெய்தாலே குடியாத்தம் புதிய, பழைய பஸ் நிலையங்களில் குறைந்தது ஓரடிதேங்குகிறது. இதே நிலைதான் ஆர்.எஸ்.ரோடு, பலமநேர் ரோடு, தாழையாத்தம் பஜார், தரணம்பேட்டை பஜார், மேல்பட்டி ரோடு, பேர்ணாம்பட்டு ரோடு போன்றவற்றிலும் மழைநீர் செல்ல வழியில்லை. கழிவுநீரோடு மழைநீர் கலந்து தொற்றுநோய் பரவுகிறது. கொரோனா காலம் என்பதால் இந்த ஆண்டு மோசமான நிலை உருவாக வாய்ப்பு உண்டு. ஆபத்து நிகழும் முன் விழிப்பது அவசியம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞர், இளம்பெண் பாசறையின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Image
  திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞர், இளம்பெண் பாசறையின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கழக நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் கையேடுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.     நிகழ்வுக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், பாசறை லோகநாதன், எம்.கே.எம்.கணேஷ், அட்லஸ் லோகநாதன், பழனிவேலு, பூலுவபட்டி பாலு, ரத்தினகுமார், அசோக்,  எஸ்.பி.ஏ., சேட், ருக்குமணி, பாலசுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பு,     செந்தில், சின்னசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம், தங்கராஜ், சவுந்தர்ராஜ், ஜூபிடர் சிவக்குமார், வட்ட கழக செயலாளர்கள் ஈஸ்வரன், மாணிக்கம், ராமசாமி, சேது, மனோகரன், பிரகாஷ், வேலுசாமி, வெங்கடாசலம், புண்ணியமூர்த்தி, சங்கீதா, ராஜகோபால், ஜெயகோபால், செந்தில், விஜய், ஷாஜகான், பரமராஜன், அருண் உள்பட பலர் பங்கேற்றன...

குப்பை கிடங்கை அகற்றக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு

Image
மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் குப்பை கிடங்கை அகற்றக் கோரி மாவட்டச் செயலாளர் ஜி.எல்.எம். சிவக்குமார் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.     அதில் கூறப்பட்டிருப்பதாவது:-   நான் மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு வட கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் மையப்பகுதியில் பால வித்யாலயா ஆரம்ப பாட சாலை அமைந்துள்ளது. தற்போது பள்ளி செயல்படுவதில்லை. இந்த இடத்தில் நகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டும் கிடங்காக நகராட்சி மாற்றியுள்ளது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குப்பைக்கிடங்கிற்கு அருகில் யோகா மையம், விநாயகர் கோயில், அம்மன் கோயில், லில்லிபுட் சிறுவர் பள்ளி, நியாயவிலைக்கடை மற்றும் மின்வாரிய அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது.   குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மழைநீர் தேங்குவதால் உருவாகும் கொசுக்களால் மலேரியா, டெங்கு போன்ற த...

ஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில்

Image
ஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில். உடற்கூறு ஆய்வு செய்து எரித்த வனத்துறையினர்.     ஆம்பூர் வனச்சரக காப்பு காடுகளில் அண்மைக்காலமாக மயில்களின் நடமாட்டம் அதிகரித்து  வருகிறது. வனப்பகுதிகளில் மட்டுமல்லாது விவசாய நிலங்களிலும், மாந்தோப்புகள் மற்றும் தென்னந்தோப்புகளில் உள்ளிட்ட பகுதிகளிலும் மயில்களின் நடமாட்டம் இப்போது அதிகரித்து வருகிறது.   ஆம்பூர் அருகே  மிட்டாளம் ஊராட்சியில் உள்ளது பைரப்பள்ளி.இந்த ஊரை ஒட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் அருகே மேர்லமிட்டா ஏரி கானாறு உள்ளது. இந்த கானாற்று பகுதியில் இன்று காயம்பட்ட நிலையில் ஒரு ஆண் மயில் உயிருக்கு போராடிய நிலையில்  இருந்தது.     இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனச்சரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வனச்சரகர் ( பயிற்சி) சுரேஷ்குமார் , வனக்காப்பாளர்கள் ராஜ்குமார் , கணேசன், மகேஷ் , ஞானவேல் ஆகியோர் வந்து ஆண் மயிலை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த ஆண் மயில் உயிரிழந்தது.   பின்னர் அடிப்பட்ட ஆண் மயிலை கால்நடை மருத்துவர் பாண்டியன்  உடற்கூறு ஆ...

கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் மரணம்: கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு

Image
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சார துண்டிப்பால் கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் சுமார் 40 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் அதே வளாகத்தில், தனிமைப்படுத்தல் வார்டுக்கு அருகில் மருத்துவக் கல்லூரி   கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான பள்ளம் தோண்டும் பணியின்போது தனிமைப்படுத்தல் வார்டுக்கு செல்லும் மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூச்சு விட முடியாமல் திணறி அவதிப்பட்டனர். மேலும் சிகிச்சையில் இருந்த கவுரவன் 69 , யசோதா 67 என்ற இருவரும் ஆக்ஸிஜன் பெறமுடியாமல் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதுதொடர்பாக நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவ ஊழியர்களிடம் புகார் செய்ய முற்பட்டபோது யாருமே வரவில்லை என புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சம...

திருப்பூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் பலி: உறவினர்கள் போராட்டம்

Image
திருப்பூரில் காவல் துறையினர் அழைத்துச் சென்ற வாலிபர் மரணம் அடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் கே செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 34). பனியன் தொழிலாளியான இவர் ஏற்கனவே தனது மனைவியை விவாகரத்து செய்து இருந்த நிலையில், செட்டிபாளையம் பகுதியில் சரண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரண்யா அவரது தோழிகளுடன் ஏற்ப்பட்ட தகராறில் சுடுதண்ணீர் ஊற்றப்பட்டு காயமடைந்தார்.  சிகிச்சை பெற்று வந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.  இது தொடர்பான விசாரணைக்கு இன்று காலை 7 மணியளவில் மணிகண்டனை திருப்பூர் ரூரல் போலீசார் அழைத்து சென்றனர். சில மணி நேரத்தில் மணிகண்டன் இறந்துவிட்டதாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்துவிட்டனர். இதையடுத்து மணிகண்டனின் உறவினர்கள்  மணிகண்டனை போலீசார் அடித்து கொன்றதாகவும், அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி திருப்பூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன...

4 கோடி மதிப்பிலான தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜாகிருஷ்ணன் பூமி பூஜையிட்டு  பணிகளை துவக்கி வைத்தார்

Image
  ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டையம்பாளையம், பெருமுகை,  புஞ்சைதுறையம் பாளையம் மற்றும் புளியம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தார்சாலை மேம்படுத்துதல்,  தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்குதல்,  கான்கிரீட் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு 4 கோடி மதிப்பிலான தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜாகிருஷ்ணன் பூமி பூஜையிட்டு  பணிகளை துவக்கி வைத்தார்.   முன்னதாக கள்ளிப்பட்டியில்  நடைபெற்ற விழாவில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் கலையரங்கதிற்கு  கட்டுமான பணியை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கன்வாடிகளுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.பின்னர்  செய்தியாளர்களிடம்,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களான தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தமிழக சுற்று சூழல் துறை அமைச்சர்  கே.சி.கருப்பணன் ஆகிய இருவரும் அந்தியூர்  தொகுதிக்கு தேவையான திட்டங்களை முன் நின்று செயல்படுத்தி வருவதாகவும்,  தொகுதிக்கு எப்போது...

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

Image
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி நொச்சிகுளத்தை சேர்ந்த அமமுக  நிர்வாகிகள் 20 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் வழக்கறிஞர் அன்பு ஏற்பாட்டில்  திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின் போது மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆர்  இளைஞரணி செயலாளர் சண்முககுமார் உடனிருந்தார்.

மக்கள் எதிர்ப்பை மீறி பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் -எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

Image
  இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;   வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நகரின் மையப்பகுதியில்  60 ஆண்டு காலமாக பேருந்து  நிலையம் இயங்கி வருகின்றது.  3 மாநிலங்களை ஒட்டி தமிழக எல்லையில் பேரணாம்பட்டு நகரம்  அமைந்துள்ளதால் ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து வர்த்தக  நோக்கிற்காகவும், குடும்ப உறவுகளை தேடியும் பேரணாம்பட்டிற்கு   ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும்  விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக பேரணாம்பட்டு வந்து செல்கின்றனர்.  நகரை சுற்றியுள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் உள்ளதால் மக்களின் பயன்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பயணிகள் பயன்பாட்டுக்கு இன்னும் வசதியாக இந்த பேருந்து நிலையத்தை மாற்றலாம். இது பேரணாம்பட்டு ...

திருப்பூர் தெற்கு தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது 

Image
  திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, 56 வது வார்டில் அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் கழக உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வுக்கு, முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தார்.     முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், கட்சி நிர்வாகிகள் டெக்ஸ்வெல் முத்துசாமி, கருவம்பாளையம் மணி,  தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், ஆட்டோ கோவிந்த், சலவை மணி, பொன் மருது, ராயபுரம் தாமோதரன், ஓடக்காடு தனபால், சாகுல் அமீது, வக்கீல் முருகேசன், பரமசிவம், பிரிண்டிங் நாகராஜ், கே.எஸ்.பழனி, பிரிண்டிங் சரவணன், கே.வி.ஆர்., நகர் அலெக்ஸ், குருசாமி, கறிக்கடை ராமசாமி, பழனி, செல்வம் பழனி, சத்தி, மாசாணி, சாரதா, பெயிண்டர் மனோகரன், திருநகர் சாமிநாதன், சுப்பிரமணி, திருநகர் பாலு, முத்துக்கருப்பன், நவநீதகிருஷ்ணன், மூர்த்தி,  ஜான் பாய், தங்கவேல், ரவி,, அருண், கிருஷ்ணன், போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர...

குற்றாலம் மலைப்பகுதியில் மழை அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு

Image
  குற்றாலம் மலைப்பகுதிகளில்  பெய்யும்  தொடர் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.   தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும் இந்த ஆண்டும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வழக்கம்போல் சாரல் மழை பெய்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது.  பலமுறை வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோணா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.    இந்நிலையில்  குற்றாலம் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி, அருவி தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குற்றாலத்தில் வெயில் இல்லை. மேலும் குற்றாலத்தில் குளிர்ந்த இதமான சூழ்நிலை நிலவுகிறது.   அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரி...

தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Image
தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.     ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சீகட்டி மலைக்கிராமத்தில் வீட்டில் கஞ்சா வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.     அப்போது சீகட்டி  கிராமத்தை சேர்ந்த ஜடையப்பன் என்பவரது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து ஜடையப்பனை உடனடியாக கைது செய்த காவல்துறையினர் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தன

திருப்பத்தூர் அருகே கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

Image
  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய மண்டலவாடி பகுதியில் வசிப்பவர் யுவராஜ் (45). இவரது மனைவி மாலதி (35). இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.   இவர்கள் பெரியமண்டலவடி பகுதியில் ஒரு வீட்டின் மேல் மாடியில் வசித்து வருகின்றனர். வீடுகளுக்கு வயரிங் வேலை செய்யும் யுவராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்று விட வீட்டின் மேல் மாடியில் சமையல் செய்து கொண்டு இருந்தார் மாலதி.   அப்பொழுது சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு இணைக்கப்பட்ட கேஸ் டியூப் பழுதடைந்து இருந்ததால் கேஸ் கசிந்து திடீரென்று மளமளவென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.   திடுக்கிட்ட மாலதி உடனடியாக சுதாரித்துக் கொண்டு  சட்டென்று வெளியே விளையாடிக் கொண்டிருந்த தங்களுடைய பிள்ளைகளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.   தகவலறிந்த தீயணைப்புத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பீரோ கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆயின.   இச்சம்பவம் அப்பகுதியில் பெரு...

ஜோலையார்பேட்டை அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

Image
  ஜோலையார்பேட்டை அருகே உள்ள வக்கனம்பட்டி பகுதியில் ஏ.டி.எம் உள்ளது இதனை நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்ச்சித்து உள்ளார். இயந்திரத்தை உடைக்கும்போது தகவல் ஜோலையர்பேட்டை காவல் நிலையத்திர்க்கு அபாயமணி ஒழித்து பின்னர் போலீசார் வந்து பார்த்தபோது மர்ம நபர் தப்பி ஓடினார். இதில் மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை  உடைக்கும்  சி.சி.டிவி வீடியோ பதிவாகி உள்ளது.இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை.

பம்மல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா

Image
பம்மல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா, தாரை தப்பட்டையுடன் கொண்டாடிய நிர்வாகிகள்.     சென்னை அடுத்த பம்மல் நாகல்கேனி பெரியார் நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் பிறந்தாள்: விழா செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.சி அணி மாவட்ட பொதுசெயலாளர் கே..எஸ்.பழனி தலைமையில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட தலைவர் பலராமன் கலந்துகொண்டார் அவரை வரவேற்க  எஸ்.சி.அணி மாவட்ட பொதுச்செயலாளர் பழனி வழி நெடுங்கிலும் பிரம்மாண்ட கழககொடியேற்றி, தாரை, தப்பட்டையுடன், பேண்டு வாத்தியங்கள் முழங்க புலிவேடமிட்டவர்கள் நடனமாடி அவர்களுடன் பஜக நிர்வாகிகள் குட்தாட்டம் போட்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து பஜக கழக கொடியேற்றியும், பஜக வில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பின்னர் மாற்று திறனாளிகளுக்கு முன்று சக்கர சைக்கிள் வழங்கியும், ஏழை, எளிய மக்களுக்கு நகதிட்ட உதவிகளான புடவை வழங்கப்பட்டு சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.   இதில் எஸ்.சி.அணி மாநில செயலாளர் சம்பத்ராஜ், ...

தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலிசாருக்கும் - சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா

Image
தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலிசாருக்கும் - சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?  என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக சிபிசிஐடி_யின் டிஎஸ்பி ராஜீ தகவல்.     தனுஸ்கோடியில் கடந்த 5ம் தேதி  தமிழக கடலோர பாதுகாப்பு குழும  போலீசாரால்  கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்ட இலங்கை கொழும்பு  குற்றத்தடுப்பு பிரிவு காவலர் பிரவின் குமார் பண்டாராவிற்கும் - தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை  நிழல் உலக தாதா அங்கொட லொக்காவுக்கும் போதை பொருள் விற்பனை செய்வதில் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் ஜெ.எம். 02 நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் கடந்த வியாழக்கிழமை  அனுமதியளித்தார.,     இதனையடுத்து இன்று காலை   சிபிசிஐடி_யின் டிஎஸ்பி ராஜீ தலைமையில் வந்த  போலிசார் கைது செய்யப்பட்ட சிங்கள  போலிசார் பிரவின்குமாரை நேரில் அழைத்து வந்து தனுஷ்கோடி பாலம் பகுதியில்   உள்ள மீனவர்களிடம்  விசாரணையில் ஈடுபட்டனர்., மேலும் நான்கு...

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேர்ணாம்பட்டு கிளையின் அலுவல் குழுக் கூட்டம்

Image
  வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் அலுவல் குழுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு சேர்மன் த.முத்தரசன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்.வள்ளுவன் கீழ் காணும் தீர்மானங்களை முன் வைத்தார்.   இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி பேர்ணாப்பட்டு வட்டக் கிளை அறிமுக விழா கூட்டம் நடத்துவது. பேர்ணாம்பட்டு வட்டத்தில் 10 அரசு துவக்கப் பள்ளிகளை அந்த பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு உடன் இணைந்து  மாதிரி பள்ளிகளாக மாற்றுவது.   பேர்ணாம்பட்டு வட்ட எல்லைக்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வேலூர் மாவட்ட கிளையுடன் இணைந்து வட்ட அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாம் நடத்துதல்.   விழா நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளரின் டாக்டர்.சி.இந்திரநாத் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை நடுதல். மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல். பேர்ணாம்பட்டு ஏரியை தூய்மைப்படுத்தி மழைநீர் ஆதார மையமாக உறுவாக்குதல்.   ரசாயன கழிவுகளை அகற்றி பேர்ணாம்பட்டு ஏரியில் மூலிகை மரங்களை நட்டு பாதுகாக்...

ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர் நரசிங்கபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Image
  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர் நரசிங்கபுரத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் சுமதி வடிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.   கிளைச் செயலாளர் சுருளி வரவேற்றுப் பேசினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் ஏழை எளிய மக்களுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.   அப்போது ஊராட்சி ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் தார்சாலை வசதி சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் பதித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் ,தொடர்ந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் மரிக்குண்டு செல்வம்,விவசாய அணி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.    

திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் குமரன் பூங்கா புதுப்பிக்கும் பணி... வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார்

Image
திருப்பூர் பி.என்.ரோடு  மேட்டுப்பாளையம் குமரன் பூங்காவைமத்திய அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமியின் சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணியை திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் , அரிமா சங்க மாவட்ட ஆளுநர் கருணாநிதி,  மத்திய அரிமா சங்க தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி,  மாநகராட்சி உதவி கமிஷனர்கள் வாசுக்குôர், செல்வநாயகம், உதவி பொறியாளர் சந்திரசேகர், சுகாதார அலுவலர் முருகன், முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முன்னாள் டி.எஸ்.பி. மயில்சாமி, மத்திய அரிமா சங்க செயலாளர்கள் ஜெயசேகரன், அனந்தநாராயணன், அபர்ணாநாகராஜ் பொருளாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.