தூத்துக்குடியில் ஆப்ரேஷன் 2.0 - 26 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.!

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது - பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இன்று காலை தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் போலீசார் அய்யனார்புரம் சோதனைசாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம், நெடிய விலை பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் 1) துளசி (40), கன்னியாகுமரி இந்திராநகர், அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த ஜேசு ...