Posts

Showing posts from May, 2023

ஏழை எளிய மக்களுக்கு கோரல் பவுண்டேஷன் வழங்கும் இலவச கண் கண்ணாடிகள்..

Image
 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கணபதிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ள சேலம் ரிஷி நேத்ராலயா கண் மருத்துவமனை, கோரல் பவுண்டேஷன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் இம்மருத்துவமனையில் கண்களில் பார்வை குறைபாடு உள்ளதா என கண்டறியப்படுகிறது.  அவ்வாறு கண்டறியப்பட்டு அதி நவீன கண்புரை அறுவை சிகிச்சை மூலம் கண்களில் வலி இல்லாமலும், கண்களில் தையல் இல்லாமலும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.  அவ்வாறு அறுவைச் சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் தெளிவான கண் பார்வை கிடைக்கவும் ஏழை எளிய மக்களுக்கு கோரல் பவுண்டேஷன் மூலம் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது.  அதி நவீன கண்புரை அறுவை சிகிச்சை  ₹5999/ முதல் செய்து கொடுக்கப்படுகிறது.  மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள  9659972121 என்ற எண்ணை அழைக்கவும்.  தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம். எல். ஏ.

Image
 ஈரோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி கலந்து கொண்டார்.  அவர் கலந்து கொண்டு சிகரெட் மது மற்றும் போதை மாத்திரைகள் உபயோகத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.  மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து புகையிலை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வினை ராஜ யோக தியான நிலையே பிரஜாவித பிரம்ம குமாரிகள் ஈஸ்வரியா விஸ்வ வித்யாலயம் அமைப்பினர்,  பாஜக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வக்பு வாரியம் நிர்வாகிகளை அறிவித்த பின்னரே, திருவிழா நடத்த முடிவு- கெஜலட்டி தர்ஹா அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு..

Image
ஈரோடுமாவட்டம்,பவானிசாகர்அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்தில்ற்கு உட் பட்ட,கெஜலட்டியில்,200 ஆண்டுகளு க்கு மேலாக, பழமை வாய்ந்த தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு, உருஸ் திருவிழா நடை பெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு திரவிழாவின் போது,நிர்வாகிகளில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கரு த்து மோதல் காரணமாக, இந்த ஆண் டு ஒரு தரப்பினர் மட்டும், திருவிழா நடத்த, நோட்டீஸ் அச்சடித்து, விநி யோகித்த நிலையில், மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவி த்து, மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். இதனையொட்டி,இரு தரப்பினரும் இணைந்து விழா நடத்த அனுமதி பெறவேண்டும் என கூறி, விழா நடத்த, வனத் துறையினர். அனுமதி மறுத்தனர். இதனை யொட்டி, இரு தரப்பினரிடையே, அமைதி பேச்சுவார்த்தை, சத்திய மங்கலம் வனக்கோட்ட புலிகள் காப்பக துணை இயக்குனர் அலு வலகத்தில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்டஇருதரப்பினர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கட் பிரபு, சத்தியமங்கலம் காவல் உதவி கண் காணிப்பாளர் அய்மென் ஜமால், சத் தியமங்கலம் வட்டாச்சியர் சங்கர் கணேஷ், பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார், காவல் ஆ...

புதிய பாராளுமன்றத்தில் தேவாரம் பாடிய மாணவிக்கு திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பில் பாராட்டு

Image
பு து டெல்லியில் நேற்று முன்தினம்  புதியதாக  அமைக்கப்பட் ட பாராளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் தேவார பதிகம் பாடிய திருப்பூர் மாவட்டம்,  உடுமலையிலிருந்து  பங் கேற்ற கல்லூரி மாணவிக்கு  திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை -யின் சார்பில்  அவரது இல்லத்தில் பொன்னாடை அணிவித்து, பாராட்டு  தெரிவிக்கப்பட்டு   நினை வுப்பரிசு  வழங்கப்பட்டது.  மாணவியின் பெற்றோர்களும், பண்ணிசைப்  பயிற்றுநரும்  பொன்னா டை அணிவிக்கப்பட்டு  கெளரவப்படுத் தப்பட்டனர் . திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையின் அமைப்பாளர்  கொங்கு ராமகிருஷ்ணன் , பொருளாளர்  சரவண சுப்பிரமணியன்  தலைமையில் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து கல்லூரி மாணவியும், பெண் ஓதுவாருமான  செல்வி. உமா நந்தினி  கூறியதாவது:  பல்வேறு  இசை ப்போட்டிகளில்  கலந்து கொண்டு பல பரிசுகளைப்  பெற்றுள்ளேன் .  புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் தேவாரப்  பண்ணிசை பாடுவதற்கு ஆறு ஓதுவார்களில் ஒருவராக திருவாவடுதுறை ஆதீன க...

சிவகிரி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Image
 சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற  கூட்டம் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்ற கவுன்சிலர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.  அதையும் மீறி பேரூராட்சித் தலைவர் தன்னிச்சையான செயல்பாடுகளால்  சிவகிரி பேரூராட்சியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், நிறைவேற்றப்படாததை கண்டித்தும் மன்றத்தின் செலவு சீட்டுகளை கூட்ட விவாத அஜெண்டாவில் சேர்க்காமல் மறைக்கப்பட்டதாலும் அரசிடமிருந்து வரப்பட்ட கடிதங்களை கவுன்சிலர்களின்பார்வைக்கு தெரியப்படுத்தவில்லை.  தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தவறுகளை சுட்டிக் காட்டும் கவுன்சிலர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு வார்டு பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.  பின்னர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கவுன்சிலருடைய எதிர்ப்பை மன்றத் தீர்மான புத்தகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதில் திமுக கவுன்சிலர்கள் 7 பேர் அஇஅதிமுக 1 பாரதிய ஜனதா கட்சி 1 சுயே...

திருப்பூர் மாசானி அம்மன் கோவிலில் 30 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் விழுந்தது... 3 மின் கம்பங்கள் முறிந்தன.

Image
திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் மற்றும் அரச மரங்கள் உள்ளன. இந்த நிலையில் இன்று மாலை  பெரும் காற்றுடன் மழை பெய்தது காரணமாக கோவில் வளாகத்தில் இருந்த அரச மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது.  இதில் கோவிலில் உள்ள கான்கிரீட் தளம் மற்றும் காம்பவுண்ட் சுவர் சேதம் அடைந்தது. மேலும் பெரிச்சிபாலையம் பகுதிக்கு செல்லக் கூடிய மின் கம்பிகள் மீது அந்த மரம் விழுந்ததால் 3 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இத்துடன் கோவில் வளாகத்தில் கருப்பராயன் சாமிக்கு அருகில் இருக்கக் கூடிய வேப்ப மரமும் வேரோடு பெயர்ந்து நிற்கிறது.  இதனால் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த சிமெண்ட் சீட் கூரை, தரைத்தலங்கள் சேதம் அடைந்தது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் அந்த பகுதி முழுக்க மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களை அகற்றி மின்கம்பங்களை மாற்றி விரைவில் மின் சேவை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர மனு

Image
மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிக்குப்பபாளையத்தில் அன்னூர் பிரதான சாலையில் சாக்கடை தண்ணீர் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது இன்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 6 வது வார்டு உறுப்பினர் திருமதி ரேவதி பழனிச்சாமி அவர்கள் சாக்கடை வாய்க்கால் அமைத்து தரக்கோரி மனு கொடுத்தார்

அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
*அதிமுக சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்* கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி போதை பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை காப்பாற்ற தவறிய விடிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்குமார் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார், முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழில் சங்க செயலாளர் ஓ.கே.சின்னராஜ், ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ராஜ்குமார், கோவனூர் துரைசாமி, ஜெயராமன், அம்பாள் பழனிச்சாமி, சாய் செந்தில் ஜெகதீஷ், வேலுசாமி,நகரக் கழகச் செயலாளர்கள் வான்மதி சேட், ஆறுமுகசாமி,குருதாச்சலம்,  பேரூர் கழக செயலாளர்கள் ரவிகுமார், மாவட்ட கழ...

கடும் போக்குவரத்து நெரிசல்

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உப்பட்டி பஜார் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இச்சாலையானது கூடலூர் மற்றும் கேரளா மாநிலம் சுல்தான்  பத்தேரிக்கு செல்லும் பிரதான சாலையாகும் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகமான பேர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்  இச்சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையாகும் இந்நிலையில் உப்பட்டி பஜார் பகுதியில் வாகனங்களை  முறையாக நிறுத்தாததால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது காரணமாக நோயாளிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் ஏற்பட்டுள்ளது வாகனங்களை ஆங்காங்கே  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூர் ஏற்பட்டுள்ளது அவசர உறுதி தாய் செய் மற்றும் ஆம்புலன்ஸ் 108 இப்பகுதியில்   நின்று செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது நோயாளிகள் கர்ப்பிணிகள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது நோயாளிகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது ஆகவே  இந்த வாகன நெரிசலை உடனடியாக சரி செய்ய காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெல்லியால நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தலைவர் ரஜ...

திண்டுக்கல் அருகே 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி

 திண்டுக்கல்  ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே பழனி கோவிலுக்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பிய இருவரும் ,வேடசந்தூர் சாலையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் இரவு 10:45மணிக்கு நேருக்கு நேர் அதிபயங்கரமாக மோதிக்கொண்டனர் ..இந்த விபத்தில் பழனி கோயிலுக்கு சென்று வந்த பாளையம் சீத்த பட்டியை சேர்ந்த ரத்தினம் ..அதே பகுதியைச் சேர்ந்த சேகர் ..மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நடுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்த சுதாகர். துரைராஜ்.ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலே பலியாயினர். அதேபோல் அந்த இடத்தில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அந்த இடத்தில் நின்றிருந்த கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் படுகாயமடைந்தார். போலீசார் பலியான நான்குபேரை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்பு படுகாயம் அடைந்த வரை திண்...

சத்திகொமாரபாளையம் ஊராட்சியில், அதிமுக பூத் கமிட்டி கூட்டம்.

Image
  . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சத்திவடக்கு ஒன் றியம், கொமாரபாளையம் ஊராட்சி அதிமுக சார்பாக, 2024 நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர் கள் ஆலோசனைக் கூட்டம், கொமார பாளையத்தில், அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளரும், பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி. பி.ஏ.எம்.எல்.ஏ தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புற நகர் மேற்கு மாவட்ட செயலாளரு மான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் K.K.காளியப்பன், ஒன்றிய கழக செயலாளர்கள் மாரப் பன், பழனிசாமி, சிவராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் S.R.செல் வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்  A.T.சரஸ்வதி, கொமாரபாளை யம் ஊராட்சி  மன்ற தலைவர் S.M. சரவணன், மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் தமிழ்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ, ஊராட்சி துணை தலை வர் ரமேஷ்,  கிளை கழக செயலாளர் கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள்,  பூத்...

திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுகவினர் பகுதி வாரியாக ஆலோசனை... பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்பு

Image
 திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, திருப்பூர் தெற்கு மத்திய , தென்னம்பாளையம் கருவம்பாளையம் ஆகிய பகுதி  கழகங்களுக்கு  உட்பட்ட வார்டு பகுதிகளில் தீவிர   உறுப்பினர் சேர்க்கை பணிகள் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்திலும், நல்லூர் பகுதி ஆலோசனைக் கூட்டம், காட்டுப்பாளையம் வி.பி.என். தோட்டத்திலும் நடைபெற்றது.   மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  வெ.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் \ பொள்ளாச்சி.வி.ஜெயராமன் அவர்கள் உறுப்பினர் சேர்க்கை பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.  தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி, திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,  மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான  கண்ணப்பன்,  கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் கே.பி.ஜி.மகேஷ்ராம்,...

திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் அரசு மருத்துவக்கல்லூரி... முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி

Image
 திருப்பூர் மாவட்டத்தில் விரைவில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார். திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது . மருத்துவக் கல்லூரி தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இன்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது .   இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் , செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.  இதனை தொடர்ந்து மேடையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், ’திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ...

அரிசி கொம்பன் யானை நடமாட்டத்தால் சுருளி அருவிக்கு அனுமதி மறுப்பு

Image
சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். கம்பம் அருகே மேகமலை வன உயிரின சரணாலய பகுதியின் மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும்  வழிபாட்டுத் தலமாகவும்உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கோடை கால விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வந்தனர். இன்று அரிசிகொம்பன் யானை சுருளிப்பட்டி தோட்டத்தில் புகுந்தது.  தொடர்ந்து வனப்பகுதிகளில் சுற்றிதிரிவதால் இன்று சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாராயண தேவன்பட்டி, கம்பம் சுருளிப்பட்டி வரும் பாதைகள் அடைக்கப்பட்டு திருப்பிவிடப்படுகின்றனர்.

வேன் மீது பஸ் மோதியதில் 2 பேர் பலி

Image
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கிராமத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.  பொங்கல் விழா நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆடல், பாடல் கலைஞர்கள் ஒரு வேனில் மதுரைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.  இன்று அதிகாலை திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள நத்தம்பட்டி - லட்சுமியாபுரம் சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது, ஊட்டியில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, வேன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் சிக்கிய, வேன் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் (31) மற்றும் ரகு (21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், வேனில் சென்றவர்கள் என 8 பேர் படுகாயமடைந்தனர்.  விபத்து குறித்து தகவலறிந்த நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, திருவில்லிபுத்தூர் அர...

கார்-லாரி மோதல்... 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலி

Image
கார்- லாரி மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர்  பரிதாபமாக பலியானார்கள். சிவகங்கை, வாக்குடியை சேர்ந்த கணேசன்காரில் கரூருக்கு சென்று விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, காரைக்குடி அருகே  அமராவதிபுதூரில் அவர் வந்து கொண்டு இருந்த போது, காரைக்குடி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரில் வந்த லாரியின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் கணேசன் அவருடன் வந்த பெண் மற்றும் 2 வயது பெண் குழந்தை ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  கார் ஓட்டி வந்த டிரைவர் படுகாயத்துடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  மூன்று  உடலை கைப்பற்றிய சோமநாதபுரம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

2026ல் அதிமுக தலைமையிலான ஆட்சி... முன்னாள் அமைச்சர்செங்கோட்டையன் பேச்சு-

Image
சத்தியமங்கலத்தில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  சத்தியமங்கலம் தெற்கு, வடக்கு ஒன்றியம், சத்தியமங்கலம் நகர அதிமுக  பூத் கமிட்டி  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டை யன் எம்.எல்.ஏ.,  தலைமை தாங்கினார். பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, ஒன்றியச் செய லாளர். என்.என்.சிவராஜ், சி.என். மாரப்பன், சத்திநகர அதிமுக செயலாளர் ஓ.எம். சும்பிரமணியம் , அரியப்பம்பாளையம் பேரூர் கழகச் செய லாளர் தேவமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:  திமுக தற்போது கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல் வேறுபிரச்சனைகளில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. அதிமுக கட்சியினர் ஒற்றுமை யுடன் செயல்பட்டு கொண்டி ருக்கிறோம். அதிமுக எஃகு கோட்டை,இதை  யாராலும் அசைக்க முடியாது. அனைவரும் இணைந்து 2 கோடி கட்சி உறுப்பினர்களை இணைத்து, வரலாறு படைத்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும் என்றார்.  மேலும் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 39 தொகுதிகளிலும், அதிமுக மற்ற...

ஆற்றல் அறக்கட்டளை சார்பில் 10 ரூபாய் உணவகம் தொடக்கம்

Image
 ஈரோடு பகுதியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் புதிய உணவகம் செயல்பாட்டில் உள்ளது.   இன்று முதல் பத்து ரூபாய் கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான தரமான உணவு வழங்கப்படும். வாரம் 7 நாட்களும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகளிலும் உனவு கிடைக்கும்.  அளவில்லா உணவு பரிமாற ஏற்பாடு செய்துள்ளோம் தெரிவித்துள்ளனர்.  இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் ஆறு பேர் இந்த பணியில் முழு நேரமாக ஈடுபடுகின்றனர். ஒரே நேரத்தில் 60 பேர் அமர்ந்து உணவு அருந்தலாம். காலை இட்லி சாம்பார் மற்றும் சட்னி எட்டு மணி முதல் 10 மணி வரையிலும் வழங்கப்பட உள்ளது.   மதிய உணவாக 12 மணி முதல் 2 மணி வரை  சாதம் சாம்பார், பொரியல் மோர். மற்றும் ஊறுகாய் வழங்கப்பட உள்ளது.   இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை  இட்லி சாம்பார் மற்றும் சட்னி  பரிமாறப்படும்.  தேவையான பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  பத்து ரூபாய் செலுத்தினால் போதும். போதிய உணவுகள் பெற்று சாப்பிடலாம்.  இதுகுறித்து ஆற்றல் அசோக்குமார...

அசுத்தமான கிணற்றுநீர்

Image
 நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொலப்பள்ளி பாடசாலை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில்  உள்ள கிணற்றிலிருந்து கொலப்பள்ளி கடைவீதி உட்பட பல்வேறு குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்ணீரில் தர்மாகோல் மற்றும் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது .இந்த தண்ணீரை பருகும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய்த்தொற்று வர வாய்ப்புள்ளது ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த கிணற்றை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் அண்மையில் ஊராட்சி நகராட்சியில் உள்ள கிணறுகள் அனைத்தும் ஒரே நாளில் தமிழக அரசு சுத்தம் செய்ய உத்தரவிட்ட நிலையில் இந்த அவல நிலையை அரசு உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெல்லியாலம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தலைவர் டாக்டர் ஜி. ரஜினிகாந்த் , செயலாளர் ஜோதி பிரகாஷ், பொருளாளர் மல்லிகா ஜோதி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டருக்கு அதிகாரம் இல்லையாம்... சர்ச்சை அதிகாரி வள்ளல் பணி நீக்கத்தை ரத்து செய்த கனிமவளத்துறை கமிஷனர்

Image
 மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது என கனிமவளத்துறை கமிஷனர்,  அதிகாரி ஒருவர் பணி நீக்கத்தை ரத்து செய்துள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கனிமவள துறை உதவி இயக்குனராக இருந்த வள்ளல் மணல் கடத்தல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. திருப்பூரில் கனிமவளத்துறை அலுவலகத்திற்குள் குவாரி உரிமையாளர்கள், தவிர வேற யாரையும் அனுமதிக்கப்படவில்லை. விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்திலும் கூட பங்கேற்காமல் இருந்து வந்தார்.  இந்த நிலையில் அவர் மீது தொடர் புகார் வந்ததை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் அவர்கள் இறுதி நாள் பணியின் போது வள்ளலை பணியில் இருந்து விடுவித்தார்.  இதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். கடந்த 18-ம் தேதி பணி விடுப்பு பெற்றதைத் தொடர்ந்து கனிம வளத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஆட்சியருடைய உத்தரவு செல்லாது எனக் கூறி மீண்டும் வள்ளலை பணியில் நியமிக்க உத்தரவிட்டு உள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான் சிங்கப்பூர், ஜப்பான் பயணம்.. மு.க.ஸ்டாலின் பேட்டி

Image
 சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதன் நோக்கமே அடுத்த ஆண்டு சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத்தான் எனவும், இந்த பயணம் வெற்றிகரமாக முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டார்.  சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்திக்கும் முதலமைச்சர், அங்கு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.  தொடர்ந்து மே 26 ஆம் தேதி ஜப்பான் நாட்டுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் மற்றும் ஒசாகா சென்று பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு, தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். முன்னதாக சிங்கப்பூர் செல்ல விமான நிலையம் வந்த முதலமைச்சர் ...

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் கலசங்கள் உடைப்பு... பொதுமக்கள் திரண்டனர்... போலீசார் விசாரணை

Image
 திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கலசங்கள், சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பெருங்கருணைநாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் பாடல் பெற்ற தலமாக இருப்பதும், சுந்தரர் பதிகம் பாடி முதலை உண்ட மதலையை மீட்ட தலமாக இருப்பதாலும் உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  மிகப்பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் நூற்றாண்டுகள் கடந்த பல அரிய சிற்பங்கள் உள்ளன.  இந்த நிலையில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நேற்று இரவு பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது. காலையில் திறந்து பார்த்த போது, கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள பல்வேறு சிலைகள் உள்ள பகுதியில் பீடத்தின்கலசங்கள்  உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளன.  அறுபத்து மூவர் சிலைகளில் உள்ள கோபுர கலசங்கள் பல உடைக்கப்பட்டு சிதிலமாகவும், துணிகளும் சிதறிக்கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும், கோவிலில் உள்ள சிறு சிமெண்ட் கலசங்களும் உடைக்கப்பட்டு உள்ளன.  உண்டியல் பூட்டு உடைக்க முயற்சி நடந்த...

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்...முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

Image
 அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளான மே-12 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18-குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான திரு.சு.குணசேகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.  திருப்பூர் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த விழாவில் அதிமுகதலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,கழக சட்டமன்ற  கொறடாவுமான,   எஸ்.பி.வேலுமணி, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் ஆகியோர் தங்க மோதிரம் வழங்கினர். இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  வெ.பழனிச்சாமி,முன்னாள் காங்கயம் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கயம் ஒன்றியக் கழக செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்  முத்து வெங்கடேஸ்வரன்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி,மாவட்...

மே 21 ஆம் தேதி ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா தொடக்கம்

Image
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு  திருவிழா மே 21ல் மவ்லிது ஷரீப் உடன்  தொடங்குகிறது.  ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில்  உலக பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. . இந்த தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. 849 ஆம் ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சி மே 21 ஆம் தேதி தொடங்குகிறது.  தர்கா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு  மவ்லிது ஷரீப் ஓதப்படும்.  இதை தொடர்ந்து மே 31 ஆம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலம் ஆக எடுத்துவரப்பட்டு  கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு விழா தொடங்குகிறது.   முக்கிய நிகழ்வான  சந்தனக்கூடு  விழா ஜூன் 12 ஆம் தேதி மாலை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி அதிகாலை மேள, தாளம் முழங்க யானைகள் அணிவிப்புடன், நாட்டிய குதிரைகள் நடனத்துடன்,  ரதம் பவனி அனைத்து  சமுதாயத்தினரின் பங்கேளிப்புடன் தர்காவுக்கு வந்தடையும். இதை தொடர்ந்து  புன...

கேதர்நாத்தில் மிரட்டும் ஐஸ் மழை... 15 நாளில் 21 பேர் பலி... காலநிலையை கவனித்து யாத்திரை செல்ல அறிவுறுத்தல்

Image
 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதர்நாத்துக்கும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத்துக்கும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.  குளிர்காலங்களில் 6 மாதங்கள் அடைக்கப்பட்ட இந்த கோவில்கள் கடந்த ஏப்ரல் இறுதியில் திறக்கப்பட்டது. ஆனாலும் கோவில் திறக்கப்பட்டது முதல் வானிலை பெரும் சவாலாக மாறி விட்டது. ஏற்கனவே கேதர்நாத் யாத்திரைக்காக பல ஏற்பாடுகளை உத்தரகாண்ட் அரசு செய்தது. வழிகளை சீர்படுத்துதல், மின்சாரம், தண்ணீர் வசதிகளை மலை உச்சிக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஏப்ரல் 25 ஆம் தேதி கேதர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு முன்னரும், தொடங்கிய பின்னரும், வழியெல்லாம் உறைந்து கிடக்கும் பனிப்பாளங்களை அகற்ற சுமார் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஒருவாறு பனிக்கட்டிகளை வெட்டி எடுத்து அகற்றினார்கள். ஆனாலும், மே முதல் வாரத்திலும் கூடுதலாக பனி பொழிவு இருந்தது. கேதர்நாத் கோவில் இருக்கக்கூடிய கேதார்புரி, பேஸ்கேம்ப் மற்றும் பைரவ் கிளேசியர் பகுதிகளில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஐஸ் மழையாய் பனி பொழிய ஆரம்பித்தது. இது யாத்திரை...

பிடரியில் ஏறி மிதிக்கும் மதுபான கூட ஊழியர்... டாஸ்மாக் மதுபானக்கூட வைரல் வீடியோ

Image
 திருப்பூரில் மதுபான கூடத்தில் வாலிபர் ஒருவரை கடை ஊழியர்கள் சரமாரியாக தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது திருப்பூர் புஷ்பா ரவுண்டான கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இளைஞர் ஒருவரை மதுபான கூட ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  முதலில் கைகளால் தாக்கிய மதுபான கூட ஊழியர்கள் பிறகு கையில் ஒரு லத்தியை கொண்டு தாக்குவதும் கழுத்தை நெரிப்பதும் பின்னர் தர தரவென  இழுத்துச் செல்லும் வீடியோ அங்கு மது அருந்த சென்ற ஒருவரின் மொபைல் மூலம் எடுக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சித்ரகுப்தர் கோவில் பொங்கல் விழா

Image
திருப்பூர்-மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் குளம் - எல்&டி டேங்கிற்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் அருள்மிகு ஸ்ரீசித்ரகுப்தர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசித்ரகுப்தர் தலைப்பாகையுடன், வலதுகையில் எழுத்தாணியும், இடது கையில் சுவடியும் வைத்துக்கொண்டு கணக்கு எழுதும் கோலத்தில் பக்தர்களிக்கு காட்சி தருகிறார். ஸ்ரீசித்ரகுப்தரின் அதிதேவதை கேது பகவான் ஆவார்.எனவே கேது திசை, கேது புத்தி நடப்பில் உள்ளவர்கள் ஸ்ரீசித்ரகுப்தரை வணங்கி வழிபட்டு வந்தால் நிவாரணம் பெறலாம் என்பது ஐதீகம். மேலும், எமதர்மராஜாவின் கணக்கரான ஸ்ரீசித்ரகுப்த பெருமான் சித்திரை மாதம் சித்ராபெளர்ணமியன்று அவதரித்தவர். எனவே ஒவ்வொரு வருடமும் சித்ராபெளர்ணமி அன்று ஸ்ரீசித்ரகுப்தருக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மக்களின் பாவ புண்ணியங்களை கணக்கிடும் ஸ்ரீசித்ரகுப்தரை அனைத்து மக்களும் வழிபட்டு அருள்பெறலாம். சித்திரை மாதம் பிறந்தவர்கள் அனைவரும் இந்நாளில் வழிபடுவது கூடுதல் சிறப்பு. அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் 94ம் ஆண்டு *ஸ்ரீசித்ரா பெளர்ணமி பூஜை* மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. கூனம்பட்டி ஆதீனம் ’வேத சிவாகம சிரோமணி’, ’வ...

வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்...சர்க்கரை தீபம் ஏந்தி கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்

Image
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.  இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகு...