ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது "சீகம் மதுரை பேந்தர்ஸ்"இந்த சீஸனில் 5வது தோல்வியை சந்தித்தது பால்சி திருச்சி

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியை விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சீகம் மதுரை பேந்தர்ஸ் தங்களின் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பால்சி திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து,இந்த சீஸனில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் அதிகபட்சமாக பி சரவணன் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்த, அவருக்கு உறுதுணையாக குர்ஜப்நீத் சிங் மற்றும் அஜய் கே கிருஷ்ணா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த சீஸனில் தங்களின் 3வது வெற்றியைப் பதிவு செய்ய 20 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது. மதுரையின் ஒப்பனர்களான லோகேஷ்வர் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது 50வது போட்டியில் களமிறங்கிய சீகம் மதுரை பேந்தர்ஸின் கேப்டன் ஹரி நிஷாந்த் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சேலம் மண்ணின் மைந்தரான தங்கராசு நடராஜன் தனது அற்புத...