Posts

Showing posts from July, 2023

சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அணு சக்தி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முதல் நாளை 01.08.2023 இரண்டு நாட்கள் அணுசக்தி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற உள்ள நிலையில்  ஏ.வி.எஸ் கல்லூரியும் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்துகின்றனர்.நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று தொடக்க விழாவுடன் நிகழ்ச்சி தொடங்கியது.கல்லூரியின் தலைவர் க. கைலாசம், செயலாளர் கை. ராஜ விநாயகம், தாளாளர் கை. செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர்.கார்மல் மெர்சி பிரியா தலைமையுரை நிகழ்தினார்.துனை முதல்வர் ஆர்.மேகவண்ணன் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக  இந்திராகாந்தி ஆய்வு மையத்தை சார்ந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் விழிப்புணர்வு தலைவர் ஜலஜா மதன் மோகன், தமிழ்நாடு அறிவியல் சங்கம் மனோகர், முதன்மை விஞ்ஞானி மண்டல இயக்குனர் முனைவர்.லட்சுமி நரசிம்மன், தலைவாசல் ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி கே.பி‌.ஸ்ரீதேவி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அணுசக்தி பற்றிய கருத்துக்களை மாணவர்களுக்கிடையே கலந்துரையாடி சிறப்புரையாற்றினார்கள்.முதல் நாள் நிகழ்வுகளாக கல்லூரியின் வ.உ.சி...

சத்தியமங்கலம் கெம்பநாய்க்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் சாலை பாதுகாப்பு பிரதிபலிப்பு கண்ணாடி அமைப்பு -

Image
ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன் பாளையம் (இரண்டாம் நிலை) பேரூராட்சி பகுதியில், வாகன ஓட்டிகளுக்கு, சாலை வளைவில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்து நிகழ்வதை தவிர்க்கும் பொருட்டு, எதிர்வரும் வாகனம் வருவது தெரியாமல் உள்ள இரண்டு இடங்களில், வாகன ஓட்டிகளுக்கு எளிதில் வழி அறியும் வகையில் பிரதிபலிப்பு கண்ணாடி கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங் கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப் பட்டு, சாலை போக்குவரத்திற்கு உதவும் வகையில், விழிப்புணர்வு பாதுகாப்பு சாலை வழிகாட்டி கம்பம் அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  கெம்பநாயக்கன்பாளையம் பேரூ ராட்சி மன்ற தலைவர், K. ரவிச்சந்தி ரன் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். பேரூராட்சி தலைவரின் துரித மற்றும் விழிப்புணர்வு பாது காப்பு நடவடிக்கையை, வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டியும். பேரூராட்சி தலைவருக்கும், பேரூராட்சி நிர்வாக த்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

புதுச்சேரி RLV ஜனநாயக பேரவை நிறுவனர் R. L வெங்கட்டராமன் அறிக்கை

Image
வரலாற்று சிறப்பு மிக்க பெரிய மார்க்கெட் குபேர்  அங்காடி வியாபாரிகளை அழைத்து பேசி அவர்களின் ஒப்புதலோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று புதுச்சேரி RLV ஜனநாயக பேரவை  நிறுவனர் R. L வெங்கட்டராமன் அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்க பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி தற்போது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஆட்சியாளர்கள் கையில் மாட்டிகொண்டு அவஸ்த்தை படுகிறது. அங்குள்ள வியாபாரிகள் தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இன்று அவர்கள் அல்லோலபடுவதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தும் அளவிற்கு தள்ள பட்டிருக்கிறார்கள்.  மாநில வளர்ச்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தேவைதான். ஆனால் அது எந்த ஒரு வியாபாரியின் ஸ்திரத்தன்மையையும் பாதித்து விட கூடாது. அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கானது என்றால் அதை செயல் படுத்தும்போது , மக்களையோ வியாபாரிகளையோ அச்சுறுத்துவது போல் இருக்கக்கூடாது என்பதை அரசு உணரவேண்டும். மக்களுக்கான முதல்வர்  மருத்துவகல்லூரிக்கு மட்டுமல்ல மார்க்கெட் வியாபாரிகளுக்கும் சேர்த்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காவல்துறை கஞ்சா வேட்டை ஒருவர் கைது

Image
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கஞ்சா வேட்டை அதிரடி காவல்துறை நீலகிரி  கூடலூர் பகுதியானது கேரளா கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும் இதனை பயன்படுத்தி இச்சாலை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தும் தொடர்ந்து போதைப் பொருட்களை கடத்துவதை தடுத்தும் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர் இந்நிலையில் கூடலூர் பந்தலூர் தாலுகா மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்துவது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் அம்பலமுலா சிறப்பு உதவி ஆய்வாளர் சாஜி, காவலர் பழனிச்சாமி, வினிது ஆகியோர்   நாடுகாணி சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது மைசூர் பகுதி பத்திராவதி இருந்து கேரளாவுக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை மடக்கி காவல் துறையினர் சோதனை செய்தனர் அப்பொழுது லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனை அ...

விடாமுயற்சியால் டாக்டராகும் காவலர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வாழ்த்து

Image
*விடாமுயற்சியால் டாக்டர் ஆகும் போலீஸ்! இளைஞர்களுக்கு வழிகாட்டியாக தருமபுரி காவலர் சிவராஜ் திகழ்கிறார்* *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வாழ்த்து!*  தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றியபடியே ‘நீட்’ தேர்வு எழுதி வென்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் முதுகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். கடந்த 2016-ம் ஆண்டு பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். மருத்துவர் ஆக விரும்பிய சிவராஜுக்கு அப்போதைய சூழலில் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையில்  பி.எஸ்சி., வேதியியல்  பட்டப் படிப்பை முடித்த அவர், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலைக் காவலராக தேர்வாகி தற்போது ஆவடியில் பணியாற்றி வருகிறார். பணிக்கு சென்ற நிலையிலும்  தனது தீராத மருத்துவர் ஆகும்  கனவு தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டார்.  2022 நீட் தேர்வு எழுதி  குறைவான மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். ஆனால் விடா முயற்சி மேற்கொண்டு  சிவராஜ் மீண்டும் நடப்பு  2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வையும் எழுத...

கிளாம்பாடி பேரூராட்சியில் இலவச பொது மருத்துவம், எலும்பு மூட்டு தேய்மானம்,மற்றும் கண் பரிசோதனை முகாம்

Image
 ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம்  கிளாம்பாடி கருமாண்டம் பாளையத்தில் கிளாம்பாடி பேரூராட்சி  மற்றும் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி& மருத்துவமனை, இணைந்து நடத்தும்  இலவச பொது மருத்துவம்,எலும்பு மூட்டு தேய்மானம், மற்றும்  கண் பரிசோதனை முகாம், கருமாண்டபாளையம் கொங்கு மஹாலில்  நடைபெற்றது.  மருத்துவ முகாமில் பொது மருத்துவம் ரத்தக்கொதிப்பு சக்கரை நோய் இருதய நோய்கள், அறுவை சிகிச்சை சம்பந்தமாக காது மூக்கு தொண்டை, சிறுநீரக கல் அறுவை சிகிச்சை, பித்தப்பை கல், உடல் அடைப்பு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து அவசரம் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகளும்பரிசோதனை செய்யப்பட்டது.  மேலும் எலும்பு முறிவு சிகிச்சை சம்பந்தமாகவும் , கண் சிகிச்சை சம்பந்தமாகவும்  பரிசோதனை செய்யப்பட்டது.  இம்முகாமில்   பிரபுதேவா, சௌந்தரகரி, யுவஸ்ரீ, ப்ரீத்தி பிரியங்கா  டாக்டர்கள் கலந்து கொண்டு சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.  இந்த சிறப்பு முகாமை திமுக கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளர் எம் சின்னச்சாமி தலைமையில் கிளம்பாடி பேரூராட்சித் தலைவர் திருமதி அம...

சேலத்தில் 100 பெண்கள் 20 புரோக்கர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மாஃபியா கும்பல் கைது

Image
சேலம் நெடுஞ்சாலை நகர் அருகில் உள்ள கிருஷ்ணா தெரு சி பி சி ஐ டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே பகுதியில் 200 அடி தூரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து பாலில் தொழில் செய்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை நகரில் ஒரு தம்பதி வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவதாக புகார்  வந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலையில் சூரமங்கலம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். திவ்யா பாலமுரளி தம்பதியினர் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து திவ்யா மற்றும் அவரது கணவர் பால முரளி இடம் விசாரணை செய்தபோது திவ்யா தற்காலிக பணியான திருநங்கைகள் மற்றும் எச்ஐவி பாதிக்கப்பட்ட ஆண்களின் மனைவிகளை கவுன்சிலிங் கொடுக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார்.இவருக்கு ஊதியம் திருநங்கைகளின் வாரியத்தில் இருந்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எய்ட்ஸ் நோயால் தனது கணவர் பாதிக்கப்பட்டு கவுன்சிலிங் வரும் பெண்களிடம் திவ்யா ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடம் மூளை சலவை செய்து சம்பாதிப்பது எப்படி என்று பல்வேறு கோண...

ராகுல் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் சீசன் 5 கிரிக்கெட் போட்டி

Image
ராகுல் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் சீசன் 5 கிரிக்கெட் போட்டி அகில இந்திய ராகுல் இளைஞர் நல விளையாட்டு கூட்டமைப்பு தேசிய தலைவர் மு.விஜயலட்சுமனன் தலைமையில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றது. ஆண்கள் அணி, பெண்கள் அணி இரு அணிகளுக்கும் போட்டிகள் நடைபெற்றது.இதில் ஆண்கள் பிரிவில் மும்பை அணி முதலிடம் பிடித்தது. தமிழ்நாடு ராகுல் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தை பெற்றது. இதேபோல் பெண்கள் பங்கேற்ற ராகுல் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு அணி முதல் இடத்தை பெற்றனர். மகாராஷ்டிரா பெண்கள் அணி இரண்டாவது இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் வழங்கப்பட்டது.இதில் அகில இந்திய ராகுல் இளைஞர் நல விளையாட்டு அமைப்பு தேசிய செயலாளர் சேலம் ஆர். சண்முகசுந்தரம்,டென்னிஸ் பால் கிரிக்கெட் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன், செந்தில், கண்ணன், ராம், ஆல் மார்சியல் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக புலிகள் தின கருத்தரங்கு.

Image
 சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச புலிகள் தினத்தை முன் னிட்டு, இயற்கை வள பாதுகாப்பு, அவற்றில் விலங்குகளின் முக்கியத் துவம் என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கலை யரங் கில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையேற்று பேசிய கல்லூரி முதல்வர் ராதா கிருஷ்ணன் புலி களின் வாழ்க்கை முறைகள், உணவு, வாழ்விடம், புலிகளால் வனப் பகுதிக்கும் அதனை சார்ந்த வன உயிரினங்களுக்கும் கிடைக் கும் நன்மைகள், புலிகளைஅழிவில் இருந்து பாதுகாக்க, அரசு மேற்க் கொண்டுள்ள நடவடிக்கைகள்,  புலி கள் கணக்கெடுப்பு முறைகள்; புலி கள் பாதுகாப்பதன் அவசியம் குறித் து மாணவர்கள் அனைவரும் அறிந் திருப்பது அவசியம்.என்றும், ஒவ் வொரு கல்லூரியிலும் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர் ந்து நடத்தப்பட வேண்டும் என்றார்  இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அறியும் வகையில், புலிகளின் வாழ்க்கை முறைகள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில், சிறப்புரையாற்றிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் தின் வனச்சரக அலுவலர் பழனிச் சாமி பேசுகையில், வனங்களின் பாதுகாப்பு பற்றியும் வனவிலங்கு கள் குறிப்பாக புலிகளின் வாழ...

சத்தியமங்கலத்தில், சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு பேரணி.

Image
 ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 29-ம் ஆம் தேதி உலகளாவிய புலி தினம் அல்லது சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற் கான முயற்சிகளை மேற்கொள்வத ற்கும், இந்த நாள் அனுசரிக்கப்படு கிறது. புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதற் கான , உலகளாவிய அமைப்பை ஊக்குவிப்பதும் ,புலிகளின் பாது காப்பு பிரச்சினைகளுக்கு, பொது மக்களிடையே விழிப்புணர்வையும், ஆதரவையும் ஏற்படுத்துவதே சர்வதேச புலிகள் நாளின் குறிக் கோள் ஆகும். உலகளவில்,13 நாடு களில் புலிகள் காணப்படுகின் றன. 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடை பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலி கள் உச்சி மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனு சரிக்க முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி, ஒவ்வொரு ஆண் டும் ஜூலை 29ம் தேதி சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, விழிப் புணர்வு பேரணி, இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்தின் சார்பில், சத்திய மங்கலத்தில், உதவி ...

கோவை சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

Image
கோவை சூலூர்  மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்  அறங்காவலர்  பாபுவாறு தலைமையில் 26.07.2023 முதல் 28.07.2023 வரை நடைபெற்றது.  தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது இதனைத் தொடர்ந்து கல்லூரியின் அறங்காவலர்  பாபுவாறு தேசிய கொடியையும் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ஷாலினி பாக்கியம்கமலா கல்லூரி கொடியையும் கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.ஆர். தனலட்சுமி விளையாட்டுக் கொடியையும் ஏற்றி வைத்தார்கள். கல்லூரி முதல்வர் சிறப்புரை வழங்கினார். விளையாட்டுப் போட்டியை அறங்காவலர் மகிழ்வுடன் தொடங்கி வைத்தார். சூலூர் சுற்றுவட்டாரப் பள்ளி மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவுற்றது இதில் சிறப்பு விருந்தினராக  முத்தையா தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார்.  சிறப்பு விருந்தினர் பேசுகையில் விளையாட்டுகளின் முக்கியத்தை எடுத்துரைத்து மாணவியர்களை ஊக்குவித்தார் .அதன்  பிறகு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் ...

நெய்வேலியில்,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது - சத்தியமங்கலத்தில், பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Image
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,விவசாய விளை நில ங்களை,கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், என்எல்சி நிர்வாகமே, தமிழகத்தை விட்டு வெளியேறு என் கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி யின் மாநில தலைவர், மருத் துவர் அன்புமணி ராமதாஸ் தலை மையில் நெய்வேலி என்எல்சி அலு வலகத்தை முற்றுகையிடும் போரா ட் டம் நடைபெற்றது. இப் போராட்டத் தில்,ஆயிரக்கணக்கானவர்கள் பங் கேற்ற நிலையில், பாமக தலைவர் அன்பு மணி ராம தாஸ் மற்றும் முக் கிய நிர்வாகி களை காவல்துறை கைது செய்து, நெய்வேலியில், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகளை விடுதலை செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி யின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, பாட்டாளி மக்கள் கட்சி ஈரோடு மாவட்ட செய லாளர் எஸ். கே. ராஜா மற்றும் மாவ ட்டத் தலைவர் மாரி முத்து, மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி ஆகி யோர் தலைமையில்,பாட்டாளி மக் கள் கட்சி மாநில செயற...

சேலத்தில் சேலை நெசவுகளில் பிர்லா மோடால் மற்றும் பிர்லா எக்ஸல் நூலின் பயன்பாடுகள்" குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம்

Image
பிர்லா செல்லுலோஸ் ( ஆதித்யா பிர்லா குழுமம்)  ஸ்மித் சிந்தடிக்ஸ், சேலம் மற்றும் எஸ்.ஆர்.டி.இ.பிசி கோயம்புத்தூர் இணைந்து, தெற்கு மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம், கோயம்புத்தூர்  துணையோடு ரேடிஸன் ஹோட்டலில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள "சேலை நெசவுகளில் பிர்லா மோடால் மற்றும் பிர்லா எக்ஸல் நூலின் பயன்பாடுகள்" குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு சேலம் அதன் சுற்று வட்டார விசைத்தறி சேலை உற்பத்தி மையங்களான  இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், கொண்டலாம்பட்டி, வனவாசி, ஈரோடு, கொமராபாளையம் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவு சேலை உற்பத்தியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்க கூட்டத்தில்  முருகன், தலைவர்,  பிஸினஸ் டெவலப்மெண்ட், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மும்பை, திரு. பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர், தெற்கு மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம், கோயம்புத்தூர், திரு. கருணாநிதி, கவுன்சில் உறுப்பினர், எஸ்.ஆர்.டி.இ.பி.சி கோயம்புத்தூர்,  கோகுல் பண்டாரி, உரிமையாளர், ஸ்மித் சிந்தடிக்ஸ...

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு

Image
சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் சேலம் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, அரோகியபிரபு, ரவி, சிவலிங்கம், புஷ்பராஜ், குமரகுருபரன், ரமேஷ், முத்துசாமி, கண்ணன், ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்கு சாவடி, ஜங்ஷன், வ உ சி மார்க்கெட் ,சின்ன கடைவீதி போன்ற பகுதிகள் 54 கடைகள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டன.ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  நெகிழி பைகள் 5.800 கிலோ, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட மீன்.50.00கிலோ, பழைய கெட்டுப்போன ஆட்டிறைச்சி 17.00 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அளிக்கப்பட்டது. உணவு பொட்டல விபரம் குறிப்பிடாத மசாலா 18.00 கிலோவிலிருநது  உணவு மாதிரி சேகரிக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.34000 ஆகும்.மேலும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய எட்டு உணவு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.2000  வீதம் ரூ.16,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் இறைச்சி பயன்படுத்திய 3 ...

போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா காலனி செல்லும் சாலை அரிசி குடோன் முதல் மின்சாரம் அலுவலகம் வரை வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இச்சாலை ஆனது மிகவும் முக்கியமான பிரதான சாலை ஆகும். சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன இப்பகுதியில் தாலுக்கா அலுவலகம் அமைந்துள்ளதால் பெரும்பாலானோர் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர் இந்நிலையில் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுகளுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது ஆகவே காவல்துறை வாகனங்களை ஒழுங்குபடுத்தி நடவடிக்கை எடுத்து உதவுமாறு பந்தலூர் வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சத்தியமங்கலத்தில் அதி நவீன திரையரங்கு -முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட் டையன் திறந்து வைத்தார்.

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நேரு நகரில், ஜெய்சக்தி திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கம்,அதி நவீன வசதியுடன் கூடிய, மூன்றுதிரை யர ங்குகளாக, மாற்றி வடிவமைக்கப் பட்டு, 300 இருக்கையுடன் கூடிய ஒரு திரையரங்கமும், 150 இருக்கை உடன் இரண்டு திரையரங்கமும் அமைக்கப் பட்டுள்ளது.மேலும் இதில், அதி நவின அமெரிக்க தொழில் நுட்பத்துடன் கூடி ய, ஒலி, ஒளி வசதி அமைக்கப்பட்டு, வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சொகுசான இருக்கை களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரையரங்கினை, அதிமுக அமை ப்புச்செயலாளரும்,கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, கே.ஏ. செங்கோட்டையன் எம். எல்..ஏ. ரிப்பன் வெட்டி, திரையரங்கினை திறந்து வைத்தும்,குத்து விளக்கு ஏற்றி, காட்சி அமைப்பை துவக்கி  வைத்தும், பொன்னியின் செல்வன்- 2 படத்தை பார்வையிட்டார். அகன்ற திரையில், ரம்மியமான, அசத்தும் ஒலி அமைப்பு பார்வையாளர்களை திணறடித்தது. சத்தியமங்கலத்தில் ஒரே இடத்தில், 3 திரையரங்குகள் கொண்ட முதல் திரையரங்கு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி, எம். எல்.ஏ. முன்னாள் ...

சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் Dr. A. P. J. அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Image
 முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஐயா ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஐயா அவர்களின் திருஉருவ சிலைக்கு கல்லூரியின் சேர்மேன் டாக்டர் மக்கள் ஜி ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஐயா அவர்களின் புகழை போற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  தொடர்ந்து கல்லூரியில் ஐயா அவர்களை பற்றி கட்டுரை போட்டியும் பேச்சுப் போட்டி நடைபெற்று மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சதீஷ்குமார் துறை தலைவர்கள் ரவி மோகன் சிஜூ மோகன்ராஜ் சதீஷ்குமார் மற்றும் சென்னிமலை சார்ந்த தன்னார்வ அமைப்புகள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர் தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

மார்க்கெட் செல்லும் சாலையை சீரமைக்க கோரி நுகர்வோர் அமைப்பு கோரிக்கை

Image
மார்க்கெட் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டி நெல்லியாளம் நுகர்வோர் சங்கம் கோரிக்கை நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ்( மார்க்கெட்) சந்தை செயல்பட்டு வருகிறது இந்த  மார்க்கெட் குதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாபாரிகள் வந்து செல்லுகின்றனர் இந்த பகுதியில் மார்க்கெட் கழிவறை அமைந்துள்ளது இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முழுவதும் மழை பெய்து வருகிறது இதற்கு காரணமாக இந்த பகுதியில் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன இதனால் இந்த மார்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நடப்பாதையினை சீர் செய்யும் வேண்டும் என நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்

கோவை மேட்டுப்பாளையம் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா

Image
*கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மேட்டுப்பாளையம்  வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா.* மேட்டுப்பாளையம் ஜூலை.25 கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் இருந்து வருகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டின் குண்டம் திருவிழா கடந்த 18 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் செய்யப்பட்டு வந்தன.  தொடர்ந்து நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.அதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும்,மாலை 5 மணியளவில் பொங்கல் வைத்து,திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர் வசந்தா தலைமையில் பொங்கல் வைத்து பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம்...

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை மண் சரிவு வாகன ஓட்டிகள் உஷார்

Image
நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவு நொடிப் பொழுது தப்பிய வாகனங்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை விட்டு விட்டு பொழிந்து வருகிறது இந்நிலையில் ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடு வட்டம் என்ற பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது நொடி பொழுது தப்பிய வாகனங்கள் இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து ஜேசிபி  இயந்திரம் மூலம் சாலையை சீர் செய்தனர்

நீலகிரி பந்தலூரில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கொள்ளை நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பழைய நெல்லியாளம் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு கோட்டை சிவன் ஆலயம் ஆலயமானது மிகவும் பழமையான ஆலயமாகும் இவ்வாலயம் மைசூர் மகாராணியால் கட்டப்பட்டது தற்சமயம் ஆலயத்தை கோட்டை சிவன் அறக்கட்டளை நிர்வாகத்தில் வருகிறது விரைவில் கட்டுமான பணி தொடங்க உள்ள நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் கருவறையில் உள்ள நடுப்பகுதியை தோண்டி அதில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர் இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்து ஆலய நிர்வாகம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அழைத்ததன் பேரில் தேவாலை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு :

Image
 ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம்  சென்ன சமுத்திரம் பேரூராட்சி பகுதியைச் சார்ந்த குப்புசாமி என்பவர் கடந்த மாதம்( 29.6.23)  மீனா சந்திரலிங்கத்தை  ஜாதியின் பெயரை சொல்லியும், ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். அவர்களின் கருவுற்ற பசு மாட்டை   அடித்து துன்புறுத்தி உள்ளார்.  மீனா சந்திரலிங்கத்தை கருங்கல்லால் அடித்து கொலை முயற்சி செய்ததை அடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்  6.7.23 -SC ST- PCR வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஆனால் இதுவரை குற்றவாளியை  காவல்துறை கைது செய்யவில்லை.  சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது  என்றும், குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன்  தலைமையில் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும், வழங்கப்பட்டது.  மேலும் மாநில பொறுப்பாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் சந்தோஷ் குமார், மாநகர நிர்வாகிகள் வாசுதேவன், ராஜ், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் வீர...

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சமூக ஆர்வலர் மயிலாடுதுறை அப்பர் சுந்தரம் பாராட்டு

Image
*முதல்வர் மு.க.ஸ்டாலின், 7000கோடி நிதி வழங்கி தொடங்கிடும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வாழ்க! வளர்க! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!!* தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நல உதவித்திட்டங்கள் தொடர்ந்து நிகழ்காலஅரசு மற்றும் கடந்த கால ஆட்சிகளால் செயல்படுத்தப்பட்டு வருவதில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்னும் பெயரில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மிகவும் போற்றக்கூடியதாக மாறியுள்ளது. இதற்கு முன்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் ஆட்சியின் பொழுது கலர் டிவி, கேஸ் அடுப்பு வழங்கியது, அடுத்தது ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்காக மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது போன்றவை அனைவராலும் வரவேற்கக் கூடிய திட்டமாக அமைந்திருந்தது. அதன் பிறகு இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அறிவிப்பு என்பது வேலைக்குச் செல்லும் மற்றும் தினசரி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள்,தனியார் வீட்டுவேலை பெண்கள்,காய்கறி,பழங்கள், மீன்,பூ விற்பனைக்கு செல்வோர் உள்பட அத்தனை பெண்களுக்கும...

,சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு அறிக்கை.

Image
 ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வனச்சரகம் கொங்கர்பாளையம் காவல் சுற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது கால்நடைகளைப் பிடித்துச் சென்ற பிரச்சனைக்குரிய சிறுத்தை பிடிப்பதற்காக விவசாயிகள்  கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் துணை இயக்குனர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அவர்களின் அறிவுரைப்படி.டி.என் பாளையம் வனச்சரக அலுவலர் மாரியப்பன் வழிகாட்டுதலின்படி சம்பவ இடங்களில் தானியங்கி காமிராக்கள் கட்டி வைத்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளின் அடிப்படையில் பிரச்சனைக்குரிய சிறுத்தியை கூண்டு வைத்து பிடிக்க அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவு கிடைக்கப்பெற்றதும் சிறுத்தையை பிடிப்பதற்கான துரிதநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தகவலுக்காக  வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மொடக்குறிச்சியில் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதில் 50 லட்சம் மோசடி

Image
 ஈரோடு மாவட்டம்  மொடக்குறிச்சியில்  2000 ரூபாய் நோட்டு  மாற்றுவதில்  20 சதவீதம் கமிஷன் கொடுப்பதாக கூறி 50 லட்சம்  மோசடி நடைபெற்றுள்ளது.   இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிராமத்தை சேர்ந்த பூசாரி கருப்பு தேவரின் மகன் சிவாஜி என்பவரிடம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தந்தால்  20 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி  ரூபாய் 35 லட்சத்தை பெற்றுவிட்டு தலைமறைவாகி விட்டார்கள் . இந்த சம்பவம் தொடர்பாக மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜவகர் அவர்களின் உத்தரவின் பேரில் ஈரோடு நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V. ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையில் ஈரோடு நகர குற்றப்பிரிவு ஆய்வாளர்  மொடக்குறிச்சி காவல் நிலையம் முருகன் தலைமையில்  சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமை காவலர்கள் ஜெயப்பிர...

சூலூர் முன்னாள் எம்எல்ஏ பொன்முடி பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் இலவச மருத்துவ முகாம்

Image
திராவிட முன்னேற்றக் கழக கோயமுத்தூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் சூலூர் நகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூலூர் பேரூராட்சியின் தலைவர் எஸ். எஸ். பொன்முடி அவர்களின் பிறந்தநாள் விழா முன்னிட்டு சூலூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இம்மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு முகாமினை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் மணி சுந்தர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் துவக்கிவைத்தனர், இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா ராஜகோபால், துணைத் தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சூலூர் நகர வார்டு கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி உதய பூபதி, கண்ணம்பாளையம், இருகூர், பள்ளபாளையம், செயலாளர்கள் மற்றும் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி நிர்வாகிகள்மற்றும் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர் இதில் கண் சிகிச்சையில்3...

கோவை சூலூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி

Image
சூலூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி.           கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில்16வது வார்டு பழனியப்பா நகர் முதல் தனலட்சுமி நகர் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா நகர் ஒன்பதாவது வார்டில்வாடி சாலை மேம்பாடு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சிகளின் இயக்குனர் துவாரகநாத்சிங் , செயற்பொறியாளர் லலிதாமணி, பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், சில சூலூர் நகர திமுக செயலாளர் கௌதமன், பேரூராட்சி தலைமை அலுவலர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர்கள் பசுமை நிழல் விஜயகுமார், வீராசாமி, பாலாஜி,தங்கமணி, விஜயலட்சுமி, கவிதா,லலிதா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்