Posts

Showing posts from October, 2023

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

Image
  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக பாலஸ்தீன அப்பாவிப் பொதுமக்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தும் பயங்கரவாத இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது* அதில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்புனர் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பினார்கள்.

நம்பியூரில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயில்

Image
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ ஐய்யனார் திருகோவில் கட்டிடப் திருப்பணியை சென்னை நவகிரக குருஜி ராமஜெயம் மற்றும் இந்திரன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சக்திவேல் அவர்கள்பார்வையிட்டனர் முன்னதாக ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தா லோகு சால்வை அணிவித்து வரவேற்றார்

பவானிசாகரில்ஆடு திருட முயன்ற வாலிபர் கைது. மற்றொருவர் தலைமறைவு- பவானிசாகர் போலீசார் தேடுதல் வேட்டை

Image
  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். அய்யன் சாலை ஒட்டரூரைச்சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் அஜித் (வயது 24) கட்டிட வேலை செய்து வருகிற இவரும்,சத்தியமங்கலம் கெஞ்சனூர்,அம்மன் கோவில் வீதி யைச் சேர்ந்த பழனிசாமி மகன்அப்பு @ அப்புசாமி இவர்கள் இருவரும் இன்றுமாலை 5.20 மணிக்கு பவானி சாகர் பொதுப் பணித்துறை அதி காரிகள் குடியிருக்கும் வழியில், அப்பாச்சி RDR என்ற பைக்கில் வந்து,ஆட்டை திருட முற்பட்டபோது, பவானிசாகரை சேர்ந்த டல்சி என்ப வர் பார்த்து,இருவரையும் பிடிக்க முற்பட்டபோது, மேற்படி அஜித் என் பவன் மட்டும் திருடிய ஆற்றுடன் பிடிக்கப்பட்டான்..அப்புசாமி பைக் குடன் தப்பி சென்று விட்டான். ஆடு திருட முயன்ற அஜீத்தை பிடித்து, உதவி ஆய்வாளர் சார்லஸ் விசார ணை செய்து, அஜீத் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் .தப்பி போடியஅப்புசாமியை, பவானிசாகர் போலீசார் வலை வீசிதேடி வரு கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை அவமதித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய சூலூர் நீதிமன்றம் உத்தரவு

Image
 தமிழ்நாடு விஸ்வஹிந்துபரிசத்மாநில இணைபொதுச் செயலாளர் விஜயகுமார் கோவை மாவட்டம், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில்  கடந்த ஜனவரி 9 ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ’ கவர்னரை கண்டித்து சூலூர் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,   திமுக நகரச் செயலாளர் கௌதமன் அவை தலைவர் பன்னீர்செல்வம் வார்டு கவுன்சிலர் விஜயகுமார் மேகநாதன் பாவேந்தர் பேரவை மணி திமுக மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் மகளிர் அணி அமைப்பாளர் கற்பகம் ராமதிலகம் செல்வராஜ் கோபால் உட்பட்ட பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு கவர்னரை தர குறைவாக  விமர்சித்தும் அவர் புகைப்படத்தை அவமதித்ததாக கூறி உள்ளார்.  மேலும் அந்த மனுவில், ’இதற்காக போட்டோ வீடியோவை வைத்து சூலூர் காவல் நிலையத்தில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து சூலூர் நீதிமன்றத்தில் குவிமுசபிரிவு156(3)கீழ்  120 பி. 124A.147, 148.504 505 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவுசெய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரனை செ...

மனையை சர்வே செய்து தர மறுத்த தாசில்தாருக்கு அபராதம்... நீதிமன்றம் உத்தரவு

Image
 சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார்.  அதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100/- க்கு பணம் கட்டியிருந்தார்.  ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார்.  ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார். வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்...மனை சேகருக்கு பாத்தியமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.ஆவணங்கள் அனைத்தும் சேகர் பெயரிலேயே உள்ளது. ஆனால் தாசில்தார் இரண்டு பேர் நிலத்தை அளந்து கொடுக்க ஆட்சேபனை செய்வதாக கூறுகிறார். அந்த இரண்டு பேரின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபனை செய்பவர்களிடமிருந்து அபிடவிட் பெறவில்லை ஆட்சேபனை செய்பவர்களை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. ஆட்சேபனை செய்பவர்களுக்குரிய எந்த ஆவணங்...

அந்தியூர் தவிட்டுப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானநிலங்கள் அளவீடு

Image
  ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது இதில் 32 இடங்களில் அடையாளங்கள் நடப்பட்டது இதேபோல் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலங்கள் இந்து சமய அறநிலைத்துறையினர் அளவீடு செய்யனர்இதில் கோவில் நிலங்கள்துணை ஆட்சியர் பணி ஓய்வு குப்புசாமி ஈரோடு ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் கணேஷ் ஆலய நிலங்கள் தாசில்தார் ஓய்வு பழனிச்சாமி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் சீதாராமன் கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு அழகுராஜா நில அளவையர் அருண்குமார் ஹரி பத்ரகாளியம்மன் கோயில் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு அளவீடு செய்யும் பணியினை செய்தனர்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கொமாரபாளையம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம். பொதுமக்கள் பங்கேற்க ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன் வேண்டுகோள்.

Image
நாளை 01-11-2023 ஆம் தேதி, உள் ளாட்சி தினத்தை முன்னிட்டு கொம ராபாளையம் ஊராட்சிமன்ற அலுவ லக வளாகத்தில், காலை 10:30மணி க்கு, கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது,அது சமயம் ஊராட்சிக்குட் பட்ட அனைத்து துறை அலுவலர் கள்,பொதுமக்கள்100 நாள் திட்டப் பணியாளர்கள்,ஒன்றிய குழு உறுப் பினர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகி கள், பணித்தள பொறுப்பாளர்கள், பொது மக்கள உள்ளிட்ட அனை வரும் திரளாக கலந்து கொண்டு, கிராம சபாவை சிறப்பிக்குமாறு, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம். சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி ஈரோடுமாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

Image
  ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி இச்சிப்பாளையம் ஊராட்சியில் தண்ணீர் விடுவதில்லை ஆற்று குடிநீர் வசதி இல்லாததால் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம். ஆற்று குடிநீர் குழாய் எங்களது குடியிருப்பின் அருகில் 50அடி தூரத்தில் குடியிருப்பை ஒட்டிய சாலையில் பக்கத்திலேயே செல்கிறது. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தியும் தர வேண்டுகிறோம். மேற்படி குடியிருப்பில் இருந்து க.ஒத்தடைக்கு கடைகளுக்கும், பஸ்ஏறுவதற்கும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிஉள்ளதால், மாணவ மாணவிகள், நோயாளிகள், பெண்கள் மிகவும்சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், சிவகிரி செல்லும் டவுன் பஸ் No: K4,K1-ஐ காலை, மாலையில் எங்கள் குடியிருப்பு வழியாக செல்ல வசதி ஏற்படுத்தி தரவேண்டியும், கம்மங்காட்டு களம் பஸ் நிறுத்தத்தில் இருந்து எங்கள் குடியிருப்பு வரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டியும், இடையில் டாஸ்மார்க் கடைஉள்ள காரணத்தால் விளக்கு வெளிச்சமும் இல்லாததால் பெண்கள் நடந்து வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிநீர், தெருவிளக்கு மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தருமாறு பணிவுட...

கோபியில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 116ஆவது குருபூஜை

Image
 பசும்பொன் உ முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது குருபூஜை ஜெயந்தி விழா ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியவன் கோவில் அருகில் தேவர் திடலில் நடைபெற்றது. விழாவிற்கு கோபி தாலுகா தேவர் பேரவை தலைவர் எம் என் நாகராஜ தேவர் விழா தலைமையே ற்று கொடி ஏற்றி வைத்தார்.  முன்னதாக தேவர் பேரவை செயலாளர் எம் ஆர் தங்கராஜ் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு தேவர் பேரவை உறவினர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர். தேவர் பேரவை பொருளாளர் ஜி கே செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார். இதில் எம்.ஆர். சண்முகம், சபரி ராமசாமி, எம். ஆர்.வெங்கி டுசாமி,எம் எ செல்வம், எம் ஆர் மாதேஸ்வரன், எம் கே கதிரவன், எம் கிருஷ்ணசாமி,அன்பு, வாணி விலாஸ் முருகன் உட்பட தேவர் பேரவையினர், இளைஞரணியினர் மற்றும் மகளிரணியினர்  கலந்து கொண்டனர்.

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

Image
  அத்தாணியில் உள்ள சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும்,ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி, பண்ணாரி எம்.எல்.ஏ.முன்னாள் எம்பிகள் காளியப்பன்,சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுப்பது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழை திருத்தல் போன்ற பணி களில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஈடுபடுவது,' குறித்து ஆலோ சனை வழங்கப்பட்டது. இதில் கட்சியின் அந்தியூர் நகர செயலாளர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம்,முன்னாள் கோபி யூனியன் சேர்மன் வக்கில் பி.யு.முத்துச்சாமி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வி.குருராஜ்,,ஜெயலலிதா பேரவை அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஒட்டல் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் கே.எஸ்.மோகன் குமார், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வினோத்குமார், எம்.ஜி.ஆர். மன்ற த...

ஸ்கேட்டிங் போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவன் வெற்றி

Image
 ஸ்கேட்டிங் போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.  தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் சென்னை சான் அகாடமியில் 17.10.2023 முதல் 22.10.2023 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களைச் சேர்ந்த 4000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் D.G.பிரணவ் 300மீ Quads மற்றும் 1000மீ Quads பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவரையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திரு.நந்தகுமார் அவர்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குநர் திரு. சக்தி நந்தன், துணைச்செயலாளர் திருமதி. வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் திருமதி. லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து -ஒன்றிய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு!

Image
 இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து -ஒன்றிய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு! எர்ணாகுளம் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது  ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் கேரள போலீசார் வழக்குப்பதிவு!

81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!- இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

Image
 81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!-  இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! கொரோனா பரிசோதனையின்போது அளித்த பெயர், தொலைப்பேசி எண், முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ, தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெறச்செய்ய அயராது உழைக்க வேண்டும்... முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன் பேச்சு

Image
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட   பகுதி,ஒன்றிய,  பகுதிகளில் உள்ள வார்டு  மற்றும் கிளை பகுதிகளில் நடைபெற்று வரும்  பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது உள்ளிட்ட பணிகள் சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  வெ.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும்,,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி..ஜெயராமன்  சிறப்புரையாற்றினார்.  மேலிட பார்வையாளர்  முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்  செ.தாமோதரன் அவர்கள் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் பாசறை ஆகியவைகளை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து உரையாற்றினார். இந்த கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகிகளும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேசுகையில், கழகத்திற்கான உறுப்பினர் சேர்க்கின்ற பணியை சிறப்பான முறையில் செய்து வருகிறீர்கள், அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவ...

சிலம்ப போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை

Image
 சிலம்ப போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான சிலம்பம் போட்டிகள் AKR அகாடமி பள்ளியில்  நடைபெற்றது.  இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் 27 பள்ளிகளைச் சேர்ந்த 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 12 வயதுக்குட்பட்டோர் முதல் 16 வயதுக்குட்பட்டோர் வரை நடைபெற்றது.  இப்போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகைச் சூடினர். 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 6ம் வகுப்பு மாணவர்கள் நந்திஷ் வெள்ளிப்பதக்கமும், நித்தின் ஹரிஷ் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.  14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 9ம் வகுப்பு மாணவிகள் மதுமிதா, சாரு தேஷ்னா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 9ம் வகுப்பு மாணவி யாஷிகா வெண்கலப்பதக்கம் வென்றார்.  இவ்வாறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் கௌதம் ஆகியோரை பள்...

மகிழ்ச்சியோடு வந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்த பரிதாபம்... புதிய காரில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது லாரி மோதி படுகாயம்... அப்பளமாக நொறுங்கிய கார்...

Image
 மகிழ்ச்சியோடு வந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்த பரிதாபம்... புதிய காரில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது லாரி மோதி படுகாயம்... அப்பளமாக நொறுங்கிய கார்... திருப்பூர் பெரியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் புதிய கார் வாங்கியதை அடுத்து, தனது குடும்பத்துடன் இன்று காலை சென்னிமலை கோவிலுக்கு சென்றார். கோவிலில் மகிழ்ச்சியாக சாமி தரிசனம் செய்து விட்டு குடும்பத்துடன் தனது புதிய காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை பிரகாஷ் ஓட்டி வந்த நிலையில், இன்று காலை அந்த கார் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூளிக்குளம், குளத்துப்பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது.  அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த தண்ணீர் லாரி பிரகாஷ் வந்த கார் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இதில் பிரகாஷ் வந்த புதிய கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்த பிரகாசும், அவரது மாமியார் பானுமதியும் பலத்த காயமடைந்தனர். இருவரும் முதலுதவிக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் சிக்கிய காரை பிரகாஷ்  வாங்கி  4 நா...

திருப்பூரில் 'குரூப் ஸ்டடி'யால் கர்ப்பமான மாணவி... சக மாணவன் கைது

Image
 திருப்பூர் அருகே குரூப் ஸ்டடி என கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பகுதியை சேர்ந்த  17 வயது கல்லூரி  மாணவனும் அதே பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியும் திருப்பூரில் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இருவரும் நன்றாக பழகி வந்துள்ளனர்.  இந்த பழக்கத்தின் காரணமாக மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குரூப் ஸ்டடி எனக்கூறி தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.   வீட்டில் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது குரூப் ஸ்டடி காரணமாக மாணவி கர்ப்பமான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து மாணவியுடன் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையம் சென்ற பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டார். பின்னர் மாணவி அளித்த புகாரின் பேரில் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவைய...

குப்பையில் வீசப்படும் பாட்டிலில் தயாராகும் டி ஷர்ட்... திருப்பூர் நிறுவனத்தின் அசத்தல் முயற்சி

Image
 திருப்பூரில் குப்பையில் வீசப்படும் கழிவு பிளாஸ்டிக் (PET) பாட்டில்கள் மூலம்  செயற்கை நூலால் தயாரிக்கப்படும் பின்னலாடைகளுக்கு வெளிநாட்டு வர்த்தகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தினசரி 70 லட்சம் பாட்டில்களை  மறுசுழற்சி செய்து 110 டன் அளவுக்கு செயற்கை நூலிழைகளை உருவாக்கி சுற்றுச்சூழலுக்கு துணை நிற்கிறது திருப்பூரை சார்ந்த சுலோச்சனா காட்டன் நிறுவனம். திருப்பூரில் உள்ள சுலோச்சனா நிறுவனம் 86 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த நிறுவனம்  ஆடை தயாரிப்புக்கான நூல் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்காக நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் தினசரி 70 லட்சம் பிளாஸ்டிக் கழிவு பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்த நிறுவனத்தில் உள்ள நான்கு பெரிய இயந்திரங்களில் பல்வேறு கட்ட பணிகளுக்கு பிறகு செயற்கை நூலிழையாக மாற்றப்படுகின்றன....

சத்தியமங்கலம் செண்பகபுதூர் எல்.பி.பி வாய்க்காலில் வெள்ளகால பாதுகாப்பு,தடுப்பு போலி ஒத்திகை. சத்திவட்டாச்சியர் தலைமையில் நடந்தது.

Image
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரசூர் உள்வட்டம் ,செண்பக ப் புதூர், கோவை மெயின்ரோடு,எல் . பி .பி. வாய்க்கால் பாலத்தில்,  30.1 0.23 மாலை 04.00 மணியளவில் வட கிழக்கு பருவமழை கால முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள கால  பாதுகாப்பு மற்றும் தடுப்பு நட வடிக்கை குறித்த  போலி ஒத்திகை சத்தியமங்கலம் வருவாய் வட்டாட் சியர் மாரிமுத்து  தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சத்தியமங்கலம் தீ தடுப்பு அலுவலர் V. ரங்கராஜ் முன்னிலையில் தீய ணைப்பு மீட்புக்குழு அணியினர் களால் நட த்தப்பட்டது. நிகழ்ச்சி யில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர சின்ன சாமி , செண்பகபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராசாத்தி, வரு வாய்துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.சத்தி - கோவை மெயின் ரோடில் ஆற்றில் ஒருவர் விழுந்து, அவரைக் காப்பாற்றும் முயற்சியில், தீயணைப்புத்துறை யினர் ஈடுபடுவது போல் ஒத்திகை நடத்தினர். மேலும் தீடிரென தீ பிடித்ததால், தீ அணைப்பு குழுவினர் தீயை அனை த்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொது மக்கள் மற்றும் அவ்வழியே வந்த வாகன ஓ...

புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் நடத்தும் ஐந்தாவது மாநில மாநாட்டின் ஆலோசனை கூட்டம்....

Image
  புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் நடத்தும் ஐந்தாவது மாநில மாநாட்டின் ஆலோசனை கூட்டம் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆய்வு கூட்டம், பெயர்பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா,  வள்ளிகும்மி அரங்கேற்றம் ஆகிய ஐம்பெரும் விழா குமாரபாளையம் மாவட்டம் ஶ்ரீ லட்சுமி மஹாலில் நடைபெற்றது.                                       இதில் விவசாயபெருமக்கள் வாழும் பகுதியான புதுப்பாளையம், பெதக்காட்டூர் கிராமபுறத்தில் அமைய தேர்வு செய்யப்பட்ட சாய சுத்திகரிப்பு நிலையங்களை விவசாய பயன்பாடு அல்லாத வேறு பகுதியை தேர்வு செய்ய வேண்டும். மேட்டூர் கிழகரை வாய்க்கால் பாசனத்தை அடிப்படையாக கொண்டு வாழும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வருடம் தோறும் பாசன நீர் திறக்கப்பட வேண்டும். பள்ளிபாளைம், ஆவத்திபாளையம் பகுதிகளில் முறையான சுத்திகரிப்புநிலையம் இல்லாமல் செயல்படும் சாய ஆலைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.  பல்வேறு தீர்மானங்கள்...

நீலகிரியில் பசு மாட்டை அடித்துக் கொன்ற புலி பரபரப்பு

Image
நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளி என்ற கிராமத்தில் பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது முதுகுளில் கிராமத்தில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில்  சுரேஷ் என்பவர் பட்டா நிலத்தில் பசு மாடு மேய்த்துக் கொண்டிருந்தது அப்பொழுது அங்கு வந்த புலி பசுவை தாக்கிக் கொன்றது இதுகுறித்து போஸ் பேரா பகுதி கார்டு மற்றும் பாரஸ்ட்க்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின் பெயரில் வனத்துறையினர் விசாரணை செய்ததில் புலி பசு மாட்டை அடித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது இதற்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தனர் மேலும் அப்பகுதியில் பசுவை அடித்துக்கொண்ட புலியை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியினை வனத்துறையினர்  தீவிரப்படுத்தி உள்ளனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

சென்னையில் சாரண, சாரணிய அமைப்பின் 420 மாணவ மாணவிகள் உலக சாதனை

Image
 டான் பாஸ்கோ மாவட்ட சாரண சாரணியர் அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 420 மாணவ, மாணவிகள் கைகளில் வண்ணம் பூசி உலக சாதனை படைத்துள்ளனர். டான் பாஸ்கோ மாவட்ட ஸ்கவுஸ் மற்றும் கைட்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னை கீழ்பாக்கம் டான் பாஸ்கோ மைதானத்தில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.  இந்த விழாவில் தமிழகம் முழுவதும் டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து வந்த 420 மாணவ, மாணவிகள் கைகளால் வண்ணம் பூசி உலக சாதனை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் டான் பாஸ்கோ சாரண மாவட்ட முதன்மை ஆணையர் தாமஸ், பாரத சாரண இயக்கத்தின் மாநில உதவி செயலாளர் முத்தமிழ் பாண்டியன்,அண்ணாநகர் எம்.எல்.ஏ.,மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த விழா குறித்து டான் பாஸ்கோ முதன்மை ஆணையர் தாமஸ் கூறியதாவது: யூனிகோ நிறுவனத்துடன் சேர்ந்து எங்களுடைய கப்சன் புல் புல்ஸ் வெள்ளிவிழா கொண்டாடியதாகவும், இயற்கையோடு இணைந்து உலகை பாதுகாக்க இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆந்திராவில் கொடூர ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் பலி...மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்

Image
கொடூர ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ரயில் விபத்திற்கு காரணம் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்று ரயில்வே தொழில்நுட்ப குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது.  இந்த கொடூர விபத்தில் 14 பேர் பலியானதாகவும் 45 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்று தெரிய வருகிறது. இந்த விபத்தில் மின்சார வயர் அறுந்து விழுந்த காரணத்தால் விசாகப்பட்டினத்தில் இருந்து முதலில் சென்ற ரயில் கண்டக பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதன்பின் வந்த ரயில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு அல்லது இயந்திர கோளாறு ஆகியவற்றின் காரணமாக வழித்தடத்தின் இடையே ரயில் நிறுத்தப்பட்டால் உடனடியாக தகவல் சென்ற...

300 பெண்கள் பங்கேற்ற பவளக்கொடி கும்மி ஆட்டம்

Image
 திருப்பூர் போயம்பாளையத்தில் நடைபெற்ற 66 வது பவளக்கொடி கும்மி ஆட்ட அரங்கேற்றத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மி ஆடினார்கள்.  திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பாரம்பரிய கும்மி ஆட்டம் பெரும் எழுச்சி பெற்று வருகிறது. கோவில் விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விழாக்களில் இடம்பெறும் கும்மி ஆட்டம் திருப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் பவளக்கொடி கும்மி குழுவின் 66 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் கும்மி ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் 300 பெண்கள் பல்வேறு கும்மி பாடல்களுக்கு கும்மி ஆட்டம் ஆடி அசத்தினார்கள். 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியில் 35 வகையான ஆட்ட நுணுக்கங்களில் பெண்கள் கும்மி ஆடினார்கள். மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த கும்மி ஆட்ட நிகழ்ச்சியை பொதுமக்கள் திரண்டு ரசித்தனர். திருப்பூரில் கும்மி ஆட்டம் புத்துணர்வுடன் வளர்ந்து வருவதாகவும், பாரம்பரிய கும்மி ஆட்டத்தை பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று ஆடுவதாக கும்மி ஆசிரியர் விஸ்வந...

திருப்பூரில் தேவர் குருபூஜை விழா

Image
 திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு பசும்பொன் பக்தர்கள் பேரவை சார்பில் பேரரசர் ராஜராஜ சோழன் 1038 வது சதய விழா, மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222 வது குருபூஜை, தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116 வது குருபூஜை விழா என முப்பெரும் விழா மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர். இந்த விழாவில் பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ராயல் லட்சுமணன் தேவர் தலைமை தாங்கினார், மாநில தலைவர் குட்டி எ செல்லதுரை தேவர் முன்னிலை வகித்தனர், இதில் 500க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக பங்கேற்றனர் . இந்த விழாவில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி.மற்றும் திருப்பூர் ஒருங்கிணைந்த தேவரின் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர்.

திருப்பூர் பயணியர் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

Image
திருப்பூர் தாராபுரம் சாலை அன்பு பாலு தோட்டம் .. அம்மன் நகர் தவ மையத்தில் ரோட்டரி திருப்பூர் பயணிர்ஸ் சங்கம் மற்றும் அம்மன் நகர் மனவளக்கலை யோகா மையம் இணைந்து நடத்திய ரத்த தானம் முகாம் நடைபெற்றது .  சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் சேர்மன் கமல பாஸ்கர் கலந்து கொண்டார் . ரொட்டேரியன் உதவி ஆளுநர் ஹரி விக்னேஷ் வாழ்த்துரை வழங்கினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னுசாமி .அம்மன் நகர் மனவளக்கலை யோகா மைய தலைவர் அன்பு பாலு என்ற பாலசுப்பிரமணியம் . திட்டத் தலைவர் ரொட்டேரியன் கிருஷ்ணமூர்த்தி ரோட்டரி ஐ எம் ஏ ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேஷ்மூர்த்தி. ரொட்டேரியன் தலைவர் வடிவேல் . செயலாளர் முத்துரத்தினம் பொருளாளர் ஜெய் வினோத் மற்றும் பொதுமக்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர் இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம் ஐ எம் ஏ ரத்த வங்கிக்கு அளிக்கப்பட்டது . .

தற்காலிக தோல்வியை படிக்கட்டுகளாக மாற்றுங்கள்... செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரை

Image
திருப்பூர், காங்கேயம் சாலையிலுள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது.  பள்ளியின் மாணவத்தலைவர் தனிஷ்கா மற்றும் ஜீவிகா வரவேற்புரையாற்றினார்கள். பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி அனிதா ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். நல்லூர் புனித நற்கருணை திருச்சபையின் அருட்தந்தை செபாஸ்டியன் மரிய சுந்தரம் இறை வழிபாடு செய்து வாழ்த்தினார். இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சேர்மன் ’சமூக சேவகி’ இந்திரா சுந்தரம் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களிடம் தலைமையுரையாற்றினார்… மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேசியதாவது: மாணாக்கர்கள் படிக்கும் காலகட்டத்தில்தான் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். அவர்களில் நமக்கேற்ற நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்களிடம் மத இன வேறுபாடு பார்க்கக்கூடாது. நமக்கான நல்ல நண்பர்களுடன் நமது சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நண்பர்களை முறைப்படி பயன்படுத்தி வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும். பள்ளி, கல்லூரி நாட்களில் படிக்கும் காலகட்டத்தில் கவனச் சிதறல் ஏற்படாமல் படிப்புடன் மட்டுமல்ல...

சென்னை அம்பத்தூரில் பயங்கர தீ விபத்து

Image
 சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக், பாலித்தீன் பேக்கிங் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அங்கு உள்ள கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வரும் காமாக்‌ஷி மேலிபேக் பிரைவேட் லிமிடெட் என்னும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இங்கு பல்வேறு பிளாஸ்டிக் ,பாலித்தீன் உள்ளிட்ட பேக்கிங் பொருட்கள் உற்பத்தி செய்யும் செய்யப் படுகிறது. இங்கு இரவு நேரத்தில் திடீரென தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது  இந்த தொழிற்சாலையில் பாலித்தீன் பொருள்கள் வைத்து ரோல் டைப் டன் கணக்கில் உற்பத்தி செய்து ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது இந்த தீ அருகில் இருந்து கெமிக்கல் வைக்கபட்டிருந்த பகுதியில் பரவியதால் தீ மலமலவேன எரிய துவங்கியது இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தொரிவிக்கபட்ட நிலையில் *அம்பத்தூர்தொழிற்பேட்டை செங்குன்றம்,தண்டையார்பேட்டை, ஜே ஜே நகர், ஆவடி, மாத...

மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி... மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

Image
 மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி :வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பரிசு கோப்பைகளை  வழங்கினார்.   கோவை வடக்கு பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் திறன்  மேம்பாட்டு பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டிகள் திருமுருகன்பூண்டி பாலாஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 45 அணிகள் பங்கேற்றன.  இதனையடுத்து  நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட தலைவர்  சங்கீதா தலைமை தாங்கினார். விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் டாக்டர் சுந்தரன் வரவேற்றார்.  இறகு பந்து போட்டியின் இறுதியில் அவிநாசி இந்திரன், ரஞ்சித் அணியினர் முதலிடத்தையும், பூண்டி வெற்றி, சிவா அணியினர் இரண்டாம் இடத்தையும், பூண்டி சுந்தர், ரஞ்சித் அணியினர் மூன்றாம் இடத்தையும் , பள்ளிபாளையம் முருகசாமி, சஞ்சய் அணியினர் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.                சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொ...

"யெகோவாவின் சாட்சிகள் தேசவிரோதிகள் " கேரளா- களமசேரி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர் வீடியோ வாக்குமூலம் வைரல்.!

Image
 "யெகோவாவின் சாட்சிகள் தேசவிரோதிகள் " கேரளா- களமசேரி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர் வீடியோ வாக்குமூலம் வைரல்.! கொச்சி கன்வென்ஷன் சென்டர்  குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்ற நபர் கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார், முன்னதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "யெகோவாவின் சாட்சிகள் என்ற கிருஸ்தவ அமைப்பு தேசவிரோதிகள், அவர்கள் மக்களை மூளைச்சலவை செய்கின்றனர் " என வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சரணடைந்த மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை  விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.  இன்று காலை கேரள மாநிலம் கொச்சி கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனைக் கூட்டத்திற்காக கூடியிருந்த இடத்தில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, போலீஸ் காவலில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளில் இருந்து விலகிய உறுப்பினரான டொமினிக் மார்ட்டின் சமூக ஊடகங்களில் வீடியோவை வெள...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Image
 இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேனியில் வனத்துறையால் சுடப்பட்டு இறந்தவரின் உறவினர்கள் போராட்டம்... குண்டுக்கட்டாக கைது

Image
 தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்தார். காப்புக் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்தகாவும், வனத்துறையினரை கத்தியால் தாக்க வந்ததால் ஈஸ்வரன்  சுடப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.   வனத்துறை நாள் சுடப்பட்டு இறந்த ஈஸ்வரன் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.   சாலை மறியல் ஈடுபட்ட நபர்களை காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் வலதிற்கு முன்பாக தற்போது அமர வைத்துள்ளனர். இருந்த போதிலும் ஈஸ்வரன் தரப்பினர் திரண்டு கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.  மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஈஸ்வரன் மனைவி மற்றும் கிராமத்தினர் அதிகளவில் ஒன்று கூடி வருகின்றனர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், வயல் வேலைக்கு சென்ற ஈஸ்வரனை வனத்துறை அநியாயமாக கொன்று விட்டதாக  புகார் தெரிவித்துள்ள்னர்.   ஈஸ்வரன் இறப்பிற்கு அரசு சார...

கேரளா குண்டு வெடிப்பு -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பினராயியுடன் தொலைபேசியில் பேச்சு.!

Image
 கேரளா குண்டு வெடிப்பு -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பினராயியுடன் தொலைபேசியில் பேச்சு.! திருவனந்தபுரம்: களமசேரி தொடர் குண்டுவெடிப்பு தீவிரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் . திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: காயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர் குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிலவரத்தை மதிப்பிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பினராயியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து மேலும் விவரங்களுக்கு போலீசார் தேடி வருவதாக முதல்வர் தெரிவித்தார். குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளத்தில் உள்ள போலீசார் களமச்சேரியில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை அடைந்துள்ளனர். டிஜிபி எர்ணாகுளம் செல்கிறார். மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன" என்று பினராயி கூறினார். இந்த சம்பவம் மிகவும் தீவிரமாக பார்க்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார...

கேரளா: கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.!

Image
 கேரளா:  கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.! கேரளா களமசேரியில் யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஒருவர் பலி, 36 பேர் காயம். ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் காலை 9:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. கொச்சியில் உள்ள களமசேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 2,200 பேர் கூடியிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்து அடுத்தடுத்து மூன்று வெடிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் ஒருவர் இறந்தார், மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கோவை மாவட்டம், காரமடைமருதூர் திம்மம்பாளையத்தில் வள்ளி கும்மி நடனம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ரசித்தனர்.

Image
 கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம், காரமடை அடுத்த மருதூர் பஞ் சாயத்திற்குட்பட்ட திம்மம்பாளையத் தில் தமிழர்களின் பாரம்பரிய கலை கள் ஒயிலாட்டம்,பறையாட்டம், தப் பாட்டம்,பொய்க்கால்குதிரை,வள்ளி  க்கும்மி போன்ற அழிவின் விளிம் பில் இருக்கும் கலைகளில் ஒன் றான,வள்ளிக்கும்மி கலையை தேர் வு செய்து அந்த கலையை வளர்க்க வேண்டும் என திம்மம்பாளையம் பெண்கள் முடிவெடுத்து அந்த கலையைவெள்ளிக்குப்பம்பாளையம் வி.கோவிந்தராஜ் ஆசிரியரை கொண்டு 21 நாட்களில் கற்றுக் கொண்டு அரங்கேற்றம் நடத்தினார் கள். இதில் சிறுவர், சிறுமியர், ஆண்கள் , பெண்கள் என 3 வயது முதல் 75வய தினரும், 500க்கும் மேற்பட்ட கலை ஞர்கள் ஒரே நேரத்தில் பாடலுக்கு ஏற்ப சலங்கை ஒலி மற்றும் பாட லின் ராகத்திற்கு ஒரே மாதிரியான சீருடைகள் அணிந்து நடனம் ஆடி யது பார்வையாளர்களையும்,பொது மக்களையும் மெய்சிலிர்க்க வைத் தது.இந்த கலையை கற்று தந்த ஆசிரியர் கோவிந்தராஜ் தனது சிறு வயது முதலே இந்த கலையைகற்று சுமார் 50ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளிக்கும்மி  ஆடி வருவதாக தெரி வித்தார்.இது அவர்கள் குழுவின் 10 25 நிகழ்ச்சியாகவும்,,10வது அரங் கேற்ற விழாவாகவும் உள்ளது. அரங்கே...

முடங்கும் திருப்பூர் பனியன் தொழில்... மூடப்படும் நிறுவனங்கள்... மீட்க என்ன வழி?

Image
 பனியன் தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியால் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக இருக்கிறது திருப்பூர் மாநகரம். 1925ம் ஆண்டு காதர்பேட்டையில் உள்ள நாடக கொட்டகைக்காக திரைச்சீலை வாங்குவதற்கு திருப்பூரை சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் மற்றும் சத்தார் சாகிபு ஆகியோர் சென்ற போது அங்கு கையினால் சுற்றி துணி தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி வந்தார்கள். அந்த இயந்திரம் தான் திருப்பூர் பனியன் தொழிலின் அடிப்படை. அதற்கடுத்தபடியாக 1955ல் இவர்கள் 400 பேர் வேலை செய்யக் கூடிய பேபி நிட்டிங் என்கிற பெரிய பின்னலாடை நிறுவனத்தை தொடங்கினார்கள். இது தான் திருப்பூரில் பனியன் தொழில் உருவாக காரணமாக இருந்த நிறுவனம். அதை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக திருப்பூரின் பல பகுதிகளுக்கும் தடம் பதித்த பனியன் தொழிலானது திருப்பூர் மாநகரில் விஸ்வரூபமாக வளர்ந்தது. 1980 களில்  திருப்பூரில் தயாரான பனியன் ஆடைகள் 50 கோடி ரூபாய் அளவுக்கு உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்று 2023ம் ஆண்டு தொடக்கத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாயை கடந்திருக்கிறது திருப்பூரின் ஏற்றுமதி. இப்படி கோவை மாவட்டத்தில், பல்லடம் தாலுகாவில் சின்ன ஊ...