நள்ளிரவில் வாகனம் மோதி சரிந்த கோபுர மின் கம்பம் - ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் ஆய்வாளரால் விபத்து தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் தகவல்.!
தூத்துக்குடி குரூஸ்புரம் பக்கிள் ஓடை 4ம் பாலம் பகுதியில் அமைந்துள்ள 5 வழிச்சாலையில் ஏற்பட்டு இருந்த இருளை போக்கி தரும்படி அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாய் கணேசன் என்பவர் பதிவு செய்த சமூகவலைதள பதிவை பார்த்த மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகளுடன் நேரில் வருகை தந்து ஆய்வு செய்ததன் பெயரில் "இந்த இடத்தில் இந்த உயர் கோபுர மின் விளக்கு" அதிரடிய அமைக்கப்பட்ட தாக பொதுமக்கள் தகவல் கொடுக்கின்றனர். மேலும் இந்த இடத்தில் அமைக்கப்பட்ட கோபுர மின்விளக்கு இப்பகுதியில் நிலவி வந்த இருளை போக்கி பொதுமக்களின் பயத்தையும் நீக்கியது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கோபுர மின் கம்பத்தின் கீழ் பகுதி முறிந்து சரிந்துள்ளது. கம்பம் சரிந்ததால் மின்சார இணைப்புக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த சர்வீஸ் லைன் அத்து சாலையின் நடுவே கிடந்தது. நள்ளிரவில் கம்பம் சரிந்ததால் வெளிச்சம் துண்டிக்கப்பட்டது. அந்த நேரம் அந்த வழியே இரவு நேர ரோந்து பணிக்காக வந்து கொண்டு இருந்த வடபாகம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் நடந்த சம்பவத்தை பார்த்...