Posts

நள்ளிரவில் வாகனம் மோதி சரிந்த கோபுர மின் கம்பம் - ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவல் ஆய்வாளரால் விபத்து தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் தகவல்.!

  தூத்துக்குடி குரூஸ்புரம் பக்கிள் ஓடை 4ம் பாலம் பகுதியில்  அமைந்துள்ள 5 வழிச்சாலையில் ஏற்பட்டு இருந்த இருளை போக்கி தரும்படி அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாய் கணேசன் என்பவர் பதிவு செய்த சமூகவலைதள பதிவை பார்த்த மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகளுடன் நேரில் வருகை தந்து ஆய்வு செய்ததன் பெயரில் "இந்த இடத்தில் இந்த உயர் கோபுர மின் விளக்கு" அதிரடிய அமைக்கப்பட்ட தாக பொதுமக்கள் தகவல் கொடுக்கின்றனர்.  மேலும் இந்த இடத்தில் அமைக்கப்பட்ட கோபுர மின்விளக்கு இப்பகுதியில் நிலவி வந்த இருளை போக்கி பொதுமக்களின் பயத்தையும் நீக்கியது. இந்நிலையில் நேற்று  நள்ளிரவு இந்த மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கோபுர மின் கம்பத்தின் கீழ் பகுதி முறிந்து சரிந்துள்ளது. கம்பம் சரிந்ததால் மின்சார இணைப்புக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த சர்வீஸ் லைன் அத்து சாலையின் நடுவே கிடந்தது. நள்ளிரவில் கம்பம் சரிந்ததால் வெளிச்சம் துண்டிக்கப்பட்டது. அந்த நேரம் அந்த வழியே இரவு நேர ரோந்து பணிக்காக வந்து கொண்டு இருந்த வடபாகம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் நடந்த சம்பவத்தை பார்த்...

தூத்துக்குடி குரூஸ்புரம் கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறிய மின் கம்பம் - நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை.!

Image
தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக குரூஸ்புரம் 5 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறி நிற்கிறது.இது ஒரு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடிய அளவில் மெயின் சாலையில் கேட்பாரற்று கிடக்கிறது.  மின்சாரம் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் உயிர் பாதுகாப்பு அவசியமாகிறது. ஆ தலால் இதை சரி செய்யக்கூடிய முன்னெடுப்பை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்க்கும் இதை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்காக இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பணி செய்வது எங்களது கடமை" -இரு சக்கர வாகனத்தில் உலா வந்து ஆய்வு செய்த மேயா் ஜெகன் பொியசாமி

Image
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் அரசியல் பாரபட்சமின்றி தேவையான கட்டமைப்பு பணிகள் முழுமையாக ஏற்கனவே நடைபெற்றுள்ளது. ஒரு சில பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு கோடைகால பருவமழை சற்று குறைவு ஏற்பட்டதால் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. வல்லநாடு ஆற்றுப்படுகையில் குடிதண்ணீாின் அளவு கடுமையாக குறைந்துள்ளது. இருந்த போதிலும் மாநகராட்சி பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஆனால் பல பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் ஒரு புறம் போராட்டம் மற்றொருபுறம் பாதி அளவுக்கு குடிநீர் வருகிறது மீதி பாதியளவு குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு கேவிகே நகர். மகிழ்ச்சிபுரம். பக்கிள் ஓடை ஒட்டிய அண்ணாநகர் பகுதி மற்றும் நான்காம் ரயில்வே கேட் பகுதிகளில் குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாம...

பொதுமக்கள் தண்ணீர் கேட்டால் சைகை மூலம் மிரட்டல் - அதிகாரி மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார்.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் முத்தையாபுரம் சுந்தர்நகர், சுந்தரம் நகர், ஜேஎஸ் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் நான்கு நாட்களாகியும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்கச் சென்ற பெண்களை தனது கை செய்கையின் மூலமாக இழிவாக பேசியும், தனது அரசு அதிகாரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிற விதமாக கைகளை முறுக்கிக் கொண்டு மீண்டும் தான் செய்த தவறை உணராமல் பெண்களிடமும் மரியாதை குறைவாக நடந்த தூத்துக்குடி தெற்கு மண்டல மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வம் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க மாநகராட்சி ஆணையர் ப்ாியங்காவை சந்தித்து தமிழர் விடியல் கட்சி சந்தனராஜ் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர்  அசன், தமிழ் புலிகள் கட்சி மண்டல செயலாளர் தாஸ் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.  அப்போது ஆணையா் ப்ரியங்கா பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையோடும், குறிப்பாக பொதுமக்களுடைய பிரச்சனைகளுக்காக அரசு அதிகாரிகளிடம் முறையிடும் போது அவர்களுடைய மக்கள் பிரச்சினை நிறைவேறும் விதமாக மிகவும் கண்ணியமாக நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றா...

தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 2027ம் கல்வி ஆண்டிற்கான தூத்துக்குடி நகா்புற அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அதில் தூத்துக்குடி விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வாலிபால், தடகள போட்டி நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எாிதல் ஓட்டப்பந்தயம் பல்வேறு பிாிவுகளில் வெற்றி பெற்றனர்.  இந்நிலையில் வெற்றி சான்றிதழ் பெற்ற ஜெருஷா, ஜாக்குலின்சாராள் மதனா, காவியா, காருண்யா, போல்வால்ட், பாலதா்ஷினி திவ்யதா்ஷினி, லக்ஷனா, மேலும் தூத்துக்குடி மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் மாநில அளவிலான கபில்கிளப் மதுரையில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 2ம் இடமும் காமராஜா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கபாடி போட்டியில் 4ம் இடமும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின்சாா்பில் பாராட்டும் தமிழ்வழிக்கல்வியில் 10ம் வகுப்பு பொதுத்தோ்வில் முதலிடம் பிடித்த மாணவி அபிநயாவிற்கு இந்திய வியாபாாிகள் சங்கம் சாா்பில் பாிசுத்தொகையும் பாராட்டுகளும் தொிவிக்கப்பட்டது இதையடுத்து பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவிகளுக்கும் உடற்கல்வி இயக்குநா் ஆசிாியா்கள் ஆகியோருக்கும் பள்ளி தாளாளா் சுதன்கீலா் பள்ளி தலை...

"வியாபாாிகள் சங்க உறுப்பினா்கள் மாநகராட்சி நிா்வாகத்திற்கு ஓத்துழைப்பாா்கள் " - விருது வழங்கும் விழாவில் நிா்வாகிகள் தகவல்

Image
தூத்துக்குடி வஉசி சந்தை ஐக்கிய வியாபாாிகள் சங்க மகாசபை கூட்டம் அலுவலகத்தில் தலைவா் அன்புராஜ் தலைமையில் செயலாளர் செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளா் மரகதராஜ் வரவேற்புரையாற்றினாா். கூட்டத்தில் சங்க ஆண்டு அறிக்கை வரவு செலவு ஓத்துக்கொள்ளப்பட்டு சங்க வளா்ச்சிக்குாிய பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல ஆலோசனைகள் நடைபெற்றதில் தலைவா் அன்புராஜ் செயலாளர் செந்தில்குமாா் பொருளாளா் மரகதராஜ் ஆகியோா் பேசுகையில் வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வகையில் போக்குவரத்து நெருக்கடிகள் நிறைந்து வருவதால் மாநகராட்சி சாா்பில் எல்லாப்பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறியப்பட்டு பல அமைப்புகளின் புகாா்களின் போிலும் அகற்றி வருகின்றனா். அதன்படி நமது சந்தை பகுதிகளிலும் இருக்கின்ற சில ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாாிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். அதன்படி முழு ஒத்துழைப்பு வழங்கி முழுமையாக துணை புாிந்து நம் தொழிலுக்கு நாமே பாதுகாப்பு என்ற அடிப்படையில் செயல்படு வோம் என்று பேசினாா்கள். பின்னா் சங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினா்களுக்கு உழைப்பின் சிகரம் விருதும் உறுப்...

தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை கண்டு கொள்ளாத அமைச்சர் ஸ்ரீநாத் - தொகுதி மக்கள் கடும் அதிருப்தி.!

Image
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் ஸ்ரீநாத் மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது, பைப் லைன் உடைப்பு மற்றும் மெயின் வாழ்வு உடைப்பு உள்ளிட்டவைகளால் குடிநீர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தாமதம் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடிய அமைச்சா் ஸ்ரீநாத் கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடியில் தான் இருந்தார் ஆனால் ஒரு நாள் கூட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடமும் அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் நீரில்லாமல் உள்ளது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் ஸ்ரீநாத் வல்லநாடு ஆற்று படுகைக்கு சென்று பார்க்கவில்லை. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தான் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது தூத்துக்குடி சட்டமன்ற உ...