Posts

Showing posts from August, 2020

தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக ஆர்ப்பாட்டம்

Image
தமிழகம் முழுவதும் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கடந்த குடியரசு தினவிழாவில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தலித் தலைவர்கள் கொடியேற்றம் விடாமல் தடுக்கப்பட்டு உள்ளனர் இந்த சாதிய தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. இன்று தேனி மாவட்டத்தில் எட்டு இடங்களில் கடுமையான கோஷங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறது. தேனியில் ஒன்றிய அலுவலக வாசலில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் E.தர்மர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர், ஆண்டிபட்டியில் தோழர் வி சின்னன் தலைமையிலும் பெரியகுளம் ஒன்றியத்தில் இளங்கோவன் தலைமையிலும் உத்தமபாளையம் ஒன்றியத்தில் சி. வேலவன் தலைமையிலும் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் போஸ் தலைமையிலும் கம்பம் ஒன்றியத்தில் வி மோகன் தலைமையிலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது

உயிரிழந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென் மண்டல காவல்துறை சார்பாக நிதியுதவி

Image
உயிரிழந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென் மண்டல காவல்துறை சார்பாக நிதியுதவி.     வீரமரணமடைந்த காவல்துறை வீரர்  சுப்பிரமணியன்  வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி எஸ். முருகன், நேரில் சென்று தென் மண்டல காவல்துறை சார்பாக ரூபாய் 86,50,000/- நிதியுதவி வழங்கினார்.   கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன்  வீர மரணமடைந்தார்.     அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக நிதியுதவி  வழங்க மதுரை தென் மண்டல ஐ.ஜி முருகன், அறிவுறுத்தலின்படி, தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள்  விருப்பத்திற்கேற்ப நிதியுதவி பங்களிப்பு செய்துள்ளனர்.   அந்த பங்களிப்பு ரூபாய் 86,50,000/-த்தை இன்று (31.08.2020) மதுரை தென் மண்டல ஐ.ஜி எஸ். முருகன் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டார விளையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.      அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீன்...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

Image
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நகர வங்கி தலைவர் அரங்க. நீதிமன்னன் திறந்துவைத்தார்.     கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர் பயின்றிட வசதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட  செயலாளருமான  அருண்மொழிதேவன்  தனது தொகுதி வளர்ச்சியில் இருந்து 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி அடிக்கல் நாட்டி தூக்கி வைத்திருந்தார்    இதனை அடுத்து தற்போது  கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து  திட்டக்குடி முன்னாள் பேரூராட்சி தலைவரும் நகர வங்கி தலைவருமான அரங்க. நீதிமன்னன்  இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளியின் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா கூட்டுறவு வங்கி தலைவர் முல்லை நாதன் நகர பொருளாளர் நாகராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ராஜவேல் கல்யாணசுந்தரம் ராமர் கொளஞ்சி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.            

வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியை எட்டியுள்ள நிலையில், முதல்போக பாசனத்திற்காக திறப்பு

Image
வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியை எட்டியுள்ள நிலையில், முதல்போக பாசனத்திற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீர் திறந்து வைத்தார்.     தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகர குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதற்கிடையே இந்த மாதத்தின் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.   இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாகவும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.   கடந்த 5-ந்தேதி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 30 அடி மட்டுமே இருந்தது. தொடர் மழை மற்றும் நீர்வரத்து...

திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
சிவனடியார் சரவணன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் தென் மண்டல செயலாளர் ராஜபாண்டி தலைமையில் திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் உடையார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரேசன் கடை கட்டிடம் இருக்கு... ஆனால் கடை இல்லை 

Image
நொச்சிகுளம் - வடக்கு ஆலங்குளம் பகுதியில் ரேசன்கடையை  திறக்க வேண்டும். திமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிகுளம் ஆலங்குளம் வடக்குப் பகுதியில் அரசு ரேசன்கடை கட்டிடம் கட்டி பல ஆண்டுகளாகியும் இன்று வரை அந்த கட்டிடத்தில் ரேசன் கடை திறக்கப்படவில்லை. எனவே அந்தப் பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக நொச்சிகுளம் ஊராட்சி - ஆலங்குளம் வடக்கு பகுதியில் அரசு பகுதிநேர ரேசன் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்   அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சிகுளம் ஊராட்சி, வடக்கு ஆலங்குளம் என்ற ஊரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தமிழக அமைச்சர் சொ.கருப்பசாமியின் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதி மூலம் புதிய ரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.    ஆனால் இதுவரை அந்தக் கட்...

தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக தேர்தல் பணி தொடக்கம்... செப்,1, 3ஆம் தேதிகளில் இளைஞர் பாசறை நிர்வாகிகள் சந்திப்பு

Image
  தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில் 2021 தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் செப்,1, 3ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட செயலாளரும், தென்காசி எம்.எல்.ஏ,வுமான சி.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   மாண்புமிகு இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக ஆசியுடன், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி  கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க, 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிடும் வகையில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.    இதில் முதற்கட்டமாக தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளில், பூத் வாரியாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வரும் செப். 1 (செவ்வாய்...

திருப்பூர் டிரீம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், விரிக்ஷா பள்ளியில் இரத்ததான முகாம்

Image
திருப்பூர் டிரீம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், விரிக்ஷா பள்ளியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஐ.எம்.ஏ., ரோட்டரி இரத்த வங்கிக்கு வழங்கும் வகையில் நடந்த இந்த இரத்த தான முகாமில் 100 க்கும் மேற்ப்பட்ட கொடையாளர்கள் இரத்ததானம் செய்தனர். முன்னாள் ரோட்டரி கவர்னர் கார்த்திகேயன் முகாமினை துவக்கி வைத்தார். ஐ.எம்.ஏ., இரத்த வங்கி இனை செயலாளர் கணேசமூர்த்தி, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி தலைவர் பிரேம் ஆனந்த்,  டிரீம் சிட்டி ரோட்டரி தலைவர் ராஜா, செயலாளர் பஞ்சாபகேசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பொருளாளர் சாமிநாதன், விரிக்‌ஷா  பள்ளி நிர்வாகிகள் கோவிந்தராஜன், ராஜலட்சுமி, ஜோதிமணி, பாரதி, காமராஜ், தனசேகர், மைதிலி, ராணி, சீனிவாசன், கவிதா லட்சுமி, சண்முக பிரியா,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கு சிறைத்துறை ஏற்பாடு

Image
கொரோனா பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் குடும்பத்தினரை சந்திக்க கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்க வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கு சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மத்திய சிறையிலும் 10 செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன்படி நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் கைதிகள் தினமும் 7 நிமிடங்கள் உறவினர்களுடன் பேசி வருகின்றனர். து குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை வீடியோ கால்களில் பேசியுள்ளனர்’ என்றனர்.

வேலூர் அருகே கள்ளச்சாராய கும்பல் காவல்துறையினரை சுற்றி வளைத்து தாக்குதல்

Image
  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலையில் தொடர்ந்து  கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகள் நடத்தி கள்ளச்சாராய ஊரல்களை அழித்து வருகிறார்கள். இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் காவலர்கள் 7 பேர், அல்லேரி மலைக்கு சென்று அங்குள்ள பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாராய வியாபாரி கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் காவல்துறையினர் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அரிவாளால் வெட்டியதில் காவலர் அன்பழகன் மற்றும் ராகேஷ் ஆகியோர் படுகாயங்களுடன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், நெஞ்சுவலி காரணமாக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். காவல்துறையினரை வழிமறித்து கள்ளச்சாராய கும்பல் சரமாரியாக தாக்கியது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தாக்குதல் நடத்திவிட்டு தப்பி...

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் 

Image
  வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண் ணம்மா மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.   இதில், கரோனா வைரஸ் பரவலில் சித்த மருத்துவத்தின் பங்கு குறித்தும் பல்வேறு உலக நாடுகளில் கரோனா வைரஸ் தடுப்பில் மூலிகைகளின் பங்கு குறித்த ஆராய்ச்சி முடிவுகள், உணவுகள் மூலம் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது மற்றும் பின்விளைவுகளை தடுப்பது குறித்தும் சித்த மருத்துவர் தில்லைவாணன் படக்காட்சிகள் மூலம் விளக்கினார்.   இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டத்தை மாநகராட்சி அளவிலும் வருவாய் கோட்டம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவ முறையில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சித்த ம...

உதகையில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்

Image
  நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.   இதனை மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி சசிமோகன், உதகை உதவி ஆட்சியர் மேனகா ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்

அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் தீர்ப்பு -ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்

Image
  மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் முதல் வருமான கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 2009 ஆம் ஆண்டு பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது.    ஆனால் 2008 நவம்பர் 27ம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, அருந்ததியர் (தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 2009 ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டன.   அந்த நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சேலத்தைச் சேர்ந்த யசோதா 2015 ல் மனு தாக்கல் செய்தார்.   இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கு நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் விசாரணைக்கு வந்தபோது மாநில அரசுகள் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் நிலையைத் தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியதை,    தொடர்ந்து உள் ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைக் கொண்டாடும் வகையில், தேன...

பழனியில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Image
  திண்டுக்கல் மாவட்டம் பழனி மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   மாவட்டத் செயலாளர் பகத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,   கொரோனாவை காரணம் காட்டி கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், வருவாய்த்துறை மூலமாக உதவித்தொகை பெற ஈசேவை மைய்யங்கள் மூலமாக விண்ணப்பிப்பதில் ஏற்ப்படும் சிரமங்களை தீர்க்க வலியுறுத்தியும்  கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ள இந்த கால கட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளின் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை   மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும். மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும்  மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் பர்லியார்  ஊராட்சி கோடைமலையில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம்

Image
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் ஒன்றியம்,  பர்லியார்  ஊராட்சி கோடைமலை  ஊரில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான சாந்தி எ ராமு எம் ஏ எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை

Image
நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் தனது பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை, அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினாேத் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுணன் முன்னிலையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார் கே.ஆர்.ஆல்துரை.    இந்நிகழ்வில் உதகை நகரக் கழகச் செயலாளர் சண்முகம், உதகை ஒன்றியச் செயலாளர் டி.பெள்ளி ஆவின் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உதகை ஒன்றிய செயலாளர் கடநாடு பா.குமார், முன்னாள் உதகை நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் மற்றும் கழக பாெதுக்குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சிவலிங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் மரகல் சிவகுமார், சூப்பர் மார்க்கெட் துணைத் தலைவர் ஷாந்த் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திட்டக்குடியில் தமுமுக, மமக கட்சி கொடியேற்று விழா

Image
  கடலூர் வடக்கு மாவட்டம் திட்டக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கி 25 வது ஆண்டு முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தமுமுக  மாவட்ட துணை செயலாளர் திட்டக்குடி ஷாகுல் அமீது தலைமை தாங்கினார். நகர செயலாளர் கரிம் பேக், நகர பொருளாளர் சுபேதார் பாஷா முன்னிலை வகித்தனர்.     சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் வி.எம் சேக் தாவூத் தமுமுக  கொடியையும் மாவட்ட உலமா அணி பொருளாளர் நஜிருல்லாஹ் மிஸ்பாஹி மமக கொடியையும்  ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.   இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஆட்டோ அமானுல்லா கிளை தலைவர் அன்சாரி முஹம்மது நகர துணை செயலாளர் சிறுமூளை தாஜூதீன் முகமது அலி ஜின்னா அர்சத் ராஷித் நகர ஊடகப்பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.   முடிவில் தமுமுக நகர செயலாளர் ஹம்சா முகமது நன்றி தெரிவித்தார்.

நெல்லை தச்சநல்லூரில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை

Image
நெல்லை தச்சநல்லூரில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த், ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா , அவைத்தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான  பரணி சங்கரலிங்கம், மாணவரணி செயலாளர் சிவந்தி மகாராஜன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கொடுமுடி கிழக்கு ஒன்றியம் பா.ஜ.க ஒன்றிய அணிதலைவா்கள், பிரிவு தலைவா்கள் அறிவிப்பு கூட்டம்

Image
ஈரோடு தெற்கு  மாவட்டம்  கொடுமுடி கிழக்கு  ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய அணிதலைவா்கள், பிரிவு தலைவா்கள் அறிவிப்பு கூட்டம் ஊஞ்சலூரில்  நடைபெற்றது நிகழ்ச்சியில் மத்திய பொதுக்குழு உறுப்பினா் கே.வி.ராமநாதன் முன்னாள் எம்.எல்.ஏ மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியம் பொதுசெயலாளா்கள் , மாவட்டசெயலாளா் சி.ஆர்.காா்த்திகேயன் ,ஒன்றிய தலைவா் கிளாம்பாடி சேகா் ஒன்றிய பொது செயலாளா்கள் பாசூா் சவரணன், வக்கில் காா்த்திகேயன்   ஒன்றிய பொருளாளா் இரா.ரகுநாதன்  மற்றும் மாநில பொதுக்குழுஉறுப்பினா்கள் மாவட்ட,ஒன்றிய அணிதலைவா்கள்,மாவட்ட ,ஒன்றிய பிரிவு தலைவா்கள்  நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அரசு பள்ளிகளில்  கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்

Image
பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது, அரசு பள்ளிகளில்  கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோபியை அடுத்த நம்பியூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி     கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளப்பலூர் எலத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய பகுதியில் உள்ள 640 ஏழை பெண் பயனாளிகளுக்கு ரூ.13.28 இலட்சம் மதிப்பீட்டில் அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.   பின்னர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூாில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்கள் சந்திப்பின் போது     ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 3 லட்சத்து 85 ஆயிரம் கோமாாி நோய் தடுப்பு ஊசிகள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது   கோழி தடுபூசி வாரத்தில் ஒரு நாள் வழங்கப்பட்டு வந்ததை  இரண்டு நாட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..   நீட் தோ்வில் பங்கேற்கும் மாணவா்ளுக்கு போக்குவரத்து வசதிகள் ஏ...

பேர்ணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி ஊராட்சியில் மனைவியை கொலை செய்த கணவன் கைது

Image
பேர்ணாம்பட்டு ஒன்றியம், பத்தலப்பல்லி ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் யுவராஜி வயது 22. இவர் கட்டட தொழில் செய்து வருகிறார். அவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் வயது 19.கடந்த ஒன்பது மதங்கள் முன் திருமணம் நடைபெற்றது. நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்த யுவராஜிக்கும் மனைவி சுப்புலட்சுமிக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பிறகு ஆத்திரமடைந்த கணவர் யுவராஜ் இரும்பு தடியால் தன் மனைவி சுப்புலட்சுமியை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி  யுவராஜ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய சாலை பணியை தொடங்கி வைத்த ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ

Image
  நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளையங்கோட்டை கேடிசி நகர் கட்டபொம்மன் நகரில் ஹாலோப்ளாக் சாலைகள் அமைக்கும் பணிகளை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன்  தொடங்கி வைத்தார்.   அருகில் அதிமுக ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சின்னதுரை, கிளைச் செயலாளர் சுஜித் வேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.    

நீலகிரி கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில்  இலவச அத்தியாவசிய பொருட்கள்

Image
  நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றியம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில்  இலவச அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் தலைமையில் வழங்கினார்.   இந்நிகழ்வில் குந்தா ஒன்றிய கழகச் செயலாளர் வசந்தராஜன், உதகை ஒன்றிய கழகச் செயலாளர் டி.பெள்ளி, ஆவின் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உதகை ஒன்றிய செயலாளர் கடநாடு பா.குமார்,மாவட்ட தொழிற்சங்க பிரிவு செயலாளர் சக்சஸ் சந்திரன்,பாசறை உதகை நகரச் செயலாளர் அக்கீம் பாபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் மரகல் சிவகுமார்,இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட குழு தலைவர் குண்டன் கழக நிர்வாகிகள் கல்லக்காெரை சந்திரன்,முருகன், தொண்டர்கள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.    

ஈரோடு மாவட்டம் பவானியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

Image
  ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில்  உடல் ஊனமுற்றோர்,விதவைகள்,முதியோர் உதவி தொகை,புதிய மின்னணு குடும்ப அட்டை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் கோட்டாட்சியர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.                

இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்ட இளைஞர்கள்

Image
  ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பழவூரில் நடைபெற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை  சென்றிருந்த போது அந்த ஊரைச் இளைஞர்கள் தாமாக முன்வந்து இன்பதுரை எம்எல்ஏ  முன்னிலையில் அதிமுக வில் தங்களை இணைத்து கொண்டனர்.   அருகில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் கழக நிர்வாகிகள் ராதாபுரம் முருகேசன், மதன்,அருண் புனிதன்,  கல்யாணசுந்தரம், வள்ளியூர்  அருண் மற்றும் பலர் உள்ளனர்.

போடியில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
  போடி  திருவள்ளுவர் சிலை அருகே கொரோனா ஊரடங்கு காலங்களில் புதிய தேசிய கல்வி கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருத்த சட்டம் மற்றும் கிரிமினல் தண்டனை சட்டங்களில் திருத்தங்கள் போன்ற பொதுமக்களுக்கு எதிரான சட்டதிட்டங்களை கொரோனா ஊரடங்கு காலங்களில் யாரும் கேள்வி கேட்க இயலாத சூழ்நிலையில் சூசகமாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்தம் வரைவு EIA , குற்றவியல் சட்டங்கள் அவசரகதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கல் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை பிரச்சார இயக்கத்தை SDPI கட்சி நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக போடிநாயக்கனூரில் திருவள்ளுவர் சிலை முன்பாக SDPI கட்சியின் போடி தலைவர் லத்திப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட SDPI கட்சியின் தலைவர் அபுபக்கர் சித்திக் கூறுகையில்  கொரோனா ஊரடங்கு காலங...

ஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..

Image
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன...

கெட்டிசெவியூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் பிறந்தநாள் விழா

Image
ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆலோசனையின்  படி, ஈரோடு புறநகர் மாவட்ட கழக இணை செயலாளர் என்.கே.துளசிமணி  தலைமையில் கெட்டிசெவியூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக தான்தோன்றி அம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு ஆயுள் ஹோமம்... மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் இல்லத்தில் நடைபெற்றது

Image
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா ஈரோடு புறநகர் மாவட்டம் முழுவதும் கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும். கழகத்தின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக கோபி அடுத்த நம்பியூர் பகுதியில் உள்ள மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் இல்லத்தில் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு ஆயுள் ஹோமம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணி ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி

Image
பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக கடந்த மூன்று நாட்களாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது.      இதில் முதல் பரிசு பெற்ற கஸ்பா நேதாஜி கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ3000 மற்றும் வெற்றி கோப்பையும் , 2ம் பரிசு பெற்ற காயாமொழி அணிக்கு ரூ2000 மற்றும் வெற்றி கோப்பையும், 3ம் பரிசு பெற்ற அம்மன்புரம் அணிக்கு ரூ1000ம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர்   ராமநாதன் சார்பில் பரமன்குறிச்சி திமுக ஊராட்சி செயலாளர் இளங்கோ தலைமையில் வழங்கப்பட்டது.       இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துனை அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய மாணவரணி துனை அமைப்பாளர் செந்தில் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் கபசுர குடிநீர்

Image
  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியையடுத்த மூப்பன்பட்டி மற்றும் ஆவல்நத்தம் கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது.     தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மூப்பன்பட்டி மற்றும் ஆவல்நத்தத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலர் அழகர்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் நிர்மலா முன்னிலை வகித்தார்.     மூப்பன்பட்டி மற்றும் ஆவல்நத்தம் பகுதி மக்களுக்கு கரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிய வலியுறுத்தியும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.      தொடர்ந்து, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினர். இதில், ஒன்றியச் செயலர்கள் சுரேஷ் (கிழக்கு), முருகன் (மேற்கு), மாவட்ட அவைத் தலைவர் கொம்பையா, நகரச் செயலர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய  காவல்துறையினருக்கு SP ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு

Image
   கடந்த 18.08.2020 அன்று பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைமுத்து என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை கிராமத்தில்   சுற்றித் திரிவதாக கிடைத்த இரகசிய தகவலின் படி, தனிப்படையினர் மணக்கரை ஜங்ஷன் அருகில் ஒரு அறையில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்து மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் பிடிக்க சென்ற போது,   தனிப்படையினரை தாக்க முயற்சி செய்து தப்பிக்கும் போது மூன்று நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ரவுடி துரைமுத்து மட்டும் அங்கிருந்த வல்லநாடு வனப்பகுதியில் தப்பி ஓடும் போது    அவரை காவலர் சுப்பிரமணியன் துரத்தி சென்று பின் பக்கமாக பிடித்தபோது ரவுடி துரைமுத்து கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வீசியதில்,   காவலர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வெடித்து தலைசிதைந்து சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.    இதில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். ரவுடியை பிடிக்க உயிரையும் பணயம் வைத்து பணிபுரிந்த ஏரல் காவல் நிலைய உதவ...

இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு

Image
தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு     கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துறையூர் கணேச பாண்டியன் ஏற்பாட்டில் பெயரில் நடைபெற்றது.   இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்தார்.    விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன்,முன்னாள் எம்எல்ஏவும், அறங்காவலர் குழு தலைவருமான மோகன், அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு எடுத்துரைத்தார், மேலும் அதற்கான விண்ணப்ப படிவங்களையும் வழங்கினார்.     நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, வண்டானம்...

நீட் தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் - கனிமொழி எம்.பி

Image
  நாட்டில் கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையில் சொல்லக்கூடிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.   பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி எம்.பி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்   "தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்காக திமுக ஒரு குழு அமைத்து பல்வேறு கருத்துக்களை கூறியது அந்த கருத்துக்கள் எதுவும் இதுவரை ஏற்கபடவில்லை,    பல்வேறு மாநிலங்கள் இந்த கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறிய கருத்துக்கள் எதுவும் ஏற்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.    சமூகநீதிக்கு எதிரானதாகவும், மொழி திணிப்பிற்ககாகவும், மாநிலங்களிடையே உரிமையை பறிக்கும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை அமைந்துள்ளது எனவும்   இந்த கொரானா தொற்று பரவிவரும் இந்த சூழலில் நீட் தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் பின்னர் அது நிரந்தரமாக விலக்கப...

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் விழா... துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

Image
தமிழக அரசு மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் விழாவை துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.     தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச முககவசம் மற்றும்  தேனி மாவட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கு  நிதி உதவியை தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  தொடங்கி வைத்தார்.   இதன் மூலம் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக  228 நியாய விலைக் கடைகளில் 2,13263 குடும்ப அட்டைகளை சார்ந்த 6,40832 குடும்ப உறுப்பினர்களுக்கான 12,82000 விலை இல்லா முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளது.   தேனி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பின்தங்கிய நிலையிலுள்ள உள்ள 400 முஸ்லிம் மக்களை தேர்வு செய்து சிறு குறு தொழில் செய்ய தல 7500 வீதம் 30,00000 (முப்பது லட்சம்) நிதி உதவி நேரில் வரவழைத்து வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட  ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜ்ஸ்வி, மாவட்ட வருவாய் அல...

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

Image
  கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலைமையில் கொரோனா  வைரஸ் பற்றிய  விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.    வட்டார மருத்துவர் வலம்புரி செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள்  பொதுமக்களிடம் முக கவசம் கட்டாயம்  அணிய வேண்டும்  உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று வட்டார மருத்துவர் வலம்புரி செல்வம் ஆலோசனை வழங்கினார் இதில் சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் மருத்துவம் மில்லா மேற்பார்வையாளர் விசுவநாதர் சுகாதார ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் ராஜமோகன் மதன கோபாலன் பாலகிருஷ்ணன்  மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் செந்தில்குமார் விஜயா தங்கராஜ் முருகேசன் ராணி ரங்கராஜன்  ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

கொரோனா கால நிவாரணம் கேட்டு சுற்றுலா வாகன கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அண்டை மாநில அரசுகள் வழங்குவதை போல் ரூபாய் 10000 கொரோனா கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு திங்கள் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் வாகனங்கள் இயக்கபடாததால்  காலாண்டு வரியை ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும்,   வாகனங்கள் இயக்கப்படாத காலங்களில் காப்பீட்டு வரியை நீட்டித்து வழங்க வேண்டும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை தகுதிச் சான்றிதழை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், வாகன கடன்கள் செலுத்த மேலும் 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும், அண்டை மாநில அரசுகள் சுற்றுலா ஓட்டுநர்களுக்கு  வழங்குவதைப் போல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கும் ரூபாய் 10000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ...

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் சிலை திறப்பு

Image
நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும்,  தலைவருமான கலைஞரின் சிலையை காணொளி காட்சி மூலம்  திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்டகழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி,  மாவட்ட துணைசெயலாளர் ரவிக்குமார்  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

Image
  நெல்லை மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்  சண்முககுமார் ஏற்பாட்டின் பேரில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முதல் ஓட்டுரிமை பெற்றுள்ள இளைஞர்கள் 50 பேர் அதிமுக திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.    இந்நிகழ்ச்சியின்போது பாளையங்கோட்டை ஒன்றியக் கழக செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பள்ளமடை பாலமுருகன், தச்சநல்லூர் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலசுப்ரமணி, நெல்லை பகுதி 42வது வட்டக் கழக செயலாளர் காந்தி வெங்கடாசலம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டர் அணி  துணை தலைவர் பாலமுருகன்,முத்துப்பாண்டி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறப்பு... சுமார் 7 லட்சம் ரூபாய் காணிக்கை

Image
கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது  சுமார் 7 லட்சம் ரூபாய் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.     கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் திருகொளஞ்சியப்பார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தங்கள்  வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பொருளாகவோ பணமாகவோ செலுத்துவது வழக்கம்.   தற்போது கோரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, ஆய்வாளர் லட்சுமி நரயனானன், ஊராட்சி மன்ற தலைவர் தீய நீதிராஜன் மற்றும் இந்து மகா சபா மாவட்ட செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டத்தில்  7 லட்சத்து 26ஆயிரத்து 773 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

பழனி அரசு போக்குவரத்து மனை முன்பு  அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக போராட்டம் 

Image
பழனி அரசு போக்குவரத்து மனை முன்பு அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்காளிடம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப கொடுக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.