Posts

Showing posts from July, 2021

தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்.!

Image
ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு. தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிப்பு. விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை.* அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால், குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம் - அரசு உத்தரவு.

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு.!

Image
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

Image
த மிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்துஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்

உணவு,வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் - ஆட்சியர் செந்தில்ராஜ், அறிவிப்பு.!

Image
தற்பொழுது ஊரடங்கு தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்நவண்ணம் உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட்டுகள்,டீக்கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், தெருவோர வணிகர்கள் விழாக்கால விற்பனையாளர்கள் உள்ளிட்ட உணவு வணிகர்களில்,  2177 வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமும், 15351 வணிகர்கள் உணவு பாதுகாப்புச் சான்றிதழும் பெற்றுள்ளனர். அறிகுறியில்லாமலோ அல்லது அறிகுறியுடன் உள்ள நோய்த் தொற்று உள்ளோரிடமிருந்து கொராணா மீண்டும் பொதுமக்களுக்கு பரவுவதை தடுப்பதற்காகவும்,  நலமுடன் உள்ளோர் கொராணய பாதிப்பிற்குள்ளாகாமல் தடுக்கவும், உணவு வணிக நிறுவன உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் கொராணா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு பணியும் இம்மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது.  இருப்பினும், அவ்வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும்  கொராணா நோய் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுவதில் தொய்வு காணப்படுகின்றது. எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உ...

தூத்துக்குடி தொழில் வளர்ச்சிக்காக புதிதாக பல்நோக்குமையம் கட்ட திட்டம் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் ஆகியோர் பங்குபெற்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் புதிதாக மாநகராட்சி பகுதிகளில் தொடங்கப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.   தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினசரி குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 1 வருடம் 6 மாதத்திற்குள் மாநகராட்சியின் அணைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் சேவை வழங்கப்படும். 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு முடிக...

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் - சைல்டு லைன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பங்கேற்பு.!

Image
‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 30 ம் தேதி மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான  குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றம் மற்றும் சைல்டு லைன் 1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் குழந்தைகள் பெண்களுக்கெதிரான குற்றங்கள் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இன்று மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது....

கோவில்பட்டியில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.!

Image
சமூக பாதுகாப்புத் துறையின்  தூத்துக்குடி மாவட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஒவ்வொரு வட்டாரத்திலும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்  தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன்  (திட்டம் ),ஸ்ரீனிவாசன் (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, முத்துபாண்டியன்  முன்னிலையில்  நடைபெற்றது. கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தைகள் உரிமைகள், குழந்தை தத்தெடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர்சுரேத்து வாணி  சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத்தில் கூட்டத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர் துணை ஆய்வாளர், சைல்ட் லைன் உறுப்பினர் கனகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்

சுங்க அதிகாரியின் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை - சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட எஸ்.பி - தனிப்படை அமைத்து கொள்ளையடித்த கும்பலை கைது செய்ய உத்தரவு

Image
தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட் நகர் 5 வது தெருவில் கல்யாணசுந்தரம் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்க கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கல்யாணசுந்தரம், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மேற்படி பிரையண்ட் நகரில் உள்ள அவர்களது வீட்டை பூட்டிவிட்டு 25.07.2021 அன்று சென்னை சென்றுள்ளனர்.  இன்று காலை கல்யாண சுந்தரம் மட்டும் சென்னையிலிருந்து திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கபட்டு, பீரோவை உடைத்து அதிலிருந்த சுமார் 70 பவுன் நகைகள் வரை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவின் மானிட்டரையும் திருடி சென்றுள்ளனர்.  இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவுசெய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அறிய கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார...

CBSE +2 தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியானது

Image
CBSE +2 தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியானது https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்* https://www.digilocker.gov.in/dashboard ஆகியவற்றிலும் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்* தேர்ச்சிக்கான சான்று, மதிப்பெண் சான்றை இணையத்தளத்திலும் டிஜிலாக்கர் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்* 10ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் 30%, +1 மதிப்பெண்ணில் 30%, +2 அலகுத் தேர்வின் அடிப்படையில் 40% மதிப்பெண் கணக்கீடு*

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

Image
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட குழு  சார்பில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்களை விற்கமாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்பு விழிப்புணர்வு  பிரச்சார நிகழ்ச்சி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு நடைபெற்றது   நிகழ்ச்சியில் மத்திய மாவட்டதலைவர் சோலையப்பராஜா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெற்றி ராஜன் முன்னிலை வகித்தார்.  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உறுதி மொழியினை துவக்கி வைத்தார்  தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று வியாபாரிகள் முடிவெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.  எதிர்கால மாணவர்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் உள்ள பொருட்கள் அனைத்தையுமே மக்களும் பயன்படுத்தக்கூடாது. இந்த நல்ல விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட வியாபாரிகளை மனதார பாராட்டுகிறேன் என்றார்.  தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் தடைசெய்யப்பட்ட பொர...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!

Image
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம்  பண்டாரவளையில் தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சண்முகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது தூத்துக்குடி மாவட்ட கழகம் முன்பு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அதிமுகவினர் பதாகைகள்ஏந்தியும் கண்டன கோசங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கழக அமைப்பு செயலாளரும்,முன்னால் அமைச்சருமான சி.த செல்ல பாண்டியன்  தலைமையில் சிதம்பர நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தின் முன்பு தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மாசிலாமணி புரம் பகுதியில் கழக  அமைப்பு செயலாளரும், முன்னால் ஆவின் சேர்மன் சின்னதுரை தலைமையில்  அவரது இல்லத்தில் முன்பு தொண்டர்களுடன் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 61 வார்டுகளிலும...

பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியவர் குண்டர் சட்டத்தில் கைது.!

Image
பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்த ‘சைபர் கிரைம் குற்றவாளி” குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை பிரபல ரவுடிகள், போதைப் பொருள் கடத்தியவர்கள் உட்பட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை. எடுத்துள்ளார் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் உடையார்குளத்தைச் சேரந்தவர் முத்து மகன் பலவேசம் (43). இவர் கடந்த 28.05.2021 அன்று ஒரு பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன்  மேற்பார்வையில்  தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி பலவேசம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கா...

மேகதாது அணையை கட்டுவதை அனுமதிக்கக்கூடாது - மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை.!

Image
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மேகதாது அணை கட்டுவது,வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு கொடுத்து தெரியப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடடப்பட்ட யார்கோல் அணையை இடித்து அகற்ற வேண்டும், 2020-ம் ஆண்டு விடுபட்ட வெள்ள நிவாரணத் தொகை, மற்றும்  2020, 2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட உதவி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விளாத்திகுளம் தா...

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.!

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் மாற்றுத்திறனாளியான இவர் சிவஞான புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி ஆணை வழங்கப்பட்டது பணியில் சேர சென்ற இவரை கடையின் மேற்பார்வையாளர் மாற்றுத்திறனாளி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று இழிவாகக் கூறி பணி செய்ய விடாமல் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து உள்ளதாக கூறுகிறார். இன்று வரை பணி செய்ய முடியாமல் அவதிப்பட்ட அவர் மாவட்ட மேலாளர், மாவட்ட உதவி மேலாளர் ஆகியோருடன் தபால் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவித்தும் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். தீக்குளிக்க முயற்சி செய்த அவரை காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினார்கள். காவல்துறையினர் அவரை கைது செய்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான காவல்துறையினர...

ஸ்ரீவைகுண்டத்தில் 14 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி கைது - கைது செய்த தனிப்படையினை எஸ்.பி பாராட்டினார்.

Image
ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, திருட்டு வழக்கு உட்பட 14 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது - ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர்  அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் சந்திரகுமார் மற்றும் போலீசார்  நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் வேன் ஸ்டான்ட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஸ்ரீவைகுண்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மாரி ராஜா (எ) குணா (31) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்,  அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி எதிரி மாரி...

போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக தி.நகர் பிரபல நகைக்கடை சரவணா ஸ்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு.!

Image
சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக்கடையான சரவணா ஸ்டோர் மீது போலி நகைக் கொடுத்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் ஒரு புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், "தான் 2015-ம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் வாங்கியதாகவும், அதேபோல 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும்" தெரிவித்துள்ளார். மேலும், "இதுகுறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும் போது இது தெரியாமல் நடந்திருக்...

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்.!

Image
உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 439வது ஆண்டு திருவிழா கொரோனா பரவல் காரணமாக  வரலாற்றில் இரண்டாவது முறையாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் சாதி, மத பாகுபாடின்றி பங்கேற்பார்கள்.  இந்நிலையில், இந்த ஆண்டு கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் நடைபெற உள்ள திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பின்னர் கொடி மந்திரிக்கப்பட்டு கொடிமரத்திற்க்கு கொண்டு சென்று ஆயர் ஸ்டீபன் ஆண்டனி கொடியேற்றி வைத்தார்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடு...

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி - ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது.  இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, வட்டாட்சியர் ஜஸ்டின், பிஎம்சி பள்ளி முதல்வர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி பூபாலராயர்புரம் சமூக அமைப்புகள் முன்னெடுத்த கொரோனா தடுப்பூசி முகாம்.!

Image
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன் பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் இதை முன்களப் பணியாளர்களுக்கும் , அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், பின்னர் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கும் என தடுப்பூசி போடப்பட்டு  வருகிறது. முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொதுமக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை. நடிகர் விவேக் மரணம் பொதுமக்களிடையே கூடுதலான மரண பயத்தையும் ,  அச்சத்தையும் உருவாக்கியது. இதன் காரணமாக தடுப்பூசி  போட்டுக் கொள்ள பலரும் விரும்பவில்லை. ஆனால்  கொரோனா 2-ம் அலையால் தற்போது ஏற்பட்ட பாதிப்பாலும் , அதிகமாக ஏற்பட்ட  உயிரிழப்பும் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களை தேடி படையெடுக்கத் தொடங்கினார்கள். இதனால் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.  இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. அரசு ...

விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

Image
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை. மீண்டும் கருத்துக் கேட்பு: பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும். பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும். அமைச்சர் அன்பில் மகேஷ்

5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார்.!

Image
5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார் அளித்துள்ளார்.  5 முறை செல்போனை மாற்றியும் ஹேக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என கூறினார்.  2017-ல் இருந்து தனது செல்போனை யாரோ ஒட்டு கேட்பதாக சந்தேகம் உள்ளது என கூறினார். 

பெகாசஸ் நிறுவன விவகாரம்.: மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை.: சுப்பிரமணியன் சுவாமி.!

Image
பெகாசஸ் நிறுவனம் விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.  பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயலாற்ற கூடியதாகும்.  மேலும் இந்தியாவில் தொலைபேசிகளை ஒட்டு கேட்க பெகாசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி குறித்த ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களான வா உ சி மார்க்கெட் மற்றும் ஸ்டெம் பார்க் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 ரவுடிகள் கைது - சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று  தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில்  உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் பூலைய்யா நாகராஜ் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ்,  சாமுவேல், மகாலிங்கம், செந்தில்,திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய  தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டதில் தூத்துக்குடி பீச் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த  தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சில்வர்ஸ்டார் மகன் ஜீடுஸ்குமார் (29), தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய அ...

ஜூலை 31ம் தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்க கூடாது - ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை.!

Image
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகம் மிக பரபரப்பாக காணப்பட்டது. தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதிகளில் போலீசார் வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.  மேலும், அலுவலக பிரதான வாயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஜூலை 31ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என ஓருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முன் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று 200க்கும் மேற்ப்பட்டோர்  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலிசார் தடுப்பு வேலிகளை ...

டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு.!

Image
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்   மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். 7 பேர் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை திமுக அரசு முன்னெடுக்கும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது - 81 மதுபாட்டில்கள் பறிமுதல்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், குரும்பூர், குளத்தூர், புதூர், எட்டயாபுரம், தட்டார்மடம்,  தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு  ஆகிய 9 காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 81 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை - எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யார், யார் என கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில்  காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை இயக்குனர்  ரவுடிகள், கூலிப்படையினர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.  அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அவர்கள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 6 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் 70 பேர் உட்பட 96 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட...

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி.!

Image
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் சித்திக் அகமது டேனிஷ்னிஷ் காலமானார். டெல்லியில் காவல்துறை நடத்திய வன்முறை, விவசாயிகள் போராட்டம், கொத்துக் கொத்தாக எரிக்கப்பட்ட கொரோனா பாதித்து இறந்தவர்களின் பிணங்கள், ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட துன்பம் என பல நிகழ்வுகளை தனது புகைப்படங்களால் வெளியுலகிற்கு கொண்டு சென்றவர் . புலிட்சர் விருது பெற்ற மிகச் சிறந்த  ஒளிப்பதிவாளர் ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் நடந்த வெடிவிபத்தில் கொல்லப்பட்டார்.

தீப்பெட்டி தொழிற்சாலையில் மீதமாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டம் - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!*

Image
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள துடிசியா அலுவலகத்தில் "தொழில் முனைவோருக்கான தீர்வு மையம்" தொடக்க விழா இன்று இன்று துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு  தீர்வுமைய செயல்பாட்டினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் வளாகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான திட்ட வழிமுறைகள் குறித்தும் தொழில் நிறுவன கண்காட்சி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.  மேலும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் பற்றியும் விளக்கப்பட்டன.  இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்திலேயே முதல்முறையாக தொழில்முனைவோருக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு மையம் தூத்துக்குடி துடிசியாவில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், புதிதாக தொழில் முனைவோர்களை உருவாக...

தூத்துக்குடியில் பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதி - எஸ் பி ஜெயக்குமார் வழங்கினார்.!

Image
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது அகால மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் ஆகியோரது  குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சரின் பொது  நிவாரண நிதி தலா ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் வழங்கினார். கடந்த 12.08.2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  அதே போன்று தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் ராஜேஸ்வரன் 04.12.2020 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.  மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது அகால மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் என்பவரின் மனைவி மற்றும் வாரிசுதாரரான  வெங்கடேஷ்வரி என்பவருக்கும்,  மறைந்த முதல் நிலை காவலர் ராஜே...

தூத்துக்குடியில் 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அரிவாளுடன் கைது.!

Image
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தசாமிபுரம் ஜங்ஷன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி தாமோதரன் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (20) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்,  அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தராததால் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த அரிவாளயும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி எதிரி இசக்கி ராஜா என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகள் என மொத்தம் 6 வழக்குக...

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் - கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி.!

Image
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமே சேர்ந்த நிர்வாகிகள் இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பியை சந்தித்து தங்களின் அடிப்படை வசதி மற்றும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு திமுக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரும் போது மாநில அரசின் உரிமைகளை அவை தட்டிப் பறிக்கிறது புதிய மீன்பிடி மசோதாவில் நிறைய பேருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறது. தற்போது புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம். இது மீனவர்களை பழிவாங்கும் நிலைக்கு கொண்டு செல்லுமே  தவிர அவா்களுடைய பிரச்சனைக்கு தீர்வாகாது மிக கடுமையான தண்டனைகள் எல்லாம் ஒன்றிய அரசு இந்த மசோதாவில் கொண்டு வந்துள்ளது. இதை எதிர்க்கிறோம். மத்திய அரசு மாநிலங்களுக்கான உரிமையை தர வேண்டும் அனைத்தையும் நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஒன்றிய அரசு நினைக்கக்கூடாது என்று கூறின...

தூத்துக்குடியில் காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

Image
தூத்துக்குடி காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் ரமேஷ், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக தூத்துக்குடி வ.உ.சி மார்கெட் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்தனர்.  நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,  பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெயகணேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், வக்கீல்கள் கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், சரவண பெருமாள், நிர்வாகிகள் நவ்சாத், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.   காங்கிரஸ் தூத்துக்குடி வஉசி மார்க்கெ...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - இதுவரை 813 பேரிடம் விசாரணை - வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல்.!

Image
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள்.  இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை அதிகாரி பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். 28வது கட்ட விசாரணையில் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதில் 95 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இதுவரை 1153 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 813 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் ஒரு வாரம் விசாரணை நடைபெறும். 29வது கட்ட விசாரணையில் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்டெர்லைட்  குடியிருப்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்க உள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆனையத்தின் இடைக்கால அறிக்கையினை  முழ...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் - எஸ்.பி ஜெயக்குமார் முன்னிலையில் ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

Image
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், முன்னிலையில்  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கலந்து கொண்டு, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.  இவ்விழாவில் ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், பேசியதாவது:  தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல மரியாதை உள்ளது.  தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, பெங்களுர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்திட ரூ.40 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தினை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இங்கு மீன்களை வைத்து பாதுகாத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகைய...

தோழர் என். சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து.!

Image
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின்  இல்லத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, டி.ஆர் பாலு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்

சின்னத்துரை&கோ ஜவுளிக்கடையில் எல்இடி பதாகையின் ஒளிபரப்பப்படும் காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி - எஸ்.பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சின்னதுரை & கோ இணைந்து தூத்துக்குடியில் உள்ள சின்னதுரை & கோ துணிக்கடை வளாகத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் வகையில் எல்.இ.டி சுவர் விளம்பர பலகையை (LED Wall Digital Board) புதிதாக அமைக்கப்பட்டிருந்தது.  இந்த எல்.இ.டி சுவர் விளம்பர பலகையை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து திருநங்கைகள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் போர்வைகள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார். கொரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பேரிடர் காலத்தில் மக்கள் செய்யவேண்டியவைகள் உள்ளிட்ட  பல்வேறு சம்பவங்கள் குறித்து  பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய விழிப்புணர்வு செய்திகளை குறும்படம், புகைப்படங்கள், வாசகங்கள் மற்றும் படங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இந்த எல்.இ.டி சுவர் விளம்பர பலகையின் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சின்னத்துரை & கோ உரிமையாளர் ஹரிராமகி...

பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் வசதி.!

Image
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 100வது ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி உட்பட 4 ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது.  இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும்  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூறாவது ஆண்டை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12 முதல் தூத்துக்குடி, கோவில்பட்டி, மானாமதுரை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் புதிய ஏடிஎம் மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் சேவை மூலம் வங்கி வசதிகளை 24 மணி நேரமும் மக்கள் பயன் பெரும் பொருட்டு மொத்தம் 1397 ஏடிஎம் / பணம் செலுத்தும் இயந்திரம் மற்றும் E-Lobby போன்ற வசதிகளை செயல்படுத்தப்பட்டுள்ளது.  நூறாண்டுகளாய் தொடர்ந்து பேராதரவு தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

தூத்துக்குடி தெர்மல் நகரில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது.!

Image
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங்,  மாணிக்கராஜ், சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில்,  திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்  நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்ப்-I பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (49) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்,  அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் அவரை கைது செய்தனர். இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர்  ராதிகா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கைது செய்யப்பட்ட முருகன் மீது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும்  தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலா ஒரு கஞ்சா வழக்கு உட்பட மொத்தம் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஏர்போட் அட்வைசரி கூட்டம் - கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.!

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏர்போட் அட்வைசரி கூட்டம் ஏர்போட் அட்வைசரி கமிட்டி தலைவர்/ தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/கூடுதல் ஆட்சியர் சரவணன், ஏர்போட் டைரகட்ர் சுப்பிரமணியம் மற்றும் ஏர்போட் அட்வைசரி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி "இன்றைய கூட்டத்தில் இரவு விமான சேவைக்காக நடவடிக்கை மேற்கொள்தல், ரன்வே நீளம் அதிகரித்தல் தொடர்பான பணிகளை விரைவாக  மேற்கொள்ளுதல்,  மேலும் சரக்கு விமானங்களை வர செய்வது, விமான சேவைகளை அதிகப்படுத்துவது, எதிர்கால தேவையை அடிப்படையாக வைத்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  தூத்துக்குடி விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக மாற்றிடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான ...

தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது - தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை.!

Image
தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 1700 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் - ஒருவர் கைது - கடந்த 6 மாதங்களில்  போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது  இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  எச்சரிக்கை.  விடுத்துள்ளார் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில்  தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் தலைமையில்  உதவி ஆய்வாளர் வேல்ராஜ்,  சிவராஜா தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்  ...

தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை - கனிமொழி எம்.பி.!

Image
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தூத்துக்குடியில் இது வரை 2 இலட்சத்து 90 ஆயிரம் நபருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் உள்பட அனைத்து துறையினரும் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவடையும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இரவு நேர விமான சேவைக்கு மின்விளக்கு அமைக்கப்பட்டு வந்த பணி நிறைவடைந்து விட்டது.  இதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது. விரைவில் இரவு நேரத்தில் விமான சேவையைத் தொடங்கும்  என்றாா். நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகார...

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம் - கனிமொழி எம்.பி பேட்டி.!

Image
தூத்துக்குடி சிதம்பர நகர் வஉசி கல்விக்கழக நடுநிலைப்பள்ளியில் எஸ்.இ.பி.சி. பவர் பிரைவேட் லிமிடெட் சமூக பொறுப்பு நிதி ரூ.17.40 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி "தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம். டெல்லி செல்லும் போது இதை நான் வலியுறுத்துவேன். முதலில் நிலம் வாங்கி கொடுத்த பிறகு தான் அவா்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டே இருக்கிறது எனக் கூறினார். நிகழ்ச்சியில் எஸ்.இ.பி.சி. பவர் பிரைவேட் லிமிடெட் துணைத்தலைவர் ஆர்.குமார், பொது ...