Posts

Showing posts from December, 2019

வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜின் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி சட்டைகள் சலுகை விலையில்  

Image
2020ம் ஆண்டின் வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜ் காடடன் நிறுவனம் பல வர்ண்ணங்களில் சலுகை விலையாக ரூ.1000திற்கு வேட்டி, சர்ட்டுகளை விற்பனைக்காக தயார் செய்துள்ளதாக நிர்வாக இயக்குனர் கே ஆர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.     இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வேட்டிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்த பெருமை ராம்ராஜ் காட்டன் வேட்டி நிறுவனத்தையே சேரும். எமது நிறுவனத்தின் புதிய ஒட்டிக்கோ கட்டிக்கோ அட்ஜஸ்டபிள் வேட்டி பார்டருக்கு  மேட்சாக அதே கலரில் சர்ட்டுகளுடன் பல வண்ணத்தில் அறிமுகப் படுத்துகிறோம். வேட்டி வாரமாக வரும் ஜனவரி 1ந்  தேதி முதல் 7ம் தேதி வரையில் கடைபிடிக்கப் படுகிறது. இந்த 2020ம் ஆண்டு புத்தாண்டில் இதை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனை படைத்த எமது நிறுவனம் கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க்கை மேம்பட செய்ய தொடர்ந்து செயல்பட்டு, மகாத்மாகாந்தி கண்ட கனவை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து புதிய பல ரகங்களை அறிமுகப்படுத்திய  வண்ணம் த...

என்னிடம் பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சியளிக்கிறது; திருப்பூரில் வேலை செய்யும் கார்கில் பெண்

Image
பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை தரும் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் வேலைவாய்ப்பு பெற்ற  கார்கில் பெண் பர்வீன் பாத்திமா, மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தன்னைப்பற்றி கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். திருப்பூரில் வேலை வாய்ப்பு பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்ட கார்கில் பெண்களை பற்றிய சிறப்பு தொகுப்பு : பல்வேறு மாநிலம், நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை அள்ளித்தரும் பனியன்  நகரம் திருப்பூர். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பு தரும் நகரம் இது. இங்கு தொழில் தேடி வருபவர்கள் விரைவில் தொழிலை கற்று , நல்ல வருமானத்தினை சம்பாதித்து தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கின்றனர். இவ்வாறாக திருப்பூரில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதி மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மத்திய  அரசின் ஹிமாயத் திட்டத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சிறப்பாக பணி புரிவதாகவும், தொழில் முனைவோர...

சாணார்பாளையம்  ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

Image
கொடுமுடி வட்டம் கிளாம்பாடி கிராமம் சாணார்பாளையம்  ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கிளாம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா ஸ்ரீ விகாரி வருடம் மார்கழி மாதம் 15' - ம் நாள் செவ்வாய் 31.12.2019 பூச்சாட்டுதலுடன் தொடங்கி  3-1-2020 வெள்ளி  மஞ்சள் நீராட்டு விழாவரை  (4 நாட்கள்) மிக சிறப்பாக நடைபெற உள்ளது.  ஸ்ரீ பகவதி அம்மனுக்கு 108 பால்குடம் எடுத்தல்,  மற்றும் அம்மன் திருவீதி,  உலா வருதல்,  மாவிளக்கு, மற்றும் பெரும் பூஜை,  ஆகிய நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக  நடைபெற உள்ளது.  திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் .

பவானியில் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவுசெய்தார்

Image
பவானியில் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவுசெய்தார்  ஈரோடு மாவட்டம் பவானியில் இரண்டாம் கட்ட ஊராட்சி ஒன்றிய பவானி தேர்தலை முன்னிட்டு மூன்றோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 3 வது வார்டு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவு செய்த போது

சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா குமராட்சி ஒன்றியம் சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.     800 வாக்குக்குகள் உள்ள சிவாயம் கிராமத்தில் காலை 7 மணியளவில் ஓட்டுப்பதிவு  தொடங்கிய நிலையில் வார்டு உறுப்பினர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம விஏஓ பாக்கியலெட்சுமி  தகவல் அளித்ததின் பேரில் காவல் அதிகாரிகள் வரவழைத்து கூட்டம் கலைக்கப்பட்டது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்றது . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று தரிசனம்

Image
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகைதீபத்திருவிழா கடந்த 10ம் தேதி கொண்டாடப் பட்டது.அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணிதீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. இதைக்காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். இந்நிலையில் தீபம் முடிந்தும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் குறைய வில்லை. தினமும் கார், பஸ், வேன்களில் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் தினமும் அலை மோதுகிறது. இந்நிலையில்  விடுமுறை தினமான நேற்றும் அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து 14...

சாராய ஊரல் அழிப்பு

Image
உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சந்தடி சாக்குகளில் கள்ளச்சாராயத்தை வாங்கி பயன்படுத்த பலரும் சாராய வியாபாரிகளுக்கு லிட்டர் கணக்கில் ஆர்டர் கொடுத்துள்ளனர். இப்படி ஆர்டர் பெற்ற சாராய வியாபாரி ஒருவர் போளூர் வனச்சரகம் மூலக்காடு காட்டுப்பகுதி ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார்நிலையில் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போளூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பாரஸ்டர்கள் பாலசுப்பிரமணியம் கோவிந்தன் கார்டுகள் பழனி, விஜயகுமார், சந்திரசேகர், பெருமாள் உள்ளிட்ட துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் மூலக்காடு காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு இடத்தில் சாராயம் காய்ச்சுவதற்கான அடுப்புகள் ஊரல் தயார்நிலையில் இருந்தன. வனத்துறையினர் வருவதைப் பார்த்தவுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். உடனடியாக சாராய அடுப்புகள் மற்றும் 5 பேர...

திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸில் புத்தாண்டு, பொங்கல் சிறப்பு தள்ளுபடி

Image
திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவிலுள்ள கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து கோஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்காக 30 சதவித தள்ளுபடி அரசு வழங்கியுள்ளது. இதற்கென புதிய ரக ஜவுளிகள் விற்பனைக்காக வந்துள்ளன. எங்கள் விற்பனை நிலையத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய ஊர்களில் கைத்தேர்ந்த நெசவாளர்களை கொண்டு தூய பட்டு நூலால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்காக வந்துள்ளன. ரூ.2800 தொடங்கி ரூ. 60,000 வரை தூய வெள்ளி ஜரிகையுடன் கூடிய நவீன ரக பட்டு சேலைகள் கல் பதித்த பட்டு சேலைகள் மென்பட்டு சேலைகள் உள்ளன. மேலும் திண்டுக்கல் கோவை வதமசசேரி, திருச்சி, மணமேடு ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட காட்டன் சேலைகள் ஆர்கானிக் சேலைகள் கோரா காட்டன் சேலைகள் மற்றும் லுங்கிகள் போர்வைகள் திரைச்சீலைகள் துண்டுகள் கைக்குட்டைகள் வேட்டிகள் ரெடிமேட் சட்டைகள் இருப்பு உள்ளன. இவை அனைத்துக்கும் 30 சதவித தள்ளுபடி வழங்கப்படும். பண்டிகை தின...

ஜாமீனில் வந்த மகனை வெட்டிக் கொல்ல முயற்சி  

Image
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன் (55) இவரது மகன் விக்னேஷ் (24) இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுந்தரராமன் இதற்கு மறுத்தாராம். இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி நிலத்திலிருந்த தந்தையிடம் சென்று விக்னேஷ் காதலியை திருமணம் செய்து வைக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தந்தையின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக விக்னேஷை தண்டராம்பட்டு காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையிலடைத்தனர். பின்னர் 5 மாத தண்டனை முடிந்து விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பைக்கில் வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. சுமார் 8 மணியளவில் எதிர்வேடு பகுதியில் தலை கழுத்து கைகளில் பலத்த வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் உயிருக்கு போராடுவதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனே அவரை மீட்...

வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் - அமைச்சர் கருப்பணன்

Image
வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.     ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வாக்கு அளித்த பின்னா் செய்தியாளா்களை சந்தித்தாா்.     தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பதால் 90சதவீதம் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு உள்ளதுமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.     ஸ்டாலின் மக்கள் மத்தியில் தமிழக அரசை பற்றி குறை சொல்வதை விட்டு தன் கட்சி வளர்ப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும் வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என தொிவித்தாா்

வாக்குச்சாவடி மைய்யங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதை கலெக்டர் க.விஜய்கார்த்திகேயன் ஆய்வு

Image
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கணியாம்பூண்டி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மைய்யங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதை கலெக்டர் க.விஜய்கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தேர்தல் பதிவான வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்

ஊரக உள்ளாட்சி தேர்தல் பதிவான வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் - ஆட்சியர் கந்தசாமி தகவல் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம், ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 18 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைத்து அதற்கு பொறுப்பாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர் ஒருவர் நியமித்து, அவருடன் இணைந்து காவல் துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இக்காணிப்பு பணிகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்கள் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும். மேலும், கண்காணிப்பு பணியின்போது கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள திரையினை பார்வையிட வேட்பாளரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபரோ அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கு வருகை புரியும்...

லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தலைவிரிச்சான் இவரது மனைவி சொக்கியம்மாள் (72) இவர் அதே பகுதியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரம் நேற்று நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டிவந்த லோடு ஆட்டோ மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் சொக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தூசி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீடடு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து உயிரிழந்தவரின் மகன் புகழேந்தி அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் துரைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

திருவண்ணாமலை அருகே தந்தை சரமாரி வெட்டிக் கொலை - மகன் கைது

திருவண்ணாமலை அருகே தந்தையை சரமாரி வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த வெறையூர் அருகிலுள்ள அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (65) விவசாயி இவரது மனைவி வேடியம்மாள் (55) இவர்களுக்கு முருகன் (40) லட்சுமணன் (38) சேகர் (36) ஆகிய 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களுக்கு சேகர் மனைவி சத்யா (30) கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து கெங்கம்பட்டு கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இதனால் தனது 3 மகள்களை சேகர் கவித்து வருகிறார். இந்நிலையில் மனைவி பிரிந்துசென்றதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறி தந்தை பெருமாளிடம் அடிக்கடி சேகர் தகராறு செய்வாராம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்து கத்தியை எடுத்து தந்தை பெருமாளை சரமாரி வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் 82.82 சதவித வாக்குப்பதிவு அதிகாலை வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைப்பு திருவண்ணாமலை டிச.29- திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் நடந்த ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலில் 82.82 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை விடிய விடிய வாக்குப்பெட்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து திருவண்ணாமலை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 341 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பனர் 860 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 6207 ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்பட மொத்தம் 7442 பதவியிடங்கள் உள்ளது. இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், பெரணமல்லூர், செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் தெள்ளார் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 4176 உள்ளாட்சி பதவியிடங்கள் இடம்பெற்றுள்ளது. இவற்றில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் போக மீதமுள்ள 2237 பதவிகளு...

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்

உயிரிழந்துவிட்டதாக தனது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பாஞ்சாலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெ.பாஞ்சாலை என்பவர் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் எர்ணாமங்கலம் கிராமத்தில் நி¬யாக வசித்து வருகிறேன். தற்போது வரும் 30ந் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எர்ணாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பூட்டு சாவி சின்னம் ஒதுக்கீடு செய்து ஓட்டுசேகரித்து வருகிறேன். மேலும் நடந்துமுடிந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் எர்ணாமங்கலம் ஊராட்சி வார்டு எண் 6ல் வரிசை எண் 25ல் நான் ஓட்டளித்துள்ளேன். இந்நிலையில் கடந்த 23ந் தேதி மாவட்ட ஆட்...

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றிபெறும் அமைச்சர் பேச்சு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றிபெறும் அமைச்சர் பேச்சு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றிபெறுவார்கள் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஆகாரம் விண்ணமங்கலம் தச்சூர் தேவிகாபுரம் காமக்கூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தி.மலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசும்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்ட பணியை முதல்வர் 3 ஆண்டுகளில் செய்துள்ளார். விண்ணமங்கலம் ராந்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10 கிராமங்களில் விவசாயிகள் பயன்பெற வேண்டுமென்பதற்...

 டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

Image
 டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை உள்ளது .     கொடுமுடி வட்டம் சிவகிரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள டாஸ்மார்க்கில் குடிமகன்கள்  அருகிலுள்ள அங்கன்வாடி பள்ளி, மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,  அருகே தினமும் மது அருந்துகிறார்கள் அங்கன்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  பொன் காளியம்மன் கோயில்,  அதன் சுற்றுப்புறங்களில், கேடுவிளைவிக்கு மாறும்,  பாதிப்புகள்   ஏற்படுமாறு நடந்து கொள்கிறார்கள். ஆதலால் இந்த டாஸ்மாக்கை வேற இடத்திற்கு மாறுதல் செய்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.          

குடியாத்தம் அருகே மினிவேனில் செம்மரக்கட்டை கடத்திய டிரைவர் கைது

Image
குடியாத்தம் அருகே மினிவேனில் செம்மரக்கட்டை கடத்திய டிரைவர் கைது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் குடியாத்தம் டவுன் நகர காவல்நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் குடியாத்தம் பகுதியில் வாகன சோதனையில் தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பேரில் அன்று இரவு 10 மணி அளவில் குடியாத்தம் பகுதியில் நெடுஞ்சாலை வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வந்த மினி  லாரி நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியை பின்தொடர்ந்து துரத்தி சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் குடியாத்தம் பரதராமி ரோடு சாலையில்வழி லட்சுமனபுரம் என்ற கிராம் அருகே மினி லாரியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர் அந்த வேனில் 20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பிடிபட்டது இதுகுறித்து அந்த டிரைவர் குடியாத்தம் பரசுராமபட்டியைசேர்ந்த ரவி வயது 35 என்பது தெரியவந்தது அவர் போலீசாரிடம் பள்ளிகொண்டாவில் இருந்து மினி லாரியை ஓட்டிச் செ...

அரசுமது பானகடை இந்த இடத்தில் வைக்க கூடாது என்று 50க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

Image
குடியாத்தம் சி.பி.ஏ. கடல் மீன்கள் கடை அருகாமையில் அரசுமது பானகடை இந்த இடத்தில் வைக்க கூடாது என்று 50க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகாமையில் கடல் மீன் கடை அருகே உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து நடத்தி வருகிறார்கள் அந்த சின்ன வழிப்பாதையில் கடைஎண்.11038. கொண்ட அரசு மதுபான கடையை இந்த இடத்தில்திறக்க வேண்டாமென்று கடைக்காரர்கள் மீன் கடை சூர்யா. சாமான் கடை கோவிந்தன். கேலஷி அமுதம் கல்வி அறக்கட்டளை ஜெய்குமார்மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்த நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் . மற்றும் க்ரைம் ஹரிதாஸ்அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து  வருகிறார்

தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

Image
தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.தி.மு.க-வில் இணைந்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத்திற்க்கு உட்பட்ட, ஊஞ்சப்பாளையம், மேட்டூர், வெங்கமேட்டூர் ஆகிய பகுதிகளில், தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.இ.அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான என்.டி. தோப்பு வெங்கடாச்சலம் முன்னிலையில், கட்சியில் இணைத்துக் கொண்டனர். உடன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, டி.டி ஜெகதீஸ், A.V பாலகிருஷ்ணன், சீனாபுரம் ஊராட்சி செயலாளர் அருணாச்சலம், V.M.S சேகர், மகேஸ்வரி சேகர், சுப்பிரமணியம், J.C.B ராசு, மற்றும்  கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Image
அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு  உட்பட்ட வாக்கு எண்ணும்  மையமான அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பல கோபாலனன்,  சிம்ரோன் ஜீத்  சிங் கலோன்  மற்றும் அலுவலர் உள்ளனர்.  

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

Image
சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான சாதாரண தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு 8ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற 30 வருகின்ற 30 வருகின்ற 30.12.2019 .12.2019. திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.  சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் மற்றும் கெங்கவல்லி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குச்சாவடி பொருட்களை பிரித்து வைக்கும் பணியினையும், வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் இன்று (28.12.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி தெரிவித்ததாவது. சேலம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சாதாரண தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்றைய தினம் 27.12.2019 வெள்ளி...

மின்கலம் மூலம் இயங்கும்கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தள்ளுவண்டிகளை ஒப்படைத்தார்

Image
ரூ.2.49 லட்சம் மதிப்புடைய 33 மின்கலம் மூலம் இயங்கும் தள்ளுவண்டிகளை கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தள்ளுவண்டிகளை ஒப்படைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 18 கிராம பஞ்சாயத்துக்களுக்கு  தல ரூ.2.49 லட்சம் மதிப்புடைய 33 மின்கலம் மூலம் இயங்கும் தள்ளுவண்டிகளை கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தள்ளுவண்டிகளை ஒப்படைத்தார்கள். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ் , டி.டி.சங்கர்,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர்.

கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

Image
கந்திலியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் கந்திலியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்கள். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள் ,வந்தனா கார்க் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், டி.டி.சங்கர்,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம்அமைச்சர் கே.சி.வீரமணி ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

Image
அமைச்சர் கே.சி.வீரமணி 195 பணியாளர்களுக்கு ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர்  வட்டம் கெஜல்நாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி 195 பணியாளர்களுக்கு ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலெக்டர் ம.ப.சிவன் அருள்  ,வந்தனா  கார்க் , சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக  தலைவர் டி.டி.குமார், டி.டி.சங்கர் ,சாமிக்கண்ணு மற்றும் பலர் உள்ளனர் .

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது  கலெக்டர் சி.கதிரவன்  தகவல். ஈரோடு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபிசெட்டிபாளையம், நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம் மற்றும் தாளவாடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களை சாh;ந்த 657 வாக்குச்சாவடிகளில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் 7 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களான வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சித்தோடு, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி,ஸ்ரீ சங்கர வித்யாசலா ஆண்கள் மேல்நலைப்பள்ளி, கொடுமுடி, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி, பங்களாபுதூர்,அரசு உயர்நிலைப்பள்ளி, குருமந்தூர்,அரசுஉயர்நிலைப்பள்ளி, தாளவாடி ஆகிய பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் கட்டுப்பாட்டு...

சேலம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு

 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு சேலம் மாவட்டத்தில் சேலம் மாவட்டத்தில்  8ஊராட்சி ஒன்றியங்களில்   நடைபெறவுள்ளது.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு சேலம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்றைய தினம் 27.12.2019 வெள்ளிக்கிழமை அன்று முடிவுற்று, அனைத்து வாக்கு பெட்டிகளும் அயதயத ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு,சீலிடப்பட்டு, வெப் கேமிராக்கள்  பொருத்தப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்யது, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் இரண்டாம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டினம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல் மற்றும் வாழப்பாடி ஆகிய 8ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற 30.12.2019 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணிக்குதுவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவி...

இதய நிறைவு தியான இலவச பயிற்சி

Image
இதய நிறைவு தியான இலவச பயிற்சி சிவகிரியில் நடைபெறுகிறது.    Heartfulness  அமைப்பின் மூலம் கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் தியானம் பற்றிய பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ள நபர்கள் இதில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து பயன்பெறலாம்.

பழனி ரயில்வே நிலையத்தில் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த பூட்டானை சேர்ந்த முதியவர் மீட்பு.

Image
பழனி ரயில்வே நிலையத்தில் மதுரையில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பாசஞ்சர் வண்டியில் புத்த துறவி ஒருவர் இறங்கி வழி தெரியாமல் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது பணியில் இருந்த RBI துணை உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் முதியவரை விசாரித்தபோது அவருக்கு மொழி தெரியாமல் கண்கலங்கி நின்று உள்ளார். அப்போது துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணி ரயில்வே பாதுகாப்பு படையை அணுகி இந்த தகவலை கூறவே காவலர் கோபாலகிருஷ்ணன் இணையதளத்தில் புத்த துறவி சென்னை அருகே உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையத்தில் காணாமல் போன செய்தியை கூறவே உடனடியாக பெரம்பூர் ரயில்வே நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் புத்த துறவியின் பெயர் பாசோ என்றும் அவர் பூட்டான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவரது மகன் பெங்களூரில் வேலை செய்து வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக பூட்டான் நாட்டில் இருந்து பெங்களூர் வந்து மகனை அழைத்துக் கொண்டு மும்பை செல்லும் வழியில் பெரம்பூரில் இறங்கியுள்ளார்.திருப்பி ஏறுவதற்குள் ரயில்  புறப்பட்டு விட்டது. இதனால் அதற்கு பின்பு வரும் ரயில்களில் ஏறி கடைசியில் பழனியில் வந்து இறங்கியுள்ளார். புத்த துறவி பசோவை மீட்ட காவல்துறை...

அனந்தமங்கலம் இராஜகோபால சுவாமி திருக்கோயிலில்  புத்தாண்டு  ஏகதின இலட்சார்ச்சனை விழா

Image
அனந்தமங்கலம் இராஜகோபால சுவாமி திருக்கோயிலில்  புத்தாண்டு  ஏகதின இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது . நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அனந்தமங்கலம் அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோயில் பிரார்த்தனை தலமாக உள்ளது. ஸ்ரீய பதியாய் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியிருப்பவரும், ஸ்ரீவிஷ்ணு, ருத்ரன், பிரம்மா, சக்தி, ராமர் , கிருஷ்ணர் , இராஜகோபாலசுவாமி மற்றும் கருடன் ஆகியோரின் ஆசியுடன் ரக்தபிந்து, ரக்த ராட்ஷசன் ஆகிய அரக்கர்களை சம்ஹாரம் செய்து ஆனந்தமாக அனந்தமங்கலம் திருத்தலத்தில் அமர்ந்திருப்பவருமாகிய ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமி மற்றும் கஜாசூரனை வதம் செய்து அருள்மிகு இராஜகோபாலசுவாமி ஆலயத்திற்கு எதிரில் வடக்கு முகமாக தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியிருக்கும் மூலவர்  ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமி அவதாஜீத்த மங்கள திருநாளான ஸ்ரீஹனுமத் ஜெயந்தி விழா சூரிய கிரஹணத்தை முன்னிட்டு மதியம் 12.00 மணியளவில் நடை திறக்கப்பட்டு மதியம் 1.00 மணிக்கு ஹனுமத் ஜெயந்தி வி...

நோய் இல்லாத வாழ்வை பெற நிலக்கடலை மருத்துவப்பயன்கள்

Image
நிலக்கடலையின்  நன்மைகள் : சாப்பிடும்அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்டாய் சாப்பிட்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.   எது  சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?. இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையோ வாங்கி சாப்பிடுகிறோம்.  ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை! அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும்  நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய்  எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது.  அது நம்ம கடலைமிட்டாய் தான்.இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு  அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக்  கொடுக்கிறது. பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும்  பொழுது கடலை கூறிய பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். அதுமட்டுமல்ல  கடலையும் வெல்லமும் சேர்ந்து புரதம் இரும்பு செலினியம் மற்றும் பல  சத்துக்களை கொண்ட ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உருப்பெறுகிறது. பொதுவாக கடலை மிட்டாயில...

பழனியில் தாலுக்கா அளவிலான இறகு பந்து போட்டி

Image
பழனியில் தாலுக்கா அளவிலான இறகு பந்து போட்டியில்  50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடினர். பழனி காந்தி ரோட்டில் உள்ள பிஎஸ்கேஎல் வணிக வளாகத்தில் உள்ள பிஎஸ்கேஎல் ஸ்போர்ட்ஸ் அகடாமி  உள் விளையாட்டு அரங்கில் ஆடவர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பழனி தாலுக்கா பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு விளையாடினர்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  இருபிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் கோப்பை மெடல்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியை பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்துள்ளார்.  சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும்  பலரும் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் முதல் பரிசாக கண்ணன்  மற்றும் நிர்மல் பிஎஸ்கேஎல் ஸ்போர்ட்ஸ் அகடாமி, இரண்டாவது பரிசாக மைதீன் மற்றும் கரீம் எஸ்ஜே ஸ்போர்ட்ஸ் அகடாமி, மூன்றாவது பரிசாக நவீன் மற்றும் அப்பாஸ் பீனீக்ஸ் கிளப், நான்காவது பரிசாக சரவணன்  மற்றும் பூபதி மற்று...

கரும்பு காட்டுக்குள் இருந்து சிறுத்தை குட்டிகள் வெளிவந்ததால் பொதுமக்கள் அச்சம்

Image
கரும்பு காட்டுக்குள் இருந்து சிறுத்தை குட்டிகள் வெளிவந்ததால் பொதுமக்கள் அச்சம்  தாளவாடி மலைப்பகுதியில் தொட்ட முருகரை கிராமத்தில் விவசாயி தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது.  இன்று காலை கரும்பு வெட்டும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கரும்பு காட்டுக்குள் இருந்து  இரண்டு சிறுத்தை குட்டிகள் வெளியே வந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். கரும்பு காட்டில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குட்டிகள் அங்குமிங்கும் நடந்தபடி உலாவுவது அப்பகுதி கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜீரக அல்லி வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டனா். இந்த சிறுத்தை குட்டிகள் பிறந்து 20 நாட்களே ஆகும் எனவும் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை குட்டி களை இங்கு ஈன்று விட்டு விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சிறுத்தை குட்டிகள் இரண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் எனவும் தெரிவித்தனர். 

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக கோலாகல ஐயப்ப ஊர்வலம்

Image
கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக விளக்கு பூஜை மற்றும் ஆபரணப்பெட்டி, ஐயப்ப சிலை ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது      ஊர்வலம் சந்தியா வனத்துறையிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணா நகர் வழியாக ஸ்ரீ கூடலூர் எல்லை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. முடிவில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் முன்னிலை வகித்து அன்னதானத்தை தொடக்கி வைத்தார்    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கோபி மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஜி சி சிவக்குமார் கோபி தெற்கு தொகுதி பொறுப்பாளர் சுதா செல்வராஜ் பகுதி பொறுப்பாளர் வீ ஆர் பழனிச்சாமி, நவீன்குமார் மகளிர் அணி சக்தி, கலைவாணி மற்றும் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழுவினர் குருசாமி கணேஷ், கீவர், சண்முகம், ராம்குமார், ஆனந்த், கொண்டப்பன், விஸ்வநாதன், சரவணன், சங்கர், பண்ணாரி, கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

பவானியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் கே சி கருப்பண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு 

Image
பவானியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் கே சி கருப்பண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார். ஈரோடு மாவட்டம் பவானியில் வருகின்ற முப்பதாம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரும் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளருமான கே சி கருப்பண்ணன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது பவானி ஒன்றிய கழக செயலாளர் எஸ் எம் தங்கவேல் பவானி நகர செயலாளர் கிருஷ்ணராஜ் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தட்சிணாமூர்த்தி மற்றும் எம்ஆர் துறை, சித்தையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்ந்த பலர் கலந்து கொண்டனர்    

திருப்பூர் சுப்பையாபள்ளியில் சூரியகிரகணம் காண குவிந்தமாணவர்கள்: மேகக்கூட்டத்தால் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் 

Image
சூரிய கிரகணத்தின் மையப் புள்ளியான திருப்பூர் மாவட்டத்தில் மேக கூட்டங்கள் ஆல் வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் வானியல் நிபுணர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஏமாற்றம்.   வானில் நிகழும் அதிசய நிகழ்வான சூரிய கிரகணம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி மையப் புள்ளியாகக் கொண்டு நிகழ்ந்துள்ளது. எனவே வளைய சூரிய கிரகணத்தை காண திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டின் முக்கிய வானியல் நிபுணர்கள் சிறப்பு தொலைநோக்கி மற்றும் வானியல் கருவிகளுடன் திருப்பூரில் முகாமிட்டு இருந்தனர். திருப்பூர் சுப்பையா மெட்ரிக் பள்ளியில் சூரிய கிரகணம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல்  சொசைட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் காத்திருந்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வளைய சூரிய கிரகணத்தினை காண முடியாத நிலை ஏற்பட்டது இதனால் வானியல் நிபுணர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏமாற்றமடைந்தனர் எனினும் திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் சில நிமிடங்கள் மேக...

திருப்பூர் சுப்பையா பள்ளியில் சூரியகிரகணம் பார்வையிட்ட மாணவர்கள்

நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா

Image
நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா நடைபெற்றது.     நத்தம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவள்ளி சமேத கைலாசநாதர் கோவிலில் மார்கழி  மாத பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள நந்தி சிலைக்கு பால்,பன்னீர், சந்தனம், இளநீர், பழம்,விபூதி, பூக்கள் செல்வரளி, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, ரோஜா உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகம் அலங்காரம்  தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் அருள்மிகு செண்பகவள்ளி உடனுறை கைலாசநாதர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்   மேலும் பெண்கள் விளக்கு ஏற்றி  வழிபாடு செய்தனர்.        

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Image
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்" - தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், அழைப்பு     நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருமாறு முன்னாள் ராணுவ படை வீரர்கள் நல அலுவலகம் மூலமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கேட்டுக்கொண்டுள்ளார். வருகிற 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.   இப்பணியில் முன்னாள் படைவீரர்கள் இரு கட்டங்களாக பணி அமர்த்தப்படுவார்கள். முதற்கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருபவர்கள் 26.12.2019 மற்றும் 27.12.2019 ஆகிய இரு நாட்களும், இரண்டாம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருபவர்கள் 2...

தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்     வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த 2020 பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னியிலையில் மாவட்ட ஆட்சி தலைவரும் மாவட்ட தேர்தல் அலவலருமான சந்தீப் நந்துரி இன்று வெளியிட்டார்.    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-  "கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பெயர் சேர்த்தல் திருத்தம், நீக்கம் மேற்கொள்ளப்பட்டதில் பத்தாயிரத்து 99 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.   மாவட்டத்தில் பத்தாயிரத்து 505 பேர் மாற்று திறனாளிகளாக வரைவு வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யபட்டுள்ளனர். திருநங்கைகள் 112 பேர் இடம் பெற்றுள்ளனர்.  மாவட்டத்தில் ஒட்டப்பிடரம் தொகுதியில் ஒரு வாக்கு சாவடி, தூத்துக்குடி தொகுதியில் 2 வாக்கு சாவடியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது . வாக்காளர் பட்டி...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி சிறுத்தை பிடிக்க புதிய கூண்டு

Image
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி சிறுத்தை பிடிக்க புதிய கூண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி மற்றும் சிறுத்தை உட்படப் வன விலங்குகளை பிடிக்க புதிய வடிவிலான கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொண்டு தொடர்ந்து வருகிறது. அட்டகாசம் செய்யும் சிறுத்தை மற்றும் புலி உள்ளிட்ட வன விலங்குகள் பிடிக்க கூண்டு வைத்தாலும் தூண்டில் பிடிக்காமல் போகும் காட்டுகின்றன இந்த நிலையில் புதிய வடிவில் கொண்டு வடிவமைக்கப்பட்டு திட்டமிட்ட வனத்துறையினர் தற்போது 8 அடி நீளம் மற்றும் நாலடி அகலம் தென்னங்கீற்று களால் மேல்கூரை மேய்ந்து கூண்டு வடிவமைத்தனர் மேலும் இந்தக் கூண்டில் மர நிறத்தில் வறண்டு பூசப்பட்ட உள்ளதால் ஆடுகளை அடைத்து வைக்கும் கொட்டகை போன்ற காட்சி அளிக்கின்றது இந்த கூண்டினை பூலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் முள்ள விளைநிலங்களில் வைத்து இறுதியில் கூண்டுக்குள் விலங்குகள் சிக்க வாய்ப்புள்ளதாக சத்தியமங...

மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா தண்டாரம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு மாலை அணிந்து வேன் மூலம் புறப்பட்டு சென்றனர். விருத்தாசலம் தாலுக்கா கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது  சாலையின் குறுக்கே திடீரென செம்மறி ஆடுகள் கூட்டமாக வந்ததால் ஆடுகள் மீது வேன் மோதி நிலைதடுமாறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில்  விழுந்து விபத்துக்குள்ளானது.   அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை  மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில்   11 க்கும் உட்பட்டோர்  காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றாலத்தில் சைவ வேளாளர் சங்க இளைஞர் எழுச்சி மாநாடு

Image
குற்றாலத்தில் தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளர் சங்க இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளர் சங்க இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். சுப்பிரமணியன் சண்முகசுந்தரம் கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.மாநாட்டில் மாநாட்டுக்குழு தலைவர் புதிய கண்ணன் செயலாளர் ராம்குமார் பொருளாளர் குத்தாலிங்கம் மாவட்ட தலைவர் லெட்சுமணன் மாவட்ட செயலாளர் பாலன் பொருளாளர் குப்புசாமி தென்காசி காளியப்பன் சொசைட்டி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கோட்டையில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லீம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையம் அருகில் வாஞ்சிநாதன் சிலை முன்பு செங்கோட்டை வட்டார ஐக்கிய முஸ்லீம் ஜமாத் மற்றும் வட்டார ஜமாத்துல் உலாமா சார்பில் புதிய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரியும் புதிய குடியுரிமை சட்டம் வெற்றி பெற வாக்களித்த தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் மீரான் தலைமை தாங்கினார். செங்கோட்டை அனைத்து ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  செயலாளர் செய்யது குலாம் வரவேற்று பேசினார். இமாம் கமருதீன் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து சிறப்புரையாற்றினார். அரபிக்பஷீர்இ மீரான்இ காதர்ஒலிஇ நாசர் ஒலிஇ சீராஜ் ஆகியோர்பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்ட்டது. முடிவில் சமூக ஆர்வலர் சலீம் நன்றி கூறினார்....

தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

Image
தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் தொட்ட கஞ்சனூர் பீம்நகா் சூசையாபுரம் இந்த பகுதியில் விவசாயிகள் அதிகமாக அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கால்நடை வளர்க்கப்படுகிறார்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று இந்த பகுதியில் நுழைந்தது பின்னர் அங்குள்ள ஒரு வீட்டுடிற்கு முன்பு கட்டி வைத்திருந்த நான்கு ஆடுகள் மற்றும் 15 நாய்கள் கடித்து கொன்றது. மேலும் கடந்த வாரம் பீம் ராஜன் நகர் பகுதிகளில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராவில் சிறுத்தை உருவம் பதிவானது தெரியவந்தது. தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க கல்குவாரி அருகே நேற்று வனத்துறையினர் கூண்டு வைத்து ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர்

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சவர தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

Image
பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் வேல்முருகன் (45). சவரத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.     இவர் பவானியில் ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான, ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அச்சிறுமி கூச்சலிட்டதால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்து வேல்முருகனிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வேல்முருகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Image
தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.     நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் இயங்கிவரும் ஏவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கமான தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.      இதில் பள்ளி மாணவிகள் நடனமாடியும் பாட்டுக்கள் பாடியும் கொண்டாடினர். மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் பல வைக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளும் வழங்கப்பட்டது.     இந்த பரிசுகளை பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வேலாயம்மாள் , ஜெயக்குமார் செந்தில்குமார் கவின் மற்றும் முதல்வர் ராஜசேகர் உள்ளிட்ட பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.