Posts

Showing posts from October, 2022

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

Image
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் அன்மையில் தேனி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நவீன் பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடம் இன்று தமிழ் அஞ்சல் நாளிதழின் தொழில் மலரை, தூத்துக்குடி மாவட்ட தமிழ் அஞ்சல் நாளிதழின் புகைப்பட சித்திக் வழங்கினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணியிடங்கள்: நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

Image
  தூத்துக்குடி அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதார சங்க தலைவர்/ மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM Schemeல் (TAEI, Geriatric, Pain and Palliative Care and CEmONC) கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு ஆண்/ பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணியிடங்களின் எண்ணிக்கை / தொகுப்பூதியம் / கல்வித்தகுதி:  Radiographer - 2, ரூ.13,300/- P.M, Passed in B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course from any recognized University,  Physiotherapist -1, ரூ.13,000/- P.M, Passed in Bachelor of Physiotherapy / degree certificate from any recognized University,  Multipurpose Health Worker -6, ரூ.8500/- P.M, Passed in 8th Std, Security Guard - 4, ரூ.8500/- P.M, Passed in 8th Std ...

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குழுமம் செயல்பாடுகள் குறித்தும் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தலைமையில், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ,  முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் வருகைப்பதிவேடு, மருந்தகத்தில் வைக்கப்பட்டுள்ள மருந்துகள் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள தயாரித்த நாள், காலாவதி நாள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு இருப்பு வைத்திருக்கும் மருந்துகளையும் பார்வையிட்டார். மேலும் சித்தா பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, ஸ்கேன் பரிசோதனை மையம், கழிப்பிடம், அவசர சிகிச்சை பிரிவு, கருப்பை ...

SNMV College of Arts and Science's English Department commemorated Halloween celebrating

Image
  Coimbatore - 31st October : SNMV College of Arts and Science's English Department commemorated Halloween by celebrating at Today Halloween has been around for more than a thousand years and is celebrated on 31st October. Dr. B. Subramani, Principal, SNMV CAS, presided over the program. Dr. V. Sabariraja, Head, Department of English, organised this program along with the staff members. Students from the English department disguised themselves as fictional characters and brought them into reality. Staff and students from various departments visited the Halloween house and appreciated the efforts.

கோவை எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் ஹாலோவின் கொண்டாட்டம்.!!

Image
  கோவை எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ஹாலோவின் திருவிழா கொண்டாடி நினைவு கூர்ந்தது. ஹாலோவீன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது. இதை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது.  நிகழ்ச்சிக்கு எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.சுப்பிரமணி தலைமை வகித்தார். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் வி.சபரிராஜாவும் அத்துறைப் பேராசிரியர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.   ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் கற்பனைக் கதாபாத்திரங்களாக மாறுவேடமிட்டு அவற்றை யதார்த்தமாக கொண்டு வந்தனர்.  பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஹாலோவீன் இல்லத்திற்குச் சென்று ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளையும் கண்டுப் பாராட்டினர்.

குஜராத் தொங்குபாலம் விபத்து -பலி எண்ணிக்கை 142ஆக உயர்வு.! - போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள்

Image
  சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வட மாநிலங்களில் சாத் பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பூர்வீக விழாவாக நடந்த இந்த சாத் பூஜை சமீப காலமாக வடமாநிலங்கள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 4 நாட்கள் கடுமையான விரதங்களுடன் புனித நீராடல் உள்ளடக்கியதாக இந்த விழா அமைந்துள்ளது. நீர் நிலைகளை கங்கையாக கருதி மக்கள் அன்றைய தினம் புனித நீராடுவார்கள். வட மாநிலங்களில் நேற்று சாத் பூஜை விழா தொடங்கியது. ஆனால் குஜராத்தில் நடந்த விழா மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றிலும் இந்த விழா நடத்தப்பட்டது. இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது. சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க குஜராத் மாநில அரச...

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை - தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு. நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்...

மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் நாளை (01-11-2022 ) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு.!

Image
  இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.. "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டப் பேரவையில் ஆண்டு தோறும் நவம்பர்1 உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்றும் அன்றை தினம் தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து 24.05.2022 நாளிட்ட அரசாணை நிலை எண் 65 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (பரா.2) துறை மின்படி 01.11.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக் கிராம சபைக் கூட்டத்தின் போது அனைத்துத்துறை தொடர்பான கண்காட்சிகள், கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பரு இயக்கம் வரை தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்து அங்கீகரித்தல், பொது மக்கள் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இக்கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,...

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி!

Image
ஆர்.எஸ்,எஸ். பேரணிக்கு நவம்பர் 6ம் தேதி அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்தந்த மாவட்டங்களிலுள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அனுமதி வழங்குமாறு மாவட்ட எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு சுற்றறிக்கை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் - காங்கிரஸார் மரியாதை.!

Image
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெருமாள்சாமி தலைமையில் அன்னையின்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார். வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர்  T.டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு நகர தலைவர் அருள்வளன், மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், Sc பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், டி.சி.டி.யூ மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், ஊடக பிரிவு சுந்தராஜ்,முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, Sc பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் S. பிரபு  வெள்ளப்பட்டி ஜேசுதாசன்,INTUC  முனியசாமி,சேவியர் மிசியர், தையல் மனோகரன், சிவாஜி விஜயா,மீனவரணி மிக்கேல் குரூஸ், சிறுபான்மை பிரிவு அபுதாஹிர், யேசுதாஸ், சேகர், பாலசுப்ரமணியன்...

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் -குருஸ் பர்னாந்து மணிமண்டப இட ஒதுக்கீட்டிற்கான தீர்மானம் நிறைவேற்றம்.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் தமிழக அரசு குருஸ் பர்னாந்துக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ரோச் பூங்கா பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதால் மாநகர மையப் பகுதியில் அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அறிவுரையின்படி நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்காவில் 20 சென்ட் இடம் கிழக்கு பகுதியில் ஒதுக்கப்பட்டு அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.  இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் குருஸ் பர்னாந்து மணிமண்டபம் இடஒதுக்கீட்டிற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல் உள்ளாட்சி அமைப்ப...

ட்விட்டர் புளு டிக் - அதிரடி முடிவெடுக்கும் எலான் மஸ்க்.!

Image
44 மில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அதிகாரபூர்வ கணக்கு என்பதற்கான புளுடிக் வசதிக்கு மாதம்தோறும் ரூபாய் 1600 வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் புளுடிக் வசதி நிறுத்தப்படும் என்றும் கூறப்படுது.

மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சியில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி,  தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் சாருஶ்ரீ முன்னிலையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் தனசிங், காந்திமதி, சேகர்,  மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் - தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை.!

Image
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் அருள், பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ்,மாமன்ற உறுப்பினர் எடிண்டா,மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா,செந்தூர்பாண்டி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நீர்மல்கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி பீரித்தி,மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், ஜெபராஜ்,ஜோபாய்பச்சேக்,மைக்கேல்,சின்னகாளை,மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி,முத்துராஜ்,அழகுவேல்,சண்முகசுந்தரம்,மகாலிங்கம்,ஜெயராஜ்,தனுஷ்,ஜாண்சன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் தேவர் ஜெயந்திவிழா -அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

Image
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனையொட்டி வஉசி பேரவை சார்பில் கீதா செல்வமாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர் வேலம்மாள், மகளிர் அணி செயலாளர் கோமதி, நிர்வாகிகள் சுப்பிரமணிசிவா, சண்முகப்பிரியா, மீனா, சாந்தி, இசக்கிமுத்து பிள்ளை, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐஜேகே கட்சி தென்மண்டல பொறுப்பாளர் அருணாதேவி மாலை அணிவித்தார்.  மாப்பிள்ளையூரணயில் முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாளையொட்டி டேவிஸ்புரத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவுகடன் சங்க தலைவருமான கிழக்கு பகுதி திமுக ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், திமுக கிளைச்செயலாளர்கள் காமர...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி - தூத்துக்குடியில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள், கனிமொழி எம்.பி, உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

Image
  தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு அணைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மாநில துணைப பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்;சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம்ராஜேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செய்யது காசிம், பகுதி ...

இந்திய வியாபார தொழில் சங்கம் சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறந்த துறைமுக உபயோகிப்பார்களுக்கு விருது.!

Image
இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொழிற்சங்கம் - தூத்துக்குடி சார்பில்  சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறந்த துறைமுக உபயோகிப்பார்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி DSF பிளாசாவில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்! இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ICCI தலைவர் ஜான்சன், செயலாளர் கோடீடீஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்!

தாழ்த்தப்பட்ட பெண்ணை தாக்கிய வழக்கில் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தைச் சேர்ந்த பெண்ணை தாக்கிய வழக்கில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி, காவல் ஆய்வாளர் ஆகிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று(28.10.2022) தீர்ப்பு வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம், காசிலிங்கபுரத்தை சார்ந்தவர் பாப்பா (64). இவரை கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய புளியம்பட்டி காவல் ஆய்வாளராக இருந்த விமல்காந்த், உதவி ஆய்வாளராக இருந்த காந்திமதி ஆகிய இருவரும் அடித்து தாக்கி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினராம். இது சம்பந்தமாக தூத்துக்குடி பி.சி.ஆர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் என்பவரால் தனிநபர் வழக்கு தொடரப்பட்டது. இதில், விமல்காந்த் தற்போது ஏடிஎஸ்பியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  காந்திமதி தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக உள்ளார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் மூலம் தனிநபர் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம...

கேரளத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் - நாமக்கல் கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Image
  கேரளத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினியால் வாகனங்களில் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள் திருப்பணி தொடக்க விழா

Image
திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் திருப்பணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த மூன்று கோவில்களும் இந்த பகுதி முழுக்க பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும். இந்த நிலையில் இந்த மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுடன் கற்கோவில்களாக கட்டுவதற்கு செல்வவினாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.  அந்த அடிப்படையில் செல்வ விநாயகர் மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடக்கி வைத்தார். திருப்பணிக்காக பாலைக்கால் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவர் இ.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். திருப்பணி குழுவினர் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றார்கள்.

கோவையில் அக்டோபர் 31ல் பாஜக நடத்த உள்ள பந்த் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி வெங்கடேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.! -அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.!

Image
  கோவையை சேர்ந்த வெங்கடேஷின் பொதுநல மனுவை அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்கிறது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு

திருப்பூரில் பட்டாசு வெடித்த 159 பேர் மீது வழக்கு

Image
 திருப்பூர்  மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 159 பேர் மீது மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தீபாவளி அன்று அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாட்டை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே  பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும்,  நீதிமன்றம் தெரிவித்திருந்தது.  இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்த உச்சநீதிமன்றம் , அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே பின்னலாடை தொழில்நகரமான திருப்பூர் மாவட்டத்தில்  தீபாவளி பண்டிகையை நேற்று பொதுமக்கள் உற்சாகத்தோடு கொண்டாடினர். இதனிடையே  தடையை மீறியும், நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் திருப்பூர் மாவட்டத்தில் பட்டாசுகளை...

திருப்பூரில் பகுதி அளவு சூரிய கிரகணம்!

Image
உலகின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்கிழமை  ப‌குதி அளவு சூரிய கிர‌க‌ண‌ம் நிகழந்துள்ள‌து. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு ப‌குதி சூரிய கிர‌க‌ண‌ம் நிகழ்ந்திருப்பது ஒரு அரிய நிகழ்வாகும். மேலும், இது இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகும். சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழும். சூரிய கிரகணத்தின் போது நிலவு (சந்திரன்) சூரியனை மறைக்கிறது. இது 2 வகைகளாகப் பிரிக்கலாம். முழு நிழல் சூரிய கிரகணம், பகுதி அளவு சூரிய கிரகணம் ஆகும். முழு நிழல் சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணத்தின் போது சந்திரன், சூரியனை 40 முதல் 80 சதவீதம் வரை மறைக்கிறது. அந்தவகையில் செவ்வாய்கிழமை ப‌குதி அளவு சூரிய கிர‌க‌ண‌ம் இந்தியாவில் நிகழ்ந்தது. இந்தியாவில் 40% வரை மட்டுமே காண முடியும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் 8% வரை மட்டுமே கிரகணம் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியிருந் தனர்.  திருப்பூரில் மாலை 5.16க்கு தொடங்கி 5.48 மணி வரை 30 நிமிடங்கள் பகுதி அளவு சூரிய கிரகணத்தை காண முடிந்தது. பொதுமக்கள் பலர் தங்க...

அலகுமலையில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

Image
திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் உள்ளா அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஸ்ரீகந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று (25.10.2022, செவ்வாய்க்கிழமை) கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் & அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது.  தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கங்கணம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் & குழந்தைகள் சஷ்டி விரதத்தை துவக்கினர். பின்னர் அலகுமலை, மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அடிவார மண்டபத்தில் ஸ்ரீசரன் அகாடமி ஆஃப் பைன் ஆர்ட்ஸ் சார்ப்பில் கந்தன் கருணை எனும் தலைப்பில் மாணவியர்களின் ...

தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு பதிலாக மூடி மறைக்கிறார்கள் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

Image
 திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.கோட்டையில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் செயல்களை கண்காணிக்க தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன் தான் மக்களை தீபாவளி சமயத்தில் காப்பாற்றி உள்ளார்.இந்த சம்பவத்தினை பார்வையிட டிஜிபி உடனே வருகிறார். அது பாராட்டுக்குரியது.  மிகச்சிறந்த அதிகாரிகளை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நியமித்தார்கள். ஸ்காட்லாந்து யார்டு காவல் துறைக்கு இணையானது தமிழ்நாடு காவல் துறை என்பதில் ஐயமில்லை. ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இங்கு வந்தாலும் இவர்களுக்கு அடிபணிந்து தான் இருக்கும் நிலை உள்ளது.தீவிரவாத செயல்களை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீரில் பெரும் பகுதி இன்றைய அதிரடி நடவடிக்கைகளால் அமைதி பூங்காவாக மாறி உள்ளது. மிக தீவிர நடவடிக்கைகள் எடுத்தால் தான் தீவிரவாதத்தை தடுக்க முடியும்.  தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு பதிலாக மூடி மறைக்கும் வேலையை செய்து வருகின்றனர். இது அவர்களின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் வித்திடு...

அந்தர் ஜா... ருக்கு ஜா... இந்தி பேசி போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய போலீஸ்காரர்

Image
 தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்கு திருப்பூர் கடைவீதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்து வருகிறார்கள். போலிசார் இந்தியில் அந்தர் ஜா... ருககு ஜா என்று இந்தி பேசி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது வட மாநில தொழிலாளர்கள் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது. திருப்பூர் மாநகரில் பனியன் தொழிலை நம்பி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்களும், வெளி மாநிலங்கள் சார்ந்த வடமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் தங்கி பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நகரங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாநகரம் திகழ்கிறது. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வசிப்பதாகவும், இதில இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பீகார் , ஒடிசா, மேற்கு வங்காளம் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வட மாநிலங்களில் இருந்து திருப்பூர் வந்து தங்கி பணியாற்றுபவர்கள் சொந்த ஊருக்கு கூட செல்லாமல் குடும்பத்துடன் இங்கு தங்கு பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. தி...

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்- தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு

Image
 உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்- தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கார் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். சென்னையிலிருந்து தடையவியல் குழுவினர் கோவைக்கு வந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.  கோவை மற்றும் மாநில கமாண்டோ குழுவைச் சேர்ந்த பாம்ப் ஸ்குவாட் குழுக்களும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் மோப்ப நாய் மூலமும் ஆய்வு செய்யப்படுகிறது என தெரிவித்தார். காரில் 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளதாக தெரிவித்த அவர் அதில் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவித்தார். எங்கிருந்து இவை வாங்கப்பட்டன என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  விபத்துக்குள்ளான வாகனம் மாருதி கார் என தெரிய வந்துள்ளது. அதன் பழைய உரிமையாளர்கள் மற்றும் புதிய உ...

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே மொப்பட் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி.

Image
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பொங்கலூர் அருகே உள்ள    கோயில்பாளையம்புதூரை சேர்ந்த விவசாயி சின்னராமசாமி(65). இவருக்கு அவினாசிபாளையத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் தோட்ட வேலைக்காக கோவில்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான மனோகரன்(60) என்பவருடன் மொப்பட்டில் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.  பின்னர் வேலையை முடித்துவிட்டு இருவரும் மொப்பட்டில் திரும்பிக்கொண்டிருந்தனர். மொப்பட் திருப்பூர் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது திருப்பூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசுக்கார் மொபெட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொப்பட்டில் வந்த  இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலேன்ஸ் மூலம் அனுபி வைத்தனர். பின்னர் மருத்துவமனையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சின்னராமசாமி...

17 பவுன் நகை, பணத்துடன் புதுமணப்பெண் மாயம்

Image
மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (50).இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி மேகலா.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இதில் மூத்த மகன் நடராஜன் (30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா (28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன் அபிநயா திடீரென மாயமாகி உள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் நடராஜன் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாட்களில் புது பெண் நகைகளுடன் மாயமானது தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் சென்னை வந்தது

Image
 உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் புனித யாத்திரைக்குச் சென்றபோது நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன் மற்றும் சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டது. இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மூவர் உடலும் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மூவர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினருக்கு ஆறுதல் கூறி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இத எடுத்து சென்னை விமான ...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்-சென்னை போக்குவரத்து காவல்துறை

Image
  வாகன ஓட்டி மற்றும் உடன் பயணிப்போர் இருவரிடமும் தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும், இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

தீபாவளி போனஸ்ச கரெக்டா கொடுங்கப்பா... திருப்பூர் மாநகராட்சிக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

Image
 திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் மாத ஊதியம் பெற்று வருகின்றனர். தமிழக அரசின் தொழிலாளர் நலச்சட்ட விதிகளின்படி, தூய்மைப் பணி மற்றும் ஓட்டுநர் பணிகளை ஒப்பந்தம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்த பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் கு...

ஈச்சர் லாரி மோதி வெங்காய வியாபாரி பலி

Image
 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரி ஈச்சர் வாகனம் மோதி பலி. ஈச்சர் லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம். காவல்துறையினர் விசாரணை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த செட்டிபாளையம் பிரிவு பகுதியில் வெங்காயம் விற்பனை செய்யும் வியாபாரி பொன்னாபுரம் அடுத்த அங்கித் தொழுவைச் சேர்ந்த வெங்காய வியாபாரி விஜயகுமார் ( 43) ஈஸ்வரி இவர்களுக்கு செல்வகிரி மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார் இந்நிலையில் இரவு 9 மணி அளவில் விவசாயத்திற்கு பயன்படும் உர மூட்டைகளை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அவரது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது,  இவரை கடந்து அதிவிரைவாக சென்ற (லாரி) கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.  பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கனரக லாரியை மடக்கிப் பிடித்தனர். கனரக வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த விஜயகுமாரை மீட்ட பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மருத்துவ மனை செல்லும் வழியில் பரி...

கராத்தே பிரீமியர் லீக் போட்டியில் தூத்துக்குடி ஸ்பிக் நகர் மாணவர்கள் சாதனை.!

Image
  மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் அரங்கத்தில்  நடைபெற்ற 2வது பிரீமியர் லீக் கராத்தே   போட்டியில் தமிழகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி.   சுரேஷ்குமார் செயல்பட்டார் .இதில் ஸ்பிக்நகரை சேர்ந்த மாணவர்கள்  மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில்  கட்டா மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று 8 தங்கப்பதக்கம் 8 வெள்ளிப் பதக்கம் 6 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர் .வெற்றி பெற்ற  மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட  சோபுக்காய் கோஜுரியு கராத்தே சங்கத்தின் கராத்தே தலைவர்  சென்சாய் செந்தில் மாவட்டத் துணைத் தலைவர் பாலாஜி, மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

தமிழக முதல்வரின் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

Image
  தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள எஸ்.ஏ.வி, காரப்பேட்டை பள்ளியில் சைக்கிள் வழங்கியப்பின் கால்டுவெல் பள்ளியில் 159 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.  பின்னர் அவர் பேசுகையில்: இந்த பள்ளி 231 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது வெள்ளைக்காரன் ஆட்சிச் செய்த காலத்திற்கு முன்பே கால்டுவெல் என்பவரால் நடத்தப்பட்டு, வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார். கலைஞர் ஆட்சியில் அது விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கியுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 21 பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் தனியார் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. மாநகரில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வக...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலர் உத்தரவு.!

Image
  இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், “ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்துறை மற்றும் வருவாய் துறைகளின் மூலம் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆணையத்தின் ஆலோசனைகள் ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். அதன்படி, அப்போதைய காவல் துறை ஐ.ஜி., சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி சி. கபில் குமார் சராட்கர், எஸ்.பி. பி.மகேந்திரன், டிஎஸ்பி லிங்கதிருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன், உதவி ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரெனிஸ், காவலர்கள் ராஜா, சங்கர், சுடலைக்கண்ணு, தாண்டவமூர்த்தி, சதீஷ்குமார், ஏ.ராஜா, எம்.கண்ணன், மதிவாணன் ஆகிய 17 பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பானவர்கள் என அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை அளித்ததை தொடர்ந்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சிக்கண்ணா அரசு கல்லூரியில் ஆயுர்வேத தின நிகழ்ச்சி... மூலிகைகள் கண்காட்சியும் நடைபெற்றது

Image
  உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருப்பூர் ஏங்கர் இணைந்து நடத்திய "7-வது ஆயுர்வேத தின விழா" திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்.மோகன்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர்தனம், லயன்ஸ் கிளப் ஆஃப் திருப்பூர் ஏங்கர் தலைவர் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஆயுர்வேத விழிப்புணர்வு உரையை கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் பாபு விளக்கிக்கூறினார்.  இதில் பிரண்டை, முருங்கை, முல் சீதா, பூ மருது, துளசி, கொடுகாபுளி போன்ற மர கன்றுகள் மாணவர்களுக்கு வழங்க பட்டது. ஆயுர்வேத அறுவை சிகிச்சையில் அக்னிகர்ம நெருப்பினால் சுடு சிகிச்சை , பௌத்திரம் மூல நோய்களில் க்ஷார கர்மா சிகிச்சை விளக்கப்பட்டது. ஆயுர்வேத பஞ்சகர்மாவில் பாத்தி (அப்யங்கம் டேபிள்), பாஷ்ப ஸ்வேதனம் (ஸ்டீம் பாக்ஸ் ), ஷிரோ தாரா , கடி வஸ்தி மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தது. க...