Posts

Showing posts from October, 2021

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி - கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!*

Image
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு  சிலைக்கு அணைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, சண்முகய்யா எம்எல்.ஏ, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன்,  மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், ரமேஷ், பரமசிவம், மாவட்ட அணி துணைச் செயலாளர்கள் நலம் ராஜேந்திரன், பெருமாள், ராமர், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், மாநகர தொண்டர் அணி அமைப்பளார் முருகஇசக்கி,  மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, சங்கரநாராயணன், கிறிஸ்டோபர் விஜயராஜ், அனிதா மாரிமுத்து, பகுதி துணைச்செயலாளர் பாலு, மாநகர அணி துணைச்செயலாளர்கள் பால்ராஜ்,  மாவட்ட பிரதிநிதிக...

பாஜக ஆளும் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் - எஸ்டிபிஐ கண்டன ஆர்பாட்டம்!

Image
பாஜக ஆளும் திரிபுராவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் எஸ்டிபிஐ  கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட வன்முறை தாக்குதலை கண்டித்தும் கலவரத்தை தடுக்காத திரிபுரா பாஜக அரசை கண்டித்தும் எஸ்டிபிஐ   கட்சி சார்பில் தூத்துக்குடி  பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தூத்துக்குடி தொகுதி தலைவர் காதர் ஹுசைன் தலைமை தாங்கினார். மீனவர் அணி தலைவர் கெளது முஹைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சம்சு மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைதீன் கனி வரவேற்புரை வழங்கினார்.  எஸ்டிபிஐ  மாவட்ட பொதுச் செயலாளர் காதர் முஹைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அ.அப்துல்காதர், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சே.மா.சந்தனராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்டசெயலாளர் தாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி வடக்கு மாவட்ட செயளாலர் கிதர் பிஸ்மி,  தமுமுக மாவட்டசெயலாளர் ஹசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது...

4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’.!

Image
BREAKING  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது மழை நேரங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தல்

கோயில் அன்னதானத்தில் அனுமதி மறுத்த நரிக்குறவர் பெண்ணுடன் அன்னதானம் _அமைச்சர் சேகர் பாபுவுக்கு சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு!

Image
நரிக்குறவர் என்பதால் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அதே பெண்ணுடன் அதே கோயிலில் அமைச்சர் சேகர் பாபு அருகில் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்ட நிகழ்வு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் புகார் கூறியிருந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அதே பெண்ணுடன் அமர்ந்து கோயில் அன்னதானம் சாப்பிட்டார். மேலும், நரிக்குறவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பலரையும் கண்கலங்கச் செய்தது. சமூகநீதி பேசும் மாநிலத்தில், நரிக்குறவர் என்பதால், கோயில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் புகார் கூறியிருந்தார். மாமல்லபுரம் பகுதியில் மணிகளை விற்பனை செய்து வந்த அந்த பெண் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: “சாதாரண கட்டண பேருந்துகளில் பெ...

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Image
  மத்திய அரசு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேலம் கோட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சேலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் விஜிலன்ஸ்  விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்  சரசுராம் ரவி ஏஜென்சி மேலாளர் விளக்க உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக வீ.என்.சுந்தர் கௌரவத் தலைவர் மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் பூவராகவன் கோட்ட மேலாளர் தங்கதுரை,கோட்ட மேலாளர் பிரசாத்மாதேஸ்வரன்,ஏஜென்ட் நல சங்கம் பழனிசாமி,திருமதி.ஷீலா டைட்ஸ்,கார்த்திக்ராஜா, இளங்கோவன்,அஜய், அருணாச்சலம்,பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

Image
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அதிகமாக பயன்படுத்தப்படுகிற சிமெண்ட் ரூ.60 முதல் 80 வரை உயர்த்தப்பட்டுள்ளது கம்பி விலையும் அதிகப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது, ஒரு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது.  இந்த நிலைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்டுமான பொருட்களுக்கான விலயும் கட்டுப்படுத்துவதற்காக விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு தாங்கள் பரிந்துரை செய்திட வேண்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம் இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் கே.எஸ்.பொங்காளி, மாநில பொருளாளர் ராஜாமணி,மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநில துணைச் செயலாளர் சிவக்குமார்,மாவட்டச் செயலாளர் எஸ்.ஏகாம்பரம், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.பழனி,மாநிலத் தலைவர் நடேசகவுண்டர், சட்ட ஆலோசகர் அசோகன், ஆர்.ராமகவுண்டர், கே.நாகராஜன், கே.செல்வராஜ்,நாகராஜன், சித்தனூர்,ஆறுமுகம்,சையத்அமீன், வேலாயுதம்,தமிழரசு, நேசம் ராஜி, மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை சங்கங்களின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

Image
ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணையை ரத்து செய்திட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க. வேண்டும்.30 ஆண்டு பணியை கருத்தில் கொண்டு சிறப்பு ஊதியம் பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும்  கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் அரசு கருவுலத்தில் வழங்க வேண்டும்.பதிவுறு எழுத்தர்களுக்கு அரசு சலுகைகளையும் பணிகாலத்தில் கருத்தில் கொண்டு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்கவேண்டும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நடவடிக்கை நடைபெற்றது.இதில் முருகன் மாநில பொது செயலாளர் மகேஸ்வரன் மாநில பொருளாளர் செல்வம் மேற்கு மண்டலம் சிறப்பு  அழைப்பாளர் பழனிவேல் மாவட்டத்தலைவர் சிவசங்கர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் மேற்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மணிவேல் வேல்முருகன் கோவைமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தீபாவளியை முன்னிட்டு கோவில்பட்டி கண் தான இயக்கம் சார்பில் விழி இழந்தோருக்கு நலத்திட்ட உதவி.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சிசி திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கண் தான இயக்கம் சார்பில் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தலைமையில் 100 விழி இழந்தோருக்கு தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவித் தலைவர் ஜெயராஜ், ராஜவேல், நாகராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர் எஸ் ரமேஷ்,  ரோட்டரி சங்கம் ரவி மாணிக்கம், ஏசியா பார்ம்ஸ் பாபு, செந்தில்குமார் கண்ணன், ரத்தினகுமார், பிரவீன், பிரசன்னா எம்எஸ்வி பாபு, சுரேஷ்  அப்துல்கலாம் ரத்ததான கழக தலைவர் ராஜேந்திரன், அப்துல்கலாம் ரத்ததான கழக செயலாளர் டீக்கடை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சரவெடிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை !

Image
சரவெடிகளை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீட்டிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஆணை* தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும் – உச்சநீதிமன்றம்* உத்தரவு கட்டாயம் கடைபிடிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்*

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனம் - எஸ்.பி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடியில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டத்தில் குற்ற செயல்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதால், அவற்றை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய முக்கிய  இடங்களை கண்காணிப்பதற்கு  4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் நான்கு புறமும், அதாவது 360 டிகிரியில் கண்காணிக்கக்கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள 2 ரோந்து வாகனங்கள் மூலம் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில்  குற்ற செயல்கள் நடவாமல் கண்காணிப்பதோடு மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தென்பாகம் காவல் நிலையம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத்துடன் கேமராக்கள் பொருத்திய மேற்படி நான்கு சக்கர வாகன ரோந்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்...

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து பள்ளி பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து பள்ளி பேருந்துகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.செந்தில்ராஜ், நேரில் பார்வையிட்டு இன்று  ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பதால் அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி வாகனங்களையும் சோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுடன் வாகனங்களை சோதனை செய்து வருகிறோம். பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, மருத்துவ உபகரணங்கள், எமர்சென்சி விண்டோ, கொரோனா விழிப்புணர்வு தொடர்பான ஸ்டிக்கர்,  கொரோனா தொற்று என்பதால் மாஸ்க் ஆகியவை வாகனங்களில் உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். அதுபோல வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வடகிழக்கு பருவமழையில் பள்ளி வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும்,  போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களை பள்ளி வாகனத்தில் பாதுகாப்பா...

ஊழல் கண்காணிப்பு வாரத்தையொட்டி கோவில்பட்டியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி.!

Image
மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்.27-ம் தேதி முதல் நவ.2-ம் தேதி வரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மனித சங்கிலி நடத்தப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜி.ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு. அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை சட்டப்படி செய்வதற்கு கையூட்டு வழங்கினால் அது லஞ்சமாகும். இளைஞர்கள் லஞ்சத்தை தடுக்க முன் வர வேண்டும். லஞ்சம் தொடர்பாக அறிந்தால், உடனடியாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய  பதாகைகளுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சி.ஜெயஸ்ரீ முன்னிலையில் அனைவரும் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இதில், லஞ்ச ஒழிப்பு பிரி...

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

Image
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், எனது குடும்பத்துடன் நல்லுறவு கொண்டவர்* புனித் ராஜ்குமாரின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னட திரையுலகத்துக்கு புனித் ராஜ்குமாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – முதல்வர்

சாக்குப்பையில் பெண்ணின் முகத்தை மூடி தாலிச்செயின் பறித்த 3 பேர் கைது - 5 பவுன் தங்க நகை மீட்பு.!

Image
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்த கோபால் மனைவி அருணாச்சலவடிவு (59) என்பவர் கடந்த 30.09.2021 அன்று தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக  தாமிரபரணி நதிக்கரையோரம் ஸ்ரீகிருஷ்ணன்கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் திடீரென வெள்ளை நிற சாக்கு பையை கொண்டு அவரது முகத்தை மூடி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து மேற்படி அருணாச்சலவடிவு கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் தனிப்படை போலீசார் ஆழ்வார்தோப்பு ரோட்டின் தென்புறம் சுடுகாட்டுக்கு கிழக்கே உள்ள புளியந்தோப்பு அருகே நேற்று  ரோந்து சென்றபோது அங்கே சந்தேகப்படும் படியாக உட்கார்ந்து  மது அருந்திக்கொண்டிருந்த 3 பேர் தனிப்படை போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடினார்கள், அவர்களை போலீசார் ...

அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி யில் சேர்ந்த மாணவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!

Image
அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி பொறியியல் படிப்பில் சேரும் திருச்சி, கரடிப்பட்டி கிராமத்து மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டு! "எளிய பின்புலத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ள அவரின் கல்விச்செலவை அரசே ஏற்கும். இலட்சியக் கனவுகளுடன் பயணிப்பவர்களுக்கு அரசு துணை நிற்கும்"! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.!

Image
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தீயனைப்புத் துறை வீரர்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஒத்திகை நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. இதில் வடகிழக்கு பருவமழை  நேரத்தில் ஏற்படும் விபத்துக்கள் அதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது, அவசர கால நேரத்தில்  ஏற்படக்கூடிய தீ விபத்துகளில் சிக்கி கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்றவை செய்து  காண்பிக்கப்பட்டது.  இந்த ஒத்திகை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் சூழக்கூடிய தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு ஆபத்து காலத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மோட்டார் பொருத்திய 5 படகுகள் தயார் நிலையில் உள்ளன. போதுமான அளவு உயிர்காக்கும் கவச உடைகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் நிலை தன்னார்வலர்களாக 150 பேர் உள்ளனர். அவர்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ...

கொரோனா காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.!

Image
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.  மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் கந்தசஷ்டி விழா தொடர்பாக அனைத்து துறை சார்பில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் கொரோனா விதிமுறை அமல் காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்...

வரும் கல்வி ஆண்டில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் அதுவே தமிழக அரசின் நோக்கம் - அமைச்சர் சி.வி.கணேசன்..!

Image
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் செயல்பட்டு வரக்கூடிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த ஆய்வின் போது இந்த தொழில் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களின் எண்ணிக்கை சேர்க்கையின் விபரம் அங்கு உள்ள இயந்திரங்கள் குறித்தும் எந்த விதமான பிரிவுகளில் பாடத்திட்டங்கள் உள்ளன என்பது குறித்து கேட்டறிந்த அமைச்சர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்  மேலும் இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள பேஷன் டிசைனிங் பிரிவிற்கு அதிக அளவில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பயிற்சி நிலையம் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வரும் ஆண்டுகளில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு  அதிக வேலைவாய்ப்பு என்பது உள்ளது எனவே சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இது கு...

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு அரசு பணி நியமன ஆணை- எஸ்.பி.ஜெயக்குமார் வழங்கல்.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.  அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது.  அரசு பணியாணையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார். மேற்படி பணியாணையை தமிழக காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் மகள் சூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் மகன் சொரிமுத்து அய்யனார், சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மகன் சுரேஷ் ராஜா,  தலைமை காவலர் சசிக்குமார் மகள் அட்சயா, காவலர் நவமணி ரத்தினரோச் சகோதரர் ஜஸ்டின் செல்வமணி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மாவட்ட காவல்துறை அலவலக நிர்வாக அலுவலர் சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்  நம்பிராஜன் மற்ற...

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி மது விற்பனைக்கு தடை ஆட்சியர் உத்தரவு.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி  அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள்  அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்நதப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 80 வயது மூதாட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.!

Image
ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாடகோவில் தெருவைச் சேர்ந்த பூல் என்பவரது மனைவி முத்தம்மாள் (80) என்பவர் இன்று சிவராமமங்கலம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் விறகு வெட்ட சென்றுள்ளார். அப்போது ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சதீஷ் உடனடியாக தீயணைப்பு துறையுடன் சேர்ந்து முத்தம்மாளை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காவலர் சதீஷ் மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களை வெகுவாகப் பாராட்டினர்.

குண்டர் சட்டத்தில் கைதான பாஜக பிரமுகர் கல்யாண ராமன் - ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.!

Image
குண்டர் சட்டத்தில் கைதான பாஜக பிரமுகர் கல்யாண ராமன் - ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி மத மோதலை உருவாக்கும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு கைதான பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

சத்துணவு மையம் மற்றும் பள்ளியில் முதல்வர் M. K. Stalin திடீர் ஆய்வு

Image
மரக்காணம் அருகில் உள்ள கடப்பாக்கத்தில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வுசெய்தார். சத்துணவு தயாரிக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ்,  தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கண்காணிப்பு அலுவலர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது: இன்றைய தினம்  தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளார்கள் அதனடிப்படையில் இன்று இக்கூட்டம் நடைபெறுகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையானது இந்த மாதத்தில் இருந்து ஆரம்பித்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 3 மாதம் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இருக்கும். அதுதொடர்பான என்ன என்ன தற்காப்பு நடவடிக்கை உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என  அனைத்து துறை அலுவலர்களுடன் குறிப்பாக வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சி, மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன் ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களுடன் குளத்தினை தூர்வாறும் பணிகள், நீர் வழித...

வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியவர் மாயம் - 48 மணி நேரத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்

Image
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு (36) என்பவர் துபாய் பக்ரைன் பகுதியில் கடந்த 2 வருடங்களாக கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலெட்சமி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.  இந்நிலையில் துபாய்க்கு வேலைக்கு சென்றிருந்த வீரசின்னு தனது மனைவியிடம் செல்போன் மூலமாக 20.10.2021 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து விடுவதாக தெரித்துள்ளார். அதன்படி அவரது மனைவி பாக்கியலெட்சுமி தனது உறவினர்களான அழகு மற்றும் சமுத்திரராஜ் ஆகிய இருவரையும் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி தனது கணவர் வீரசின்னுவை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.  இதனையடுத்து மேற்படி இருவரும் சென்னை விமான நிலையம் சென்று பார்க்கும்போது வீரசின்னு அங்கு இல்லாததால், அவர் வரவில்லை என அவரது மனைவி பாக்கியலெட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே பாக்கியலெட்சுமி துபாயிலுள்ள வீரசின்னுவின் நண்பரான வேல்முருகன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதில்...

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு பயிற்சி- கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்கள்.!

Image
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் யங் இந்தியன் மற்றும் யூனிஸ்ப் இணைந்து நடத்தும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி கூட்டம் தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது  பயிற்சிப் பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் (சென்னை) வளர்மதி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான பயிற்சி பட்டறை தொடங்கி வைத்தார்கள். விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி, குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் குமரேசன், யங் இந்தியன்ஸ் தலைவர் பொன்குமரன், தோழமை அமைப்பு இயக்குநர் ஜான் சுரேஷ், மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கழக நிர்வாகிகள், உள்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை: அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்துக்குள் முடிக்கப்படும் - ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர்.!

Image
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே 30 கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள்,  வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்களிரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 31வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த முகாமில், துப்பாக்கி சூடு நடந்த அன்றைய தினம் பணியில் இருந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்,  மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்...

தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்க 27 ஆயிரம் டன் உரம் இறக்குமதி - துறைமுக குடோனில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!

Image
வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் உரம் தட்டுப்பாட்டை நீக்க  முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து,  தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுபாட்டை போக்க,  இஸ்ரேல் நாட்டில் இருந்து சுமார் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து இறக்குமதி செய்திட முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி இஸ்ரேல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 27 ஆயிரம் டன் உரம்  தூத்துக்குடி துறைமுக குடோனில் இன்று இறக்குமதி செய்யப்பட்டது. இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பொட்டாஷ் உரம் 50 கிலோ மூடைகளாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சாலை வழியாக அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அணைத்து இடங்களிலும் உரம் தட்டுபாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க கூட்டம் - எஸ்.பி ஜெயக்குமார் பங்கேற்பு.!

Image
தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2020-2021ம் ஆண்டின் இறுதி தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல், நிகர லாபம் பிரிவினை செய்தல், 2021-2022, 2023ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டம் அங்கீகாரம் செய்தல், தலைவர் மற்றும் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவலர் சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையும், நினைவுப்பரிசும் வழங்கினார். இந்த விழாவில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் கணக்காளர் மாரிப்பாண்டி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 260 புற்று நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை - அரசு மருத்துவர்களை பாராட்டினார் கனிமொழி எம்.பி

Image
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பிங்க்டோபர் - மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது .  இதையொட்டி  மார்பக புற்றுநோய் சிகிச்சை பெற்று நலமாக வாழும் நோயாளிகள் உடன் கலந்துரையாடும் தினம் இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் விழா கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு கதிரியக்க சிகிச்சை துறையின் அனைத்து உறுப்பினர்களையும் லீனியர் அக்சலரேட்டரின் முதல் ஆண்டு விழா மற்றும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 260 க்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு பாராட்டினார்.  பின்னர், நீண்ட கால மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர் கலந்துரையாடினார். கதிரியக்க சிகிச்சை துறையால் நடத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் - TAN11 திட்டம் - மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் க...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள்.!

Image
மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது  தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நீங்கள் இதுவரை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்  இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கிறது  அதிலும் குறிப்பாக கனவிலிருந்து வென்று வரும் இக்காலகட்டத்தில் உங்களது பங்களிப்பு மிக முக்கியமானதாகும் ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும்  பொருளாதாரம் புத்துயிர் பெறவும் தொடரின் போது பல குடும்பங்கள் அனுபவித்த வருமான இழப்பை பரிமாற்றம் வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் எனவே அரசு வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது...

பெண் ஊழியரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட டாக்டர் கைது - புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்

Image
கோவில்பட்டி அருகே அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருடன் டாக்டர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில் டாக்டரை போலீசார் கைது செய்தனர் இதனிடையே புகார் கொடுத்த பெண்ணுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த குருசாமி (51) கடந்த 6 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார் அங்கு வேலை பார்க்கும் 23 வயது பெண் ஊழியரிடம் அவ்வப்போது தனிமையில் இருந்து வந்தாராம். இந்த விபரம் அதே மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை பார்க்கும் கோவில்பட்டி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செய்யது அலி மனைவி நீலவேணி (36) என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கையும் களவுமாக பிடிக்க அவர் திட்டமிட்டார் அதன்படி அந்த டாக்டர் இளம்பெண்ணுடன் சரியாக இருப்பதை அவருக்குத் தெரியாமலேயே தனது செல்போனில் வீடியோ எடுத்து அதில் இளம்பெண்ணை டாக்டர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதற்கிடையில் இந்த விவரம் டாக்டருக்கே தெரியவரவே அவர் என்னிடம் செல்போனில் உள...

பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Image
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மதியம் ஒரு மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்கிறார்  தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.!

Image
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். நவம்பர் 1ஆம் தேதி, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்து 200க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள் அளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விளாத்திகுளத்தில் பதுக்கி வைத்து புகையிலை விற்பனை - 3 பேர் கைது

Image
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  தலைமையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி விளாத்திகுளம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள செல்வம் (49) என்பவருக்கு சொந்தமான AMS மளிகை கடையை  சோதனை செய்த போது அதில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து  18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது  தெரியவந்தது. அவர் வைத்திருந்த பைகளில் ரூபாய் 18,000/- மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும், அதனை குழந்தைகளுக்கு விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் சூரிய நாராயண ராஜா (42), மற்றும் ராஜகுரு மகன் கணேசன் (47) ஆகிய 3  எதிரியையும் கைது செய்தனர்.

"அண்ணாமலை தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது" - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்

Image
அண்ணாமலை ஒரு அரசியல் தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருவதாகவும், தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல், குற்றச்சாட்டி வரும் அண்ணாமலைக்கு தலையில் இருப்பது களிமண்ணா என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக பேசியுள்ளார். பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றசாட்டு வைத்திருந்தார். அதனை தொடர்ந்து தன் மீதான குற்றசாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்க 24 மணி நேரம் கெடு விதித்த செந்தில்பாலாஜி, அதை தவறினால் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போது பேசியதாவது, ''மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் துவங்கப்பட்டு மின்துறை சார்ந்த பொதுமக்கள் புகார்கள் பெறப்பட்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இதுவரை 4,14,152 புகார்கள் பெறப்பட்டு அதில் 4,...

பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் சிறப்பு முகாம் - கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் முள்ளக்காடு பகுதியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான மனுக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில்  சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் முகாமில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் கோகிலா,  வட்டாட்சியர் முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன் ஒன்றிய பெருந்தலைவர் பாலசிங்,  ஒன்றிய துணை பெருந்தலைவர் மீரா, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார்,  மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜெஸி பொன்ராணி, திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்  S.J.ஜெகன்,  பஞ்சாயத்து தலைவர் லங்காபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

நீட் தேர்வில் விடைத்தாள் மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது - கனிமொழி எம்.பி யிடம் மாணவி புகார்.!

Image
தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் சேதுராமன் - முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் முப்புடாதி (வயது 19). பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.  இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய இவர், தனது விடைத்தாள் மாற்றப்பட்டு மோசடி  செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி எம்பியை சந்தித்து மனு அளிக்க தூத்துக்குடி வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் நான் கலந்து கொண்டேன். எனக்கு நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் அறை எண் ஒதுக்கப்பட்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டேன்.  தேர்வு முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் அறைக்குள் நுழைந்த தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் எனது பெயரையும் விபரங்களையும் குறிப்பிட்டு எனது விடைத்தாளை பெற்றுக்கொண்டார். "எதற்காக விடைத்தாளை எடுத்துக் கொள்கிறீர்கள் என நான் கேட்டதற்கு" என்.டி.ஏ.விலிருந்து எனது விடைத்தாளை நகல் எடுத்து அனுப்ப சொல்லியிருப்பதாக அவர் கூறி...

தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு தமிழக மீனவ மக்கள் கட்சி கோரிக்கை!!

Image
தமிழக மீனவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ச.பெர்டின் ராயன் தொடக்கப் பள்ளிகள் திறப்பை குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி இந்த வருடம் வரை பல்வேறு தரப்புகள் ஆக கொரோனா தடுப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு தற்போது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை முழுவீச்சில் நவம்பர் 1 முதல் திறக்கப்படும் என்று  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்கள். இத்தகைய அறிவிப்பின்படி தொடக்கப் பள்ளிகளை முழு வீச்சில் திறக்க முற்படும்போது இளம் சிறார்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை பயன்படுத்தி கொடூர தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்களா என்பது பெறும் கேள்விக்குறியான விஷயம். கொரோனாவின் தொடக்க இடமான சீனா மற்றும் பள்ளிகளை முழுவீச்சில் துவங்கிய ஐரோப்பிய நாடுகளில் தற்போது தொற்று கடந்த மூன்று மாதங்களை விட மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய பேரரசின்(U.K) பிரதமர் அந்நாட்டில் உள்ள...

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளா - கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்.!

Image
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்டத்திலுள்ள பல்வேறு முன்னனி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளா தூத்துக்குடி உள்ள ஏ.வி.எம் கமலவெல் மஹாலில் வைத்து இன்று காலை நடைபெற்றது. முகாமை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் ஆவணங்களை வழங்கினார். இம்முகாம் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.  இதில், விவசாயக் கடன், பிரதமர்  முத்ரா கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சிறு, குறு தொழில் கடன், மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா  பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா, போன்ற திட்பங்களில் இணைந்து பயன் பெறுவதற்கான  வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் , நபார்டு தூத்துக்குடி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம...