Posts

Showing posts from October, 2025

கோவில்பட்டி: ரகசிய வீடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு சப் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் போலீஸ்.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் செல்வகுமார். இவருடன் பணியாற்றிய பெண் போலீசான இந்திரா காந்தி என்பவருக்கும் இவருக்கும் நெடுநாட்களாக நெருக்கமான பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தன்னிடமுள்ள ரகசிய வீடியோ மற்றும்  ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு பெண் போலீஸ் இந்திரா காந்தி எஸ்.ஐ. செல்வகுமாரை தொடர்ந்து மிரட்டியுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த இவர் இது தொடர்பாக தனது மனைவியிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து எஸ்.ஐ.யின் மனைவி அளித்த புகாரின் பேரில் பெண் போலீஸ் இந்திரா காந்தி, மற்றும் அவருடன் கூட்டு சதியில் ஈடுபட்ட 5 பேர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் முறையாக தமிழக காவல்துறையில் எஸ்.பி. ரேங்கில் செய்தித் தொடர்பாளர் பதவி.!

Image
  தமிழக காவல் துறை முதன்முறையாக காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவரை செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடக தொடர்பு அதிகாரியாக நியமித்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் கண்காணிப்பாளர்/ காவல் துறை துணைத் தலைவர் ஜே. முத்தரசி செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். புதிய மாற்றத்தில், உள்துறை, சென்னை மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் காவல் துறைத் தலைவராக இருந்த வி.ஜெயஸ்ரீயை, சென்னை ஊர்க்காவல் படை காவல் துறைத் தலைவராகவும் நியமித்தது. மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் காவல் ஆய்வாளர் பதவியை முழுமையாகக் கூடுதலாகப் பொறுப்பேற்க தொழில்நுட்ப சேவைகள் காவல் துறைத் தலைவர் அவினாஷ் குமார், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆவடி காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சி.சங்கு, புதிதாக உருவாக்கப்பட்ட பதவியில், ஆவடி காவல்துறை போக்குவரத்து துணை ஆணையராக ரெட்ஹில்ஸ் துணை ஆணையராகப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் ஆவடி காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் பதவியை முழுமையாக கூடுதலாக வகிப்பார். கே.மகேஸ்வரி, காவல் கண்காணிப்பாளர்/முதல்வர், காவல் பயிற்சிப் பள்ளி, தூத்துக்குடி சென்னை காவல் பயிற...

கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 06.10.2025 அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த அம்மாமுத்து மகன் மூர்த்திராஜா (27) மற்றும் குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துச்செல்வன் (27) என்பவரையும்  ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் சூர்யா (23) ஆகிய 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 115 பேர் குன்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் இந்திரா காந்தி சிலைக்கு ஐஎன்டியூசி பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை.

Image
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின்  41ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளரும், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான பெருமாள்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், வர்த்தக பிரிவு நேரு, ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், எஸ்.சி.எஸ்.டி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், விவசாய பிரிவு பேரையா,  ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், கு.சேகர், அசனார், சுந்தர்ராஜ், ஆசீர் செல்வம், தெர்மல் முத்து மனோகரன், மகிளா காங்கிரஸ், இசக்கியம்மாள், உமா மகேஸ்வரி, ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் சம்சுதீன், வழக்கறிஞர் செல்வம், பிரைன்நாத், செல்வ முருகன், காமராஜ், ஆனந்தராஜ் சேக்ஸ்பியர், ...

துத்துக்குடியில் இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை.

Image
  முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 41ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர் ராஜன், எஸ்.சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவி பிரீத்தி, சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், மாநகர் மாவட்ட சேவா தளம் தலைவர் கே.டி.எம்.ராஜா, அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மீனவரணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல், நகர மீனராணி தலைவர் சிமியோன், மாவட்ட துணைத் தலைவர் ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், ஜோசப் அரவிந்த், மரிய செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி ,மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரெனிஷ்பாபு, மற்றும் வார்டு தலைவர்கள் தனுஷ் ,அண்ணாமலை, சுப்பிரமணி, சரவணன், வில்சன்,பெனடிக், முத்துராஜ், கிருஷ்ணன், மாரியப்பன் உள்பட பலர் கலந்...

வல்லநாடு கல்லூரியில் மாவட்ட அளவிலான 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், துவக்கி வைத்தார்.

Image
  தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (31.10.2025) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக "நிலைத்த மற்றும் பாதுகாப்பான நீர் மேலாண்மை” என்ற ஆய்வுத் தலைப்பின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2025னை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், துவக்கி வைத்து சிறப்புரையாற்றி, அறிவியல் மாநாட்டில் குழந்தைகள் தயார் செய்து காட்சிப்படுத்திய அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தூத்துக்குடி மாவட்ட அமைப்பும், இந்த மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள் இணைந்து துளசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகின்ற 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு வருகை தந்திருக்க கூடிய அனைவருக்கும் வணக்கம். மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்பாடுகளை செய்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். அறிவியல் இயக்கத்திலிருந்து நீண்ட நாட்களாக குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் இயக்க நண்பர்கள் வருகின்ற பொழுது, அறிவியலுக்காக நீங்கள் என்னவெல...

அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம்

Image
  கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் இணைந்து கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் நீக்கி வைக்கப்படுகிறார் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

"தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மகமை சங்க செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பதால் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியர்கள் மூலம் பொய் குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள்" - பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம். ஜி. எம். ரமேஷ் பேட்டி.!

Image
தூத்துக்குடி காரப்பேட்டை  நாடார் மகமை சங்க செயலாளர் விநாயக மூர்த்திக்கு எதிராக தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் வழக்கு தொடர்ந்திருப்பதால் தன்மீது பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மூலம் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துகிறார்கள் ஆசிரியர்களிடம் எந்தவித பணமும் பெறவில்லை என காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளரும் வழக்கறிஞர்  எம் ஜி எம் ரமேஷ் பேட்டியளித்தார். தூத்துக்குடியில் உள்ள காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிச் செயலாளர் ரமேஷ் மீது குற்றச்சாட்டு தெரிவித்து அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பள்ளி செயலாளர் வழக்கறிஞர் எம் ஜி எம் ரமேஷ் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் "தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 4/8/202 முதல் பள்ளி செயலாளராக செயல்பட்டு வருகிறேன். செயலாளராக பொறுப்பேற்ற உடன் பள்ளியில் நடைபெற்ற சீர்கேடுகள் காரணமாக மாணவர்களுடைய தேர்ச்சி சதவீதம் 10 மற்றும் 12 ஆம் ...

விரைவில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Image
  தூத்துக்குடியில், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.  தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில்: முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் வாரம் ஓருமுறை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதையும தவிா்த்து உங்களுடன் ஸ்டாலின் பகுதி சபா கூட்டம் என மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு இத்தனை முகாம்கள்நடைபெற்றாலும் மாநகராட்சி இணையதளம் வாயிலாகவும் பல்வேறு புகாா்கள் குறைகள் வருகின்றன.  அதையும் தீா்த்து வைக்கும் பணியில் நாம் இருக்கிறோம் மக்கள் தௌிவாக இருக்கிறாா்கள். கடந்த 19 20, 21 ஆகிய 3 தேதிகளில் பெய்த கனமழையால் எங்கும் மழைநீர் பொிய அளவில் தேங்க வில்லை. ஒரு சில இடங்களில் தான் தேங்கியது அதையும் மின்மோட்டாா் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. கோக்கூா் குளம...

முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை.!

Image
  தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வதுஜெயந்தி விழாவை முன்னிட்டு  தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் 3ம்மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவசிலைக்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அணி செயலாளர்கள் விஜயகுமார், தனராஜ், பிரபாகர், விக்னேஷ், நடராஜன், நிலா சந்திரன் பகுதி செயலாளர் சேவியர், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், பரமசிவம், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் டைகர் சிவா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், வழக்கறிஞர் அணி இணை ...

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவா் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை.!

Image
  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வதுஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக வா்த்தக அணி சாா்பில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் 3வது மைலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.  நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்,  மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் நுகா்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம் முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன் முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள்...

காதல் தோல்வி:வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்.!

Image
  தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (24), தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாத காலமாக தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று இரவு தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று மதியம் வரை அவர் கதவையைத் திறந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் கதவு உள்பக்கமாக பூட்டிஇருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது மாரிமுத்து வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  இது குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜீவமணி, தர்மராஜ் சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'பசுமை தொலை நோக்கு' விருதை வென்றது தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் - மூன்று முன்னணி நிறுவனங்களுடன் 42 ஆயிரம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Image
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் நான்காவது நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  பரிமாறப்பட்டன. இந்த நிகழ்வின் போது, ​​தூத்துக்குடியின் வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், பசுமை எரிசக்தி துறையில் முன்னணி நிறுவனங்களுடன் மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது, இது ₹42,000 கோடிக்கும் அதிகமான கூட்டு முதலீடாகும். பசுமை அம்மோனியா மற்றும் பிற ஹைட்ரஜன் தயாரிப்புகளுக்கான பொதுவான சேமிப்பு பண்ணை அல்லது உடனடி டேங்கிங் சேமிப்பு வசதியை அமைப்பதற்காக, செம்கார்ப் குழும நிறுவனமான கிரீன் இன்ஃப்ரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பண்ணைகள் தனியார் லிமிடெட் (GIREFPL) உடன் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, இதில் ₹25,400 கோடி முதலீடு அடங்கும். இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் ACME கிரீன் ஹைட்ரஜன் மற்றும் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ₹12,000 கோடி மதிப்பிலான 1,200 MTPD பசுமை அம்மோனியா திட்டத்தை நிறுவுவதற்காகப் பரிமாறிக் கொள்ளப்பட்டது,  மூன்றாவது ஒப்பந்தம் CGS எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ந...

தூத்துக்குடி:கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Image
  ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த  கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட  கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பளித்துள்ளது.  ஏரல் அகரம்  பகுதியைச் சேர்ந்த வீரமணி  மகன் ஜெயராஜ் (68/19) என்பவரை கடந்த 2019 ஆண்டு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் வேதக்கோவில் தெருவில் வைத்து முன்விரோதம் காரணமாக   அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் அகரம் பகுதியைச் சேர்ந்தவரான துரைசாமி மகன் கணேசன் (61/25) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட  கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (30.10.2025) குற்றவாளியான  கணேசன் என்பவருக்கு  ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக  புலனாய்வு செய்த  அப்போதைய ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத...

குளிர்காலத்தை அனுபவிக்க தூத்துக்குடிக்கு வந்த ஃபிளமிங்கோ பறவைகள்.! -"தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக உள்ளது" என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி.!

Image
குளிர்காலத்தை தங்கி அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு ஃபிளமிங்கோ பறவைகள் வந்துள்ளது பொது மக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பெரிதும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நீண்ட கால்கள், வளைந்த அலகுகள் மற்றும் இளஞ்சிவப்பு நிற இறகுகளுக்கு உலகளவில் அறியப்பட்ட ஃபிளமிங்கோக்கள், அதிக தூரம் பயணிக்கும் இடம்பெயர்வு பறவைகளாகும்.  ஒவ்வொரு ஆண்டும், குளிர்காலத்தின் தொடக்கத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பறவை ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு அசாதாரண காட்சி - ஃபிளமிங்கோக்களின் வருகை. இந்த ஆண்டும், அக்டோபர் மாத இறுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் தூத்துக்குடியின் கரையோரங்கள், உப்பு நீர் தடாகங்கள் மற்றும் தாழ்வான ஈரநிலப் பகுதிகளுக்கு கூட்டமாக வருகின்றன. தூத்துக்குடி கடற்கரையோரத்தில் உள்ள இயற்கை உப்புப் படுகைகள் மற்றும் ஆழமற்ற தடாகங்கள், அவற்றின் முக்கிய உணவாக இருக்கும் பாசிகள் மற்றும் சிறிய நுண்ணுயிரிகளால் நிறைந்துள்ளன, இந்த பகுதியை அவைகளுக்கு ஏற்ற வாழ்விடமாக மாற்றுகின்றன. வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, "தூத்துக்குடியின் கடலோரப் ...

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு ஐஎன்டியுசி பெருமாள் சாமி மாலை அணிவித்து மாியாதை.!

Image
  தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழாவை  முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள் சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், எஸ்சிஎஸ்டி  முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், விவசாய பிரிவு பேரையா, சேகர், சுரேஷ்குமார், முத்து சிவமூர்த்தி, மனோகரன், சாமுவேல், சிவலிங்கம், மகிளா காங்கிரஸ் , இசக்கியம்மாள், தனலட்சுமி, ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் சம்சுதீன், வழக்கறிஞர் செல்வம், பாலகிருஷ்ணன், பிரைன்நாத் ,காமராஜ், தினேஷ்,  முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதர் ,பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தவெக அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மாியாதை.!

Image
  தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும், தேவர்காலனி பகுதியில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த கௌதம் பாண்டியன் அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர். நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன் நிர்வாகிகள், மகளிர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனா்.

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவா் சிலைக்கு ஓபிஎஸ் அணி ஏசாதுரை மாலை அணிவித்து மாியாதை.!

Image
  தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எம்எல்ஏ ஆணையின்படி 3ம் மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, முத்து, மாவட்ட அணி செயலாளர்கள் ஜெயபால், சாமுவேல் சுதாகர் தங்க மாரியப்பன் செயற்குழு உறுப்பினர் சந்திரா, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன் மாவட்ட அணி தலைவர்கள் மகேஸ்வரன் மாரியப்பன் செல்லத்துரை மாவட்ட இணைச் செயலாளர்கள் அந்தோணி ஜெபராஜ் அந்தோணி ஜெயக்குமார் சிவ சூரியன் ராஜதுரை மாவட்ட அணி பொருளாளர்கள் வின்சென்ட் வேல்சாமி பகுதி மகளிர் அணி தலைவி மாடத்தி பகுதி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கண்ணன் பகுதி ஜெ பேரவை தலைவர் பொய்யாமொழி  பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நல்லதம்பி பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு தலைவர் மகாராஜன் மாவட்ட மாணவர் அணி தலைவர் சுந்தர் வட்ட செயலாளர் ஆறு...

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை.!

Image
  தூத்துக்குடி முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் 3வது மைல் அருகே அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநகர் மாவட்ட சேவா தளம் தலைவர் ராஜா, எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், மாவட்ட துணை தலைவர்  ஜெபராஜ், சின்ன காளை மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில்பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, மாநில அமைப்புசாரா செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, இளைஞர் காங்கிரஸ் மண்டல தலைவி கமலா தேவி, மாவட்ட செயலாளர் ரெனிஷ் பாபு, மீனவரணி நகரத் தலைவர் சிமியான், வார்டு தலைவர்கள் சுப்பிரமணி, ராஜரத்தினம், கிருஷ்ணன், முனியசாமி, அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

"மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. அனைவரும் முழு ஓத்துழைப்பு வழங்கி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்" - மேயா் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார்.  மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தாா்.  மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:- மாநகராட்சி பகுதியில் கடந்த 20 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் சூழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் ெபாதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். மாதத்தில் ஒரு நாள் மாநகராட்சியிலும் மாதாந்திரகூட்டமும் நடைபெறுகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில்பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட 1210 அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது தெற்கு மண்டலத்தில் 651 மனுக்கள் பெறப்பட்டுள்ளது நிலையில் 559 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு வந்துள்ள...

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி-மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை.!

Image
  தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகரட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ்,  பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,  இலக்கிய அணி தலைவர் சக்திவேல், பொறியாளா் அணி தலைவர் பழனி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், பெருமாள், ராமர், அருணாதேவி,  பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரவீந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, பொன்னப்பன், விஜய...

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும்  ஊராக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது. தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்டத்துடன் இருந்து வந்தது. 01.09.2017ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது  இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊராக வளர்ச்சி துறை  தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.  இதற்கிடையில் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்ய கோரி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயண சுவாமி , தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் ஆகியோர் தலைமையான பெஞ்ச் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமென்ற அரசா...

கோவில்பட்டி: ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் - போலீசார் விசாரணை.!

Image
  துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்தவர் முனிராஜ்,, காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனியாக வசித்து வரும் முனிராஜ் கடந்த 16 ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது  மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில்  இன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள்  பார்த்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்த முனிராஜிக்கும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் முனிராஜ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒரு சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு  சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  முத்துநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: சிறப்பு அனுமதி வாகன பாஸ் கள்ளச் சந்தையில் விற்பனையா.!? தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு.!

Image
  சூரசம்கார விழா அன்று வழங்கப்படும் சிறப்பு பாஸ் அல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அங்குள்ள தனியார் விடுதிகளில் தங்கும் பயனர்களுக்கு தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் அத்தியாயவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி பாஸ் வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை விளக்கம். இந்த ஆண்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்கார நிகழ்வு நாளன்று மட்டும் பயன்படுத்தும் சிறப்பு அனுமதி வாகன பாஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதன்படி சிறப்பு அனுமதி பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட திருச்செந்தூர் ஐடியல் வாகன நிறுத்தம் மற்றும் வனப்பார்வதி ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் சிறப்பு வாகன பாஸ் ரத்து உத்தரவை தொடர்ந்து எந்த ஒரு வாகனமும் நிறுத்தப்படவில்லை. மேலும் சூரசம்கார விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே திருச்செந்தூர் TB சாலையில் உள்ள 70ற்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளில் தங்குவதற்கு, முன்னதாகவே புக்கிங் செய்த பயனர்களுக்கு மட்டுமே விடுதியின் வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி அவர்களின் உடைமைகளை எ...

தூத்துக்குடி : கூலித் தொழிலாளி வீட்டில் வெடிகுண்டு வீச்சு:மர்ம நபர்கள் தப்பியோட்டம் - போலீஸ் விசாரணை.!

Image
  தூத்துக்குடி, அண்ணாநகர், 4வது தெருவைச் சேர்ந்த மாடசாமி (வயது 38), கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். பலத்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் எழுந்த மாடசாமி மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டுக்குள் வீசியது வெடி குண்டு பட்டாசா? அல்லது நாட்டு வெடிகுண்டா? என்பதும் குறித்தும் சோதனை நடந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.!

Image
  கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம் மற்றும் அங்கு நிறுவபப்பட்டுள்ள கலைஞர் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவரும் தமிழ்நாடு தலைவருமான ஸ்டாலின் திறந்து வைத்தாா். முன்னதாக முதல்வருக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வா் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்.  நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே முதல்வா் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  அரசு திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிலையில் தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் புறப்பட்டு கோவில்பட்டிக்கு வந்த அவருக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன்,  ராமச்சந்திரன், நேரு, பொியகருப்பன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், சண்முகையா, ராஜா, மேயா் ெஜகன் பொியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் ந...

போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

Image
  தூத்துக்குடி அருகே உள்ள முடிவைதானேந்தல் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்த வள்ளிநாயகம், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி(48). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பரமேஸ்வரி கடந்த 26ம் தேதி காலை தனது வீட்டில் படுக்கை அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது.!

Image
  தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள உப்பளப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாப்பிள்ளையூரணி, வெற்றிவேல்நகர் கார்த்திக் (வயது 30), எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மகாவருண்குமார்(18), மட்டக்கடையைச் சேர்ந்த விஷால்(18), புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த தீபக்(19) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். 

திருப்பூர் பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா!

Image
திருப்பூரின் 125 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு நாளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகில் காலேஜ் ரோட்டில் உள்ள 125 ஆண்டு பழமையானஅருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 2வது கும்பாபிஷேக விழா கடந்த செப்.,மாதம் 11ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 12.09.2025ந் தேதி முதல், 26.10.2025ந்  தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் சிறப்பு மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவு நாளில் நேற்று சிறப்பு யாகம் வேள்வி நடைபெற்றது. இதனை செல்வகுமார் சுவாமிகள், காமாட்சி தாசன் சுவாமிகள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து 108 சங்குகளால் சிறப்பு  அபிஷேக பூஜை நடைபெற்றது.  பின்னர் மண்டல் பூஜையில் கலந்து கொண்ட கட்டளைதார்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு தனித்தனியாக பொன்னாடை அணிவித்து, பிரசாதம் ஆகியவற்றை கோவில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.அனைத்து நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் தொழில் அதிபர்கள் ஆகியோர் திரளாக...

திருப்பூர் குளத்துப்புதூர் குளத்தில் புனிதநீராடி சத்பூஜை கொண்டாடிய புலம்பெயர் தொழிலாளர்கள்

Image
திருப்பூரில் வசிக்கும் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் குளத்துப்புதூர் குளத்தில் புனிதநீராடி சூரியனுக்கு பிரசாதங்கள் படைத்து சத்பூஜை கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் கந்த சஷ்டி விரதம்கொண்டாடுப்படுவது போன்று பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் நேபாளத்தில் சத்பூஜா விரதம் கொண்டாடப்படுகிறது. வடமாநில மக்கள் சுக்லபட்ச சஷ்டி திதியில் நான்கு நாட்கள் விரதம் இருந்து நான்காவது நாள் சூர்யோதயத்தில் புனிதநீராடி சூரியனுக்கு அர்க்யா என்ற பிரசாதம் படைத்து விரதத்தை நிறைவு செய்கிறார்கள்.  அவ்வாறு செய்வது தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் என்று நம்புகிறார்கள். வேதகாலத்தில் இருந்தே தமிழகத்தில் சஷ்டி விரதமும், வடமாநிலங்களில் சத்பூஜா விரதமும் கொண்டாடப்பட்டு வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அந்த வகையில் திருப்பூர் மாநகரில் வசிக்கும் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் குளத்துப்புதூர் குளத்தில் சத்பூஜையை கொண்டாடும் நிகழ்வானது நடைபெற்றது. நான்கு நாட்கள் கடுமையான விரதம் இருந்த அவர்கள் இன்று அதிகால சூர்யோதயத்தில் க...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்” உறுதிமொழி ஏற்பு.!

Image
  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (25.10.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு ஆகியோர் தலைமையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன், எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நல...

அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி.!

Image
  தமிழக அரசின் நடைமுறைகளை பின்பற்றும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஊழல் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.  அதில், 'நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்பட...

பிஎம்டி இயக்க நிறுவனத்தலைவா் மீது சமூக வலைத்தளங்களில் இழிவு - அம்பை காவல் துணை கண்காணிப்பாளாிடம் நடவடிக்கை எடுக்க கோாிக்கை.!

Image
  தூத்துக்குடி பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது அதன் மாநில தலைவராக கே என் இசக்கிராஜா தேவா் தமிழகம் முழுவதும் தனது இயக்கத்தின் பணியையும் பொதுநல உதவிகளையும் செய்து வருகிறாா்.  இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கௌதமபுாியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மதன் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத்தலைவர் கேஎன் இசக்கிராஜா தேவா் அவா்களை பற்றி சமூக வலைதளங்களில் மிகவும் இழிவாகவும் தரக்குறைவான வாா்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளாா்.  இதனையடுத்து அவா்மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோாி அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளா்களும் தேவா் சமுக அமைப்பை சேர்ந்த நிா்வாகிகளும் அம்பா சமுத்திரம் காவல் துணைகண்காணிப்பாளாிடம் புகாா் மனு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனா். அதற்கு காவல் துறை தரப்பில் தவறு செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனா்.