திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது... பஞ்சவாத்தியம் முழங்க கோலாகலமாக நடந்த கொடியேற்றம்!

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மன நோய் தீர்க்கும் புனிதத் தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. முருகப்பெருமான் வழிபட்ட தலமானதால் இந்த தளம் திருமுருகநாதசுவாமி திருக்கோவில் எனப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு மிக்க திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில், முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 10 மணிக்கு, விநாயகர் பிரார்த்தனை, மிருத்யங்க யாகம், அங்குரார்ப்பனம், ரிஷ்ப யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தெய்வானை, திருமுருகநாதர், பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டு, கொடித்துணியில், அதிகாரநந்தி, சூரியன், சந்திரன், அஸ்திர தேவர் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவித்து, திருக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருக்கொடி கோயிலுக்குள் பிரகார உலாவந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, கொடி ஏற்றப்பட்டது. இ...