Posts

Showing posts from August, 2023

50 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா பறிமுதல்... டிரைவரிடம் உனவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை

Image
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி வழியாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வருவதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் அடங்கிய குழு விரைந்து சென்று பான் மசாலா, குட்கா ஏற்றி வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் கனேஷ், கூல்லிப், விமல் பான்மசாலா, வி - 1 டோபேக்கோ இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இந்த தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களின் எடை 3250 கிலோ மற்றும் மதிப்பு சுமார் 50,00,000/- ஆகும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களில் இருந்து மூன்று மாதிரிகள் பகுப்பாய்விற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையின் மேல் நடவடிக்கை தொடரப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.கதிரவன்  தெரிவித்தார். சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

நீலகிரி மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு சைபர் கிளப் மாவட்ட எஸ்பி பிரபாகரன் தகவல்

Image
நீலகிரி மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு சைபர் கிளப்  மாவட்ட எஸ்பி பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது நீலகிரியில் முதல் கட்டமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் சைபர் கிளப் தொடங்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விரைவில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும் இதனால் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படும் இதனால் குற்றங்கள் குறையும் என நம்பிக்கை என  தெரிவித்துள்ளார்

அரசு மருத்துவமனையின் அவலம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர் இந்த பகுதியானது மிகவும் பின்தங்கிய குறைந்தபட்சம் ஊதியம் பெறும் ஏழை தோட்டத் தொழிலாளர்கள் 80 க்கும் மேல் தின கூலித் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் இவர்கள் மருத்துவ வசதிக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர் இந்நிலையில் நோயாளிகள் முகம் மற்றும் கை கழுவும் இடம் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர்கள் தேங்கியுள்ளது இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மருத்துவமனை என்பது பொதுமக்களுக்கு நோயை போக்கும் இடமாக இருக்க வேண்டும் நோயை உருவாக்கிய இடமாக இருக்கக் கூடாது ஆகவே எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு விரைந்து இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருள்மிகு ஶ்ரீபிரித்யங்கராதேவி ஶ்ரீமஹா விஸ்வரூப பஞ்சரத்தின வராஹி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா

Image
கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருள்மிகு ஶ்ரீபிரித்யங்கராதேவி ஶ்ரீமஹா விஸ்வரூப பஞ்சரத்தின வராஹி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது யாகவேள்வியை மேல்சாந்தி ஶ்ரீ வாலை சித்தர் சுவாமிகள் சீடர்ஹரிவாலை பரமேஸ்வரி , வராகிசித்தர் ஈஸ்வரமூர்த்தி, ராஜசேகர்,  நவீன் குழுவினர் நடத்தினர். இந்த விழாவில் இந்துமக்கள்கட்சி மாநிலத்தலைவர் அர்ஜுன்சம்பத் அவர்கள் கலந்து கொண்டார் சமூக ஆர்வலர் சிறகுகள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பொன்கார்த்திகேயன்  இந்து மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி செயலாளர் பாப்பம்பட்டிரவி வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர் மருதாசலம் கள்ளப்பாளையம் வார்டுகவுன்சிலர்கள் கவிதாகார்த்திகேயன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஶ்ரீவராகிஅம்மனின் அருளைப் பெற்றனர் லட்சுமிநாய்க்கன் பாளையம் வள்ளலார் நினைவு அருள்ஜோதி தபோவனம் மூர்த்திலிங்க தம்பிரான் ஸ்வாமிகள் முன்னின்று இந்த கும்பாபிஷேக விழாவினை நடத்திவைத்தார்

சென்ன சமுத்திரம் கீழ்பவானி கிளை வாய்க்காலில் வாடிய பயிர்களை காப்பாற்ற உரிய முறையில் தண்ணீர் திறந்து விட கோரி விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை

Image
 ஈரோடு மாவட்டம் சென்ன சமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரசாம்பாளையம்  கீழ்பவானி கிளை வாய்க்கால் உள்ளது.  இந்த கிளை வாய்க்காலில் மொத்தம்  19,500 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. கீழ் பவானி  கிளை வாய்க்காலில் பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து  ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறந்து விடப்படும்.  ஆனால் இந்த முறை  ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு  (ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை) இன்று வரை  12 வது வயல் வரை இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை . இதனால் விவசாயிகள்  பயிர்களை காப்பாற்ற   பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.  12 வது வயல் வரை தண்ணீர் உடனடியாக  வர வேண்டி பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம்  நேரடியாக எடுத்துக் கூறி எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விவசாயிகளின் பயிர்கள் வாடி மிகவும் வேதனைக்கு உள்ளாகி உள்ளது.  இதை அரசு உடனடியாக தலையிட்டு, தண்ணீர் வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்களும், விவசாயிகளும், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாய ...

சேலம் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்

Image
சேலம் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் அருள்  தலைமையேற்றார் இதில் சிறப்புரை மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மேலும் முன்னிலை வைத்தவர்கள் மாவட்ட செயலாளர் பாபு மாவட்ட பொருளாளர் சங்கர் சேலம் மாவட்ட பூசாரி பேரவை அமைப்பாளர் குமார்  கோட்ட செயலாளர் சபரிநாதன்மற்றும் மாநகர நிர்வாகிகளான சரவணன் மகளிர் அணி அமைப்பாளர் உட்பட 20 பெண்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் சேலம் மாநகரில் 25 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது என்றும் சந்திரயான்-3 திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்ததும் நிலவில் சந்திரன் கால் பதித்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்த பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது

சூலூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஒன்றிய செயற்குழு

Image
சூலூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் ஒன்றிய செயற்குழு  பெருமாள் கோவில் திடலில் மாவட்ட இணைய செயலாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது இதில்  மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார் மேலும் ஒன்றிய செயலாளர் மோகன் கொங்கு மண்டல தலைவர் உதயகுமார்கண்ணன்  மற்றும் காளிமுத்துநாகராஜ் மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த் ஒன்றிய இணை செயலாளர் சந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1)சூலூர் சுற்றுவட்டார பகுதியில் 50 இடத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஸ்டை செய்து மூன்று நாட்கள் விளையாட்டு போட்டி ஆன்மீக சொற்பொழிவு அன்னதானம் ஊர்வலம் நடத்தி மூன்றாவது நாள் நிறைவாக சூலூர் அண்ணா கலையரங்கில் விசர்ஜன பொதுக்கூட்டம் நடத்தி அனைத்து சிலைகளும் சூலூர் பெரியகுளத்தில் கரைப்பது என்று முடிவு செய்யப்பட்டது 2)நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் நிலை நிறுத்தியத்துக்கு பாராட்டுவதோடு அந்த இடத்திற்கு பாரத பாரம்பரியத்தை காக்க சிவசக்தி என்று பெயரிட்ட பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு மனதார பாராட்டுக்கள் 3)வரும் ஒன்பதாம் தேதி கிருஷ்ண ...

கோவை சூலூர் கள்ளப்பாளையம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Image
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுஸ்லான் ஃபவுண்டேஷன் மற்றும்  கோவை ஒண்டிபுதூர் நிறை அறக்கட்டளை சார்பாக  கள்ளப்பாளையம் கிராமத்தில்  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கள்ளப்பாளையம் ஒன்றாவது வார்டு உறுப்பினர் கவிதாகார்த்திகேயன் அவர்களின் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு  தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.   நிறை அறக்கட்டளையின் சார்பில் கள அதிகாரி மனோரஞ்சிதம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கிராம வளர்ச்சிக்குழுத் தலைவர்  பொன்.கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

மயிலாடுதுறையில் மாநில பள்ளி கிரிக்கெட் போட்டியில் வென்ற சென்னை அணிக்கு கலைஞர் சுழற் கோப்பையை எம்எல்ஏ ராஜ்குமார் வழங்கினார்!

Image
*மயிலாடுதுறையில் மாநில  பள்ளி கிரிக்கெட்  போட்டியில் வென்ற சென்னை அணிக்கு கலைஞர் சுழற் கோப்பையை எம்எல்ஏ ராஜ்குமார் வழங்கினார்!   தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 14வது மாநில  அளவில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைஞர் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. மாநில அளவில் சென்னை, திருவள்ளூர், சேலம், மயிலாடுதுறை உள்பட 8 மண்டல மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மயிலாடுதுறை  அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று  கலைஞர் சுழற் கோப்பையை வென்றது. இதற்கான பரிசளிப்பு விழா தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க மாநிலத் தலைவர் காவல்துறை முன்னாள் ஐஜி சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.  அகில இந்திய பொதுச் செயலாளர் சுனில் கலந்துகொண்டு வரவேற்றார்.   மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் கழகத்தினுடைய நிர்வாகிமான ஜெகவீரபாண்டியன்,  மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் சமூக ஆர்வல...

கோடநாடு கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பு

Image
சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய விபத்தில் பலியான கனகராஜ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் ஆனால் கோடநாடு வழக்கை விசாரித்த ஊட்டி நீதிமன்றம் கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் எனவும் அதன் பிறகு அவரை ஜெயலலிதா பணியில் இருந்து நீக்கி உள்ளார் என்றும் அதன் பிறகு அவர் அதிமுகவை சேர்ந்த 12 தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜெயலலிதாவின் கார் டிரைவராக கனகராஜ் இல்லை என்று நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லையா இப்போதைய ஏன் கூறுகிறார் சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் கனகராஜின் அண்ணன் தனபால் பல தகவல்களை கூறுவேன் என்று தெரிவித்துள்ளார் பிறகு ஏன் எடப்பாடி பழனிச்சாமி இடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தா...

சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சியில், பதிப அங்கன்வாடி மையங்களை, முன்னாள் அமைச்சர் கே..ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.

Image
 ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட, குமரன் கரடு, கொமாரபாளையம், ஆகிய இரண்டு பகுதிகளில், தலா ரூபாய் 14 இலட்சம் மதிப்பில், ஊராட்சிநிதி, மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் இருந்து,புதிதாக கட்டப்பட்டஇரண்டு அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கோபி செட்டிபாளையம் சட்டமன்ற உறுப் பினருமான,, கே.ஏ.செங்கோட்டை யன் சிறப்பு அழைப்பாளராக, கல ந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.விழாவிற்குபவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A அ பண்ணாரி. தலைமை தாங்கி னார், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் . முன்னிலை வகித்தார். உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.கே.காளியப்பன், சத்தியபாமா, ஒன்றிய கழகச் செய லாளர்கள் N.N.சிவராஜ், V.A.பழனி சாமி ,கோபி ஒன்றிய குழு தலைவர் மவுலீஸ்வரன், அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தேவ முத்து சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ...

அரசின் காலை உணவுத் திட்டம் துவக்க விழாவில் மொடக்குறிச்சி எம். எல். ஏ:

Image
 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தினை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி  மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  கலந்து கொண்டு விழாப் பேருரை நிகழ்த்தி பள்ளியில் பயிலும் 281 மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளுடன் கூடிய காலை உணவினை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் "ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 178 பள்ளிகளில் பயிலும் 6437 மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு சத்துள்ள ஊட்டச்சத்து உணவுகள் காலையில் கிடைக்கப் பெறுகின்றது. இதன் மூலம் மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி நல்ல உடல் நிலையில் நன்கு கல்வி கற்க முடியும்" என கூறினார். நிகழ்வில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி,பள்ளி தலைமை ...

காலை உணவு திட்டம் தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு

.                                காலை உணவு திட்டம்  தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்  நன்றி பாராட்டு                                      இந்தியாவிலேயே முதல் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும்  31 ஆயிரம் அரசு பள்ளிகளில்  பயிலும் 17 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் திருக்குவளையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் துவக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். கர்மவீரர் காமராஜரால் மதிய உணவு வழங்கப்பட்டது. அது மாணவர்களுக்கு பெரும் நன்மை விளைவித்ததை அடுத்து,  எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சத்துணவாக மாற்றப்பட்டு, பிறகு கருணாநிதி ஆட்சி காலத்தில் வாரம் முழுவதும் முட்டை வழங்கும் திட்டமும், ஜெயலலிதா ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட உணவு வகையும் வழங்கப்பட்டதை பார்த்தோம். இவை அனைத்தும் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் தற்பொழுதைய மு...

தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஈரோடு மாணவ மாணவியர்கள் 19 தேசிய விருதுகளும், 6 சாதனையாளர்கள் விருதுபெற்று அமைச்சரிடம் வாழ்த்து...

Image
 தேசிய அளவில் ஆன்லைனில் ஜூனியர், சீனியர் கேட்டகிரி ஓவிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான தேர்வு சென்னையில் நடைபெற்றது.  நடைபெற்ற ஓவிய போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து அதிகமான மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். அதில் 19 தேசிய விருதுகளும், 6 சாதனையாளர் விருதுகளும் பெறப்பட்டன.  சிறந்த ஆசிரியருக்கான ஜகான் விருது உலக சாதனையாளர் கடுகு ஓவியர் ஜெ. வெங்கடேஷ் அவர்களுக்கு கிடைத்துள்ளது.  விருதுகளை  தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துச்சாமி அவர்கள் முன்னிலையில் விருதுகளை மாணவ மாணவியர்கள்  பெற்றுக்கொண்டனர்.  தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

அரசு பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கி மாணவி படுகாயம்... சிகிச்சைக்கு உதவிட கோரிக்கை

Image
அரசு பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாணவி, எலும்புகள் முறிந்து, காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு உதவி எதுவும் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும்,  சிகிச்சைக்கு உதவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜ் - ஜெனிபரின் மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார்.  ஜோஸ்லின் ஜெனியா என்ற மாணவி கடந்த 5 ஆம் தேதி பள்ளிக்கு சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து அறுந்து தொங்கிய வயரில் இருந்து  மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸ்லின் ஜெனியா படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட...

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வாழ்த்து

Image
சந்திரயான் -3 லேண்டர்  நிலவில் தரையிறக்கம்! மகத்தான சாதனை படைத்துள்ளது இந்தியா... நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையறைந்து உள்ளது இந்த வரலாற்று நிகழ்வை அனைவரும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர் தற்போது சந்திரயான் - 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டா் கலன், நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது. மேலும்,  சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் சாதனம் சந்திரயான் -3 லேண்டருடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால், ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரையிறக்குவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரமடைந்துள்ளது. ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் தோல்வியில் முடிந்த நிலையில், சந்திரயான் -3 லேண்டர் தரையிறக்கம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாறியுள்ள சந்திரயான் -3 லேண்டர் கலன் ...

நிலவில் கால் பதித்தது சந்திரயான் - 3... வெற்றி கரகோஷமிட்ட விஞ்ஞாணிகள்!

Image
 விண்வெளி ஆராய்ச்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் குட்டிப்பையனாக இருந்த இந்தியா இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் மூக்கில் விரல் வைக்குமளவுக்கு ஜாம்பவானாக உருவெடுத்து வருகிறது. 1969 ல் ஆர்யபட்டா என்ற செயற்கை கோளை ரஷ்யா மூலமாக விண்ணில் செலுத்திய இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தில்  2014 ல் மங்கள்யான் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. 2014 செப்டம்பர் 24 ஆம் தேதி மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் நிறுத்தி செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. இந்தியா. அதுவும் மிக குறைந்த செலவில் இந்த சாதனையை இந்தியா செய்தது. அதன் பிறகு பல்வேறு செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டன. சந்திரயான் 2 திட்டத்தில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட லேண்டர் திட்டம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இன்றைய மாலை நேரத்தை இந்தியா சந்திரயான் 3 விண்கலம் இறங்கும் நேரமாக தேதி குறித்தது. ஏற்கனவே சந்திராயன் 2 திட்டத்தில் பாடம் கற்றுக்கொண்ட இந்தியா சந்திரயான் 3 திட்டத்தில் குறைகளை சரி செய்தது. உலகமே சந்திரயான்...

திருப்பூருக்கு ஓணம் வந்தல்லோ.... 29 ம் தேதி விடுமுறை அறிவித்த கலெக்டர்

Image
 திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 29.08.2023 (செவ்வாய்க்கிழமை)  அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்திரவிடப்படுகிறது. என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 29.08.2023 (செவ்வாய்க் கிழமை)  அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து    உத்திரவிடப்படுகிறது.  மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 09.09.2023 அன்று சனிக்கிழமை    பணிநாளாக  செயல்படும்  என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 29.08.2023  (செவ்வாய்க் கிழமை)  அன்று  அரசு அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம், மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள்; குறிப்பிட்ட  பணியாளர்களோடு   செயல்படும்  எனவும்...

பிறப்பு சான்றிதழ் பெற வரும் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளை தந்து அசத்தும் சூலூர் பேரூராட்சி தலைவர்

Image
கோவை சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பிறப்பு சான்றிதழ் பெற வரும் பெற்றோர்களுக்கு சுற்றுப்புறத்தை பேணிக் காக்கும் நோக்கில் மரக்கன்றுகளை கொடுக்கும் பெண் பேரூராட்சித் தலைவரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டு சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் பட்டு வருகிறது இந்த பேரூராட்சியின் தலைவராக தேவி மன்னவன் என்ற பெண்மணி இருந்து வருகிறார் எண்ணற்ற சமூக நலத்திட்டங்களை இந்த பேரூராட்சியில் அறிமுகப்படுத்து வருகிறார் குளங்களை சுற்றிலும் மரங்களை நடுவது கழிப்பிட சுவர்களில் தூய்மையை பேணும் வகையில் ஓவியங்கள் வரைவது எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் இதன் ஒரு பகுதியாக மரங்களை வளர்ப்பதின் அவசியத்தையும் சுற்றுப்புறத்தில் மரங்களை வைத்து தூய்மையான காற்றை பெறுவதற்காகவும் பேரூராட்சியில் பிறப்பு சான்றிதழ் பெற வரும் பெற்றோர்களுக்கு பிறப்பு சான்றிதழ் உடன் ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார் இந்த மரக்கன்றுகளை வாங்கிச் செல்லும் பெற்றோர்கள் தாங்கள் வீட்டில் வைத்து வளர்க்க முடியவில்லை என்றாலும் அதற்காக பசுமை வனம் ஒன்றையும் ஏற்படுத்தி இருக்கிறார் அதில் மரங்களை வைத்து அவர...

மயிலாடுதுறை நகரக் குளங்களில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளில் மக்களின் நலன்கருதி படித்துறை அமைத்துத் தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சிக்கு கோரிக்கை!

Image
*மயிலாடுதுறை நகரக் குளங்களில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளில் மக்களின் நலன்கருதி படித்துறை அமைத்துத் தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சிக்கு கோரிக்கை!* மயிலாடுதுறை நகரத்தில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் உள்ள குளம், சிறைச்சாலைக்கு பின்புள்ள குளம், பெசன்ட் நகர் குளம், மாமரத்து மேடை அருகில் உள்ள குளம் என்று அனைத்து குளங்களிலும் அதன் எல்லை வரையறுக்கப்பட்டு நான்கு புறமும் மக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல நான்கு புறமும் குளத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் தடுப்பு கட்டப்பட்டு அதன் மேல் சில குளங்களில் சிமெண்ட் கற்கள் பதிக்கப்படுவதும், சில குளங்களில் தரைத்தளத்தை மேல் தளைத்தும் இணைக்கின்ற வகையில் சம அளவு இடைவேளையில் சிமெண்ட்  சாய்வு தூண்கள் அமைக்கப்படுவதுடன் மீதமுள்ள இடங்களில் மணல் நிரப்பி பசுமை புற்கள் மற்றும் இடை இடையே நிழல் தரும் அழுகிய வண்ண பூக்களைக் கொடுக்கும் மரங்களை நடவும் திட்டமிட்டிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குளத்தை அழகு படுத்துதல், ...

திருப்பூரில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு நினைவஞ்சலி

Image
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பாக மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு என்றும் மறையாத நாட்டின் உண்மையான தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவஞ்சலி முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு இந்து சேவா சங்க மாநில இளைஞரணி செயலாளர் சி.எஸ் ஆனந்த்ராஜ் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  கார்த்திக்  திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்  ஜெயவேல்  திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சேகர் இவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு இந்து சேவா சங்க நிறுவனத் தலைவர் ஆவடி.ஸ்டாலின்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளராக சனாதன பாரத சேனா நிறுவனத் தலைவர் கொருக்குப்பேட்டை மணி  அவர்களும் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநில ஆன்மீக பிரிவு தலைவர் சதீஷ்குமார் அவர்களும் காஞ்சி மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகர்  அவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் தமிழ்நாடு இந்து சேவா சங்கின் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான சதுரங்கப்போட்டிகள்

Image
 திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகளை காங்கேயம் சாலையிலுள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்துகின்றது. தெற்கு குறுமையத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கிடையேயான மாணவ மாணவியர்கள் 11, 14, 17 - 19 வயதிற்குட்பட்டோர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் காங்கேயம் சாலையிலுள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அனிதா ஜோசப் போட்டிகளை துவக்கி வைத்தார். பிடே ஆர்பிட்டர் கோபி கிருஷ்ணன் மாணாக்கர்களுக்கு விதிமுறைகளை விளக்கிக் கூறினார். குறுமைய கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், லதாமாதேஸ்வரி, சண்முகநதி ஆகியோர் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றது. மாணவர்கள் பிரிவுப் போட்டிகள்  11 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 19 பேர் பங்கேற்றனர். 4 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வேலவன் பள்ளி முதலிடம், எம்.என்.சி.சி பள்ளி இரண்டாமிடம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி மூன்றாமிடம் பெற்றது. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 82 பேர் பங்கேற்றனர். 6 சுற்றுகள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் செயிண்ட் ஜோசப் பள்ளி முதலிடம், இடுவம்பாளையம் அரசுப்பள்...

உங்களுடன் உங்கள் எம்.எல். ஏ. நிகழ்வில் கோரிக்கை மனுக்களை மொடக்குறிச்சி எம். எல். ஏ. பெற்றுக் கொண்டார்....

Image
 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் அரச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  நாச்சி வலசு, குள்ளரங்கம் பாளையம், ஊசி பாளையம், குமாரபாளையம், ஆகிய ஊர்கள் உள்ளன.  இந்தப் பகுதியில்  மொடக்குறிச்சி தொகுதி உங்களுடன் உங்கள் எம் எல் ஏ என்ற நிகழ்வு நடைபெற்றது   நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி நேரில் கலந்து கொண்டு மக்களை சந்தித்தார்.  ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  எம்.எல்.ஏ    அவர்கள் பெற்றுக் கொண்டார்.  பெற்றுக்கொண்ட கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து உடனடியாகநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.  மேலும் இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். Tamil Anjal Reporter Boobalan. 8778258704 : 9443655196

சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Image
 ஈரோடு கொடுமுடி வட்டம் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை தலைமை ஆசிரியர் திரு.ஆ.யசோதா தேவி  கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். சிவகிரி பேரூராட்சி தலைவர் திருமதி பிரதீபா கோபிநாத் சிறப்புரை வழங்கினார்.  கவுன்சிலர் திரு.பெருமாள்  சிறப்புரை வழங்கினார்.  வட்டாரக் கல்வி அலுவலர் திரு.முருகன்  PTA தலைவர் திரு.சந்திரசேரகள் , SMC உறுப்பினர்கள், பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.  சுதந்திர தின விழாவை சிறப்பிக்கின்ற வகையில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.  அனைவரைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. திருமதி பா.கவிப் பிரியா  நன்றியுடன் விழா இனிதே முடிவுற்றது.  தமிழ் அஞ்சல் செய்தியாளர் மகுடபதி 99658 57738

முறைகேடாக 200 குடிநீர் இணைப்புகள்...எம்.எல்.ஏ., பெயரை சொல்லி மிரட்டல்... திமுக பகுதி செயலாளர் மீது முஸ்லிம் லீக் நிர்வாகி புகார்

Image
 திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டில் மக்கள் பணிகளை செய்ய விடாமல் எம்.எல்.ஏ., பெயரை சொல்லி திமுக பகுதி செயலாளர் மிரட்டுவதாகவும், வார்டில் 200 குடிநீர் இணைப்புகளை முறைகேடாக வழங்கி உள்ளதாகவும் திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் சையது முஸ்தபா புகார் தெரிவித்துள்ளார்.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவரும், திருப்பூர் மாநகராட்சி  45 வது வார்டு கவுன்சிலருமான பாத்திமா தஸ்ரினின் தந்தையுமான  சையது முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அவர் கூறியதாவது: 45 வது வார்டில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கினார்கள். அனைத்து கட்சிகளும் முழு மனதோடு வெற்றி பெறச்செய்தார்கள். அதன் பிறகு திமுகவின் பகுதி செயலாளர் உசேன், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கிறார். திமுக எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி அரசு அலுவலர்களை மிரட்டுகிறார். இவ்வாறு 10 முதல் 15 நாட்கள் தாமதம் செய்த பின்னர், அவரே அந்த பணியை செய்வது போல காட்டிக் கொண்டு, முஸ்லீம்  லீக் கவுன...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நம்பியூர் வட்டக் கிளை, 3வது வட்ட பேரவை கூட்டம்.

Image
 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,ஈரோடு மாவட்ட நம்பியூர் வட்ட கிளை சார்பில் 3ஆவது  வட்ட பேரவை கூட்டம் வட்டக்கிளை தலைவர் எம்.மகாலிங்கம்தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்,சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் எம்ஆர் பி செவிலியர்கள்.ஊர் நூலகர்கள், உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும்,சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்றும்அரசுத் துறையில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் எனவும்,பறிக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் சிபிஎப் வட்டி குறைப்பு ஆகிய அரசாணைகளை உடனே திரும்பிப் பெற வேண்டும் என்றும்,நம்பியூர் வட்டத்தில் தலைமை மருத்துவமனை கொண்டு வர வேண்டும்,கருவூலத்துறை வட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில்வட்டத் துணைத் தலைவர் ராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார்,அதனைத் தொடர்ந்து மாவட்ட இணைச்செயலாளர் பழனிச்சாமிதுவக்க உரையும்,வட்ட செயலாளர் கருப்ப...

இனி எப்போ வேணாலும் நூல் விலை உயருமாம்... திருப்பூர் தொழில் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம்.!

Image
 எந்த நேரம்  வேண்டுமானாலும் நூல் விலை மாற்றம் செய்யும் முறைக்கு நூற்பாலைகள் மாறி உள்ளது பனியன் தொழில் வேறு மாநிலங்களுக்கு செல்லும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.  கடந்த ஆண்டில்  அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும்...

பெரியூர் அரசு நடுநிலை பள்ளி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

Image
 இந்திய சுதந்திர தினம் 77 - ம்  ஆண்டை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பெரியூர் அரசு நடுநிலைப் பள்ளியில்  சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.  கொடுமுடி வட்டார கல்வி அலுவலர் திரு ஞானவேல்  கொடியேற்றி வைத்து  தலைமை தாங்கினார்.   தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்புரை நல்கினார்.  இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  அடிப்படை மக்கள் உரிமைகள் குரல்  டாக்டர் P. பாலசுப்பிரமணியம், மெஜஸ்டிக் நிறுவனர்கள், மற்றும் மலையம்பாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில்  மெஜஸ்டிக் நிறுவனம்  மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  மேலும் இந்நிகழ்ச்சியில் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  நன்றியுரை ஆசிரியர் குமார் நல்கினார்.             ...