ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம். ஈரோடு மாவட்ட, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பங்கேற்பு.

கிராமங்களே, நாட்டின் முதுகெலும்பு. கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை மையமாகக் கொண்டு,அடித் தட்டு மக்களின் ஜனநாயக உரிமை களை எதிரொலிக்கும், கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல் படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங் களும் நடைபெறும்.அதே போல், அரசின் அறிவிப்பு மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி,சிறப்பு கிராம சபை கூட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமார பாளை யம் ஊராட்சியில். ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் தலைமையில்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். ரமேஷ், முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில்,ஈரோடு மாவட்ட ஊராட்சி களின் உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு பார்வையாளராக, பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தைப் பற்றியும், அரசின் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும், விரிவாக எடுத்துக் கூறியும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற,பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் பேசினார். கூட்டத்தில்,சத்தியமங்க...