Posts

Showing posts from January, 2026

பழனியாண்டி எம்.எல்.ஏ.,மீது நடவடிக்கை கோரி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Image
 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம். மற்றும் திருப்பூர், தாராபுரம், அவிநாசி, பல்லடம், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஆகிய செய்தியாளர்கள். சார்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கரூரில் நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் கல்குவாரி தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற போது   சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியால்  தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் உடனடியாக திமுக கட்சித் தலைமை அவரை கட்சித் தலைமைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூலிப்படையை ஏவி விட்டு ரவுடிசத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ மீது அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே அவரை நீக்கம் செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையாக வைத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று இப்பகுதி செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,அப்போது செய்தியாளர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் முன்கணப் பணியாளர்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்து பத்திரிகையாளர் ...

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு அமைச்சா் கீதாஜீவன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை.

Image
  தூத்துக்குடி மகாத்மா காந்தி 79வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வடக்கு  மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினாா்.  நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளா் குேபா்இளம்பாிதி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், தொழிலாளா் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மகளிா் தொண்டரணி அமைப்பாளர் பெல்லா, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளா் ரூபராஜா, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், ஜான்சிராணி, நாகேஸ்வாி, அந்தோணிபிரகாஷ் மாா்ஷலின், வட்டச்செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

ஓட்டப்பிடாரம் தொகுதி வளர்ச்சிக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா கனிமொழி எம்.பியிடம் கோாிக்கை மனு வழங்கினாா்.!

Image
  தூத்துக்குடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பினாின் கருத்துக்கள் கேட்டறியும் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியிடம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் முக்கிய தேவையாக கருதப்படும் பல்வேறு கோரிக்கைகளை ஓட்டப்பிடாரம் தொகுதியின் வளர்ச்சியாக கருத்தில் கொண்டு 13 முக்கிய கோரிக்கைகளான  இப்பகுதி மக்களின் கல்வி, விவசாயம், மீன்வளம், விளையாட்டு, தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இப்பகுதியில் அனைத்து விளையாட்டு வீரர்கள...

"கரூா் சம்பவத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் விஜயை கைது செய்திருப்பாா். முதல்வா் ஸ்டாலின் காிசனம் காட்டியிருக்கிறாா்" - தூத்துக்குடியில் திரைப்பட தயாாிப்பாளர் பி.டி.செல்வக்குமாா் பேட்டி.!

Image
  நடிகரும் தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான திமுகவை சேர்ந்த பி.டி.செல்வகுமார் தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- "நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர் தான் மகன் வளர்ச்சிக்கு முழு காரணம், முக்கிய காரணம். ஆனால் சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. விஜய் கூட இருக்கக்கூடிய உறவை முறிப்பதற்கு சந்திரசேகர் விரும்பமாட்டார். ஆனால் மகன் விஜய், தந்தை சந்திரசேகரை விட்டுக் கொடுத்து விட்டார். ஜனநாயகன் படத்தை பொறுத்தவரை படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே  முடிந்துவிட்டது. சென்சார் பிரச்சினையை தீர்க்க வேண்டியது படக்குழு தான் சென்சார் பிரச்சனையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்து இருக்க வேண்டும், பழி போடுவது ஈசி.., ஆனால், மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. திமுக, பாஜக யாரும் படம் வௌியிடுவதை தடுக்கவில்லை. ஆர்கே செல்வமணி படம், விஸ்வரூபம் போன்ற பல படங்கள் ர...

திருப்பூரில் உலகதரத்தில் கிரிக்கெட் மைதானம் ஜீ3 ஸ்போர்ட்ஸ் தொடக்கம்!

Image
திருப்பூர் அருகே கணியம்பூண்டி ஜீ3 ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மாநில அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.  இதில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றுள்ளனர்.   திருப்பூர் அருகே  கணியாம்பூண்டி ஜீ3 ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் திருவிழா  நடைபெற்று வருகிறது.இந்த கிரிக்கெட் போட்டியில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றுள்ளன.இந்த போட்டியானது கடந்த 21 ஆம் தேதி முதல் வருகிற பிப்ரவரி- 01 தேதி வரை தினமும்  காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மூன்று அணிகளுக்கு லீக் முறையில் மேட்ச் நடைபெற்று அதில் ஒரு அணி மட்டும் குவாட்டர் பைனலுக்கு தகுதி பெருகிறது இதன் அடிப்படையில் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற போட்டிகளில்  சிவகங்கை, கோவை, தர்மபுரி,திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி திருப்பூர் உட்பட 8 அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று விறுவிறுப்பான  காலிறுதி ஆட்டமும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியும் முறையில் நடைபெறுகிறத...

திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது: கனிமொழி எம்.பி பேட்டி!

Image
  2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் குழு தலைவரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்கள் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், விவசாயிகள், தொழிலாளர்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியோர் கோரிக்கை மனுக்களை குழுவிடம் அளித்தனர். பின்னர் கனிமொழி கூறியது: "திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாகத் தந்து வருகிறார்கள்."ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்...

"தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் பலி"அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி புகார் - திமுகவினர் எதிர்ப்பு!

Image
தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் விபத்தில் உயிரிழந்தாக அதிமுக உறுப்பினர் புகார் கூறிய நிலையில், திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.  தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியின் 25ஆம் ஆண்டை எதிர்நோக்கி வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  திரு வி க நகரில் இருந்து மீன்வளக்கல்லூரி வரை புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் இருந்து ரோச் பூங்கா வரையில் உள்ள சாலை ஹெல்த் வாக் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு மகளிர் பூங்கா திறக்கப்பட உள்ளது. மச்சாது பாலம் சீரமைக்கப்பட உள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு திட்டம் சிறப்பாக நடைமுறையில் உள்ளது.  ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தனி நபருக்காக தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போதைய ஒப்பந்த...

ராகுல்காந்தியை பிரதமராக அமரவைக்க வேண்டும்.. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நிவேதிக் ஆல்வா பேச்சு

Image
ராகுல் காந்தியை இந்திய பிரதமராக அமர வைக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதி ஏற்க வேண்டும். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர். நிவேதித் ஆல்வா காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தார். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் நியமனத்திற்கு நன்றி அறிவிக்கும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் புதிய வடக்கு மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர். நிவேதிக் ஆல்வா கலந்துகொண்டு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் எதிர்வரும் தேர்தல் என்பது மிகவும் நெருக்கடியான தேர்தல் என்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இந்திய பிரதமராக அமர வைக்க ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டரும் உறுதியற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து புதிதாக வடக்கு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குண்டடம...

முதலாவது இன்டராக்ட் மாநாட்டில் நடந்த போட்டியில் அம்மாபாளையம் நடுநிலை பள்ளிக்கு 3 கோப்பைகள்

Image
  அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்கம்  மற்றும்  ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் ரோட்டரி சங்கம், அவிநாசி ரோட்டரி சங்கம், காரமடை ரோட்டரி சங்கம், பவானி கார்பெட் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து  நன்மைக்காக ஒன்றிணைவோம் என்ற கொள்கையை அடிப்படையில் ரோட்டரி  மாவட்டம் 3203 ன்  முதலாவது இன்டராக்ட்  மாநாடு 2026 அவினாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி ஸ்கூல் வளாகத்தில் நடந்தது. மாநாட்டிற்கு அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.   ரோட்டரி மாவட்ட பயிற்சியாளர் இளங்குமரன், ரோட்டரி மாவட்ட ஆலோசகர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர்  தனசேகர் மாநாட்டை தொடங்கி வைத்து,  அனைத்து பள்ளிகளின்  இன்டராக்ட்  மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மாநாட்டில் அவிநாசி சாந்தி பள்ளி, கேம்பிரிட்ஜ், திருப்பூர் சுப்பையா, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் உயர்நிலைப்பள்ளி உள்பட 35 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 750 இன்டராக்ட்  மாணவ மாண...

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு - VOC துறைமுகம் கூட்டு முயற்சியில் கப்பல் கட்டும் தளம்.!

Image
  தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க VOC துறைமுகம் தமிழக அரசுடன் கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது இந்தியாவின் கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக தூத்துக்குடியில் ஒரு மெகா கப்பல் கட்டும் தளத்தை அமைக்க ஒரு சிறப்பு நோக்க வாகனத்தை (SPV) உருவாக்கியுள்ளதாக வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆனையம் தெரிவித்துள்ளது. இந்த Special Purpose Vehicle VOCPA மற்றும் தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) இடையே 50:50 கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டதாக துறைமுக ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை செப்டம்பர் 2025 இல் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட அடிப்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) பின்பற்றுகிறது என்றும் மேலும் இந்தியாவின் கடல்சார் துறையை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.  இந்தியாவின் வணிகக் கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த தூத்துக்குடியில் ஒரு மெகா கப்பல் க...

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தவறவிட்ட 35 பவுன் நகை- காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்.!

Image
  தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 35 பவுன் நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை போலீசார் பாராட்டினர்.  தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் தூய்மை பணியாளர் மீனாட்சி  என்பவர் நடைமேடை உள்ள டஸ்ட்பின் பாக்ஸை சுத்தம் செய்த போது அதில் கிடந்த மணிப்பர்சை எடுத்துப் பார்த்தபோது தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பர்சை சுகாதார இன்ஸ்பெக்டர்  முருகனிடம் ஒப்படைத்தார்.  பின்னர் ஆர்பிஎப் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமாரிடம் ஒப்படைத்தனர். அந்த மணி பர்சில் 35 பவுன் நகை இருந்தது. விசாரணையில் அந்த நகைகளுக்கு உரிமையாளரான கண்ணன் (56) வடசென்னை அனல் மின் நிலையத்தில்  வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார் என  தெரியவந்து. பின்னர் செல்போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனர் இதனால் மகிழ்ச்சி அடைந்த கண்ணன் இன்று மாலை தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு குடும்பத்துடன் வந்து  நகைகளுக்கு உரிய ஆதாரங்கள் மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்கான ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு 35 பவுன் நகைகளை இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஒப்படைத்தனர...

தூத்துக்குடி தொழிலதிபர் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

Image
  தூத்துக்குடி சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு துறைமுக நகரங்களில் SEA PORT LOGISTICS (SEAPOL) என்ற பெயரில் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களை திறம்பட நடத்தி வந்தவர் M.S. தாஜுதீன். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணமாகும். 1942 ம் ஆண்டு தூத்துக்குடி எம்பரர் தெருவில் A.M. Ahamed & Co என்னும் ஷிப்பிங் நிறுவனத்தை நிறுவிய பங்குதாரர்களில் முக்கியமானவராவர். இந்த நிறுவனம் பின்னர் பெருமளவில் வளர்ந்து தூத்துக்குடியில் ஆயிரக்கணக்காண தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி தூத்துக்குடியின் ஒரு அடையளமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாது இருந்த அவர் இன்று காலை காலமானார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:- "சமூகநல ஆர்வலரும், இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளருமான M.S.தாஜுதீன் அவர்கள் இன்று மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் மனம் வருந்தினேன். இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ளியை நிறுவி பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் துணை நின...

தூத்துக்குடி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாகி இன்றோடு 39 ஆண்டுகள் ஆகின்றன.!!- தூத்துக்குடி மாவட்டத்தைப் பற்றிய சில சுவையான தகவல்களை இங்கே.!!

Image
  • கடும் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீரை தூர்த்துக் குடித்ததால் தூத்துக்குடி என்று பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. • ஒருகாலத்தில் தூத்துக்குடி நகர சபை தலைவராக இருந்த திரு. குரூஸ் பர்னாந்து முயற்சியால்,  இலங்கையிலிருந்து கப்பலில் தண்ணீர் கொண்டுவரப்பட்ட ஊர். பின்னர் 1920-களுக்குப் பிறகுதான், தாமிரபரணி ஆற்று நீர் வல்லநாடு வழியாகத் தூத்துக்குடிக்குக் கொண்டுவரப்பட்டது. • தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் வீரச் செறிவும், இலக்கியச் செறிவும், நுண்கலைச் செறிவும் வற்றாத ஊர் தூத்துக்குடி. • பாண்டியர்களின் துறைமுகமாகவும் முத்துகுளித் துறையாகவும் விளங்கிய கொற்கையின் அஃக சாலை தெருவில்  நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. •  இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர் எனும்  ஒரு புராதன பண்பாட்டுச் சின்னம் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் உள்ளது. • சங்கக் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம் தூத்துக்குடியின் பரதவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. •  தாலமி எனும் கிரேக்கப் பயணி தனது பயணக் குறிப்பில் "சோஷிக் குரி' (சிறு குடி) என்று தூத்துக்குடியைக் குறிப்பி...

தூத்துக்குடி :அடையாளம் தெரியாத நபர் தூக்குபோட்டு தற்கொலை - அழுகிய நிலையில் மீட்டெடுப்பு.!

Image
  தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்கா அருகே பாழடைந்த  கட்டிடத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா அருகில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது.  உடலை மீட்டு போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து பல நாட்களுக்கு மேல் இருப்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்து. அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலாறு வேளாண்மை கல்லூரி குடியாத்தம் குழு மாணவிகளின் வேளாண் அறிவியல் கண்காட்சி - வேளாண் இணை இயக்குநர் பங்கேற்பு.!

Image
  பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டம் மூலம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் செங்குன்றம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் கண்காட்சிக்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து இருந்தனர். கண்காட்சியில் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, பல்லுயிர், காற்றாலை, விளிம்பு விவசாயம், காற்று மாசுபாடு, உரக்கடை, உழவன் செயலி,காய்கறி தோட்டம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, அசோலா, பிளாஸ்டிக் தழைக்கூளம், மழை நீர் சேகரிப்பு, போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த மாடல்கள் இடம்பெற்றன. பாரம்பரிய விதை இரகங்கள்,வண்ண வண்ண பதாகைகளும் இடம்பெற்றன. அதில் வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம்பெற்றன. கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக வேளாண்மை துணைஇயக்குநர் ர.உமாசங்கர், இணை பேராசிரியர் நா.அ.சரவணன், மற்றும் தலைவர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மேலாலத்தூர், சம்பத் நாயுடு, APC மெம்பர் வேலூர் ,மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி முனைவர். நா.தமிழ்செல்வன், பேராசிரியர் வேளாண் உழவியல் துறை, முனைவர்.வெண்ணிலா மேரி, உதவி பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, முனைவர். க.அருள்மணி, உதவி...

தூத்துக்குடியில் 9ம் வகுப்பு மாணவன் ஓட்டிச்சென்ற பைக் விபத்திற்குள்ளானதில் மாணவர் உயிரிழப்பு.

Image
  பைக்கில் டியூசன் சென்றபோது சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் பின்சீட்டில் இருந்து கீழே விழுந்த மாணவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு தூத்துக்குடி அண்ணா நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அகமது யாவித் (14), இவர் தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 8:30 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மின்சார பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.  பண்டுகரை பக்கிள் ஓடை, பர்மா காலனி சாலையில் சென்றபோது வாகனம் திடீரென விபத்துக்குள்ளானதில் அகமது யாவித் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மாணவன் சென்ற வாகனம் மீது ஏதோ ஒரு வாகனம் மோதி விட்டு சென்றதாக அப்பகுதியில் உள்ள சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய...

"உயிர் உள்ளவரை த.வெ.க.தான்... விஜய் தான் எனது நிரந்தர தலைவர் " - தமிழ் அஞ்சல் செய்திக்கு அஜிதா ஆக்னல் மறுப்பு.!

Image
  தூத்துக்குடி மாவட்ட முன்னாள் த.வெ.க பொறுப்பாளராக அறியப்பட்டவர் அஜிதா ஆக்னல். த‍.வெ.க வளர்ச்சிக்கு மாவட்டத்தில் பம்பரமாக சுழன்று சுழன்று பணியாற்றியவர். இந்நிலையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளருக்கான வேட்பாளர் பட்டியலில் SDR சாமுவேல்ராஜ் பெயர் அறிவிக்கப்பட்டதில் அப்செட் ஆன அவர்  தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை எனக் கூறி தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்துப் போராடியது, பின்னர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது என கடந்த மாதம் தமிழகத்தின் பரபரப்பு செய்தியில் இடம் பிடித்தார். இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியனின் நினைவு தினத்தில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வத்திருந்த பொற்கொடியை,  தூத்துக்குடி தவெக பிரமுகர் அஜிதா நேரில் சந்தித்து அறிமுகபடுத்திக் கொண்டார். பின்னர் வட சென்னை மேற்கு மாவட்ட 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' கட்சியின் சிறுபான்மை அணி சார்பாக மாவட்ட செயலாளர் முகமது நாசீர் தலைமையில் ஓர் மாபெரும் நலத்திட்ட விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தவெக மீது விரக்...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்தல் மற்றும் நிறுவுதல் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு.!

Image
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதால் இப்பொருட்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு கீழ்க்கண்டவாறு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்படுகிறது. அதன்படி *1.  Breathing Analyzer – 53* *2.  Ahuja AM 22 HSD mega phone PA system - 09* *3.  3 mm reflecting tape 50 mm x 50 Meter red colour - 40*  *4.  3 mm reflecting tape 50 mm x 50 Meter yellow colour - 40* *5. Reflecting jacket red colour with police Logo - 80* *6. Short type Baton light(Battery model)- 80* *7. Charger Light - search Light 15w powerful LED Light 1000m Range - 66* *8. Barricade - 262* *9. 12 Handiy Camera - 12* ஆகிய பொருட்கள் மேற்படி எண்ணிக்கையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேற்படி உபகரணங்களின் விபர குறிப்பு 10.02.2026 அன்று வழங்கப்படும், எனவே ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பிற்கு ஒப்பந்த நிறுவனங்கள், கொள்முதல் செய்ய உள்ள பொருட்களின் தரம் மற்றும் ஒப்பந்த புள்ளி குறித்து வருகின்ற 16.02.2026 அன்...

தூத்துக்குடி : குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.!

Image
தூத்துக்குடியில் கடலில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள கீதாஜீவன் நகரைச் சேர்ந்த கதிரேசன் மகன் முகேந்திரன் (12), அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பும், ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீ கார்த்திக் (13) 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த வனராஜ் மகன் திருமணி (14 ) தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு  படித்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை குடியரசு தினத்தை ஒட்டி பள்ளி விடுமுறை என்பதால், இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர்  வீட்டில் கபடி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு, தாளமுத்து நகர், சிலுவைபட்டி மிக அருகே உள்ள மொட்டை கோபுரம்  கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது கடலில் ராட்சத அலை எழுந்ததாக  கூறப்படுகிறது. இதனால் அருகில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் வெளியில் வந்து விட்டனராம். ஆனால் ஆழமான பகுதிக்கு சென்ற  4 பேர் சிக்கிய நிலையில், ஒரு மாணவரை அப்பகுதியில் நின்ற மீனவர் உடனடியாக மீட்டு உள்ளார். மற்ற மூன்று பேரு...

விரைவாக நடைபெறும் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகள் - தெப்பக்குளத்தில் இருந்த 10 அடி தண்ணீர் வெளியேற்றம் மேயா் ஜெகன்பொியசாமி நடவடிக்கை

Image
  தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் இந்துசமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் பெருமாள் கோவில், முத்தாரம்மன் கோவில், கீழுா் பத்திரகாளியம்மன் கோவில், மாாியம்மன்கோவில் சிவன்கோவில் உள்ளிடங்கிய ஆன்மீக தலம் நிறைந்த பகுதியில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் சிவன்கோவில் மேற்பார்வையில் உள்ள தெப்பக்குளம் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் தெப்பக்குளம் கட்டப்பட்டு சுமாா் 140 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாத காரணத்தினால் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் நவீன முறையில் புதுப்பிக்க வேண்டும் என்று தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும ஆன்மீக அன்பா்கள் சாா்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.  அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி அதுபோல சிவன் கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து மாநகராட்சி சார...

தூத்துக்குடி: குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

Image
  தூத்துக்குடி இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை (1935) பின்பற்றி வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டம் கைவிடப்பட்டு இந்தியா தனக்கென அரசியலமைப்பை உருவாக்கி அதை ஏற்றுக்கொண்டது. இது இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா மாறுவதை குறிப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நடைபெற்ற 77வது குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார்.  விழாவில் கலெக்டா் இளம்பகவத் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப்புறாக்களை பறக்கவிட்டார். மேலும்,  615 மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பள்ளி மாணாக்கர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பின்னா் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வாரிசுதாரர்...

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் - குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை.

Image
  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா தலைமை வகித்தாா். மேயர் ஜெகன் பெரியசாமி 100 அடி உயர மின்கம்பத்தில் தேசிய கொடியேற்றிவைத்து மாியாதை செலுத்தி ஆரஞ்சு மிட்டாய் வழங்கினார். இணை ஆணையா் சரவணக்குமாா் வரவேற்புரையாற்றினாா்.  தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டில் பணியாற்றிய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்களிடையே தேசிய வாக்காளர் தின நாளை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலமிடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட  நகர்புற வாழ்வாதார மைய பணியாளர்கள் மாநகராட்சி வளர்ச்சியில் பங்கெடுத்த தன்னாா்வலா்கள் உள்பட 98 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்:- வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரம் அடைந்தோம். பின்னர் குடியரசு தினத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பொறுப்பேற்ற காலத்தில் இருந்த நெருக்கடிகள் இன்னல்கள் எல்லாவற்றையும் கடந்து மூன்றுரை வருடத்தையும் கடந்து விட்...

50 - க்கும் மேற்பட்ட பா.ஜ.க மகளிர் அணியினருடன் பக்திப் பெருக்குடன் விரதத்தைத் துவங்கினார் எம்.எல்.ஏ வானதி !!!

Image
 *கோவையில் "அரோகரா" முழக்கம் : 3-வது ஆண்டாகப் பழனி முருகனுக்கு மாலை அணிந்தார் எம் எல் ஏ வானதி சீனிவாசன் !!!* தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோவையில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று காலை முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து தனது ஆன்மீக விரதத்தைத் துவங்கினார்.  கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று அதிகாலை இதற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதை ​தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பழனி முருகனைத் தரிசிப்பதற்காக மாலை அணிந்து உள்ள வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, இன்று காலை கோவிலுக்கு வந்து முருகப்பெருமானுக்குப் அபிஷேக ஆராதனைகளைச் செய்தார். பின்னர், கோவில் அர்ச்சகர் முன்னிலையில் "அரோகரா, அரோகரா" என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே அவர் முறைப்படி மாலை அணிந்து கொண்டார்.  அவருடன் பா.ஜ.க மகளிரணியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் தொண்டர்களும் பக்திப் பெருக்குடன் மாலை அணிந்து, பழனி விரதத்தைத் தொடங்கினர். ​இது குறித்துப் பேசிய எம் எல் ஏ வானதி சீனிவாசன்,...

சென்னையில் மாற்றுகட்சியை சேர்ந்தவா்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்.!

Image
  தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மாற்று கட்சியை சேர்ந்த வட சென்னை தெற்கு மேற்கு மாவட்டம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 99 வது வார்டை சேர்ந்த தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட சக்திவேல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களைக் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம் உடனிருந்தார்.

"தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - வீரவணக்க நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் பேச்சு.

Image
  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் அண்ணாநகர் சந்திப்பு டூவிபுரத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். அமைப்பு சாரா ஓட்டுநா் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகர், பகுதி செயலாளர்கள் முருகன், சேவியா், சுடலை மணி, சந்தனப்பட்டு, மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் திருச்சிற்றம்பலம், மாணவரணி இணைச்செயலாளர்கள் தினேஷ், முத்துச்செல்வன், துணைத் தலைவர்கள் முகம்மது காலிப் உசேன், டேவிட் ஜெபசீலன், பொருளாளர் முத்துக்குமாா் துணைச்செயலாளர் ஈஸ்வா் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சிவரத்தினம் வரவேற்புரையாற்றினார்.  தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில் மொழிப்போர் என்ற காலம் இந்தியை எதிர்த்தும் தமிழ்மொழியை வளர்க்கும் விதமாக தியாகம் செய்து இறந்தவர்களுக்கு அதிமுக சார்பில் வீரவணக்கநாள் செலுத்தும் தகுதி பெற்றுள்ளது. அதிமுக ஆட்சி சிறப்பாக மக்களுக்கான திட்டத்தோடு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்தார்.  2026ல் நடைபெறவ...

பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபத்தால் பகுதி மக்கள் பரிதவிப்பு - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட SS.மாணிக்கபுரம் (குடியிருப்பு) பகுதியில் அமைந்துள்ள ஜோசப் ஜெயராணி (JJF) மஹாலில் சுப தின விஷேசங்கள் நடக்கும் போதெல்லாம் அந்த 60 அடி சாலையில் வாகன நெருக்கடி ஏற்படும் விதமாக "விழாவிற்கு வருகின்ற வாகனங்கள்" நிறுத்தப்படுகிறது.  குடியிருப்பு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலையும் மறித்து வாகனம் நிறுத்துவதால் வீட்டு உரிமையாளருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாய் வார்த்தையால் சலசலப்பாகி கை கலப்பாகவும் (அடிதடியாகவும்) மாறுகிறது. சவுண்ட்ஸ் சத்தமும், வெடி சத்தமும் பகுதி மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை தருவதாகவும், சுப விழாவிற்கு வரும் மது பிரியர்களின் அட்டூழியம் மரண பயத்தை கொடுப்பதாகவும் பகுதி சார்ந்த பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். இது மாணிக்கபுரத்தில் மட்டும் அல்ல, குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் எங்கெல்லாம் திருமண மண்டபம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த அபாய நிலையும், அவல நிலையும் தொடர்கிறது என்பதை மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் கவனத்தில் கொள்வது அவசியமாகி உள்ளது.  "நடவடிக்கை எடுப்பார்களா? நழுவி கொள்வார்களா?" - என்...

"தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது" - பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு.

Image
  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் ஊராட்சி பகுதிகளில் கிராமசபை கூட்டம்் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதிகளில் பகுதிசபா கூட்டம் நடைபெற வேண்டும். என்று தலைமை செயலாளர் உத்தரவிற்கிணங்க ஓவ்வொரு வாா்டு பகுதிகளிலும் 5 பகுதி சபா உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கோாிக்கைகள் குறைபாடுகளை பகுதி சபா கூட்டத்திலும் பொதுமக்கள் நலன் கருதி அரசு சாா்ந்த மாநகராட்சி அதிகாாிகள் அலுவலா்களிடமும் தொிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வாா்டு பகுதி சபா கூட்டம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேயா் ஜெகன் பொியசாமி கூட்டத்தில் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி நிா்வாகத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்ட பின் 46 மாத காலத்தில் 60 வாா்டுகளிலும் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பணிகளும் பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாதம் ஓருமுறை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினா்கள் ...

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

Image
  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட  துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன்,  மாநில பொறியாளா் அணி துணைசெயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், ஓன்றிய செயலாளா் சின்னப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ரவீந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிா்அணி அமைப்பாளா் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், துணை அமைப்பாளர் கோகுல்நாத், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, சிறுபான்...

40 வருடமாக ஆக்கிரமிப்பு : பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு புதிய சாலை - எட்டையாபுரம் ரோடு டு மேலூர் ரயில் நிலையம் செல்லும் வகையில் புதிய சாலை. மேயர் ஜெகன் பொியசாமி திடீர் ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு பாதைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ஓன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து வருகிற 26ம் தேதி முதல் மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்று ஓன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து  பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் களத்தில் இறங்கினார். முதலில் எட்டையாபுரம் ரோடு மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் கீழே உள்ள ஆக்கிரமிப்பு பார்வையிட்டு அந்த ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கப்பட்டால் எட்டையாபுரம் ரோட்டில் இருந்து மேலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.  உடனடியாக 40 வருடமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் ஆக்...

தூத்துக்குடி –திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்தன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எல்.முருகனிடம் அளித்த கோாிக்கை மனுவில்  கூறியிருப்பதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களும் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமைக்கு, தூத்துக்குடி மாவட்ட மக்களின் சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆன்மிகப் பயணிகள் அதிகளவில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். ஆனால், நேரடி மற்றும் வசதியான ரயில் சேவைகள் போதிய அளவில் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு...