நம்பியூர் அருகே திட்டமலை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் உயிரிழந்தார் 7 கல்லூரி மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நம்பியூர் அருகே திட்டமலை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் உயிரிழந்தார் 7 கல்லூரி மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள திட்டமலை அருகே அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவடைந்து கல்லூரி மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நம்பியூரில் இருந்து ஒரு ஜீப் பொலிரோ வாகனம் அவ்வழியாக வந்துள்ளது. அப்போது காரை நிறுத்திய ஓட்டுனர் ரங்கசாமி நடந்து சென்ற மாணவர்களிடம் காரில் ஏறுமாறும் நான் குன்னத்தூர் தான் செல்கிறேன் கெட்டிச் செவியூர் பகுதியில் இறக்கிவிட்டு செல்வதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த ஜீப்பில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஏறி சென்றுள்ளனர். இதனை அடுத்து கார் திட்டமலை முருகன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப் ஓட்டுநர் ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் ...