Posts

Showing posts from December, 2023

வங்கிக் கணக்கில் வெறும் ₹500 மட்டுமே வைத்திருந்த விவசாயிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை! - அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்!

Image
 வங்கிக் கணக்கில் வெறும் ₹500 மட்டுமே வைத்திருந்த விவசாயிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை! - அமலாக்கத்துறைக்கு வலுக்கும் கண்டனம்! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய 2 விவசாயிகளுக்கு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு கண்டனம் வலுக்கிறது! காரணத்தையே குறிப்பிடாமல், ஜூலை 5ம் தேதி இருவரும் சென்னைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்னை சென்றுள்ளனர் அப்பாவி விவசாயிகள். பாஜக நிர்வாகி உதவியுடன் தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. வங்கியில் ₹500 மட்டுமே வைத்திருந்தவர்களிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி-யிடம் புகார்!

கோவை வடவள்ளி ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் புதிய பல்சர் N150 அறிமுக விழா

Image
கோவை வடவள்ளி   ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் புதிய பல்சர் N150 அறிமுக விழா நடைபெற்றது கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் புதிய பல்சர் N150 அறிமுக விழா நடைபெற்றது. அனன்யா குருப் தலைவர், நிர்வாக இயக்குனர் யுவராஜ், உமா, மகேஸ்வரி யுவராஜ் ஆகியோர்  தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு  புதிய பல்சர் N150 பைக்கினை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.  விழாவில் ஜெய்கிருஷ்ணா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் .பிரதீப் துரைராஜ் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில்,கொங்கு மண்டலத்தின் முன்னனி பைக் ரைடர்ஸ், பஜாஜ், இன்சூரன்ஸ், நிதி நிருவனத்தினர்,கோவை இருசக்கர வாகன தொழில்நுட்ப பணியாளர் சம்மேளன நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

இலவச கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டாக்டர்.சி.சரஸ்வதி

Image
   இலவச கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. டாக்டர்.சி.சரஸ்வதி  ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் காசிபாளையம் கிழக்கு மண்டல் சார்பில் கருங்கல்பாளையம் பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளினை நல்லாட்சி தினமாக கடைபிடிக்கும் விதமாக நமது கட்சியும் அரசன் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் அறுவை சிகிச்சை முகாம், இலவச கண்ணாடி வழங்கும் விழா கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதி டிவைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்வில் நமது  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி மற்றும் மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். இதில் மண்டல் தலைவர் ஸ்ரீதர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் செல்வமணி, மாவட்ட செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜி. தேவபிரகாஷ், வைதேகி, மண்டல் துணைத் தலைவர் தனுஷ், மண்டல் செயலாளர் பரணி, பொதுச் செயலாளர்கள் நேதாஜி, சண்முகசுந்தரம், மண்டல் பொருளாளர் சந்திரன் மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதி - தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பாராட்டு !

Image
 மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதி - தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பாராட்டு ! ஒன்றிய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. - சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் பணிகள் " - மாப்பிள்ளையூரணி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு.!

Image
 "தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் பணிகள் " - மாப்பிள்ளையூரணி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு.!  தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி,இன்று (31.12.2023) நேரில் சென்று பார்வையிட்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இருதினங்கள் அதிகனமழை பெய்த காரணத்தினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களை மழைநீர் சூழ்ந்திருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக மாநகராட்சி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சித்துறை ஆகிய துறைகள் மூலம் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின் மோட்டார்களைக் கொண்டு வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று (31.12.2023) தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்ச...

முதலமைச்சர் உத்தரவின்படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது " -மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்

Image
"முதலமைச்சர் உத்தரவின்படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது " -மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்  தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூர் வட்டம் புன்னக்காயல் நியாய விலைக்கடையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட 5 கிலோ அரிசி மற்றும் ரூ.6,000/- நிவாரணத்தொகையை பொதுமக்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் இன்று (31.12.2023) வழங்கினார் புன்னக்காயல் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 13 பேர் கழிமுகப்பகுதியில் தங்கள் உயிரை துச்சமாக கருதி மணல்மேட்டை அகற்றியதால் அதிகனமழையினால் பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. அவர்களை அரசு பாராட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிகனமழையால் புன்னக்காயல் பகுதியில் படகு, மீன்பிடி வலை, தூண்டில் வளைவு, சாலைகள் சேதமடைந்துள்ளன. ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 7 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை தற்காலிகமாக சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அதிகனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு ப...

தூத்துக்குடி மாவட்ட கனமழை: பாதிப்புக்குள்ளான மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு.!

Image
 தூத்துக்குடி மாவட்ட கனமழை: பாதிப்புக்குள்ளான மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு.! தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதி மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பார்வையிட்டு இன்று (31.12.2023) ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து முத்துநகர் காய்கறி மார்கெட்டில் இருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் பணியினை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய உரிய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்கள். மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக 5 கிலோ அரிசி பை 1000 மூட்டைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார். இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி நகர்...

தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து 8 மணி நேரம் பதினைந்து நிமிடம் 44 மாணவ மாணவிகள் இணைந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை

Image
தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து 8 மணி நேரம் பதினைந்து நிமிடம் 44 மாணவ மாணவிகள் இணைந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை… கோவை இடையர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அவனி சிலம்ப கலை பயிற்சி மையத்தி்ல்   தமிழக பாரம்பரிய கலையான சிலம்பம்  உள்ளிட்ட கலைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்..இந்நிலையில் இதில் பயிற்சி பெற்று வரும் பள்ளி,கல்லூரி மற்றும் சிலம்பம் விளையாட்டு ஆர்வலர்கள் இணைந்து புதிய நோபல் உலக சாதனையை நடத்தி உள்ளனர்.அதன் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் சுமார் நான்கு வயது முதல் முப்பது வயதிலான மாணவ,மாணவிகள்,ஆண்கள் பெண்கள் என 44 பேர் இணைந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் பதினைந்து நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.பயிற்சியாளர் சுந்தரபாண்டி,. தலைமை ஆசான் கருப்புசாமி ,மற்றும்  பயிற்சியாளர் அறிவானந்தம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ், தீர்ப்பாளர் சிவ முருகன் ஆகியோர்  சாதனை சான்றிதழ்களை அனைவருக்கும்...

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

Image
  ஈரோடு மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டமானது மாநிலச் செயலாளர் பி.வீரமணி தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது மாநில செய்தி தொடர்பாளர் எம்.கலைவாணன் மேற்கு மண்டல செயலாளர் கே.பழனிச்சாமி ஆகியோர்  சங்கத்தின் நாட்காட்டி வெளியிட்டு சிறப்புரையாற்றினர் மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி மாவட்ட செயலாளர் என்.செல்வராஜ் மாவட்ட பொருளாளர் பி.செல்வகணேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.இராச அம்சன், சி.தட்சிணாமூர்த்தி மற்றும் ஏனைய நிர்வாகிகள் ரகுநாதன், சுரேஷ், சாந்து பாட்ஷா, வெள்ளிங்கிரி, கல்பனா, விமலா, தினேஷ்குமார், அசோக்குமார், செந்தில் குமார், கோமதி, கலைவாணி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இக்கூட்டத்தில்   சென்ற கல்வி ஆண்டில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் மாணவர்களை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைத்த கணினி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது மேலும்  அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வழங்கி ...

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம்பியூர் பஸ் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்து அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டுஅஞ்சலி செலுத்தினார்கள்*

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும் திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம்பியூர் பஸ் நிலையம் அருகில் ஊர்வலமாக வந்து அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு விஜயகாந்த் அவர்களின் திருவுருவ படத்திற்கு அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

கோவை , வரதராஜபுரம், கே.ஜி.கார்டன் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில், ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய நட்சத்திரமாகிய இன்றைய தினம் குரு பூஜை மற்றும் நாகசாந்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது

Image
கோவை , வரதராஜபுரம், NG ராமசாமி மேல்நிலைப்பள்ளி பின்புறம்,எல்.ராமசாமி நகர் ,கே.ஜி.கார்டன் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில்,  ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய நட்சத்திரமாகிய இன்றைய தினம் குரு பூஜை,,மற்றும் நாகசாந்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது… கோவை , வரதராஜபுரம் எல்.ராமசாமி நகர்,கே.ஜி.கார்டன்  பகுதியில் பக்தர்கள் அனைவராலும்  ஃபாரின் விநாயகர் என அழைக்கப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர்  கோவில் உள்ளது..கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து  கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளும் பிரார்த்தனைகளும் உடனுக்குடன் தீர்ந்து கோவையில் மிக சக்தி மிக்க கோவிலாக உள்ள இந்த கோவில் வளாகத்தில் அனைத்து ராசிகளுக்குமான செடிகள் கொண்ட ஆன்மீக தோட்டம் அமைந்துள்ளது..அதே போல  கோவில் வளாகத்தில்,, பாரின் விநாயகர்,ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் , ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணர்,ஸ்ரீ அகத்திய மகரிஷி , ஸ்ரீ கோமாதா மற்றும் ஸ்ரீ காமதேனு, ஸ்ரீ ஐஸ்வர்யேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவையின் சிறப்பு வாய்ந்த கோவிலாக இருந்து வருகின்றது . இந்நிலையில், ஸ்ரீ...

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை வலியுறுத்தும் புதிய முயற்சியாக "ஈட்ரைட் மில்லட் யோகா" நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

Image
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை வலியுறுத்தும் புதிய முயற்சியாக "ஈட்ரைட் மில்லட் யோகா" நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. பொது மக்கள் மத்தியில் நன்கு சீரான உணவின் முக்கிய அங்கமாக தினை நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் "ஈட்ரைட் மில்லட்" என்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது... ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக சிறு தானியங்களை தினசரி உணவில் சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, பனிவரகு, குதிரைவாலி, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களில் புரதம், இரும்பு, வைட்டமின்-பி, நார்ச்சத்து, கால்சியம், பைட்டோகெமிக்கல்கள் சத்துக்கள் நிறைந்துள்ளது அவற்றை உட்கொள்வதால் பல்வேறு சுகாதார நலன்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிமணி இந்தியா ஆதரவுக்கரம் - யுனிமணி திருநெல்வேலி மண்டலத் தலைவர் திரு.மனோசே பேட்டி.!

Image
 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிமணி இந்தியா ஆதரவுக்கரம் -  யுனிமணி திருநெல்வேலி மண்டலத் தலைவர் திரு.மனோசே பேட்டி.! இது குறித்து தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுனிமணி இந்தியாவின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் மனோசே கூறுகையில்:- "வங்கி சாரா நிதி நிறுவனமான யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (NBFC) தமிழ்நாட்டில் தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்நிறுவனம் அதன் CSR முயற்சிகளின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, போர்வைகள் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை விரிவுபடுத்தியது " என கூறினார். யுனிமணி இந்தியா தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத் தலைவர் திரு .கார்த்திகேயன், திருநெல்வேலி மண்டலத் தலைவர் மனோசே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யுனிமணி திருநெல்வேலி மண்டல அலுவலகத்தால் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது ...

2024 புத்தாண்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சபதம் ஏற்போம் வாரீர் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர் எல்.வெங்கட்டராமன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி*

Image
*2024 புத்தாண்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சபதம் ஏற்போம் வாரீர் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர் எல்.வெங்கட்டராமன்  ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி*  புதிய வருடம் பிறக்கிறது என்றாலே அனைவரின் மனதிலும் தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரை அனுபவித்து வந்த   துன்பங்கள் , கஷ்டங்கள்    புது வருடத்தில் நீங்கி விடாதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் மக்கள் மனதில் உருவாகும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக நடக்கட்டும் என்கிற கூற்றுக்கு  இணங்க ஏழை எளிய நடுத்தர மக்களின் நல்ல எண்ணங்களை பிரதிபலித்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரவேண்டும். புதுச்சேரியில் ஜனநாயகம் தழைத்து ஒங்கவும் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் , நிதி நெருக்கடியை போக்கவும் , புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் , அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிபவர்களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்றவும், அவர்களின்...

சத்தியமங்கலத்தில், நவீன காவல் கட்டுபாட்டு அறைதிறப்பு. அனைத்துதரப்பினர் ஒத்துழைப்பால், இது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.மேற்கு மண்டல காவல் ஐ.ஜி,பெருமிதம்.

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நக ராட்சிபகுதியில்,குற்றச்சம்பவங்களை தவிர்க்கவும்,குற்றவாளிகளை கண் காணிக்கவும்,அடையாளம் காணவும், நகரின் முக்கிய பகுதிகளில் முதலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு, காவல் கட்டுபாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து, விப த்து,மற்றும்குற்றச்சம்பவங்களில் ஈடு பட்டோர் கண்டறியப்பட்டு,வழக்கு பதிவு செய்த நிலையில்,இதன் பயன் பாட்டை உணர்ந்த பொதுமக்கள், நன் கொடை யாளர்கள், வணிக பெரு மக் கள், தாமாக முன்வந்து நன்கொடை அளித்து, சத்தி நகரின் தெற்கு பகுதி யில், கூடுதலாக, 200 சிசிடிவி கேமரா க்கள் பொறுத்தும் பணி மற்றும் சத்தி நகர வடக்கு பகுதியில் 500 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும் பணி, மற் றும் 1458 சிசிடிவி கேமரா பதிவுகளை 24 மணிநேரமும், ஒரு சேர கண்காணி க்க, சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில்நவீனகாவல்கட்டுபாட்டுஅறை திறப்பு என சத்தியமங்கலம் காவல் துறை சார்பில், முப்பெரும் விழா, கோ வை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி இ.கா.ப. தலை மையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இ.கா.ப. முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக மேற்கு மண்டல ஐ.ஜி. சத்தியமங்கலம் புதிய பே...

*தாமரைப்பாளையம் , கொடுமுடி, கிளாம்பாடி பகுதிகளை சார்ந்த அனைத்து சமுதாய மக்களும் PCR சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து தாமரை பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று சேர்ந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*

Image
  ஈரோடு மாவட்டம் தாமரைப்பாளையத்தில், பள்ளி செல்லும் கொங்கு வேளாள கவுண்டர்,சமுதாய பெண்ணை தவறாக சித்தரித்து சீண்டிய மாற்று சமுதாய இளைஞர்களை தட்டி கேட்ட கொங்கு சமுதாய இளைஞர்கள் மீது PCR சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் திரு.சூரியமூர்த்தி அவர்கள்,மற்றும் KMDK தலைமைநிலய செயலாளர் திரு.சுரேஸ்பொன்னுவேல் அவர்கள், தலைமையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து(KMDK,DMK,ADMK,BJP,Congrase,ext..) அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் தாமரைப்பாளையம் , கொடுமுடி, கிளாம்பாடி பகுதிகளை சார்ந்த அனைத்து சமுதாய மக்களும் தாமரை பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்று சேர்ந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

*ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்*

Image
 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சி தான்தோன்றி அம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை வளர்ச்சி மூலம் தென்னை மரம் வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இதில் Dr. சத்தியசீலன், பூச்சியல் நிபுணர், வேளாண் ஆராய்ச்சி நிலையம்,பவானிசாகர் ஜெ. குணவதி, தோட்டக்கலை உதவி இயக்குனர், நம்பியூர்தெ. பத்மப்ரியா, தோட்டக்கலை அலுவலர், நம்பியூர் கௌசல்யா தோட்டக்கலை அலுவலர், கோபி மற்றும் வார்டு உறுப்பினர் திரு. ராமசாமி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்

புத்தாண்டு கொண்டாட்டம் : பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை.!

Image
 புத்தாண்டு கொண்டாட்டம் : பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் கடும் நடவடிக்கை - எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை.! தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2024 புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின்படி நாளை (31.12.2023) இரவு மற்றும் 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான திங்கள்கிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது,           1) தூத்துக்குடியில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை. 2) நாளை 31.12.2023 அன்று இரவு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. 3) புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. 4) புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வ...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி சைலேஷ் குமார் யாதவ்க்கு டிஜிபி பதவி - ரத்து செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்.!

Image
 ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி சைலேஷ் குமார் யாதவ்க்கு டிஜிபி பதவி -  ரத்து செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்.! இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- "ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதனை மறு பரிசீலனை செய்வதோடு, சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விரைந்து தண்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை 2022 அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை  பல்வேறு குற்றங்களை வெளிக்கொண்டுவந்தது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை...

மேட்டுப்பாளையத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன

Image
கோயம்புத்தூர் மாவட்டம் ,மேட்டுப்பாளையம் வட்டம் ,ஓடந்துரை கிராமம்   கல்லார் சமுதாய கூடத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பிரதம மந்திரி உஜ்வாலா  திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது ஏற்கனவே இப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில்  தகுதி வாய்ந்த பயனாளிகளில் முதல் கட்டமாக  தேர்வு செய்யப்பட்ட 14 பயனாளிகளில் இரண்டு பயனாளிகளுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் இலவச கேஸ் இணைப்புக்கான புத்தகம் ,ரெகுலேட்டர் ,எரிவாயு உருளை ஆகியன வழங்கப்பட்டது

நெல்லை, தூத்துக்குடி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் : பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு.!

Image
 நெல்லை, தூத்துக்குடி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் : பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு.! அதி கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்  பிப்ரவரி 1 வரை நீட்டிப்பு.- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தூத்துக்குடி: தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை - இதுவரை 184536 பேர் பயனடைந்துள்ளனர் என ஆட்சியர் தகவல்.!

Image
 தூத்துக்குடி: தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை - இதுவரை 184536 பேர் பயனடைந்துள்ளனர் என ஆட்சியர் தகவல்.! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :- தூத்துக்குடி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆய்வு மற்றும் ஆலோசனை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மூலம் சிறப்பு மருத்துவக்குழுக்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2690 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 184536 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மழைநீர், வெள்ளநீர் புகுந்த இடங்கள், தொற்று ந...

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த காவல்துறையினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!

Image
 விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த காவல்துறையினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு! தூத்துக்குடியில் விபத்தில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு முதலுதவி செய்த காவல்துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.  கடந்த 27.12.2023 அன்று இரவு தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டபோது, அங்கே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், அதன் முன்பு சென்று கொண்டிருந்த மிதிவண்டியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் மிதிவண்டி ஓட்டுநர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.  இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த மேற்படி புதுக்கோட்டை நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் முதல் நிலை காவலர் மகாராஜாகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து விபத்தில் காயம்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மனித நேயத்துடன் முதலுதவி அளித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல்துறையினரின் இச்செயலை பத்திரிகை மற்றும் ஊடக நண்ப...

புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.!

Image
 புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.! மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கொளத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன நீலாங்கரை, ஜிஎஸ்டி ரோடு, மதுரவாயல் பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் பைக் ரேஸ் நடப்பதை தடுக்க கண்காணிப்பு - காவல்துறை

புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை வரவேற்கும் நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ

Image
  புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை வரவேற்கும் நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ இன்று (30.12.2023) நன்பகல் 12.05 மணியளவில் புதிய வழித்தடமாக கோயம்புத்தூர் முதல் பெங்களூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையினை மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடிஅவர்கள் இன்று அயோத்தியில் நடைபெற்ற விழாவில் துவக்கி வைத்தார். கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் வழியாக ஈரோடு ரயில் நிலையத்திற்கு நன்பகல் 1.20 மணியளவில் வந்தடைந்தது. அதனை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம் முன்னிலையில் கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு புதிய வழித்தட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மலர் தூவி வரவேற்று மகிழ்வினை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில் நிலைய ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வின் முடிவில்  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலினை சட்டமன்ற உறுப்ப...

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சூலூர் நகர கழக செயலாளர் ஆயில் P.செந்தில்குமார் வேண்டுகோள்

Image
தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை 9மணி அளவில் அண்ணா சீரணி கலை அரங்கில் நடைபெற உள்ளது அது சமயம் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் அனைத்து பொதுநல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் ஊர் மக்களும் தவறாமல் கலந்து கொண்டு கேப்டன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கு பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம் என்று  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சூலூர் நகர கழக செயலாளர் ஆயில் P.செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! -மரம் அறுக்கும் கருவிகள், மோட்டார் பம்புகள் மற்றும்நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! -மரம் அறுக்கும் கருவிகள், மோட்டார் பம்புகள் மற்றும்நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.! இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீர்நிலைகளில் அதிக நீர் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு...

*2024 ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் அல்லா பிச்சை வழங்கினார் *

Image
 *நம்பியூர் ஒன்றிய செயலாளரும், பேரூராட்சி தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் அவர்களிடம் வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்கான தினசரி நாள்காட்டி காலண்டரை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை தலைவர் பா அல்லா பிச்சை *

சூலூர் அண்ணா கலையரங்கத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு நேதாஜி இந்து மக்கள் இயக்கம் சார்பில் புஷ்பாஞ்சலி

Image
கோவை சூலூர் அண்ணா கலையரங்கத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் மக்கள் தலைவருமான விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சூலூர் நகர இளைஞரணி தலைவர் முருகேசன் தலைமையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனர் புல்லட்.சேகர் மாநில பொதுச் செயலாளர்  எம்.பி பாலா மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ஐயப்பன் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகேஷ் தேமுதிக சூலூர் நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான  சொந்தங்களுடன் நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது அண்ணாருடைய ஆத்மா சாந்தி அடையவும் மக்களை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாத மக்கள் கலைஞன் என்றும் அவர் புகழ் போற்றப்படும் என்றும் புகழாரம் சூற்றப்பட்டது  இந்த நிகழ்ச்சியில்  சூலூர் தெற்கு மாவட்டத்தின் ஒன்றிய செயலாளர்  சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்

திமுக இளைஞரணி மாநாட்டிற்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிதி

Image
  தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடுக்கு  ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக  மாநாட்டு நிதி ஒரு கோடி 35 ஆயிரத்திற்கான (1,00,35,000) காசோலையை  கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு அமைச்சர்( மாநாட்டுத் தலைவர் )உதயநிதி ஸ்டாலினிடம்  ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம்   வழங்கினார்.

'டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்' 6 வது பதிப்பு' கோவையின் மாபெரும் உணவு திருவிழா ஜனவரி 5ம் தேதி துவக்கம்!

Image
'டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்' 6 வது பதிப்பு' கோவையின் மாபெரும் உணவு திருவிழா ஜனவரி 5ம் தேதி துவக்கம்! ஜனவரி 5,6 மற்றும் 7 மூன்று நாட்கள் நடைபெறுகிறது கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (CDHA) சார்பில் 'டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் என்கிற மாபெரும் உணவு திருவிழாவில் 6வது பதிப்பு வரும் ஜனவரி 5.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடிசியா மைதாலத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (29 12:23) நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ராமசாமி, செயலாளர் பாலச்சந்தர் ராஜு, பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் 2024 நிகழ்வின் தலைவர் டேவிட் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் இந்த உணவுத் திருவிழா மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும் இதில் கோவையைச் சேர்ந்த 100 உணவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் 160 ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் சைய மற்றும் அசைவ உணவுகள், இனிப்புகள், கார வகைகள், சாட் எனும் துரித உணவு வகைகள், கேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்தும் ஒரே இடத்தில் உண்டு மகிழலாம் என  கே.ஏ.ராமசாமி க...

தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர் வீராங்கனைகள் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை..

Image
தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை.. கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டி சார்பாக பாராட்டு விழா.. தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பாக 5 வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் தஞ்சையில் நடைபெற்றது.இதில்,கயகோவை,,மதுரை,திருச்சி,தஞ்சை என  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.மாநில அளவில் நடைபெற்ற இதில் கோவையில் இருந்து 5 வயது முதல் 21 வயது வரையிலான ,52 மாணவ,மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்றனர்... சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன… தொடுமுறை,ஒற்றை மற்றும் இரட்டை கம்பு என அனைத்து பிரிவிகளிலும்  கோவையில் இருந்து  சென்ற  52 மாணவ,மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.. தங்கம்,வெள்ளி,வெண்கலம் என பதக்கங்களை குவித்து  கோவை திரும்பிய  மாணவ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது....

தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம்.! - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.!

Image
 தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம்.! - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.! தூத்துக்குடியில் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்த கருத்தபாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி  தெரிவித்தார்.  இது தொடர்பாக மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கருத்தபாலமானது மழைநீர் செல்வதற்கு தடையாக இருந்ததை தொடர்ந்து அதனை அகற்றி வழி ஏற்படுத்தி இருந்தோம். இந்த பாலமானது பிரதானமான ஓடையில் இருந்ததாலும் மழை நீர் வடிவதற்கு தடையாக இருந்ததாலும் தற்போது மேலும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மீது வரும் நாட்களில் புதிய பாலம் ஒன்று அமைய உள்ளது. அதுவரை பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்கு அதன் அருகே உள்ள தனியார் இடத்தில் பணிகள் முடியும் வரை பொதுமக்கள் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின்போது, சமூக ஆர்வலர் ஜசக், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் அதிகப்படியான மழை நீர்.! - தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை.!

Image
 தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் அதிகப்படியான மழை நீர்.! -  தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை.! இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார்  10100 கன அடி நீர் இன்று (29.12.2023)  வந்து கொண்டிருப்பதாலும்   கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும்,  மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  எச்சரிக்கப்படுகிறார்கள்.  மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்த...

தூத்துக்குடி : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வெள்ளம் இழப்பீடு சிறப்பு முகாம்!

Image
 தூத்துக்குடி : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வெள்ளம் இழப்பீடு சிறப்பு முகாம்! தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வெள்ளம் இழப்பீடு சிறப்பு முகாம் நடந்தது.  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வெள்ளம் இழப்பீடு சிறப்பு முகாம் தூத்துக்குடி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கூறியதாவது: "சமீபத்திய புயல் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பேரழிவிற்குள்ளாகியுள்ளன.  மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் விளைவாக அவர்களின் உடமைகளை இழந்துள்ளனர். குடும்பங்கள் மற்றும் வணிக சமூகத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு உடனடி நிவாரணம் தேவைப்படுகிறது. இத்தருணத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வெள்ளம் இழப்பிடு சிறப்பு முகாமை உடனடியாக நடத்த வேண்டியதன்  இன்று நடத...

சேவைக் குறைபாடு : தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.1,10,000 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

Image
 சேவைக் குறைபாடு : தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.1,10,000 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு சேவைக் குறைபாடு காரணமாக தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ.1,10,000 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடி பொன் சுப்பையா நகர் பகுதியைச் சார்ந்த சரவணகுமார் என்பவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளார். இரண்டாவது ஆண்டாக காப்பீட்டை புதுப்பித்துள்ளார். சில மாதங்களில் மனுதாரருக்கு உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. உடனே தூத்துக்குடியிலுள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு பரிசோதனை செய்ததில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.  இதனடிப்படையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை காப்பீட்டு நிறுவனப் பட்டியலில் இல்லாத காரணத்தினால் காப்பீட்டு தொகையை மருத்துவமனைக்கு நேரிடையாக செலுத்த முடியாது. பணத்தை செலுத்தி விட்டு பின்னர் செலவு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதன் பின்னர் உரிய மருத்துவ ...

கோபி மொடச்சூர் அருள்மிகு தான்தோன்றியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா

Image
  ஈரோடு மாவட்டம்,கோபி வட்டம் மொடச்சூர்அருள்மிகு பழமைவாய்ந்த தான்தோன்றி அம்மன் திருக்கோயில் குண்டம் தேர் திருவிழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் ஈ.ரா.சிவக்குமார், கோபி நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா, செயல் அலுவலர் நா. ஸ்ரீதர், நகர்மன்ற உறுப்பினர்கள் விஜய் கருப்புசாமி, மகேஸ்வரி,ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து சனிக்கிழமை இரவு மலர் பல்லக்கு, ஞாயிறு காலை தெப்பத்தேர் உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், வரும் ஜனவரி 1-ந்தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு மறுபூஜையும், 5 ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பரம்பரை அறங்காவல்கள், ஊர் பொதுமக்கள் மற்றும இறையன்பர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பூரில் ஏழாவது திருமணம் செய்ய முயலும் கணவன்... ஆறாவது மனைவி கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர் புகார்

Image
 திருப்பூரில் பெண்ணை ஏமாற்றி ஆறாவதாக திருமணம் செய்த வாலிபர்,  ஏழாவதாக ஒரு கல்லூரி மாணவியுடன் பழகி திருமணம் செய்ய முயல்வதாகவும், கணவ்ர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனது குழந்தையின் எதிர்காலத்துக்கு உரிய உதவியை பெற்றுத்தர வேண்டும் என்று கூறி இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.  திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த 28 வயதான தேவி என்பவர்   திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, தனது ஒரு வயது குழந்தையுடன் வந்து புகார் அளித்தார். அப்போது அவர்  கூறுகையில், ‘ சாமுண்டிபுரத்தில் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தார். நோய்வாய்ப்பட்ட மகள் உயிரிழந்து விட்டார். அதன் பின் முதல் கணவர் என்னைப் பிரிந்து சென்று விட்டார்.  பின்னர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் பழக்கமானார். எனது பிரச்னையெல்லாம் கேட்ட அவர், என்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார்.  எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவருடன் குடு...

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிகளில் மிக கனமழை.!

Image
 நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிகளில் மிக கனமழை.! நெல்லை மாவட்டம் மாஞ்சோலை காக்காச்சி ஊத்து நாலுமுக்கு ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது

ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பு- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் (டாஸ்) சார்பாக மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி.!

Image
 ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் நலவாரியம் அமைப்பு- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் (டாஸ்) சார்பாக மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி.!  இது தொடர்பாக தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் (டாஸ்) சார்பாக மாநில செயலாளர் ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- "தமிழ்நாட்டில் சுகி. சுமோட்டோ போன்ற உணவு வினியோகம், மின் வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட  அனைத்து வகை வணிக பொருட்களின் வினியோகங்கள், இணைய செயலி வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது "கிக்" என்ற வரையறுக்கப்படாத கூலி பெறும் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். தற்போது இணையவழி சேவைகள் "கிக்" என்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு வினியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுப்பட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சுதந்திர தினவிழா உரையில் அறிவித்தார்.  அதை செயல்படுத்தும் விதமாக த...