தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 126 மனுக்களில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி அதிரடி தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம் துணை மேயா் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்்றினார். மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இன்று நான்காவது மண்டலமாக இங்கு நடைபெறுகிறது. ஏற்கனவே ...