தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் - மேயர் ஜெகன் பெரியசாமி கண்டிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி புகார் - மேயர் ஜெகன் பெரியசாமி கண்டிப்பு தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கோவில்களில் நடைபெறும் தசரா நிகழ்ச்சிகள் நடந்து நிறைவு பெறும் போது மழை தீவிரம் அடையும். அதற்கு முன்னதாக நாம் செய்ய வேண்டிய கட்டமைப்பு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். 60 வார்டுகளிலும் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் நல்ல விழிப்புணர்வோடு இருந்து தங்களது பகுதியில் மழை பெய்தால் எந்த பகுதியில் மழைநீர் தேங்கும் அதை எப்படியெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை முழுமையாக ஆய்வு செய்து எனக்கு உடனுக்குடன் தகவல் தர வேண்டும். நானும், ஆணையரும் ஏற்கனவே பல்வேறு பகுதிகளை களஆய்வு செய்துள்ளோம். இருந்தாலும் உங்களுடைய ஒத்துழைப்பும் அவசியம் என்பதை கருதி இதை தெரிவிக்கிறேன். பல முன்னெச்சரி...