Posts

Showing posts from December, 2025

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு - 110 மையங்களில் 1617 எழுத வாசிக்க தெரியாதவர்கள் எழுதினர்.

Image
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழிகாட்டுதலின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி அறிவுரையின்படி நேற்று நடைபெற்றது. இத்தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் 110 மையங்களில் 1617 எழுத வாசிக்க தெரியாதவர்கள் கற்போர்கள் ஆறு மாதங்கள் தன்னார்வலர்களால் பயிற்சி பெற்று நேற்று தேர்வினை மிகச் சிறப்பாக எழுதினர்.  தூத்துக்குடி நகர்புற வட்டாரத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சாமுவேல் புரம் மற்றும் தஸ்நேவிஸ் மாதா தொடக்கப்பள்ளி இனிக்கோ நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்வு மையத்தினை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தனலட்சுமி மேற்பார்வையாளர் பா...

தூத்துக்குடியில் தேசிய லோக் அதாலத் மூலம் 3,400க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

Image
  தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 3,686 வழக்குகளுக்கு ₹16.23 கோடி இழப்பீடு மற்றும் தீர்வுத் தொகை வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. தூத்துக்குடியில் நடைபெற்ற அமர்வுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தலைமை தாங்கினார், முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். வசந்தியுடன் இணைந்து தலைமை தாங்கினார். தேசிய லோக் அதாலத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய இடங்களில் மொத்தம் 15 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 4,588 வழக்குகளில், 3,474 வழக்குகள் ரூ.11.32 கோடி இழப்பீட்டுடன் தீர்க்கப்பட்டன, மேலும் 212 செயல்படாத சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ₹4.90 கோடி தீர்வுடன் தீர்க்கப்பட்டன. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 தாலுகாக்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில், 5,209 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 4,096 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹15.32 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது....

நெல்லை சரகத்தில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் : டிஐஜி உத்தரவு.!

Image
  நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம் - 6 மாணவிகள் சஸ்பெண்ட்.!

Image
  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் டம்ளரை மாணவிகள் எல்லோரும் எடுத்து சியர்ஸ் போட்டுவிட்டு குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் வகுப்பறை பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தான் என்பதும், அந்த மாணவிகள் அதே பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு ...

போல்டன்புரம் பொதுமக்கள் புகார்: கழிவுநீர் கால்வாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது - மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் கழவுநீர் வழித்தடங்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக 36வது வாா்டுக்குட்பட்ட போல்டன்புரம் பகுதி பொதுமக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து போல்டன்புரம் மூன்றாவது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜபாண்டிக்கு உத்தரவிடப்பட்டது அதன் அடிப்படையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி சுகாதாரத்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளர்களுடன் நேரில் சென்று அந்தப் பகுதியை பார்வையிட்ட போது கழிவு நீர் செல்லும் வழித்தடங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு மணல் தேங்கி அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது உடனடியாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மணல்களை அப்புறப்படுத்த களத்தில் இறங்கினார்கள். சுமார் 20 அடி நீளத்துக்கு கழிவுநீர் வழித்தடத்தில் 5 அடிக்கு மேல் தேங்கியிருந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டது அந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.  அப்போது தொடர்ந்து இந்தப் பகுதி முழுவதும் கழ...

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் 16ம் தேதி நடைபெறுகிறது- அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்தநாள் விழா மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, கழக வளர்ச்சிப் பணி குறித்து வடக்கு மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் வரும் 16ம் தேதி செவ்வாய் கிழமை காலை  எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் எனது தலைமையில் வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி முன்னிலையில் நடைபெறுகிறது.  கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கழக மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

"இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது" - தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில மாநாட்டில் திருமாவளவன் பேச்சு.!

Image
  இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது. இடதுசாரிகள் தெளிவாக, துணிவாக இருப்போம். இணைந்தே நிற்போம். வலதுசாரி அரசியலை வீழ்த்தும் வரை ஓய்ந்து விடக்கூடாது. சோர்ந்து விடக்கூடாது என்று திருமாவளவன் எம்பி பேசினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 12வது மாநில மாநாடு, தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. மாநில செயலாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் சங்கர் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச் செயலாளர் திபங்கர் பங்கேற்றார். மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசும் போது, பாஜ ஒவ்வொரு சமூகத்தையும், தனித்தனியாக, மதம் சார்ந்த முறையில் அணுகுகிறார்கள். அவர்கள் மதுரையில் நெசவாளர்களுக்காக போராடவில்லை. தொழில் வளத்தை கொண்டு வர போராட வில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடவில்லை. கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள், மக்க ளின் உணர்ச்சியை தூண்டி விட்டு ஒருங்கிணைக்க பார்க்கிறார்கள். ஓபிசி இட ஒதுக்கீடுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தினார்கள். ஓபிசி தலைவர்கள் பாஜ இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி, அந்த கட்சியை ஆதரிக்க கூடாது என்...

இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு : 2024–2025 நிதியாண்டில் 16% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்.!RBI வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் தகவல்.!

Image
  2024-25 நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 16% வளர்ச்சியைப் பெற்று பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. RBI வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில், கர்நாடகா, உ.பி., மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனையில், 2024–2025 நிதியாண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் அடிப்படையில், அனைத்து இந்திய மாநிலங்களுக்கிடையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது . 16% வளர்ச்சி விகிதத்துடன் , நாட்டின் வேகமாக வளரும் மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது . பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் இந்த வளர்ச்சி பல துறைகளில் மாநிலத்தின் வலுவான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது, அவற்றுள்: · தொழில்கள் மற்றும் உற்பத்தி · தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் · விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள் · புதுப்பிக்கத்தக்க ஆற்றல் · உள்கட்டமைப்பு மேம்பாடு · வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிகள் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார அடித்தளமும், நிலையான கொள்கை ஆதரவும் இந்த வளர்ச்சியை ...

தூத்துக்குடி துறைமுக கேண்டீன் தொழிலாளர்கள் பணி நிரந்தரம்- 26 ஆண்டு கால வழக்கில் வெற்றி தேடி தந்த வழக்கறிஞர்களுக்கு சிஐடியு பாராட்டு.!

Image
  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் துறைமுக புராஜெக்ட் ஆக துவக்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை இயங்கி வரும் துறைமுக கேண்டீனில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 56 பேர் தங்களை துறைமுக ஊழியர்களாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1998-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து தொழிலாளர்களை பின் ஊதியத்துடன் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு நீதியரசர் சிவசுப்பிரமணியன் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து துறைமுக நிர்வாகம் உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு 2007-ல் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 11 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்கு பின்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2019-ல் திருப்பி அனுப்பியது....

தூத்துக்குடி:14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!

Image
  தூத்துக்குடி - மீளவிட்டான் தண்டவாளத்தில் இணைப்புப் பணி காரணமாக தூத்துக்குடியில் வருகிற 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து மீளவிட்டான் ரயில் நிலையம் வரை வருகிற 14ம் தேதி முதல் 23வரை தண்டவாளத்தில் இணைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலருவி எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரையிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சி வரையிலும், மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் மணியாச்சி வரையிலும், ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் பெரியசாமி.!

Image
  தூத்துக்குடி : தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் 149வது பாகத்தில் வாக்குசாவடி முகவா்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வாா்டுக்குட்பட்ட அனைத்து வாக்காளா்கள் பெயரும் பட்டியலில் முழுமையாக இடம் பெற வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்ட பின் அதில் பெயா் எதுவும் விடுபட்டிருந்தால் பின்னா் நடைபெறும் சோ்க்கையில் முழுமையாக சோ்த்திட வேண்டும். என்று ஆலோசனை வழங்கினார். பின்னர் அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில்:- தமிழக முதலமைச்சரின் கரத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலுப்படுத்த வேண்டும் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு நாம் செய்துள்ள திட்டங்களை முழுமையாக எடுத்து சொல்ல வேண்டும். விடியல் பயணம் மகளிர் உரிமைத் தொகை இரண்டாவது கட்டம் இரண்டு தினங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்....

மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை.

Image
  மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு சார்பில்  அமைச்சர் பி.கீதா ஜீவன் மரியாதை செலுத்தினார்.  மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்  ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷூ மங்கல், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, வட்டாட்சியர் சுபா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-வது மாநில மாநாடு நாளை தூத்துக்குடியில் தொடங்குகிறது.!

Image
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் வெளினிஸ்ட்) 12-வது மாநில மாநாடு டிசம்பர் 12,13,14 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.  இது குறித்து நேற்று தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஐ - எம்.எல் தூத்துக்குடி மாவட்ட செயளாளர் மு. முருகன் அளித்த பேட்டியில் "டிசம்பர் 12 வெள்ளி) அன்று அரங்கில் (ஆண்டாள் தெரு), ஸ்டெர்லைட் தியாகிகள் நகரில் பொது மாநாடு காலை 10 மணி அளவில் துவங்கி நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதிலுமிருந்து ஆபிரம் பேருக்கு மேற்பட்ட தொண்டர்கள், செயல்வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திபங்கர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், சமூக நலம், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்,மக்களலை உறுப்பினர் தொல்.திருமாவளவன், மக்கள் அதிகாரம் அமைப்புச் செயலாளர் திருச்சி செழியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் எஸ்,ஐ,ஆர், தொழிலாளர் ...

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... அதே வேளையில் தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டுகோள்.

Image
  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். முன்களப் பணியாளர்கள்   பத்திரிகையாளர்கள் அன்றாட உலகச் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனுக்குடன் வெளியிடுவதோடு, அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதோடு, பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும், பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் எனப் பாராது ஓய்வின்றிப் பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். பத்திரிகையாளர்களின் இத்தகைய பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த...

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.!

Image
  தூத்துக்குடி வி.இ ரோட்டில் அமைந்துள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டய   தேர்வு 9:12:25 அன்று நடைபெற்றது .இதில் கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ ஷோபுகாய் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஹோலிகிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி ரொசாரியோ சான்றிதழ் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் கராத்தே பயிற்சியாளர்கள் மாரிமுத்து,மணிமுத்து, தனபால் ஆகியோர் உடனிருந்தனர் .

"தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது"-பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

Image
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் ஊராட்சி பகுதிகளில் கிராமசபை கூட்டம்் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதிகளில் பகுதிசபா கூட்டம் நடைபெறவேண்டும். என்று தலைமை செயலாளர் உத்தரவிற்கிணங்க ஓவ்வொரு வாா்டு பகுதிகளிலும் 5 பகுதி சபா உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கோாிக்கைகள் குறைபாடுகளை பகுதி சபா கூட்டத்திலும் பொதுமக்கள் நலன் கருதி அரசு சாா்ந்த மாநகராட்சி அதிகாாிகள் அலுவலா்களிடமும் தொிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 20வது வாா்டு பகுதி சபா கூட்டம் போல்பேட்டை கீதாேஹாட்டல் ஹாலில் நடைபெற்றது. மேயா் ஜெகன் பொியசாமி கூட்டத்தில் பேசுகயைில்:- "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி நிா்வாகத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்டபின் 45 மாத காலத்தில் 60 வாா்டுகளிலும் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பணிகளும் பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாதம் ஓருமுறை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினா்கள் கோாி...

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!

Image
  தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தூத்துக்குடியில் கடந்த 06.11.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் ராஜா (19) மற்றும் பசும்பொன் நகரை சேர்ந்த கண்ணன் மகன் பரமசிவம் (எ) சிவா (19) ஆகிய 2பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (09.12.2025) சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 136பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்.!

Image
  தூத்துக்குடி காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட வீட்டு உபோயக பொருட்கள் விற்பனையாளர் சித்ரவதை செய்து படுகொலை செய்த உதவி ஆய்வாளருக்கு திருநெல்வேலி மாநில மனித உரிமை ஆணையம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (34). இவர் அப்பகுதியில் வீட்டு உபோயகபொருட்கள் விற்பனையாளராக பணி செய்து வந்தார்.  2017ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அன்று அசன விருந்துக்காக சிதம்பர நகரில் உள்ள அபிஷேகநாதர் தேவாலயத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வரிசையில் நிற்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது அங்கு பணியிலிருந்த பெண் காவலர் ரூபாரோஸ்சிலின் தலையிட்டு பின்னர் பெண்காவலர் ரூபாரோஸ்சிலின் தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர் J.சந்திசெல்வி மற்றும் காவலர்கள் பாண்டியராஜனை காவல்நிலையத்திற்கு சட்ட விரோதமாக ...

தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.!

Image
  தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் தனது மனைவியையும், குழந்தையையும் சதீஷ்குமார் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், 366-ன் கீழ் சதீஷ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இப்புகாரை விசாரித்த உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுடன் திருப்பூருக்குச் சென்றனர். அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு சதீஷ்குமார் மற்றும் அவரின் தந்தை ராமசாமி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். அங்கு விசாரணைக்குப் பிறகு சதீஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரின் மனைவி மற்றும் குழந்தையை தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த காரில் அனைவரும் பயணம் செய்தனர். அந்த கார், விருதுநகர் அருகே வந்த...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை.!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர்  ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேற்படி தேர்வு செய்யப்பட்ட 13  ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இன்று (08.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேற்படி 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் நாளை (09.12.2025) முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் உடனிருந்தார்.

தூத்துக்குடி : கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது - ரூபாய் 10,000/- உண்டியல் பணம் மீட்பு.!

Image
  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46) என்பவர் நேற்று (07.12.2025) இரவு கோவிலை பூட்டிசென்று இன்று காலை வந்து திறந்து பார்க்கும்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இசக்கிபாண்டி இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார் (19) என்பவர் மேற்படி கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 10,000/- பணத்தையும் மீட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 378 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

Image
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 378 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சுரேஷ் மற்றும் அனைத்துத்து...

கொலைவெறி தாக்குதல் நடத்திய பார் ரவி என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு.!

Image
  தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதிகளிலுள்ள மழை நீரை அகற்றக்கோரி மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றிய பார் ரவி உள்ளிட்ட பலரை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கையுடன் கிராம மக்கள் இன்று 08.12.2025 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு சமூகவிரோத செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் பொன்பாண்டி (எ) பார் ரவியை ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரரான முருகேசன் ஆகியோர் தனது சுயபாதுகாப்பில் மறைத்து வைத்துள்ளதோடு, பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 15 க்கும் மேற்பட்ட நபர்களை பாதுகாத்து வரும் மேற்படி எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரரான முருகேசன் உள்ளிட்டோர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மறியல் போராட்டம் - 100க்கும் மேற்பட்டோர் கைது.!

Image
  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை  நிரந்தரமாக்க வேண்டும், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த மூன்று மாத ஊக்கு தொகை ரூபாய் 15,000 உடனடியாக வழங்க வேண்டும், மாநகராட்சியில் தனியார் அவர்லேண்ட் காண்டிராக்டை ரத்து செய்ய வேண்டும்  என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் - பேரணி நடைபெற்றது.  மாநகராட்சியில் இருந்து புறப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் பழைய பேருந்து நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதில் சிஐடியு மாநில  துணைத் தலைவர் ரசல், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைத்தலைவர் காசி, மாவட்ட பொதுச் செயலாளர் முனியசாமி, பொருளாளர் வேல்முத்து, துணை செயலாளர் கணேசன், துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, பத்திரகாளி, கருப்பி உட்பட பலர் கலந்து க...

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

Image
  மத்திய அரசின் தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி, மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் கரும்பன்,  விசிக  மாவட்டச் செயலாளர் கணேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ (எம்)மத்தியக்குழு உறுப்பினர்  பி.சம்பத், சிபிஐ(எம்.எல்) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், விசிக துணை பொதுச்செயலாளர் வழ.வில்லவன் கோதை, சிபிஐ மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவு: அரசுக்கு நன்றி தெரிவிக்க வந்த சமூக ஆர்வலரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரால் பரபரப்பு.!

Image
  காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசாரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தற்போது அமலில் உள்ளது, இதில் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். இந்தத் திட்டம் மது பாட்டில்கள் சாலைகளில் சிதறிக் கிடப்பதைத் தடுக்கவும், கால்நடைகளுக்கு ஏற்படும் காயங்களைத் தவிர்க்கவும் தொடங்கப்பட்டது.  இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன். அரசு அறிவித்துள்ள காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் உத்தரவு தனக்கு கிடைத்த வெற்றி என்று கூறி, அரசுக்கு நன்றி தெரிவித்து கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து கொண்டு, விழிப்புணர்வு வாகனத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் வந்த வாகனத்தையும் கைப்பற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பு உளுந்து குவிண்டாலுக்கு 7800க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் (NCCF) இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அறிக்கை.!

Image
  தூத்துக்குடி : கருப்பு உளுந்து கொள்முதல் குவிண்டாலுக்கு ₹7,800-க்கு கொள்முதல் செய்கிறது  மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய அரசு நிறுவனம் சார்பில் சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள மாநில அளவிலான அலுவலக மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆத்மா நிர்பர் கிரிஷி திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளிடமிருந்து கருப்பு உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு ரூ7,800-க்கு கொள்முதல் செய்கிறது. முதன்மை வேளாண் கடன் கழகம் மற்றும் விவசாயி உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளின் விவரங்களை சம்யுக்தி தளத்தின் மூலம் உடனடியாக பதிவு செய்யலாம்.  என்சிசிஎப் கொள்முதல் செய்வதற்கான மாநில அளவிலான நிறுவனம். சம்யுக்தி தளத்தில் விவசாயிகளின், சரியான ஆவனங்களைக் கொண்ட பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில உரிமம் பயிர் விதைப்பு சான்றிதழ் ஆகியவற்றை அடிப்படை ஆவனங்களாக கொண்டு பத...

தூத்துக்குடி மாநகராட்சி 15வது வாா்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

Image
  தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டு மாநகரில் சூழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட நியூ சுந்தரம் நகர் குடியிருப்பு பகுதியில் கனமழையால் தேங்கிய வெள்ள நீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை அமைச்சா் கீதாஜீவன் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.  உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் பொன் பெருமாள், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பாக முகவர் ஞான பிரகாசம் வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட்  உள்பட பலா் உடனிருந்தனா்

தூத்துக்குடி அசோக்நகா் ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு.!

Image
  தமிழக அரசின் சாா்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான பொருட்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட வாா்டு 34 பகுதியில் உள்ள அசோக்நகா் 2ம் தெருவில் உள்ள ரேஷ்கடையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திடீரென ஆய்வு மேற்ெகாண்டாா். பணியில் இருந்த அலுவலா்களிடம் எல்லா பொருட்களும் சாியாக வந்து சோ்கிறதா பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்குகிறீா்களா? என்று கேட்டாா். அப்போது முறையாக வருகின்ற பொருட்களை வழங்கி வருகிறேன் என்றாா்.  பின்னா் அமைச்சா் பொருட்கள் எதுவும் குறைவாக வந்தாலும் தரமான பொருட்களாக இல்லாமல் இருந்தாலும் உடனடியாக தகவல் தொிவிக்க வேண்டும் இருப்பு இல்லை என்றால் அதை முறையாக பொதுமக்களுக்கு தங்களது விளம்பர பலகை மூலம் தொிவித்து எந்த தேதியில் பெற்றுக்கொள்ளலாம் என்ற விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.  ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிசெயலாளர் ஜெயக்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உடனிருந்தனா்.

18 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம்: HD ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு.!

Image
  தென் கொரிய கப்பல் கட்டும் நிறுவனமான எச்டி ஹூண்டாய், இந்தியாவில் தனது முதல் கப்பல் கட்டும் தளத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைப்பதாக இன்று அறிவித்தது. தென் கொரிய கப்பல் கட்டும் நிறுவனமான எச்.டி. ஹூண்டாய், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தனது முதல் இந்திய கப்பல் கட்டும் தளத்தை நிறுவவுள்ளதாக இன்று அறிவித்தது. பல்வேறு இந்திய மாநிலங்களுடன் விரிவான ஆய்வு மற்றும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த குறிப்பிடத்தக்க முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டின் வலுவான கொள்கை கட்டமைப்பு மற்றும் பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை எடுத்துக்காட்டுகிறது. எச்.டி. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் குறிக்கிறது. மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2025 இல் தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் எச்டி கொரியா கப்பல் கட்டும் மற்றும் கடல்சார் பொறியியல் (KSOE) இன் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. அரசாங்கமோ அல்லது ...

தூத்துக்குடியில் அம்பேத்கா் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மாியாதை.!

Image
  தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க அம்பேத்கா் 69வது நினைவு நாளை முன்னிட்டு தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  சி.த.செல்லப்பாண்டியன்  மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.         நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,  முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் அமலதாசன்பழம், மாவட்ட  மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிச்சை, முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மாவட்ட மொத்த கூட்டுறுவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட முன்னாள் மீன...

தூத்துக்குடி அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை.

Image
  தூத்துக்குடி அம்பேத்கரின் 69 வது நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் தனராஜ், ஆகியோர் ஏற்பாட்டில் தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு  தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சேவியர், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, ஜெ பேரவைஇணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம் பொன்மலர், மனுவேல்ராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், சந்தனபட்டு, ஒன்றிய செயலாளர் காசிராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முனியசாமி, தலைமை பேச்சாளர் முருகானந்தம், நிர்வாகிகள்  கந்தன், பாலமுருகன், பிரேம் ஆனந்த், வட்டச் செயலாளர் அருண்ராஜா, மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா, முத்துலட்சுமி, ஷாலினி, மெஜி...

தூத்துக்குடியில் 75 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் ஒளிரும் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தெப்பகுளம் ஓவ்வொரு ஆண்டும் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். தெப்பக்குளம் நவீன வசதிகளுடன் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு கோரிக்கை வைத்தனர் அப்பொழுது பொதுமக்களிடம் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனடிப்படையில் தற்போது தெப்பக்குளம் பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது தெப்பக்குளம் 15 அடி ஆழம் உள்ளது மழை நீர் தெப்பத்தில் இருந்த நீர் சுகாதாரமற்ற நீராக மாறியதால் தெப்பத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்ற மேயா் ஜெகன் பொியசாமி முடிவு செய்து அதற்கான பணி ஆரம்பமானது இதுவரை சுமார் 8 அடி ஆழத்திற்கு தெப்பத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுள்ளது தொடர்ந்து நீர்  வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு மேயா் ஜெகன் பொியசாமி முறைப்படுத்த அரசு அலுவலா்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தாா்.  அப்போது மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் சுமார் 20 வருடங்களாக தெப்பக்குளம் சீரமைக்கப்படாமல் பராமரிப்பின்றி இருந்தது பொது மக்களின் கோரி...