Posts

Showing posts from August, 2025

தூத்துக்குடியில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டிைய அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தாா்.

Image
  தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் ஆதரவுடன் சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரன்நகா் சந்தனமாாியம்மன் கோவில் இளஞைர் அணி நண்பா் குழு இணைந்து முருகேசன் நாடாா் நினைவு கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாநில அளவிலான கல்லூாி மாணவ மாணவிகளுக்கான ஆண் பெண் மின்னொளி கபடி போட்டி  நடைபெறுகிறது. சந்தனமாாியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிக்கு விஜயராகவன் தலைமை வகித்தாா். கபடி கந்தன், கருணாகரன், முத்து கணேஷ்குமாா், சங்கரேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சண்முகராஜ் வரவேற்றாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கபடி போட்டியை தொடங்கி வைத்தாா். முதல்போட்டியில் லயோலா அணியை வீழ்த்தி சேரன் அணி வெற்றி வெற்றது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பாிசுகள் வழங்கப்படுகிறது.  நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ெசந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா். கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அா்ஜுனா விருது பெற்ற மணத்த...

95வது பிறந்தநாளையொட்டி முன்னாள் ஓருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

Image
  தூத்துக்குடி முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றிய கழக முன்னோடி சவுந்தரபாண்டியன் 95வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி நயினார்விளை மேற்கு பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சென்று வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார். சௌந்தரபாண்டியன் திமுக தணிக்கை குழு உறுப்பினராகவும், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவராகவும், பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்படதக்கது.  நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் ரவி இளங்கோ, கவுன்சிலா் மரிய கீதா, மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத், வட்ட பிரதிநிதிகள் ஏகாம்பரம், இளங்கோ, வட்ட துணைச் செயலாளர்கள் சுந்தர், ராமலட்சுமி, முன்னாள் வட்டச் செயலாளர் கோயில் ராஜ், முன்னாள் கவுன்சிலர் பாலாஜி, திரேஸ்புரம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெர்சன், பகுதி விவசாய அணி துணை அமைப்பாளர் நடராஜன், பகுதி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சிற்றரசு, வட்ட...

திருப்பூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்... பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட, எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், வருகிற 11,12  தேதிகளில் திருப்பூர் வருகை தர உள்ள க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாநகர்  எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில் நடைபெற்றது.  திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான  பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் வருகை தர உள்ள கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு எவ்வாறு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இந்நிகழ்வில், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான என்.எஸ்.என்.நடராஜ்...

"திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது" - கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநில பொதுச் செயலாளர் மயில் பேட்டி

Image
கோவில்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோவில்பட்டி வட்டாரத்தில் பணி ஓய்வு பெற்ற 25 ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் .மணிமொழி நங்கை தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் சிறப்புரையாற்றி, பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-  "திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சொல்லப்பட்ட எந்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக  அமைப்புகளுடன்  இணைந்து போரட்டங்களை நடத்தி வருகிறோம்.  அரசு பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி கோட்டை முற்றுகை போராட்ட...

கடைசி பெஞ்சு நோ - first பெஞ்ச்க்கு வா என அழைத்த ஆசிரியர் - தாமதப்படுத்திய மாணவனை மூங்கில் பிரம்பு கம்பால் வெளுத்து வாங்கிய ஆங்கில ஆசிரியர்-ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு

Image
காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி - 2 பிரிவுகளில் ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு -கோவில்பட்டியில் பரபரப்பு கோவில்பட்டி  அத்தைக்கொண்டானில் செயல்பட்டு வரும் லட்சுமி சீனிவாசா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி நடராஜபுரம்  தெரு பகுதியை சேர்ந்த மாணவர்  12ம் வகுப்பு வணிகவியல் பாட பிரிவில் படித்து வந்துள்ளார். நேற்று ஆங்கில வகுப்பின் போது அப்பள்ளி ஆங்கில ஆசிரியர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவர் மூங்கில் பிரம்பு கம்பால் மாணவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் வலது கை மணிக்கட்டு மேல் பகுதி, வலது , இடது முழங்கை பகுதியில் மாணவரகளுக்கு  காயம் ஏற்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் சங்கிலி பாண்டியன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  ஆங்கில வகுப்பின் போது கடைசி பெஞ்சில் அமர்ந்து இருந்த மாணவர் அருகில் இருந்த மாணவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவரை முன் மேச...

தேவராயன் பள்ளியில் சர்வதேச விளையாட்டு நாள் கொண்டாட்டம்

Image
 திருப்பூர் மாவட்டம்  தேவராயன் பள்ளியில் சர்வதேச விளையாட்டு நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பெருமாநல்லூர் தேவராயன் CBSE பள்ளி மாணவர்கள் சர்வதேச விளையாட்டு தினத்தை பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளோடு கொண்டாடினர்.  இது குறித்து பள்ளியின் முதல்வர் பாலமுருகன் கூறியதாவது: வளர்ந்து வரும் நாகரீக உலகில் இளைய தலைமுறையினர் மறந்து வரும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக எமது பள்ளி மாணவர்கள் இவ்விழாவை கொண்டாடினர். இன்றைய தினம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, நொண்டி, தாயம், பம்பரம், டயர் ஓட்டுதல், கயிறு தாண்டுதல், கல் விளையாட்டு, கிட்டிப்புள், கோலி குண்டு, சாக்கு ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.  இதில் மழலையர் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய வகை விளையாட்டுகளை கற்றுக் கொண்ட அனுபவத்தினை மாணவர்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளித்ததாக அவர் கூறினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.சிவானந்தம் மாணவர்களுக்கு இவ்விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அளித்து மேலும் போட்டிகளுக்கான விதிமுறைகளையும் தெளிவுபடுத்தினார...

தூத்துக்குடியில் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்ட மினி மரத்தான் போட்டி மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

Image
தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியின் பொன்விழாவை முன்னிட்டு கடற்கரை சாலை தனியாா் ஹோட்டல் முன்பிருந்து படகு குழாம் வரை ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாி, தமிழ்நாடு மொ்க்ன்டைல் வங்கி இணைந்து நடத்திய 5 கிலோமீட்டா் தூரம் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்ட மினி மாரத்தான் பேட்டியை மேயா் ஜெகன் பொியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். போட்டியில் ஆண் பெண் என 250 மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டனா். அதில் ஆண்கள் பிாிவில் 50 பேருக்கும் பெண்கள் பிாிவில் 50 பேருக்கும் மரக்கன்றுகளை மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினார்.  பின்னர் அவர் பேசுகையில்:- ஓவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஆரோக்கியம் அவசியமாகிறது. அதே சமயத்தில் உடற்பயிற்சி நடைபயிற்சி ஓட்டபந்தயம் முக்கியம். இந்த மாநகரம் சுகாதாரமான நகரமாக மாறுவதற்கு நெகிழி கோிபேக், பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் எல்லோருக்கும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தக்கூடாது என்று உங்களது தாய் தந்தையா்களிடம் கூறுவது மட்டுமின்றி நீங்களும் முன் உதாரணமாக இருந்து அதை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் எடுத...

தவெக விஜய் சுற்றுப்பயணம் வேலைக்கு ஆகாது... திருப்பூரில் நைனார் நாகேந்திரன் பேட்டி

Image
 திருப்பூர்: தவெக விஜய் சுற்றுப்பயணம் வேலைக்கு ஆகாது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்று திருப்பூரில் நைனார் நாகேந்திரன்  கூறினார். திருப்பூர் பாளையக்காடு பகுதியில் பாஜக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, பெண்களுக்கு சேலை, மஞ்சள் குங்குமம் வழங்கும் நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பெண்களுக்கு ,சேலை குங்குமம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் செந்தில் வேல், பாயின்ட் மணி, சின்னசாமி, நடராஜ், மலர்க்கொடி, சேலஞ்சர் துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்து மதத்தை பொறுத்து நம்முடைய தந்தையாக சிவன் பார்வதியை வணங்கினால் கூட முழு முதல்கடவுலாக விநாயகரை வணங்குகிறோம்.  தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தமிழக முதல்வர் வெளிநாடு சென்று முதலீடு பெற்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். ஏற்றுமதி கொள்கையில் மாற்றம் வர வேண்டும் என்று முதல்வர் கூறியதாக சொல்கிறார்கள். எந்த மாதிரியான மாற்றம் என்று அவர் சொல்ல வேண்டும்.  ஏற்றுமதி வரி விதிப்பு சர்வதேச பிரச்சி...

அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எஸ்.எம்.சி கூட்டம்...திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு பங்கேற்பு

Image
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் (எஸ்.எம்.சி) பள்ளி வளாகத்தில் நடந்தது.  கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியரும், எஸ்.எம்.சி ஒருங்கிணைப்பாளருமான ராமகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.  தொடர்ந்து எஸ்.எம்.சி உறுப்பினர்கள் பள்ளியின் வளர்ச்சிகள் குறித்தும், உடனடி தேவையாக மாணவிகளுக்கு தனி கழிப்பிடம் கட்டித் தரவும், 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உட்கார பெஞ்ச் மற்றும் டெஸ்க் ஆகியவற்றிக்கு ஏற்பாடு செய்து தரவும், பள்ளி வளாகத்தில் கபடி, கோகோ போன்ற விளையாட்டுகளுக்கு இடம் மற்றும் அதற்கான வசதிகளை செய்துதர வேண்டும் வேண்டும் என வலியுறுத்தியதுடன் மேலும், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் சுந்தரராஜ் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு கலந்து கொண்டு ச...

பெரிச்சிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் துளிர் வினாடி வினா போட்டி

Image
 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்ட மையத்தின் சார்பில்  துளிர் வினாடி வினா போட்டி திருப்பூர்  பெரிச்சிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு கிளையின் தலைவர்  சுதா  தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் செல்வராஜ்  வரவேற்றார்.  பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர்  இளவரசி,  மாவட்ட பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர்  கெளரி சங்கர் போட்டி குறித்து விளக்கினார்.   மாவட்ட உதவி திட்ட அலுவலர்  அண்ணாதுரை  போட்டியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் சந்தோஷ்  ஆசிரியர் கனகராஜா,  ரவி,  ஆசிரியர் இர்ப்பான் ஆகியோர் நடத்தி கொடுத்தனர்.  போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

பல்லடத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோலாகலம்!

Image
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் மற்றும் ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.   இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமையில்  மாநில செயலாளர் சண்முகம் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் ஆரம்பித்து திருச்சி சாலை மேற்கு பல்லடம் அண்ணா நகர் வழியாக மாணிக்கபுரம் சாலை வழியாக மங்களம் சாலை வந்து பொங்கலூர் பிஏபி வாய்க்காலில் கரைப்பதற்கான ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் கண்டு சாமிதரிசனம் செய்தனர். ஊர்வலம் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஊர்வலத்தில் கோலாகலமாக நடனங்களும் விதவித விநாயகர்  சிலைகளும் வருவதால்  பல்லடம் நகரமே திருவிழா கோலம் பூண்டது. இந்து முன்னணி நிர்வாகிகள் உதயகுமார், ரஞ்சித், லோகநாதன்,உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

ஓடும் ரயிலில் பிளாட்பாரம் இடுக்கில் விழுந்த பெண்... கத்தியே காப்பாற்றிய பெண் போலீஸ்

Image
 திருப்பூரில் ரயிலில் இருந்து இறங்கும்போது ரயிலுக்கு, பிளாட்ஃபாரத்துக்குமான இடைவெளியில்  பெண் ஒருவர் விழுந்த நிலையில், அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் சாதுர்யமாக செயல்பட்டு அறிவுரை வழங்கி காப்பாற்றினார்.  திருப்பூர் ரயில் நிலையத்துக்கு இன்று அதிகாலை மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில்  வந்தது. அந்த ரயில் திருப்பூர் நிலையத்தின்  முதலாவது பிளாட்ஃபாரத்தில் நின்றது. பின்னர் புறப்படும்போது, அதிகாலை நேரமானதால்,  ரயிலில் இருந்து இறங்க வேண்டிய 58 வயதுடைய திருப்பூரை சேர்ந்த சுசிலா என்ற ஒரு பெண் பயணி இறங்காமல் விட்டு விட்டார். திடீரென திருப்பூர் வந்ததை பார்த்த சுசீலா,  தனது பேத்தியுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். முதலில் பேத்தியை இறங்கச் செய்தார். 10 வயதான சுசீலாவின் பேத்தி பாதுகாப்பாக இறங்கிய நிலையில், ரயில் வேகமெடுத்த காரணத்தால் சுசீலா இறங்கும்போதே  பிளாட்ஃபார்த்துக்கும், ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்தார். இதை பார்த்து அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் திவ்யா, அந்த பெண் பயணி சுசீலா விழுந்த இடத்த...

கலைத்திருவிழா போட்டிகள்... அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அசத்தல்!

Image
  திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரம் பெரியாயிபாளையம் குறுவள மைய அளவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "பசுமையும், பாரம்பரியமும்" என்ற தலைப்பில் கலைத்திருவிழா போட்டிகள் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.  கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சிக்கு அவிநாசி வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.   போட்டியில் 13 பள்ளிகளை சேர்ந்த  320 மாணவ, மாணவிகள் தனி மற்றும் குழு என 18  வகையான போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் அனைத்து பள்ளி மாணவர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தியதால் போட்டி கடுமையாக இருந்ததுடன், மதிப்பெண்கள் போட நடுவர்களை திணறினர். மாலையில்  கலைத்திருவிழா போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.                      இதில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தமிழ் ஒப்புவித்தல் போட்டியில் அம்மாபாளையம் பள்ளி மாணவி அபூர்வாஸ்ரீ முதலிடத...

பஞ்சகைலாயத்தில் இரண்டாவது கைலாயம்.... அம்மையப்பனாய் ஆதிகைலாய தரிசனம்!

Image
 பஞ்ச கைலாயம்! எளியோர்க்கு எளியவன்! அய்யன் சிவபெருமானின் வசிப்பிடம் இமயமலைதான். இமயத்தில் ஐந்து மலைகள் பஞ்சகைலாய மலைகளாக, அம்மையப்பனின் வசிப்பிடமாகக் கருதப்படுகிறது.  இதில் சீனாவின் திபெத்தில் இருக்கக்கூடிய பெரிய கைலாயம் எனப்படும் மானசரோவர் கைலாயம் முதல் கைலாயமாக உள்ளது.  புராண காலந்தொட்டு, நம்மவர்கள் கைலாய மலைக்கு நடந்து செல்லும் வழியில், உத்தரகாண்ட் மாநிலத்தில், இந்தியயா&சீனா எல்லையில் உள்ள ஆதிகைலாயம் இரண்டாவது கைலாயம் ஆகும்.  இமாச்சலப்பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமகேஷ்  ஏரியானது, பார்வதியை மணந்த பிறகு சிவ பெருமானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த மணிமகேஷ் மூன்றாவது கைலாயமாக இருக்கிறது.  இமாச்சலப்பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கின்னார் கைலாயம் நான்காவது கைலாயமாக உள்ளது; இதில் சிவபெருமான், - பார்வதிதேவியுடன் அர்த்தநாரீஸ்வரராக சுயம்பு லிங்க வடிவமாக அருள்பாலிக்கிறார்.  இமாச்சலப்பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ஜன் கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீகந்த்மகாதேவ் மலை, ஐந்தாவது கைலாயமாக விளங்குகிறது. பஞ்சகைலாய...

அமெரிக்க வரிவிதிப்பால் ஸ்தம்பிக்கும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்..தினமும் 500 கோடி இழப்பு

Image
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் மீது விதித்த 50 சதவீத அபராத வரி காரணமாக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர். மாதத்துக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.  இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இருந்தே நடக்கிறது. 1980 முதல் 90 களில் இங்கு வளர்ந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் ஏற்றுமதி நடக்கிறது. இந்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்க ஏற்றுமதியை நம்பி சிலநூறு பெரிய பின்னலாடை நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு இருக்கிறார்கள்.  இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்கச்செய்து உள்ளது. இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கனவே பெறப்பட்ட ...

ஆட்டோ வாங்குவதற்கு 75 சதவீத மானியம்... எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

Image
 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது: “திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு.  விலைவாசியல் மக்கள் படும் துன்பம் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய் என்ன விலை என்ன… இப்போது என்ன விலை என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்...

உடுமலை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

Image
 உடுமலை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பலரும்  இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.  டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான ஆசிரியர் தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சகம் தேசிய ஆசிரியர் விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் சேர்ந்த பி.எஸ் சீனியர் செகண்டரி என்ற தனியார் பள்ளியின் ஆசிரியர் ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூரில் உள்ள பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்ட இருவருக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிக...

இன்னும் ஆறு மாதத்தில் அதிமுக ஆளுங்கட்சி.. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

Image
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் வருகின்ற 11, 12ம்  தேதிகளில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக பகுதிகளுக்கு வருகை தரவுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.  திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும்,முன்னாள் துணை சபாநாயகருமான  பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர்  ஒன்றிய கழக செயலாளருமான கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார்.  மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர்  கண்ணுச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  பிரேம்குமார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:  அதிமுகவில் உழைத்தால் அனைவருக்கும் நிச்சயம் நல்ல பொறுப்புகள் வழங்கப்படும், அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், தங்களால் இயன்ற தலைப்பை முழு அர்ப்பணிப்போட...

ஒன்னரை லட்சம் ரூபாயை தொலைத்த முதியவர்... போலீசில் ஒப்படைத்த தந்தை, மகளுக்கு பாராட்டு!

Image
 காங்கேயத்தில் ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட முதியவர் - கீழே கிடந்து எடுத்த தந்தை மகள் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் உரியவரிடம் வழங்கினார்.  திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் விபத்து காப்பீட்டு பணத்தை ஞாபக மறதியால் தவறவிட்ட முதியவர். கீழே கிடந்த எடுத்த தந்தை மற்றும் மகள் உறவினரின் அறிவுறுத்தலின் காங்கேயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்த தந்தை மகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காங்கேயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் குங்காருபாளையம் காமராஜ்(58) என்ற முதியவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கானது காங்கேயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டு முதியவர் காமராஜுக்கு ரூ.3.68 ரூபாய் இழப்பீடு கடந்த வாரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காங்கேயம் வந்த முதியவர் காமராஜ் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக் கொண்டு வழக்கை நடத்தி கொடுத்த வழக்கறிஞர் மற்றும் காமராஜின் மகன் ஆகியோர்களுக்கு பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு மீதி தொகை ரூ...

சதுரங்க வேட்டை படம் வசனம் போல ஆசையைத் தூண்டுகிறது திமுக... எடப்பாடி பழனிசாமி பேச்சு

Image
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:  மணப்பாறை நகரமே அதிர்கின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் நமது கழக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உங்கள் எழுச்சியே சாட்சி. மணப்பாறை என்றாலே முறுக்குக்குப் பெயர் பெற்ற பகுதி. அதோடு வீரமிக்க இளைஞர்கள் இருக்கின்றீர்கள், ஜல்லிக்கட்டு காளை அடக்கக்கூடிய வீரர்கள் நிறைந்த பகுதி. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முழு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்படும். 51 மாத திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்திருக்கிறதா..? விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இது. இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற மக்கள் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம்.  தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்தது கிடையாது. விவசாயிகளுக்கு நீர் முக்கியம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில...