Posts

Showing posts from February, 2026

தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞானராஜ் பதவியேற்பு.!

Image
தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ, மேல்நிலைப்பள்ளி தாளாளராக எஸ்.டி.எஸ் ஞான்ராஜ் பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணி முழுமையாக வெற்றி பெற்றதையடுத்து திருமண்டல லே செயலாளராக எஸ்.டி.கே.ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.  தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு புதிய தாளாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விக்டோரியா சிபிஎஸ், மேல்நிலைப்பள்ளியின் தாளாளராக தொழிலதிபர் எஸ்.டி.எஸ்.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். பள்ளியின் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் திருமண்டல பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கோரம்பள்ளம் குளம் தூா் வாரும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தாா்.

Image
  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் குளம் 20 கோடி மதிப்பீல் தூா்வாரும் பணியை பூஜையுடன் சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பேசுகையில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க விவசாயிகளின் நலன் கருதி 20 கோடி மதிப்பீல் தூா் வாரும் பணிகள் துவங்க உள்ளது அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயிகள் பாசனத்தின் பயன்பாட்டிற்கு நன்மை கிடைக்கும் தளபதியாா் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் எல்லா பணிகளும் மக்களுக்கான பணிகளாக நடைபெற்று வருகிறது. இதை நல்லமுறையில் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று பேசினாா்.  விழாவில் நீா்வளத்துறை செயற்பொறியாளா் தங்கராஜன், உதவி செயற்பொறியாளா் சிவராஜன், ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி, பகுதி செயலாளர் ஆஸ்கா், தெற்கு மாவட்ட மகளிா் சமூக வலைதள பொறுப்பாளரும் வெல்லும் தமிழ்பெண்கள் ஸ்டாலின் படை ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளருமான மீனாட்சி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், விவசாய அணி துணை அமைப்பாளர் அாிகிருஷ்ணன் கோபால், கலை இலக்கிய அணி தலைவர் பொன்னரசு, பொறியாளர் அணி அமைப்ப...

"கல்விதான் அனைவருக்கும் அசைக்க முடியாத சொத்து " - பள்ளி விழாவில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு

Image
  தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா போட்டிக்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிாியா் எமல்டா வெலன்சியா ஹெப்ஸிபா வரவேற்புரையாற்றினாா்.  விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசு வழங்கி பேசுகையில்:-  "அரசு பள்ளியாக இருந்து இந்த பள்ளி மாநகராட்சி வசம் வந்தபின்பு பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகாித்துள்ளது. இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தலைமை ஆசிாியையின் பங்கும் அதிகம் ஓவ்வொருவருக்கும் உடல் ஆரோக்கியம் முக்கியம் நான் 1989ல் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் தமிழ்வழிக்கல்வியை படித்த போது கொஞ்சம் விளையாட்டு பிள்ளையாக தான் இருந்தேன் ஆனால் கால போக்கில் தான் படிப்பின் அருமை என்னவென்று தொிந்தது. அதனால் அனைவரும் பள்ளி பருவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு உங்களுடைய பெற்றோா்கள் ஆசிாியா்கள் சொல்படி கேட்டு படிக்க வேண்டும். கல்விதான் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாத மிகப்பொிய சொத்தாகும். தமிழக முதலமைச்சர் பள்ளி கல்விக்கென்று பல...

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு.!

Image
  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும் என்று பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தாா். அதன்படி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு வழங்கினாா்.  நிகழ்ச்சியில் மாா்க்கன்டேயன் எம்எல்.ஏ, நகா்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர திமுக செயலாளா்ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோன் செல்வின், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா,  மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன...

"முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது" _ ஓட்டப்பிடாரத்தில் ஓன்றிய செயலாளர் இளையராஜா பேச்சு.!

Image
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் 200 ெதாகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்து எல்லா மாவட்டச் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநில நிா்வாகிகளையும் கேட்டுக்கொண்டுள்ள நிலையில்..  தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஓன்றியம் பகுதியில் திமுக துணைப்பொதுச்செயலாளா் கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் வழிகாட்டுதலின்படி வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரத்தை ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் அப்பகுதிக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் வியாபார பிரமுகா்கள் மற்றும் அனைவாின் குடும்பத்தினரை நோில் சந்தித்து திமுக ஆட்சியின் சாதனை துண்டு பிரசுரங்களை வழங்கினார்.  பின்னர் ஓன்றிய செயலாளர் இளையராஜா பெண்களுடன் கலந்து கொண்டு உரையாடலின் போது கூறுகையில் "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்...

"டாஸ்மாக் கடை வேண்டாம்" - ஆளும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் - தூத்துக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.!!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளிக்கும் தீர்மானத்திற்கு, ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவு மதிப்பீடுகள் மற்றும் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டங்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. அப்போது, மாநகராட்சி பட்ஜெட்டைக் கண்டித்து அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுகவினர் வெளியேறிய பின், மாமன்றத்தில் 21 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அதில் 20-வது தீர்மானமாக, மாநகராட்சிக்குச் சொந்தமான "டோபிகானா" வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று கடைகளை, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை அமைக்க மாத வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதற்க்கு, ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கந்தச...

"தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உயர்ந்து வருகிறது" –ஆணைகளை வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், நான்கு மண்டல அலுவலகத்திலும் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் ெபாதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்ட 34 மனுக்களுக்கு அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சியில் உள்ள கூட்டஅரங்கில் நடைபெற்றது.  மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் இதுவரை மாநகராட்சிக்கு 4000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன அவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மாநகராட்சி பகுதியில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பூங்காக்கள் மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்காமல் இருக்க 14 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும், பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் ஓடுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் கொசு தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக வளர்ச்சி பெற்று வருவதாகவும், வருங்காலத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்த்து, மாநகராட்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி துணை...

தூத்துக்குடி: ஒன்றாம் வகுப்பு மாணவியைப் பிரம்பால் அடித்த ஆசிரியை கைது.!

Image
  தூத்துக்குடியில் ஒன்றாம் வகுப்பு மாணவியைப் பிரம்பால் அடித்த பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.  தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி ஜாய்ஸ் (45). இவர் தூத்துக்குடி தெற்குப் புதுத் தெருவில் உள்ள மாநகராட்சி T.D.T.A நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ஆம் தேதி, ஜாய்ஸின் வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அந்த மாணவியைப் பிரம்பால் அடித்துள்ளார். இதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது கையில் இருந்த காயத்தைக் காட்டி தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இது குறித்து விளக்கம் கேட்க மாணவியின் தாயார் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் பேசியுள்ளார். அப்போது, "மாணவிகள் படிக்கவில்லை என்றால் அப்படித்தான் அடிப்பேன்" என ஆசிரியை அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவியின் தாயார், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் மோக...

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் ஆசிரியர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்.

Image
அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை உடனடியாக வழங்கிடக் கோரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் நேற்று ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பாக மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாநில அளவில் கல்லூரி ஆசிரியர்கள் நடத்தி வரும் இந்த தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிகிறது. அரசாணை எண் 5-இன் படி, அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது போலவே, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகையை (Arrears) உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து மூட்டா (MUTA) அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் சிவஞானம் கூறுகையில்... தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, வரும் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களில் 'அரசாணை எண் 5'-ஐத் திருப்பிக் கொடுக்கும் போரா...

நடுக்கடலில் தத்தளித்த மணப்பாடு மீனவர்கள் 6 பேர் பத்திரமாக மீட்பு.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில், மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த திலக், சிலுவை, பிரைட்வின், ரபிஸ்டன், லபிஸ்டன் மற்றும் சிலுவைபிச்சை ஆகிய 6 மீனவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொச்சியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாகப் படகின் எஞ்சின் பழுதானது. அதனைச் சரிசெய்ய முடியாமலும், செல்போன் சிக்னல் கிடைக்காததாலும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாமல் மீனவர்கள் ஆழ்கடலில்  தவித்தளித்து வந்துள்ளனர்.  இதற்கிடையில், கடந்த 18-ஆம் தேதி ரபிஸ்டன் என்பவர் தனது மனைவி டிலெட்டாவுக்குச் சிரமப்பட்டுத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீனவர்களை மீட்கக் கோரி குடும்பத்தினர் ஆட்சியர் மற்றும் கடலோரக் காவல் படையினரிடம் மனு அளித்துள்ளனர்.  அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மணப்பாட்டில் 350-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.  இதன் பிறகு கடலோரக் காவல் படையினருடன் இணைந்து மணப்பாடு மீனவர்களும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலைய...

தூத்துக்குடியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பறக்கும் படை நியமனத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால் பரபரப்பு.! - யாரை திருப்திப்படுத்த இந்த புதிய நடைமுறை? ஏன் திடீர் மாற்றம்? மாவட்ட கல்வி அலுவலர் மெளனம் ஏன் ?

Image
  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தேர்வு மையங்களில் நியாயமான முறையில் தேர்வுகளை கண்காணிக்கும் நிலை படை என்ற சொல்ல கூடிய “பறக்கும் படை” (Flying Squad) சார்ந்த ஆசிரியர் நியமனத்திலும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்திலும் புதிய சர்ச்சை எழுந்துள்ளதாக தகவல்கள் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை தேர்வு மையத்தில் அரசு பள்ளி ஆசிரியர் துறை அலுவலராகவும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் முதன்மை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டு இருவரும் இணைந்து தேர்வை நடத்தினர். இப்போது அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். அது போல "நிலை படை" என்பது தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளைத் தடுக்கவும், தேர்வு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் அமைக்கப்படும் அதிகாரப்பூர்வ குழுவாகும். ஆண்டுதோறும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் இருவரும் இணைந்து சீனியார்ட்டி படி இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டில் 2003 வரை இரு பள்ளி ஆசிரியர்களையும் சீனி...

இலங்கைக்குக் கடத்த முயன்ற சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை பறிமுதல் - கடலோரப் பாதுகாப்புப் குழும போலீஸார் நடவடிக்கை.!

Image
  தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளைக் கடலோரப் பாதுகாப்புப் குழும போலீஸார் இன்று அதிகாலை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி தருவைகுளம் கடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதியில், இன்று (25.02.2026) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகக் கடலோரப் பாதுகாப்புப் குழுமத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் போலீஸார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது கடற்கரையில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளைக் கண்டறிந்தனர். அவைகளை சோதனையிட்ட போது 35 கிலோ எடை கொண்ட 77 பீடி இலை மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. சர்வதேசச் சந்தையில் இவற்றின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போலீஸார் வருவதைக் கண்ட கடத்தல் கும்பல், தங்களது பைபர் படகுடன் நடுக்கடலுக்குள் தப்பிச் சென்றுவிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள் தருவைகுளம் கடல் காவல்  நிலையத்திற்குக்...

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் பலி.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள பருத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ராஜா (என்கிற) ராஜ்குமார் (30). இவருக்கு சுபா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ராஜ்குமார் கடந்த ஒரு ஆண்டாகத் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம், மாநகராட்சி பாதாள சாக்கடைப் பராமரிப்புப் பணியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இன்று மாலை 5 மணி அளவில், தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் பகுதியில் ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேர் பாதாள சாக்கடைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சங்கர் என்ற பணியாளர் சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக ராஜ்குமார் உள்ளே இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக விஷவாயு கசிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  இதில் மயக்கமடைந்த ராஜ்குமார் சாக்கடைக்குள்ளேயே விழுந்தார். சங்கரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் த...

இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 26 லட்சம் மோசடி - குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!

Image
  கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் அன்பு நகரை சேர்ந்த சிவராமன் 65/26 என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த 4 இளைஞர்களிடம் அறிமுகமாகி இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூபாய் 26,50,000/- பணத்தை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு 1-ல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -IV ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் இன்று (25.02.2026) மேற்படி எதிரி சிவராமன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு மோசடி குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 8,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட குற்றப்பிரிவு - I காவல் துணை கண்காணிப்பாளர் மயில்சாமி மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த மாவட்ட ...

"எந்த பதவியில் இருப்பது முக்கியமல்ல அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது" –தூத்துக்குடியில் 83 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

Image
தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசுகையில்:-  “கணினியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் வந்துவிட்டது. இது கடுமையான போட்டி நிறைந்த உலகம். பலர் புத்தகங்களில் மூழ்கி உழைக்கிறார்கள். பெற்றோர்கள் கனவுகளுடன் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்த கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கல்ல அறிவை வளர்ப்பதற்கானது. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். தூத்துக்குடியில் பெண்களுக்கென்று மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடலை ஆரோக்கியமாகவும், மனதை தைரியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.  பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்க வேண்டும். மரங்கள் நட வேண்டும். சமூக பொறுப்புணர்வுடன் வாழ வேண்டும். எந்த பதவியில் இருப்பது முக்கியமல்ல அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. இது ஒரு கடல் போன்றது. இந்த அறிவை பெற்...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு காலமானார் - மருத்துவமனைக்கு உடல் தானம்.!

Image
  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான தோழர் ஆர்.நல்லகண்ணுவுக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்து வந்த நிலையில் பலனளிக்காமல் இன்று மதியம் 1.15 மணிக்கு உயிர் பிரிந்தது.. 101 வயதைக் கடந்த நிலையிலும் பொதுவாழ்வில் மிகவும் எளிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வந்த அவர், வயது மூப்பு சார்ந்த சில உடல்நலப் பாதிப்புகள் காரணமாக தற்போது சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு சிறுநீர் கழிப்பது குறைய தொடங்கியதால், கடந்த டிசம்பர் 28-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணத்தால் வேறு சில பிரச்சினைகளும் இருந்ததால், அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் மிகுந்த கவலை அடைந்ததோடு, அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.. இந்த சூழ்நிலை...

ஆதிதிராவிட மக்களின் 25 ஆண்டு கால தீரா பிரச்சனை - அமைச்சர் கீதா‌ ஜீவன் தீர்த்து வைப்பாரா ? புறக்கணிப்பாரா ?

Image
  தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி பகுதியில் உள்ள ஜோதிநகரில் ஆதிதிராவிட மக்களுக்கு என வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை, மாற்றியமைக்க நடத்தப்பட்ட அரசியல் சார்ந்த முயற்சியையும் சூழ்ச்சியையும் முறியடித்து, அரசு கொடுத்த இடத்தை மீட்டெடுக்க இம் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததை தொடர் செய்திகள் மூலம் தூத்துக்குடி பொது மக்கள் அறிவர். பல ஆண்டுகளாக போராடி வந்த இம்மக்களின் உரிமை போராட்டம் 2021 முதல் கூடுதல் வீரியம் பெற்றது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் மக்களோடு களத்தில் நின்றது. மற்ற எவரும் இவர்களை கவனத்தில் கொள்ளவில்லை. இதையும் தாண்டி சொல்ல வேண்டுமானால் இப்பிரச்சனையை முதன் முதலாக கையில் எடுத்து முன்னால் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி மூலமாக தடுத்து நிறுத்தியவர் தான் முன்னாள்  கவுன்சிலர் கே‌.வி.கே.சாமி (மாணிக்கபுரம்) . அதன் பின் இந்த முயற்சியை வழி நடத்தியவர்கள் சார்லஸ், மனுவேல், நெப்போலியன் உள்ப்பட அம்பேத்கர்நகரை சேர்ந்தவர்கள் இந்த இடத்தை  சுத்தம் செய்து நில அளவை சரி செய்தார்கள். அதைப்போலவே கலா ஞானம், மேரி ஜான், எலிசபெத், எ...

பெற்றோா்கள் ஆண் பெண் இரு குழந்தைகளையும் கண்காணித்து சமமாக வழி நடத்த வேண்டும் மகளிா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

Image
தூத்துக்குடி உலக மகளிா் தின விழாவை யொட்டி தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் அனைத்து மகளிா் குழுக்கள் சாா்பில் நடைபெற்ற விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:- தூத்துக்குடி தொகுதியில் நடைபெறுகின்ற விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தொிவித்து கொள்கிறேன். நம்முடைய உாிமையை கேட்டுப்பெறுவதற்காக பெண்கள் படிப்பு வேலை பல்வேறு பொறுப்புகளுக்கு வரவேண்டும் என்று நினைத்த காலக்கட்டத்தில் தந்தை பொியாா் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை வழங்க வேண்டும் என்று விடுத்த கோாிக்கையைடுத்து 1989ல் கலைஞா் அதை சட்டமாக்கினாா். பெண்களை சமையல் வேலையில் மட்டுமே முடக்கப்பட்டிருந்த காலம் மாறி இப்போது எல்லாத்துறையிலும் பெண்கள் சாதனை படைத்துக்கொண்டு வருகின்றனா். கடந்த காலத்தில் உாிமையில்லாத இடத்தில் கலைஞாின் சட்டத்திற்கு பின்பு அண்ணன்தம்பி தனது தாய்தந்தையிடத்தை அனுபவிப்பதற்கு நம்மிடம் வந்து உதவி கேட்கும் உாிமையை நம் தற்போது பெற்றுள்ளோம். கல்வியில் பெண்கள் முன்னேற்றம் வேலை வாய்ப்பில் கலைஞர் 33 சதவீதம் தற்போது தளபதியாா் ஆட்சியில் 50 சதவ...

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 27.02.2026 அன்று மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம்.!

Image
  பொருளாதாரத் தடையின்றி மாணவ, மாணவியர் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற உதவும் வகையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், வங்கியாளர்களை ஒருங்கிணைத்து, வருகின்ற  27.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு, தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கடன் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், 2024-2025 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நடப்பு ஆண்டில் இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் சேர்ந்திருக்கும் மாணவர்கள், ஏற்கனவே கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் (Existing Students) மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். கடனுக்காக விண்ணப்பிக்க வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் (இணை விண்ணப்பதாரர்), மாணவர்களுக்கான ஆவணங்கள் பெற்றோருக்கான ஆவணங்கள், ஆதார் அட்டை & பான் கார்டு, 10, +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள், சமீபத்திய பாஸ்போர்ட்...

முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Image
  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த முதலமைச்சரை, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் கே. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மேயர் மகேஷ் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகைய்யா, உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் முதலமைச்சரை நேரில் வரவேற்றனர். கன்னியாகுமரி பயணம்: விமான நிலைய வரவேற்பிற்குப் பிறகு, முதலமைச்சர் தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் சென்றார். கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் 'சில்வர் ஜூப்ளி' வளைவு...

நாசரேத்தில் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: பேராயர் ஐசக் வரபிரசாத் பங்கேற்பு.!

Image
  நாசரேத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பிரதம பேராயரின் ஆணையாளர் பேராயர் ஐசக் வரபிரசாத் பங்குபெற்றார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் இறுதி கட்ட தேர்தல் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் வைத்து கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இத் தேர்தலை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையேற்று நடத்தினார். இத்தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர் மோசஸ் ஜெபராஜ் உபதலைவராகவும், குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ் குருத்துவச் செயலராகவும், எஸ்.டி.கே. அணித் தலைவர் எஸ்.டி.கே. ராஜன் லே செயலராகவும், டி.கே.எம்.ஜான்சன் பொருளாளராகவும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து திருமண்டல செயற்குழு பிரதிநிதிகள் மற்றும் சினாடு பேரவை தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதிலும் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து நேற்று 23 ம் தேதி நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி சிற்றாலயத்தில் வைத்து தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் நடைபெற...

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்

Image
  தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனாவால்  தொடங்கி வைத்தார்.  வ.உ.சி கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய துறைமுக மெய்நிகர் மாதிரி செயலி உள்ளிட்ட 9 திட்டங்கள், ரூ.12 கோடி மதிப்பிலான 'கொற்கை' சுற்றுலாத் திட்டம், துறைமுக ரயில் சரக்குத் தள இணைப்புச் சாலை மேம்பாடு உள்ளிட்ட 21 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து துறைமுகத்தின் சமுதாய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு அமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியயதாவது: தமிழகத்தில் நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் துறைமுக மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சாகர்மாலா மற்றும் அம்ரித் பாரத் திட்டங்களின் கீழ் துறைமுகங்களை ரயில்வேயுடன் இணைக்கும்...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Image
  14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (26). இவர் கடந்த 2024-ம் ஆண்டு, 14 வயது சிறுமி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாசரேத் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரைக் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி (பொறுப்பு) பிரீத்தா அவர்கள், இன்று (23.02.2026) தீர்ப்பினை வழங்கினார். குற்றவாளி ஜெயக்குமாருக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.10,000  அபராதமும் மற்றும் கடத்தல் குற்றத்திற்காக 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில...

மார்ச் 29 முதல் சென்னை - தூத்துக்குடி இடையே இரவில் விமான சேவை: இன்டிகோ அறிவிப்பு !

Image
  சென்னை - தூத்துக்குடி இடையே இரவில் விமான சேவை வருகிற மார்ச் 29 முதல் தொடங்கும் என்று இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான தூத்துக்குடிக்கு, சென்னையில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ புதிய மாலை நேர விமான சேவையை அறிவித்துள்ளது.  இந்த புதிய சேவையானது வரும் மார்ச் 29 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பகல் நேரங்களில் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த இரவு நேர சேவை தொடங்கப்படுகிறது. விமான கால அட்டவணை: இந்தச் சேவையின் கீழ், விமான எண் 6E 7605 சென்னையில் இருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடியைச் சென்றடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பும் விமான எண் 6E 7606, தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையை வந்தடையும்.  இந்த இரவு நேர விமான சேவை, வேலை நிமித்தமாகப் பயணம் செய்யும் பயணிகளுக்கும், அவசரத் தேவைக்காகச...

விஜய்க்கு மயில் தோகை மாலை .! - வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் பாயுமா ?

Image
  வேலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 மயில் தோகைகளை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டாலும் அதை பயன்படுத்தி மாலைகள் தயாரிப்பது விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் கலந்து கொண்டு பேசினார். இதில் உரையாற்றிய விஜய்க்கு, வீரவாள் பரிசு தொடர்ந்து உரையை முடித்த விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வீரவாள், வெள்ளி யானை சின்னம், வேல் உள்ளிட்டவற்றை வழங்கினர். குறிப்பாக மயில் தோகை மாலை அணிவித்து விஜய்க்கு வீரவால் பரிசளிக்கப்பட்டது. இதில் தான் வ...

நான்கரை ஆண்டுகாலம் உறங்கி கொண்டிருந்த பலா் இப்போது எழுந்து நடக்கிறாா்கள். எந்த கொம்பனாலும் சூாியனை மறைத்து விட முடியாது, 2026 தோ்தலில் உதிப்பது உதயசூாியன்தான்" - தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், நிா்மல்ராஜ், சுரேஷ்குமாா், மேகநாதன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.   கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்:-  "ஒன்றிய அரசின் புள்ளி விவரம் சொல்கிறது பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதம் வளர்ச்சி பெற்று தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது. தொழில், தனிநபர் வருமானம் உயா்ந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் எண்ணிக்கை குறைந்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்குகிறது. உழைக்கும் பெண்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில் தான் அதிக அளவு உயர்கல்வி பெரும் பெண்கள் என்று அனைத்திலும் வளர்ச்சி அடைந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தேர்தல் வந்த உடன் பாஜகவி...

"அதிரடி அரசியலை நான் ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியாது"- அதிமுக, பாஜகவினரை குறிவைத்து மேயர் ஜெகன் பொியசாமி ஆவேசம்.!

Image
  தூத்துக்குடியில் தமிழகம் தலைகுனியாது என திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில்:- இந்தப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தெருவில் நிற்கும் 100 பேரை அழைத்து நிற்க வைத்து அமர வைத்து நமது தலைவரும் தமிழக முதலமைச்சரையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரையும் மாவட்ட அமைச்சரையும் மாநகராட்சியையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் 2 கோடி ஒன்பது லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் இதை நாம் முழுவதும் பெற்றுவிடலாம் ஒவ்வொரு வரும் 50 வாக்குகள் திமுகவிற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.  அதன் மூலம் நாம் வெற்றி பெற்று விடுவோம். 200 தொகுதி நமது இலக்கு அதனை நாம் அடைந்து விடுவோம் வேட்பாளரை நமது தலைவர் அறிவிப்பார் அந்த வேட்பாளரை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும். 280 பாகம் இருந்த இடத்தில் 360 பாகமாக மாறிவிட்டது. இளைஞர்கள் இ...

தூத்துக்குடியில் முதன் முதலாக திமுக இளைஞரணி அலுவலகம் திறப்பு.! - திமுக மாவட்ட செயலாளர் 2.O அரசியலுக்கு மாறுகிறாரா? மாற்றப்படுகிறாரா?

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பகுதியில் திமுக இளைஞரணி அலுவலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முதன் முதலாக மாநகருக்குள் திறந்து வைத்திருப்பது, இளைஞரணியினர்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  தூத்துக்குடியை பொறுத்தவரையில் இளைஞரணிக்கான முக்கியத்துவத்தை மாவட்ட செயலாளர் இதுவரையில் கொடுத்ததில்லை. மேலும் அவர்களை சுதந்திரமாக கட்சி சார்ந்தோ மக்கள் பணி சார்ந்தோ செயல்பட அனுமதித்தாக தெரியவில்லை. இந்நிலையில் மாவட்ட - மாநகர - பகுதி கழகத்தில் இளைஞரணிக்கு என்று தனி அலுவலகம் அமைத்திட அனுமதி தராத போது, 40 வது வார்டில் மாவட்ட செயலாளர் திடீர் என புதுமை செய்திருப்பது வரவேற்கத்தக்க செயலாக உள்ளது.  மேலும், அண்ணாச்சி பெரியசாமி அவர்கள் காலகட்டத்தில் மாநகர திமுக அலுவலகம் புகழ் பெற்று விளங்கியது. அவருக்கு பிறகு அதுவும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகர திமுக அலுவலகத்தை  காணவில்லை. மாநகர செயலாளரும் தனது பணியை சுதந்திரமாக செய்ய முடியாமல் மாவட்ட செயலாளருடன் இணைந்து செல்கிறார். இவருக்கான அரசியல் அடையாளம் தூத்துக்குடி மாநகர திமுகவுக்குள் ...

தூத்துக்குடியில் வீட்டில் வைத்து விபச்சாரம் : 2 பெண்களை கைது செய்த போலீசார் : 2 பெண்கள் மீட்பு.!

Image
  தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) முத்துராஜா, சிறப்புச் சார்பு ஆய்வாளர் மல்லிகா மற்றும் பெண் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர். விசாரணையில், முனீசுவரி (29) மற்றும் அந்தோணியம்மாள் (39) ஆகிய இருவர் இணைந்து, மற்ற இரண்டு பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரம் நடத்திய முனீசுவரி மற்றும் அந்தோணியம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன

தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : தூத்துக்குடி மாவட்டத்தில் 13,76,624 வாக்காளர்கள் : இறுதி பட்டியல் வெளயீடு!

Image
  தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை http://voters.eci.gov.in, http://electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி voter helpline app மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை  வெளியிட்டார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத்...

தூத்துக்குடி : சிறுவன் கடத்தல் - 30 நிமிடங்களில் கடத்தியவர்களை கைது செய்த போலீசாருக்கு எஸ் பி பாராட்டு!

Image
  குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2½ வயது சிறுவனை இருசக்கர வாகனத்தில் கடத்திய சம்பவத்தில் 30 நிமிடங்களில் சிறுவனை கடத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டு கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் அந்த 2 ½ வயது சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து திடிரென அச்சிறுவனை அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பெட்டிக்கடையில் இருந்த குழந்தையின் தாயார் உடனடியாக சத்தம் போட்டுள்ளார். மேலும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குலசேகரன்பட்டினம் காவல் நில...

தவெக வில் தூத்துக்குடி அஜிதா மீண்டும் புறக்கணிப்பு.!- அஜிதாவுக்கு ஏற்படுத்தப்படும் அரசியல் பின்னடைவு தூத்துக்குடியில் திமுகவுக்கான வெற்றியாக அமையுமா !?

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பாளராக J.K.R.ஜெ. முருகனை  நியமித்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். இதில் இணை கண்காணிப்பாளராக பாலசுப்பிரமணியன், எஸ்.டி.ஆர. ஷ்யாம் ஆகியோரையும் நியமித்து தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். தவெகவின் தொடக்க கால பணியாளராக தூத்துக்குடியில் களப் பணி செய்தவர் அஜிதா ஆக்னல். இவர் ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தில் தலைவராக செயலாற்றி வந்த திமுக பிரமுகர் பில்லா ஜெகனின் தங்கை என்பதால் ரசிகர் மன்றத்தையும், ரசிகர்களையும் ஒருங்கிணைத்து கட்சியின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தார். இவரது அரசியல் அறிமுகம் மாவட்டத்தில் ஏனைய அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்கவும் வைத்தது. இதனால் இவரை மாவட்ட செயலாளராகவும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகவும் கட்சி தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரையில் உச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அஜிதாவும் பதவிகளை நோக்கி தனது அரசியல் பயணத்தை விரைவுபடுத்தினார். இந்த கால சூழ்நிலையில் தான் தவெகவின் தலைமை ஏற்று மக்கள் பணி செய்ய பாலா, எஸ்.டி.ஆர்.ஷ்யாம், ஜே.கே.ஆர்.முருகன், சு...