Posts

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்று (26.09.2026) கை ரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம்.!

Image
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின்_கை ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளை (26.09.2026) அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைத் தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, இதுவரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளைய தினம் (26....

பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை..!

Image
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 36). இவர் ஏலக்காய் மொத்த வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இவருடைய மனைவி மதுமிதா (வயது 29), இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து அவ்வபோது எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு லைக்குகள் சும்மா அள்ளி கொண்டு போகுமாம்.  இந்தநிலையில், மதுமிதா தான் வாங்கும் புதிய தங்க நகைகள், வீட்டில் இருக்கும் கட்டுக்கட்டான பணம் மற்றும் தாங்கள் எங்கு செல்கிறோம் போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து ரீல்ஸாக வெளியிட்டு வந்துள்ளார். மேலும் கழுத்து நிறைய நகைகள் அணிந்து கொண்டும், கட்டுக்கட்டாக பணத்தை மெத்தையில் அள்ளிப்போட்டு கொண்டும் மதுமிதா டான்ஸ் ஆடி இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார்.  சம்பவத்தன்று ஷாப்பிங் செல்ல வெளியே போயிருந்தவர் இரவு நீண்ட நேரம் ஆகி தான் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.  உடனே வீட்டிற்குள் ரகசிய அறைக்கு சென்று செக் பண்ணிய போத...

வேலவன் ஸ்டோர்ஸ் விவகாரம் : தூத்துக்குடி இசக்கி ராஜா ஜாமீனில் விடுதலை.! 'சசிகலாவுக்கு நன்றி; யாரும் இதை கொண்டாட வேண்டாம்' என வேண்டுகோள்.!

Image
தங்க நகையில் கலப்படம் புகார் விவகாரத்தில் வேலவன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்றதாக எழுந்த புகாரில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.  தூத்துக்குடியில் உள்ள பிரபல 'வேலவன் ஹைப்பர் மார்க்கெட்' கடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபர் தங்க நகை வாங்கியுள்ளார். அந்த நகையில் அதிக அளவில் வேறு உலோகம் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நகை வாங்கி நபருக்கு உதவும் வகையில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவராக உள்ள தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா வேலவன் மார்க்கெட் உரிமையாளரிடம் பேசியுள்ளார்.  இந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து நகை மதிப்பு தொகையான ரூ.4,22,000 வாங்கியுள்ளார். ஆனால், அத்துடன் விடாமல் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை மிரட்டி கூடுதலாக ரூ.1 கோடி தர வேண்டும், தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் குறித்து கடை உரிமையாளர் சார்பில் வணிகர் சங்கம் தூத...

வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகை கடை கலப்பட தங்கம் விவகாரம்: வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா நேரில் விசாரணை.!

Image
தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகை கடையில் தங்கத்தில் கலப்படம் என எழுந்த புகார் தொடர்பாகவும், ரூ.1 கோடி பணம் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாகவும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரம் ராஜா நேரில் சென்று கடை மேலாளர் சரவணனிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்..  “தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பைப் பொறுத்தவரை, சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, வணிகர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாகவே கருதுகிறோம். வணிகர்களுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்களுக்கு பாதுகாப்பாக வணிகர் சங்கம் இருக்கும். இந்த விவகாரம் தொடர்பாக சிலர் சாதிய உணர்வுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை நண்பர்கள் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில், ஏதேனும் வணிக நிறுவனம் தவறு செய்திருந்தாலும், அதையும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தட்டிக் கேட்கும். எனவே, இந்த விவகாரத்தை வணிக நிறுவனம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்...

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு.!

Image
  தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது வெற்றிக்கு உழைப்பது குறித்து இதனையொட்டி தாராபுரம் தோ்தல் காாியாலயத்தில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி ஆலோசனை கூட்டம் கொளத்துபாளையம் பேரூா் பகுதியில் நடைபெற்றது.  கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ராசா, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, கலந்து கொண்ட கூட்டத்தில் திமுக வேட்பாளாின் வெற்றிக்கு தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் சாதனைகள் குறித்து எடுத்துக்கூறி வாக்காளா்களிடம் வாக்கு சேகாிப்பது தவெக ஆட்சியில் தொடரும் கொலை கொள்ளை பாலியல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எடுத்துக்கூறி வாக்கு சேகாிப்பது  என்று முடிவு செய்யப்பட்டது.       கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஓன்றிய செயலாளர்கள் அன்புராஜ...

தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாிப்பு..!

Image
  தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது வெற்றிக்கு உழைப்பது குறித்து இதனையொட்டி தாராபுரம் தோ்தல் காாியாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பின்னா் திமுக வேட்பாளாின் வெற்றிக்கு லட்சுமிபுரம் பகுதியில் நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அப்பகுதியில் உள்ளவா்களிடம் திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் சாதனைகள் குறித்து எடுத்துக்கூறி வாக்காளா்களிடம் வாக்கு சேகாித்து தவெக ஆட்சியில் தொடரும் கொலை கொள்ளை பாலியல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எடுத்துக்கூறி மேயா் ஜெகன் பொியசாமி வாக்கு சேகாித்தாா்.   கூட்டத்தில் ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா செந்தில்குமாா் மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அவைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வக்கீல் பூங்குமாா், ...

"தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு அதிசயத்துடன் கூடிய துறைமுகம் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா" - ஜனவாி முதல் பயன்பாட்டிற்கு வரும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்.!

Image
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் துறைமுகத்துக்கு சொந்தமான இடம் உள்ளது அதில் சில ஏக்கா் இடம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது மேலும் அந்த இடத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதற்காக வெளி மாநில பல்வேறு நிபுணர்களை பல மாதங்களாக அழைத்து எப்படி அமைப்பது என்னென்ன வசதிகள் செய்வது என்று ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சுமார் 8 கோடி மதிப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது பூங்காவிற்கு செல்வதற்கு இருபுறமும் வாசல் அமைக்கப்பட்டுள்ளது.  பூங்காவில் நவீன வசதிகளுடன் செல்பி பாயிண்ட் உருவாக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய ஊஞ்சல். பூங்காக்கள். திறந்தவெளி அரங்கம். மேலும் வெளிநாட்டில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகிறது இது முழுக்க முழுக்க பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய...

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் ஆண்டு விழா.!

Image
  தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் 22வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருமூலர் பூங்கா அருகில் நடைபெற்றது. நலச்சங்க தலைவர் தங்கராஜா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினாா்.  முன்னாள் தலைவர் ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, கவுன்சிலர் சுப்புலட்சுமி, காமராஜ் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கந்தசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினார்கள். பள்ளி கல்லூரி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஹேமலதா வரவேற்றார். சண்முகராஜ், பாலசுப்ரமணியன் பிச்சையா கர்டோசா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினாா்கள். தமிழ்ச்செல்வன் 2025-2026ம் ஆண்டிற்கான ஆய்வு அறிக்கை வாசித்தார். 2025- 2026ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சண்முகசுந்தரம் வாசித்தார். தலைவர் தங்கராஜா பொதுக்குழு தீர்மானத்தை வாசித்து ஒப்புதல் பெற்றார்.  நிகழ்ச்சியில் நலச்சங்க நிர்வாகிகள் டேவிட்சன் சிவசுப்பிரமணியன், சொக்கலிங்கம், வீரப்பெருமாள், நாகரா...

தூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

Image
தூத்துக்குடி துறைமுகம் அலுவலகம் முன்பு துறைமுகத்தில் பணிபுரிந்து உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வஉசிதம்பரனார் துறைமுகத்தில் நிரந்தர பணியோ அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என மத்திய அரசின் தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி துறைமுக வாரிசுதாரர்களின் நலசங்க தலைவர் பெருமாள்  தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் சார்லஸ் வரவேற்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தை பொதுச் செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்து பேசுகையில்    சமீபத்தில் 3 ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கும் துறைமுக நிர்வாகம் அதில் ஒரு 10 நபர்களுக்கு கூட வாரிசுதாரர் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை ஆதலால் அவர்களுக்கு துறைமுகத்தில் வேலைவாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பதை கண்டித்தும் துறைமுக நலனுக்காக தன்னுயிர் நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை அல்லது கால முறை ஊதியம் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் உள்ளது போ...

தமிழ்நாடு முழுவதும் தட்டச்சுப் பள்ளிகள் மூடல் அபாயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோாிக்கை.!

Image
தூத்துக்குடி அரசுத் தொழில்நுட்பக் கல்வித் தேர்வு ஜிடிஇ விடைத்தாள் திருத்தும் பணியை உடனடியாக நிறுத்துமாறு தட்டச்சுப் பள்ளிகளின் சங்கம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கு கடும் எச்சரிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளது.  சங்கத் தலைவர் டாக்டர் கே. சுரேஷ் குமார் தலைமையில் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், மேனுவல் டைப்ரைட்டா்  மூலம் நடைபெறும் தட்டச்சுப் பள்ளி தேர்வுகளை கணினி வழி முறைக்கு மாற்றும் முயற்சியை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 5,000 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகள் மூடப்படும் அபாயத்திலும், 55,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள் வேலை இழக்கும் நிலையிலும், 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயத்திலும் உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.  மேலும், மால்பிராக்டிஸ் கமிட்டி விசாரணை முறை, தமிழ்99 மற்றும் 28-10-2024 தேதிய அரசாணை எண்.187 கட்டாயப்படுத்தல், மறுதிருத்தம் வசதி நீக்கப்பட்டது, தேர்வுப் பணி சன்மானம் தாமதமாவது, தவறாபன தேர்வு மையம் தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது...

தூத்துக்குடி: வேலவன் ஜூவல்லர்ஸ் விவகாரம் - ரூ. 1 கோடி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக புகார் : பிஎம்டி நிறுவனர் இசக்கிராஜா சிறையிலடைப்பு!

Image
  தூத்துக்குடியில், தொழிலதிபரை மிரட்டி ரூ. 1 கோடி பணம் கேட்டு அச்சுறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிஎம்டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் இசக்கிராஜாவை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 21.09.2026 அன்று வரப்பெற்ற புகாரில், தங்க நகை பரிவர்த்தனை தொடர்பான தகராறில் புகார்தாரரிடம் ரூ. 1 கோடி பணம் தருமாறு கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பணம் தராவிட்டால் புகார்தாரருக்கும் அவரது தொழிலுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்களைப் பரப்பி மானபங்கம் செய்வதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப் புகாரின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 308(4) மற்றும் 351(3)-ன் கீழ் குற்ற எண்: 917/2026 என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், தூத்துக்குடி 3-வது மைல், தேவர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் இசக்கிராஜா (46) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இவர் ...

"தூத்துக்குடியில் அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதின் மூலம் மாநகராட்சி பகுதி வளர்ச்சியடையும்" மேயா் ஜெகன்பொியசாமி பேச்சு.

Image
தூத்துக்குடி மாநகராட்சி யுகே பேக்ட் திட்டத்துடன் இணைந்து, ஐடிடீபி இந்தியா  நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன், மாநகராட்சியால் சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆரோக்கியமான சாலைகள் கொள்கை மற்றும் விரிவான சாலை மற்றும் தெரு வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் மாநகராட்சியில் நடைபெற்றது.   இந்தப் பயிலரங்கு, தூத்துக்குடிக்கான பேக்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் ஐடிடீபி இந்தியா, டிஇஆா்ஐ சிஇஎன்இஎக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது. இத்திட்டம் காலநிலை சார்ந்த நகர்ப்புற திட்டமிடல் மற்றும் போக்குவரத்து அமைப்பை மையமாகக் கொண்டுள்ளது. இப்பயிலரங்கில் தூத்துக்குடி மாநகராட்சியின் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுடன், தொடர்புடைய பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன் மூலம், கொள்கையின் நோக்கங்களை அனைவரும் ஒருங்கிணைந்து புரிந்துகொள்வதுடன், சாலைகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பின் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தலில் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது...

வேலவன் நகைக்கடையில் தங்க நகை மோசடி விவகாரம்: புகார் கொடுத்தவரையே கைது செய்தது ஏன் ? என போலீசுக்கு நீதிபதி கண்டனம்.! உடனடியாக ஜாமீனில் விடுவித்து உத்தரவு.!

Image
தூத்துக்குடி டி.எம்.டி. காலனி 10-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் இசக்கி ராஜ் (33). இவர் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இசக்கி ராஜ் கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள நகைக்கடையில் நகைகள் வாங்கியுள்ளார். பின்னர் தனது தொழில் தேவைக்காக அந்த நகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்க முயன்றபோது, அதில் அதிகளவு உலோகம் கலந்திருப்பதாக நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, "தன்னிடம் போலி நகையைக் கொடுத்து ஏமாற்றி விட்டீர்கள்" என ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடையில் முறையிட்ட இசக்கி ராஜ், இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடமும் புகார் மனு அளித்தார். இதற்கிடையே, நகைக்கடை நிர்வாகத்தினர் இசக்கி ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நகைகளுக்கான தொகையான ரூ. 4,22,000-ஐ டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகத் திரும்ப வழங்கியுள்ளனர். மேலும், தங்களது நகையைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட இசக்கி ராஜ் நகையின் தரத்தை நிருபிக்கும் ஆதாரத்திற்க்காக நகையை  திரும்பக் கொடுக்காமல் இருந்ததாக  கூறப்படுகிறது. இச்சம்பவம் குற...

மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார்களைப் பொருத்தி நீரினை உறிஞ்சினால், மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாகக் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குத் தேவையான குடிநீரானது, மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து நீர் உறிஞ்சு குழாய்கள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் நீர் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாகச் சுழற்சி அடிப்படையில் நகர் முழுவதும் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வரும் நிலையிலும், மாநகராட்சி சார்பில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனினும், மாநகரின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டதில், சில இடங்களில் குடிநீர் குழாய்களில் விதிமுறைகளுக்கு மாறாக நேரடியாக மின் மோட்டார்க...

ஜெம் கிரானைட் வீரமணி : தமிழ்நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு முழு விவரம்.!

Image
1.வழக்கு எப்படி தொடங்கியது? 6 அக்டோபர் 2025 அன்று ஒரு நபர் போலீசாரிடம் ஒரு பென் டிரைவ் கொடுத்தார். அதில் ஒரு சிறுமி பா*யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற வீடியோ இருந்ததாக போலீஸ் தெரிவித்தது. 7 அக்டோபர் 2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.  2. போலீசார் யாரை சந்தேகித்தனர்? விசாரணையில் அந்த வீடியோவில் இருப்பவர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி என போலீசார் சந்தேகித்தனர். சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடந்திருக்கலாம் என விசாரணை சென்றது. அந்த வீட்டை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் நிர்வகித்ததாக போலீசார் தெரிவித்தனர்.  3. ஆரம்பத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டது? வீடியோவில் இருந்த சிறுமியை போலீசாரால் அப்போது கண்டுபிடிக்க/அடையாளம் காண முடியவில்லை. வீடியோ 2019-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற தகவலும் விசாரணையில் கிடைத்தது. இதனால் போலீசார் வழக்கை முடிக்க “further action dropped” அறிக்கை தாக்கல் செய்தனர்.  4. நீதிமன்றம் என்ன செய்தது? 19 ஆகஸ்ட் 2026 அன்று சிறப்பு POCSO நீதிமன்றம் போலீசாரின் வழக்கு முடிப்பு அறிக்கையை ஏற்கவில்லை. வழக்கை மீண்டும் முழுமையா...

வேலவன் ஸ்டோர்ஸ் நகைக்கடை விவகாரம் - PMT இசக்கிராஜா கைது - காவல் நிலையம் முற்றுகை - தூத்துக்குடியில் பரபரப்பு.!

Image
தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் நகைக்கடையில் வாங்கிய நகையில் கலப்படம் இருப்பதாக புகார், ரூ4,22,000 பணத்தை பெற்றுக் கொண்டு, மேலும் ரூ1 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக புகாரில், பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் தலைவர் 3ஆம் மைல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் இசக்கிராஜா (46) கைது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அளித்த புகாரில், மாவட்ட எஸ்பி, சிவபிரசாத் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இசக்கி ராஜா கைது செய்யப்பட்ட தகவல் பசும்பொன் மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் திரளாக தென்பாகம் காவல் நிலையம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் பூட்டப்பட்டது. மேலும், நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, காவல் நிலையத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்து...

தூத்துக்குடி வேலவன் ஸ்டோர் விவகாரம்: அனைத்து நகைகளிலும் தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்த வேண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் — தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை.!

Image
  தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி வேலவன் ஸ்டோர் தங்க நகைக் கடை தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வெளியாகி வரும் பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேலவன் ஸ்டோர் நிர்வாகத்தினருக்கு சில ஜாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக தொழில் செய்து வருபவர்கள் என்றும், எந்தவிதமான தரக்கட்டுப்பாட்டு சோதனைக்கும் எப்போதும் தயாராக இருப்பவர்கள் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தூத்துக்குடி வேலவன் ஸ்டோர் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் நகைகளின் தரத்தை உரிய அரசு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையை வெளிப்படையாக மக்களுக்...

தூத்துக்குடியில் இரட்டை மலை சீனிவாசன் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாியாதை.!

Image
தூத்துக்குடி பட்டியலின மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சென்னை மாகாண முன்னாள் சட்டசபை உறுப்பினர் சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 81வது நினைவுநாளில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் அறிவுறுத்தலின் படி மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.  நிகழ்ச்சியில் மாநகர அணி நிா்வாகிகள் பரமசிவம், வக்கீல் ரூபராஜா, நைஸ்பரமசிவம், ரவி,  செந்தில்குமாா், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமாா், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, கவுன்சிலா்கள் நாகேஸ்வாி, வைதேகி, ஜெயசீலி, தெய்வேந்திரன், வட்டச்செயலாளர்கள் சேகா், கதிரேசன், பாலகுருசாமி, முனியசாமி, சிங்கராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்

தூத்துக்குடியில் இரட்டை மலை சீனிவாசன் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி மாியாதை.!

Image
தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திவான்பகதூர் பெண்ணுரிமை காவலர் இரட்டைமலை சீனிவாசனார் 81வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியார் ஆணைக்கேற்ப பொதுச் செயலாளர் ருசேந்திரகுமார், மாநில செயலாளர் பரணி மாரி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச் செல்வம் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் தலைவர் இளவரச பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன்  விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் அர்ஜுன் முன்னாள் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் விக்கி அன்பு உதயா மாடசாமி கருப்பசாமி செல்வம் விக்டர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரம்.!

Image
தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் இடைத்தோ்தலில் இரண்டு தொகுதிகளான தாராபுரம், மதுராந்தகம், ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கொளத்துப்பாளையம் பேரூர் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினரும் எம்.எல்.ஏவுமான மார்கண்டேயன், கருணாநிதி எம்.எல்.ஏ தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளா் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் பாஸ்கா், மணி உள்பட பலா் களப்பணியில் ஈடுபட்டனர்.