Posts

Showing posts from September, 2025

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு.!

Image
  ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும், மேலும் காவல் நிலைய போலீசாரிடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலைய வரவேற்பாளரிடம் புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.  ஆய்வின் போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

"தூத்துக்குடியில் பட்டாக்களை ரத்து செய்து வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் ஆட்சியரிடம் மனு.!

Image
தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து அதைச் சுற்றியுள்ள வீடுகளை அப்புறப்படுத்த குடியிருப்புகளுக்கு வழங்கியுள்ள பட்டாக்களை ரத்து செய்ய, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.. மாநகராட்சியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வட்டாட்சியருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில்:- தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் உள்ள காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளி, தென்பகுதியில் குழந்தை ஏசு கோவில் என்ற சிற்றாலயம் உள்ளது. அதன் முன்புறம் மேற்கு கிழக்காக செல்லும் ஒரு சந்து இந்த ரோட்டில் 15 வீடுகள் உள்ளன. இந்த ரோடு கிழக்கு திசையில் உள்ள லயன்ஸ்டவுன் 4, 5, 6 ஆகிய தெருக்களின் பிரதான சாலையில் சந்திக்கி...

சரஸ்வதி பூஜை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்.

Image
சரஸ்வதி பூஜை  முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் ஆண்டுதோறும்  பூஜை செய்வது வழக்கம் இதில் அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு  சிறப்பிப்பார்கள். அதன்படி அக்,1 நாளை நடைபெறும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு  பிரஸ் கிளப்  அலுவலகத்தில் சிறப்பு பூஜை  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில். இன்று  தூத்துக்குடி பிரஸ் கிளப்  உறுப்பினர்கள் அனைவருக்கும்  சரஸ்வதி பூஜையை சிறப்பாக  கொண்டாடும் விதமாக தூத்துக்குடி  பிரஸ் கிளப் நிர்வாகம்  சார்பில்   அச்சு வெல்லம், பச்சரிசி, கொண்டைக்கடலை,  பொரி,அவல், பொரிகடலை, ஏலக்காய், முந்திரி, கிறிஸ்மஸ் பழம், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட பூஜைக்கான 12 வகையான தொகுப்புகள் அடங்கிய பொருள்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்களுக்கு இன்று வழங்கினர். தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், ஆகியோர் தலைமையில்  கௌரவ ஆலோசகர்கள், அன்பழகன், அருண், ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில்...

கலவரத்தை தூண்டும் வகையில் X பக்கத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது போலீசார் வழக்கு.!

Image
  பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக வழக்கு பதிவு தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று வன்முறையை தூண்டும் வகையில் தெரிவித்திருந்தார். இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அதை நீக்கியும் உள்ளார். 

குலசை தசரா திருவிழா: கனரக வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்த காவல்துறை !

Image
  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 02.10.2025 அன்று இரவு சூரசம்கார நிகழ்வு மற்றும் 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு 02.10.2025 மற்றும் 03.10.2025 ஆகிய 2 நாட்கள் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிக்கு செல்வதற்கும் பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை: திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் ECR ரோடு வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் குலசேகரன்பட்டினத்தை தவிர்த்து அதற்கு பதிலாக திருச்செந்தூ...

மருத்துவ காப்பீடு வழங்காத தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் : ரூ6,21,904 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.!

Image
  தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எழிலரசி என்பவர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் இவரது கணவர் அரியநாயகம் என்பவர் தனக்கு இருதயத்தில் வலி ஏற்பட்டதால் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின் இந்த பணத்தை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. மேலும், அவரது காப்பீட்டையும் ரத்து செய்தது. இதைக்கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்...

"மனிதாபிமானமே இல்லாத விஜய் மற்றும் நிர்வாகிகள்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல்கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டுப் போவதோ இதுவரை பார்த்திராத ஒன்று" - கனிமொழி எம்.பி., கடும் விமர்சனம்.!

Image
கரூர் துயர சம்பவத்தில் ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று. தவெக தலைவர், நிர்வாகிகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் தோன்றுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "இறந்துபோன குழந்தைகள், இளைஞர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது யாரையும் குறை சொல்லும் நேரமில்லை. யாரையும் குற்றம் சொல்வது தேவையில்லாத ஒன்று. இத்தகைய சூழலில் மக்களுடன் நிற்க வேண்டும். யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் மனிதர்களோடு மனிதராக நிற்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல்கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டுப் போவதோ அல்லது தன்னுடைய பாதுகாப்பை மட்டும் கருதுவதோ நிச்சயமாக நான் இதுவரை பார்த்திராத ஒன்று. அவரால் இருக்க முடியவில்லை என்றால் அந்த இயக்கத்தைச் சார்ந்த அடுத்த கட்ட தலைவர்கள் இருந்திருக்க வேண்டும்.  மற்ற கட்சிகளில் அப்படிதான் இருக்கிறார்கள். இந்த சூழலைப் பார்க்...

விஜய் பரப்புரையில் உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி 3 பேர் கைது.!

Image
  கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி கைது செய்யப்பட்ட சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவநேஸ்வரனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் (சிறையில் அடைக்க) சென்னை நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா விழா மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு.!

Image
  தூத்துக்குடி மாநகரில் பிரதிபெற்ற பழமையான நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தசரா உற்சவ விழாவையொட்டி கடந்த  21ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் தினமும் சிறப்பு பல்வேறு அம்மன் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தன.  இதில் ஏழாம் நாள் மண்டகப்படியாக முன்னாள் தர்மகர்த்தாவும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பொியசாமி குடும்பத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கோவில் தர்மகர்த்தா ராஜா ெபாியாசமி, மேயர் ஜெகன் பொியசாமி, தொழிலதிபா் அசோக் பொியசாமி, ஆகியோர் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனர்.  நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், காரியதரிசி முனியசாமி, ஆடிட்டர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, கணக்கர் தெய்வேந்திரன், கோவில் ஆலோசகர்கள் துரைச்சாமி, சித்திரைவேல், சொல்வழங்கு, ஸ்ரீதரன், இளையராஜா, பொியசாமி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வள்ளிராஜன், ஜெயபாண்டி, முருகன், பாலு, கணேஷ்காந்தகுமாா், பாலமுருகன், அருண் ஜெயக்குமாா், விஜயகுமாா், பூவலிங்கம், அருணகிாி, ரா...

கரூர் சம்பவம்- பொய் செய்தி பரப்பியதாக பெலிக்ஸ் ஜெரால்டு கைது.!

Image
  கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப்பதிவு

White House releases plan for immediate end to Gaza war - 'No one will be forced to leave Gaza - White House publishes 20-point proposal to end war in Gaza

Image
  The White House on Monday released US President Donald Trump's plan to end the war in Gaza. The plan says Gaza will become “a de-radicalised terror-free zone” that will be redeveloped for the benefit of Gazans. If the proposal is accepted by Israel and Hamas, the war will end immediately, the plan states. The full text of the plan, as released by the White House: Gaza will be a deradicalised terror-free zone that does not pose a threat to its neighbours Gaza will be redeveloped for the benefit of the people of Gaza, who have suffered more than enough. If both sides agree to this proposal, the war will immediately end. Israeli forces will withdraw to the agreed upon line to prepare for a hostage release. During this time, all military operations, including aerial and artillery bombardment, will be suspended, and battle lines will remain frozen until conditions are met for the complete staged withdrawal. Within 72 hours of Israel publicly accepting this agreement, all hostages, ali...

கரூர்:விஜய் பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீன அரசு.!

Image
  கரூர் :விஜய் பேரணியில் 41 பேர்  உயிரிழந்த சோகம் குறித்து சீனா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் "பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம், எங்கள் இதயத்திலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று  தெரிவித்தார். மேலும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தனது அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார், மேலும் கூட்ட நெரிசலில் சீன நாட்டினர் யாரும் இறந்ததாகவோ, காயமடைந்ததாகவோ எந்த தகவலும்   இல்லை என்றும் கூறினார்.

விஜய் பரப்புரையில் 41 பேர் பலியான சம்பவம்: கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கைது.!

Image
  கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயரத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் வைத்து மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் யார்? விசாரணை நடத்த கோரிக்கை!

Image
  தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் வேதாந்தா நிறுவனம் தொடங்கப்பட்டு உற்பத்தியை நடத்தி வந்தது. ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று பல கட்டங்களாக போராட்டங்களும், வழக்குகளும் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக 2017- வருடம் ஸ்டெர்லைட் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்ற செய்தி கேட்டு பொதுமக்கள் ஸ்டெர்லைட் வரிவாக்கத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத்திற்குட்பட்ட ஸ்டெர்லைட் அருகில் உள்ள குமாரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் போராட்டத்தை துவங்கினார்கள். இந்த போராட்டத்திற்கு பல அரசியில் கட்சியினர் சமூக செயற்பாட்டார்கள் என பலதரப்பட்ட மக்கள் ஆதரவு தெரிவித்த...

தூத்துக்குடி: மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது - ஆட்சியர் இளம்பகவத் தகவல்.!

Image
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (29.09.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 42 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கால்கள் பாதிக்கப்பட்ட 07 ம...

கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.!

Image
  கடந்த 30.08.2025 அன்று முறப்பநாடு  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட முறப்பநாடு பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி(28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (29.09.2025)  முறப்பநாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

"குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா-பத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக 3500 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்" - தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்.!

Image
இது குறித்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 02.10.2025 அன்று சூரசம்கார நிகழ்வு மற்றும் 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது.  அதன்படி திருவிழாவின் முக்கிய நாட்களான 01.10.2025 முதல் 03.10.2025 ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சுமார் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு 20க்கும் மேற்பட்ட குற்றப்புலனாய்வு காவல்துறையினர் (Crime Team) 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர்.  காவல்துறையினரின் 2 ட்ரோன் கண்காணிப்பு குழுவினர் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து இடங்களிலும் ட...

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் : எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்த உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு!

Image
  தூத்துக்குடியில் உப்பளங்களை அகற்றி கப்பல் கட்டும் தளத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிற 18-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்கப்பட இருக்கிறது, இதற்கு அப்பகுதியில் உப்பள தொழில் செய்து வரும் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். முதலில் உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முள்ளக்காடு கிராம பொதுமக்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் சார்பாக எல்.ஆர். சிவாகர் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வைத்தார், அதில் உப்பளங்களை அகற்றிவிட்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.  பின்னர் உற்பத்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாள...

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் வலுக்கட்டாய ஆயர்கள் பணியிட மாற்றத்தால் சமூக பதட்டம் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை மனு.!

Image
  தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் வலுக்கட்டாய ஆயர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக நிலவும் சமூக பதட்டத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  இது தொடர்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "நாங்கள் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் என்னும் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளோம். தற்பொழுது எங்கள் திருமண்டலத்தில் தேர்தல் காலம் நடைமுறையில் உள்ளது, சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி நிர்வாகியாக இருந்து வந்தார்.  இந்நிலையில் நீதிமன்ற ஆணைப்படி தேர்தலை சினாட் என்னும் அமைப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டு பொறுப்பேற்றனர். இதற்கிடையில் பொறுப்பு பேராயராக இருந்த செல்லையா ஓய்வு பெற்று புதிதாக ஆந்திராவைச் சேர்ந்த வர பிரசாத் என்பவர் பிரதமர் பேராயரின் ஆணையாளராக பதவி ஏற்று நாட்களுக்குள்ளாக திருமண்டலத்தைப் பற்றி எந்தவித பூகோள அமைப்பு சார்ந்த எந்த விடயமும் தெரியாத நிலையில் முதல் கூட்டத்திலேயே 30-க்கும் மேற...

"இவ்வளவு மோசமான அரசியல் புரிதலற்ற ,சமூக கட்டுப்பாடுகளற்ற இந்தக்கட்சி உடனடியாக தடை செய்யப்படவேண்டும்"

Image
இது விபத்தல்ல. புரிதலற்ற அரசியல் நிகழ்வால் ஏற்படுத்தப்பட்ட படுகொலை. இதை செய்தது வேறு யாருமல்ல.  TVK தலைவரும்,  கட்டுப்பாடற்ற தொண்டர்களும்தான். பள்ளிக்குழந்தைகளுக்கு விடுமுறை நாள் பார்த்து கூட்டம் நடத்திய ஜோசப் விஜய்தான் இதில் முதல் குற்றவாளி. கூட்டத்தில் நாற்பது வயதைக்கடந்தவர்கள் அதிகபட்சம் ஆயிரம்பேர்கூட இல்லை. எல்லாமே  உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி , கல்லூரி மாணவர்கள்தான். இரண்டு நாள் முன் அதே இடத்தில் அதிமுக கட்சியின் மாபெரும் கூட்டம் நடந்தது. யாருக்கும் ஒரு சிராய்ப்புக்கூட இல்லை. கூட்டம் நடந்த இடத்திலிருந்து  என் வீடு நாற்றூற்று ஐம்பது மீட்டர்தான். இரண்டு கூட்டங்களையும் நான் ஒப்பீடு செய்து பார்த்தேன். இரண்டாவது நடந்த விஜய் கூட்டத்தில் நடக்கப்போகும் முடிவுகளை   மதியம் 12 மணிக்கே கணித்துவிட்டேன். ஏனெனில் விஜய் வருவதாக முதலில் சொல்லியிருந்த நேரம்  மதியம் 12 மணி.   காலை 8.45க்கு நாமக்கல் வருவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஜய்  காலை 8.45 க்கு சென்னையில் இருந்திருக்கிறார்.   நாமக்கல்லிலும் இதே மாதிரி தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்...

கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு - ஆதவ் அர்ஜூனா முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு.!

Image
  கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய ஆதவ் அர்ஜூனா முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு; மனுவாக தாக்கல் செய்தால் விதிகளின்படி பட்டியலிடப்பட்டு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என அறிவிப்பு

கரூர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு - 65 வயது பெண் உயிரிழப்பு.!

Image
  கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சுகுணா [65] சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர்.!

Image
  தூத்துக்குடி தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழக முதலமைச்சர்ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க,  உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனை பேரில், கனிமொழி எம்.பி மேற்பார்வையில் மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் எந்த ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலை தொடா்ந்து அதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி செய்து வருகிறார்.  அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்  பல இடங்களில் புதியதாக கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்புகள் இல்லாத வகையில் 360 கிலோ மீட்டா் தூரம் உள்ள அனைத்து கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.  இதனையடுத்து அதிகாலையில் மேயர் ஜெகன் பொியசாமி இருசக்கர வாகனத்தில் சிறு குறு சந்துகள் வரை சென்று முதலில் விளையாட்டு மைதானம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாய்களை பார்வையிட்டார். அதில் நிறைய அடைப்புகள் உள்ளதை கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக இப்போ...

கோவில்பட்டியில் தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் தொடக்கம்.!

Image
  தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் தூத்துக்குடி மண்டல ஹாக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  தென்காசி, சிவகங்கை,  மாவட்ட அணி மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி பங்கு பெற்றுள்ளன .நேற்று  காலை நடைபெற்ற துவக்க விழாவில்  தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா   மற்றும் தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார் உடன் நிர்வாக குழு உறுப்பினர் சாமி ராஜன் தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி உடற் கல்வி ஆசிரியர்கள் சசிகுமார் ராம்குமார் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்  முதல் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி  3-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி எம்.என் அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியை  வீழ்த்தி வெற்றி பெற்றது இரண்டாவது ...

இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Image
  இந்திய மக்களின் ஜனநாயகத்தையும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், தேர்தல் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பல மாநிலங்களில் பறித்ததைக்கண்டித்தும். வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவைகள் நம்பகத்தன்மை இல்லாதவை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியதைக்கண்டித்தும். தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், தமிழ்நாடு வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்க உரியமுறையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சார் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், ஞானம் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மகாராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் ராஜசேகரன், துரைராஜ், அருள்தாஸ், பழனிச்சாமி, இந்திய கலாச்சார நட்புறவு கழகம் அபிராமி முர...

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் - இரண்டு பேர் கைது.!

Image
  கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி லோடு ஆட்டோ அதிவேகமாக சென்றள்ளது. இதனை பார்த்த போக்குவரத்து காவலர் அருண் விக்னேஷ் , அந்த மினி லோடு ஆட்டோவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையெடுத்து அவர் அந்த வாகனம் மற்றும் வாகனத்தில் வந்தவர்களை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  போலீசார் விசாரணை நடத்தியதில் உக்கிரன் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (28), மானூர் மாவடியை சேர்ந்த மகாராஜா (36) என்பதும், 45 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமி தலைமறைவு!

Image
ஆதவ் அர்ஜுனா, ஜெகதீஷை தொடர்ந்து தவெக கொள்கைப் பரப்பு செயலாளர் அருண்ராஜ் மற்றும் விஜய் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் தலைமறைவு என தகவல்!

தூத்துக்குடி அகிலாண்டபுரம் ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இயற்கை விவசாயிகள் கருத்துத்தரங்கம்,

Image
  தூத்துக்குடி அகிலாண்டபுரம் ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் அறக்கட்டளை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இயற்கை விவசாயிகள் கருத்துத்தரங்கம், இலவச மருத்துவ முகாம் ஆகியவை பாஞ்சாலங்குறிச்சியை அடுத்த அகிலாண்டபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகில பாரத துறவிகள் சங்க துணைத் தலைவர் செண்டலங்கார  செண்பகமன்னார் இராமானுஜ ஜீயர் அவர்கள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வானொலி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம் ராதாகிருஷ்ணன் அவர்கள்  முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிறைவாக சண்முகமல்லுச்சாமி அவர்கள் நன்றி கூறினார்.

தூத்துக்குடி : ஓபிஎஸ் அணி ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் ஐக்கியம்.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஓபிஎஸ் அணி தொழிற்ச்சங்கமான ஜெ ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த கௌரவ ஆலோசகர் லோகு கணேஷ் ஏற்ப்பாட்டில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று டூவிபுரத்தில் உள்ள மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் முன்னிலையில் தெற்கு மண்டல ஓட்டுநர்கள் அணி அவைத்தலைவர் மாரிமுத்து தலைவர் ஆனந்த் செயலாளர் சுபாஷ் வேளாங்கண்ணி பொருளாளர் பூண்டி செல்வம் உறுப்பினர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, மாரிமுத்து, இளையராஜா, இசக்கிராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் சி. த.செல்லப்பாண்டியன் அனைவருக்கும் சீருடை வழங்கி சிறப்பான முறையில் பணியாற்றி அதிக உறுப்பினா்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம்.!

Image
  தூத்துக்குடி பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்  நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் ஆயுள் ஹோமம் நடைபெற்றது. அவரது பிறந்த தினம் இரண்டு வாரமாக சேவை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தூய்மை பணியை மேற்கொள்ளுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோடி பிறந்த நட்சத்திர தின என்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக பிரிவு சார்பில் மோடியின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்பட்டது.  ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு தலைமையில் நடைபெற்றது.  விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய ஹோம நிகழ்ச்சியில் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு, ஆயுசு ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றன. உலக நன்மைக்காக பல சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. ஜி எஸ் டி வரி குறைப்பு செய்தது உள்ளிட்ட நாட்டு மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் நெல்லையம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவ...

தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி சங்க ஆண்டுவிழா.!

Image
  தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூைட சுமை தொழிலாளர்கள் முன்ேனற்றசங்க 35வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஞானசேகா் தலைமை வகித்தாா். சங்க செயலாளர் மாாிமுத்து, முன்னிலை வகித்தாா். பொருளாளர் முருகேசன் வரவேற்புரையாற்றினாா். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், தொழிலாளா்களுக்கு நினைவு பாிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். சுமையேற்றும் இறக்கும் தொழிலாளா்களுக்கு தனி நல வாாியம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியின் போது காயம் ஏற்பட்டால் 50ஆயிரமும் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அதே போல் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளனா்.  விழாவில் சங்க பொதுச்செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகர கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தனலட்சுமி, நிா்வாகிகள் வக்கீல் முத்துலெட்சுமி, பாலசிங்கம், சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மாடசாமி,மற்றும் பொண்பாண்டி தட்சணாமூர்த்தி கருணாநிதி கலாஸ்டின் ஜான்ட...

"கரூரில் ஏற்பட்ட துயரத்திற்கு அடிப்படை காரணமே விஜயின் பொறுப்பற்ற அரசியல்தான்" - ஆளூர் ஷா நவாஸ், விசிக துணை பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

Image
விஜய்க்கு கூடும் அதிக கூட்டத்தை முறைப்படுத்தவே காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதை அரசியல் பழிவாங்கலாக சித்தரித்தார் விஜய். அவருக்கு ஆதரவாக பேசும் மூத்த பத்திரிகையாளர்களும் கூட, கட்டுப்பாடுகளை விஜய் மீற வேண்டும் என்று உசுப்பிவிட்டனர். எனவே, விஜய் தொண்டர்களிடம் போலீஸ் கட்டுப்பாடுகள் மீது எதிர்மறை எண்ணம் வலுத்து, அவற்றை அவர்கள் பின்பற்றாத நிலையும் உருவானது" என விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் குற்றசாட்டு

நாளை ஒரு நாள் கடையடைப்பு - வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு.!

Image
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு.

உயிரிழப்பு 40 ஆக உயர்வு - சம்பவம் குறித்து பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் விளக்கம்

Image
  கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் 39 ஆக இருந்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கரூர் 39பேர் பலி குறித்து பொறுப்பு டி.ஜி.பி., விளக்கம் அளித்துள்ளார். சென்னை: தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் விளக்கம் அளித்தார். டி.ஜி.பி., கூறியதாவது: த.வெ.க.,வினார் கரூர் பரப்புரைக்கு முதலில் அனுமதி கேட்ட இரு இடங்களும் மிகவும் குறுகலானது. அதனால் அதைவிட பெரிய இடத்தில் காவல்துறை அனுமதி கொடுத்தது. பரப்புரைக்கு விஜய் வர தாமதமானதால் அதிகமானோர் கூடிவிட்டனர். தொண்டர்கள் 10,000பேர் கூடுவார்கள் என த.வெ.க.,வினர் அனுமதி கேட்டனர். ஆனால் 27,000பேர் கூடிவிட்டனர். விஜய் பரப்புரையில் காவல்துறையினர் 500பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாமக்கலிலும் இதே அளவு கூட்டம் கூடியது. போலீஸ் பாதுகாப்பு கொடுத்தோம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஒருநபர் விசாரணை...

"தவெக காவல் துறையின் நிபந்தனைகளை பின்பற்றவில்லை.. ஆம்புலன்ஸ் குறித்து ஈபிஎஸ் தவறான மன ஓட்டத்தை உருவாக்கினார்" - மா.சுப்பிரமணியன் விமர்சனம்

Image
"ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். "காவல் துறை நிபந்தனைகள் எதனையும் தவெக பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது" எனவும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- "கரூர் சம்பவத்தில் தமிழ்நாடே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அரசியல் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. பேரிடரிலுமா செய்ய வேண்டும்? ’’முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, காவல்துறை தந்திருக்க வேண்டும்’’ என்கிறார் பழனிசாமி. முந்தைய கூட்டங்களிலிருந்து ஆய்வு செய்த பிறகுதான் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுக...

"இது தலைமைத்துவமல்ல, கோழைத்தனம்! தன்னை சந்திக்கத் திரண்டவர்களின் துயரத்தில் பங்கெடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சியளிக்கிறது" - திருமுருகன் காந்தி கண்டனம்.

Image
த.வெ.க கூட்ட நெரிசலில் பலியான அப்பாவி மக்களின் துயரம் நம்மை உலுக்குகிறது. ஒரு தலைவராக விஜய் தன்னை சந்திக்கத் திரண்டவர்களின் துயரத்தில் பங்கெடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சியளிக்கிறது. மக்களோடு அவர் களத்தில் நின்றிருக்க வேண்டும். மருத்துவப்பணிகள், நிவாரணப்பணிகள் என அனைத்தையும் முன்னின்று கவனித்து தமது தொண்டர்களின் இன்னல்களில், துயரத்தில் பங்கெடுக்கும் பொறுப்பு அவருக்குண்டு. அரசியல் கூட்டங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாவதென்பது தமிழ்நாட்டில் நாம் காணாத பெருந்துயர். எட்டு பச்சிளம் குழந்தைகள் பலியான செய்தியறிந்த பின்னரும் எப்படி ஒரு தலைவனால் வெளியேற முடிந்தது? தன்னை நேசித்தவர்கள் பலியானதை அறிந்தும் அம்மக்களை விட்டு எப்படி ஒரு தலைவன் விலகிச் செல்ல இயலும்? இப்பெருந்துயரில் தொண்டர்களை கைகழுவி வெளியேறிச் சென்றது, தலைமைத்துவமல்ல, கோழைத்தனம். வன்மையான கண்டனத்திற்குரிய சந்தர்ப்பவாதம். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம்.