Posts

Showing posts from November, 2021

தமிழக அரசை கண்டித்து பாஜக ஓபிசி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

Image
மத்திய அரசாங்கம் பெட்ரோல் ரூபாய் 10 டீசல் 5 ரூபாய் வாட் வரியை குறைத்தது ஆனால் மாநில திமுக அரசாங்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைப்பேன் என்று பொய்யான வாக்குறுதி தந்த திமுக அரசை கண்டித்து இன்று    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சேலம்  மாவட்ட ஓபிசி அணி சார்பாகவும் மற்றும் அமைப்புசாரா பிரிவின் மூலம் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஓபிசி அணி சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.அய்யனார் அவர்களின் தலைமையில் ஓபிசி அணி சேலம் கோட்ட பொறுப்பாளர் பி. சண்முக நாதன் முன்னிலையில்  மாநில துணைத் தலைவர் மற்றும் ஓபிசி கோட்ட பொறுப்பாளர் கே. கலைச்செல்வன் சேலம் கிழக்கு மாவட்ட பார்வையாளர் ஏ.சி. முருகேசன்  சேலம் மேற்கு மாவட்டத்தின் பார்வையாளர் ஆர்.பி. கோபிநாத்  அமைப்புசாரா பொறுப்பாளர்களும் மற்றும்  நமது மாவட்ட பொதுச் செயலாளர் எம்.கே.குமார் ஆனந்தன் பழனிச்சாமி  மற்றும் ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.எஸ். ரவி.சித்துராஜ், துரைசாமி, ஜெயகௌரி   மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் நாகராஜ்,பழன...

சேலம் ஸ்ரீ வேனுகோபாலசாமி தேவஸ்தானத்தில் திருக்கல்யாண உற்சவம்

Image
  சேலம் டவுன் சின்னக்கடை வீதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ வேனுகோபாலசாமி தேவஸ்தானத்தில் வேனுகோபாலசாமிக்கும் துளசி தாயாருக்கும் திருக் கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  கார்த்திகை மாத ஏகாதசி முன்னிட்டு பிருந்தாவன லட்சுமி ‌ துளசி தாயாருக்கு வருடத்துக்கு ஒருமுறை திருக்கல்யாணம் நடைபெறும் இந்த ஆண்டும் அதே போல் வெகு சிறப்பாக நடைபெற்றது.  தெய்வங்களுக்கு புது பட்டாடை நறுமண மலர் மாலைகள் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர் இதனை தொடர்ந்து மகா யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு துளசி தாயாருக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது  இதை தொடர்ந்து மாலை மாற்றுதல் வைபோம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கோபுர ஆரத்தி நட்சத்திர ஆரத்தி பல்வேறு விதமான தீபாராதனை காட்டப்பட்டு ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பாக அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது

தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிக் சிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேசன் மாநில செயற்குழு கூட்டம்.

Image
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிக் சிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேசன் மாநில செயற்குழு கூட்டம் துணைத்தலைவர் ஆர்.மாதேஸ்வரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  ஆர்.சுகுமார்,எம்.பிச்சுமணி, எஸ்.கார்வேந்தன் ,ஆர்.ராஜேந்திரன், பி.சக்திவேல் ஆகியோர் முன்னணியில் நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் எஸ். ஆறுமுகம், செயலாளர் என். விஸ்வநாதன், மண்டல செயலாளர்கள் வீ. வெங்கடேசன்,ஆர். சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேலும் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழக மக்கள் 2021 இல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றது முதல் தொடரும் குரானா இயற்கை சீற்றம் போன்ற பேரழிவுகளில் மக்களை பாதுகாத்திடும் வகையில் உறுதுணையாகவும் புதிய பல அறிவிப்புகள் உடனும் சட்டத்தின் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த செயற்குழு சார்பில் நன்றி தெரிவிக்க பட்டது.  காலிப் பணியிடங்களில் புதிய ஆட்களை நியமனம் செய்திட தமிழக மின்துறை அமைச்சர் வீ. செந்தில் பாலாஜி அவர்கள் தனி கவனம் செலுத்துமாறு இந்த செயற்குழுவினர் கேட்டுக் கொண்டனர்‌. மின்...

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றினால் பாராட்டுச் சான்றிதழ் - மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தகவல்.!

Image
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில், மோட்டார் வாகன சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களை விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று உயிரை காப்பாற்றும் கருணை உள்ளம் கொண்ட  நபர்களுக்கு ( Good Samaritan) பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் (ஒரு நிகழ்வுக்கு) வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தினை இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  இந்த திட்டம் 15.10.2021 முதல் 31.03.2026 வரை செயலில் இருக்கும். இத்திட்டத்தின் நோக்கம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவும் சிந்தனையை உருவாக்குவதற்கும்,  விபத்தில் உயிரை காப்பாற்றிய நபருக்கு நிதி உதவி (விருது) மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒரு நபர் ஒரே விபத்தில் பல நபர்களின் உய...

பல்லடத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்பமனு

Image
  பல்லடத்தில்  திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்   உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் விருப்பமனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் திருப்பூர் மாநகராட்சி புதிய 58-வது வார்டில்  போட்டியிட  பேபி தர்மலிங்கம் மனு அளித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கரைப்புதூர் நடராஜன்  உள்ளிட்டோர் அருகில் உள்ளனர்.  

வங்கக் கடலில் புதிய புயல்: வானிலை மையம் தகவல்

Image
தெற்கு அந்தமானில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமானில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் - செங்கல்பட்டு எஸ்பியாக அரவிந்தன் நியமனம்!

Image
சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரனும், மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை எஸ்பிசிஐடி எஸ்பி அரவிந்தன், செங்கல்பட்டு எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒமைக்ரான் வைரஸ் - தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.!

Image
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவோருக்கு புதிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, பங்களாதேஷ், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்படும். அதில் நெகட்டிவ் என வந்தாலும், பயணிகள் 7 நாள் வீட்டு தனிமைபடுத்துதல் உட்பட 14 நாட்களுக்கு கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதுதவிர, தமிழகம் பயணமாவதற்கு 72மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சர்வதேச விமான நிலையத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகளில் யாரேனுக்கும் அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர்கள் தற்கொலை அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

Image
கடந்த 2019 ஆம் ஆண்டு 9052 தொழில்முனைவோர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 11716 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 2664 பேர் அதிகமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

சென்னிமலை ஒன்றியத்தில் குளம் மற்றும் ஏரிகளை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Image
பெருந்துறை நவ 30: சென்னிமலை அடுத்துள்ள எக்கட்டாம்பாளையத்தை  சேர்ந்த விசுவநாதன் தமிழ்ச்செல்வன் ஆகியோர்  மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் இடம்பெற்றிருந்த விவரம் பின்வருமாறு: எக்கட்டம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆண்டிகாட்டு குளத்தின் நீர் நிலைகளை கல்குவாரி உரிமையாளர்களால் ஆக்கிரமித்து குளத்தின் கரை உடைக்கப்பட்டு கல்குவாரி வாகனங்கள் செல்லும் பாதையாக மாற்றப்பட்டு நீர் தேங்க முடியாமல் 200 ஏக்கரில் விவசாய நிலம் இந்த குளத்தினால் பாசனம் செய்யும் விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் .  நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அரசாணை எண் G.0.540/2014-ன் படி இந்த குளத்திற்கு சென்னிமலை மலையில் இருந்து உருவாகி வரும் பல்வேறு ஓடை வழிப்பாதையை ஆக்கிரமித்து கல்குவாரி உரிமையாளர்கள் கழிவு மண்ணைக்கொட்டி வைத்து உள்ளனர்.  எனவும் ஆண்டிகாட்டு குளத்திற்கு வரும் நீர் கல்குவாரிகளின் கழிவுகளால் மிகக் கடுமையாக மாசடைந்துள்ளது. நீர் நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என தெரிந்தும் பலமுறை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பான செய்திதாள்களில் செய்திகள் வந்தபடியும் அதிகாரிகள் இது வர...

142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை மகிழ்ச்சியில் ஐந்து மாவட்ட விவசாயிகள்.!

Image
தேனி, தேக்கடி, நவம்பர் 30 - தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நான்காவது முறையாக 142 அடியாக இன்று, எட்டியுள்ளது, இதனையடுத்து, அணைக்கு இறுதி அபாய வெள்ள எச்சரிக்கையாக சைரன் ஒலிக்கப்பட்டு,142 அடிக்கு மேல் வரும் தண்ணீரை கேரளாவிற்குள் திறந்து விடப்பட்டுள்ளது திறக்கப்பட்ட நீர் வண்டிப்பெரியாறு வழியாக இடுக்கி அணைக்குச் சென்று வருகிறது.   உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணை நீர்மட்டம் ஏற்கனவே கடந்த 2014, 2015, 2018 என மூன்று முறையும் தற்போது நான்காம் முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. கண்டு ஐந்து மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்ட செய்தியாளர், ரா.சிவபாலன்

ராமநாதபுரம் ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி

Image
ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு பாம்பன் வடக்கு கடற்கரையில் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இராமணாதபுரம் நவம்பர் 30, 2017 அன்று இந்திய பெருங்கடலில் ஒக்கி புயல் தாக்கியது. முன்னெச்சரிக்கை தகவல்கள் முறையாக இந்திய பெருங்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த  மீனவர்களுக்கு  சென்று சேராததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கிக்கொண்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெரும்பாலான மீனவர்கள் புயலிடம் போராடி அருகில் உள்ள துறைமுகங்களில் கரை சேர்ந்தனர். அரசின் மெத்தனப்போக்கால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான ஆழ்கடல் மீனவர்கள் உயிரிழந்தனர். இதில் பலரும் படகு கடலில் மூழ்கிய சூழ்நிலையிலும் நீந்தி கொண்டு தங்களை காப்பாற்ற கண்டிப்பாக யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் பல நாட்கள் நீந்திக்கொண்டு  காத்திருந்து உயிரை விட்டுள்ளனர். இதன் மூலம் மீனவர்களை காப்பாற்ற அரசு நவீன முயற்ச்சிகளை பயன்படுத்த வேண்டும் மற்றும் மீனவர்களுக்கு நவீன தொலைதொடர்பு கருவிகள் கொடுக்கவேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டது. ஒக்கி புயலில் இறந்தவர் மீனவர் குடும்ப...

மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முறையில் விமானத்திற்குள் உயிரிழப்பு

Image
மதுரையிலிருந்து சென்னை வழியாக   மும்பை செல்லும் ஏா்இந்தியா  விமானத்தில்  மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முறையில் விமானத்திற்குள்  உயிரிழப்பு.சென்னை விமானநிலையத்தில் போலீசாா் உடலை கைப்பற்றி விசாரணை.இதனால் மும்பை செல்லும் விமானம் 2 மணி நேரம் தாமதம். மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து மதுரை செல்வேண்டிய ஏா்இந்தியா விமானம் இன்று பிற்பகல் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.விமானத்தில் முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கினைப்பாளருமான O.பன்னீா்செல்வம் உட்பட 93 பயணிகள் இருந்தனா். இன்று பிற்பகல் 2.15 மணிக்கு  விமானம் சென்னை விமானநிலையத்திற்கு வந்து தரையிறங்கியது.சென்னை பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து  இறங்கினா். ஆனால் ஒரு பயணி மட்டும் விமானத்திலிருந்து இறங்கவில்லை.இதையடுத்து ஏா்இந்தியா ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி பாா்த்தபோது,மதுரையை சோ்ந்த சண்முக சுந்தரம் (72) என்ற பயணி அவருடைய இருக்கையில் சாய்ந்து தூங்குவதுபோல் இருந்தாா்.ஊழியா்கள் எழுப்பியபோது,சுயநினைவு இல்லாமல் இருந்தாா். இதையடுத்து விமானநிலைய மருத்துவ குழுவினா் விமானத்திற்குள் ஏறி,பரிசோதித்தபோது,அவா...

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Image
தமிழ்நாடு அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும், அது வரை எவ்வளவு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன் பிறகு பொதுத் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்! 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமா ?

Image
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமா  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் அல்லது மே மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல். தமிழகத்தில் ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழை மற்றும் புதிதாக பரவ தொடங்கி இருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று போன்றவற்றை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தெப்பக்குளம் போல் காட்சியளிக்கும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் வளாகம்.

Image
ஆண்டிபட்டியில் இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையினால் ஆண்டிபட்டியில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் வடிய இடமில்லாமல் ஆங்காங்கே குளம் போல் காட்சியளிக்கிறது சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் வளாகப் பகுதியில் நீர் வடிய இடமில்லாமல் தெப்பக்குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது . மேலும் கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் . அருகாமையில்  நூலகம் ,பள்ளிக்கூடம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இப்பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி ,சுகாதாரக் கேடு ஏற்பட்டு |நோய் பரவும் அபாயம் உள்ளது . தண்ணீர் வடிய பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தும்,மீண்டும் மழை பெய்து கூடுதல் தண்ணீர் நிற்காமல் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி செய்தியாளர். ரா.சிவபாலன்

முன்னாள் அதிமுக கொறடாவின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை!

Image
கடந்த அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு துணை ஆட்சியராகப் பணியாற்றிவந்தவர் பவானி.   இவர், முந்தைய அதிமுக ஆட்சியின் தலைமை கொறடாவான மனோகருக்கு உறவினர். நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் பவானி பணியாற்றிய காலகட்டத்தில், அளவுக்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், அவர் மீது வேறு பல புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் இன்று (30.11.2021) லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.  அதன்படி, திருச்சி மாம்பழ சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பள்ளி உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

தாராபுரத்தில் காணாமல் போன சிறுவன் சத்தியமங்கலத்தில் மீட்ட காவல்துறையினர்

Image
திருப்பூர் மாவட்டம். தாராபுரத்தில் காணாமல் போன சிறுவனை, சத்தியமங்கலம் காவல்துறையினர் மீட்டு,  பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். நிஷாந்த்-வயது 15 த/பெ   நாச்சிமுத்து K.K.நகர், சித்திரகுப்தன் பாளையம், தாராபுரம், திருப்பூர் மாவட்டம் என்பவர் கடந்த 28.11.2021 அன்று முதல் வீட்டில் இருந்து காணாமல் போனவர், இன்று அதிகாலை 02.00 மணி அளவில் சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சுற்றி திரிந்தவரை இரவு ரோந்து காவலர்கள், தலைமை காவலர் தன்னாசியப்பன், தலைமைக் காவலர் கார்த்திகேயன், மற்றும் இரவு ரோந்து ஆயுதப்படை காவலர்கள்  ஆகியோர் மேற்படி நிசாந்தை பிடித்து விசாரித்து, அவரது தந்தை நாச்சிமுத்துக்கு தகவல் தெரிவித்து, சத்திய.மங்கலம் வரவழைத்து, சிறுவனை பெற்றோருடன் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக, நாராயணசாமி. செய்தியாளர். சத்தியமங்கலம்..

தொடர் மழையினால் நெல்லையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாலையில் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு*

Image
நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில் நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர்ப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று வேருடன் ரோட்டில் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.  தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடம் வருகை தந்த வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் வேருடன் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் டவுன் பேட்டை தற்காலிகமாக போக்குவரத்து தடைபட்டது.  மேலும் பேட்டை வழியாக செல்லக்கூடிய சுத்தமல்லி சேரன்மகாதேவி கடையம் முக்கூடல் போன்ற பகுதிகளுக்கும் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு குன்னத்தூர் மலையாள மேடு வழியாக பேட்டை பகுதிக்கு செல்வதற்கு காவல்துறை மூலம் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டது.  10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் அதி நவீன அரவை இயந்திரங்கள் ம...

நெல்லையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாலையில் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு

Image
நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில் நெல்லை டவுண் அடுத்த கோடீஸ்வரன் நகர்ப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று வேருடன் ரோட்டில் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடம் வருகை தந்த வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் வேருடன் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் டவுன் பேட்டை தற்காலிகமாக போக்குவரத்து தடைபட்டது.  மேலும் பேட்டை வழியாக செல்லக்கூடிய சுத்தமல்லி சேரன்மகாதேவி கடையம் முக்கூடல் போன்ற பகுதிகளுக்கும் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு குன்னத்தூர் மலையாள மேடு வழியாக பேட்டை பகுதிக்கு செல்வதற்கு காவல்துறை மூலம் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டது 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் அதி நவீன அரவை இயந்திரங்கள் மூலம் மரத்தை அ...

காணாமல்போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சதியமங்கலம் காவல்துரைனர்

Image
திருப்பூர் மாவட்டம் சத்திநிஷாந்த்-வயது 15 என்பவர் கடந்த 28.11.2021 அன்று முதல் வீட்டில் இருந்து காணாமல் போனவர், இன்று அதிகாலை 02.00 மணி அளவில் சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சுற்றி திரிந்தவரை இரவு ரோந்து காவலர்கள், தலைமை காவலர் தன்னாசியப்பன், தலைமைக் காவலர்  கார்த்திகேயன், மற்றும் இரவு ரோந்து ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் மேற்படி நிசாந்தை பிடித்து விசாரித்து, அவரது தந்தை நாச்சிமுத்துக்கு தகவல் தெரிவித்து, சத்திய.மங்கலம் வரவழைத்து, சிறுவனை பெற்றோருடன் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.யமங்கலம் காவல்துறையினர் மீட்டு,  பெற்றோர் வசம் ஒப்படைத்தனர் தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக, நாராயணசாமி. செய்தியாளர். சத்தியமங்கலம்

சமூக நலத்துறை அலுவலகத்தில் 25 ஆயிரம் லஞ்சம் - பெண் அதிகாரி கைது

Image
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (32). தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த சிலஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணபிரசாத்துக்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அர்ச்சனா (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. வரதட்சணை தகராறில் கணவன்  மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை சார்பில் இளநிலை உதவியாளர் பிரேமா மார்க் என்பவரிடம் பரிந்துரைக் கடிதம் கோரியுள்ளார். இதுதொடர்பான பரிந்துரைக் கடிதம் வழங்க கிருஷ்ணபிரசாத்திடம் 50 ஆயிரத்தை பிரேமா மார்க் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க கிருஷ்ணபிரசாத் விரும்பவில்லை.இதையடுத்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.  தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி முதல் தவணையாக 25 ஆயிரத்தை கிருஷ்ணபிரசாத் இளநிலை உதவியாளர் பிரேமா மார்க்கிடம் கொடுத்தார்.அப்போது அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் மற...

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Image
 BREAKING  தெற்கு அந்தமான் அருகே அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு, கிழக்கு மத்திய வங்கக் கடலை நோக்கி நகரும் - வானிலை ஆய்வு மையம் தகவல் “இதன் காரணமாக வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆந்திரா மற்றும் ஒடிசாவிற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது; தமிழ்நாட்டிற்கு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மழை குறித்த எச்சரிக்கை ஏதும் இல்லை” - என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் #WeatherUpdate | #Depression

பாஸ்போர்ட் விசாரணைக்கு ரூ.500 லஞ்சம் - போலீஸ் ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.!

Image
  திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், வெளிநாடு செல்ல கடந்த 2006ல் பாஸ்போர்ட் விண்ணப்பித்தார். பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்தவரின் விவரங்களை சேகரித்து (என்ஓசி) தடை இல்லா சான்று அனுப்ப கோரி உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த அப்போதைய ஏட்டு ரவி என்பவர் விண்ணப்பதாரரிடம் விசாரணை நடத்தியதோடு, ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி பணத்தை கொடுத்தபோது, லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ரவியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரித்து, ஏட்டு ரவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டு - 2 பேர் கைது.!

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுமுகை செம்படா பாளையம்  பகுதியில்வசித்து வரும் காளியண்ணன் மகன் சிவக்குமார் வயது 47, மற்றும்  அதே ஊரைச் சேர்ந்தஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசன் வயது 37 ஆகிய இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் ஆற்று மணலை தொடர்ந்து கடத்தி வந்துள்ளனர். இன்று இந்த பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்டஇருவரும் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கொண்டு வந்த போது, பிடித்து விசாரித்ததில், தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இவர்கள் மணலை பதுக்கி வைத்த இடத்திற்கு சென்று பார்த்தபோது யூனிட் கணக்கில் மணல்  திருடியது தெரியவந்தது.  இதனையடுத்து இருவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களின் மீது சத்தியமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர்கள் பதுக்கி வைத்த ஆற்றுமணல் குறித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் சத்தியமங்கலம் வருவாய் துறையினருக்க...

சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20,000 குடும்பங்கள் தவிப்பு

பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு முழுவதும் சூழ்ந்த மழை நீர் 20000 குடும்பங்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு முழுவதுமாக மழை நீரால் சூழப்பட்டுள்ளது. 3 நாட்களாக மின் இணைப்பும் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.  அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத சூழ்நிலையில் சிலர் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் வெளியில் நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.  டிராக்டர் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிநீர் விநியோகம் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடிநீர் திறக்கபட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் மழைவெள்ளத்தை காண திரளும் பொதும்க்கள்

 கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடிநீர் திறக்கபட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் மழைவெள்ளத்தை காண சுற்றுலா தலமாக மாறிய அனகாபுத்தூர் ஆற்று பாலம் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் இருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி, திருமுடிவாக்கம், மீஞ்சூர் நான்கு வழிச்சாலை என பல்வேறு பகுதிகளுக்கு அனகாபுத்தூர் ஆற்று பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது இந்நிலையில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகங்கள் முதல், கனரக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அடையாறு ஆற்றின் வெள்ள பெருக்கை வேடிக்கை பார்த்து செலவது, ஆபத்தை உணராமல் சுற்றுலாதளமாக மாறி உள்ளது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் 3000 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அடையாற்றில் அனகாபுத்தூர் பாலத்தை தொடும் அளவுக்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளபெருக்கை அருகில் இருந்து வேடிக்கை பார்பதும், செல்பி எடுப்பது போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையினரை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேட்டுகொண்டுள்ளனர்

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.!

Image
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று  நடைபெற்றது.  கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மற்றும் நீண்ட நாள் மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  முன்னதாக மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்களை வழங்கினார்.  கூட்டத்தில மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர்  வீரபத்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்.!*

Image
  தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் தற்பொழுது நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், இன்று (29.11.2021) மாலைக்குள் அதிகளவு நீர் வரத்து இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், யாரும் ஆற்றுப் பகுதிக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதற்கும் நீந்துவதற்கும் செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்

ஒமைக்ரான் மிகக் கொடியது - உலக சுகாதார அமைப்பு

Image
ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு மிக மிகக் கொடியதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல்! ஓமீக்ரான் வகை கொரோனாத் தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் ஆயத்தமாக  இருக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும், வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க மோடி அரசு அஞ்சுகிறது.!

Image
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்காதது ஏன் ?- என ராகுல் காந்தி கேள்வி வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி  ராகுல் காந்தி

சென்னையில் நவம்பர் மாதம் 100 செ.மீ மழை என்பது தவறு- வானிலை மைய இயக்குனர் புவியரசன் தகவல்.!

Image
சென்னையில் தற்போது வரை 91 செ.மீ மழை தான் பதிவாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 102 செ.மீ பதிவாகி உள்ளது சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்

Image
டிச.1ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அரபிக் கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாவது குறிப்பிடத்தக்கது.

வேதா இல்லம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு. இ.பி.எஸ் அறிவிப்பு. !*

Image
வேதா இல்லம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு. இ.பி.எஸ் அறிவிப்பு.  செயற்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி வார்டு உறுப்பினர்க்கு போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு.

Image
சத்தியமங்கலம். நவ.30 தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு கேட்ப, அரசியல் கட்சிகள் பேரூராட்சி மாநகராட்சி, நகராட்சிஉள்ளிட்ட பகுதிகளில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர் களிடம்  விருப்ப மனு பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி  வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில்  விருப்ப  மனுவினை அ.இ. அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் என். என். சிவராஜ் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூர் கழக அதிமுக செயலா ளர் தேவமுத்து ஆகியோரிடம் விருப்பமனுவினைஅளித்து வருகின்றனர்.  அப்போது  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய,முன்னாள் சேர்மன்.எம்.பி.  துரைசாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி, முன்னாள் சேர்மேன் துரைசாமி, முன்னாள் உப தலைவர் சுந்தரம், சோனா சேகர், கேபிள் சரவணன், அரியப்பம்பாளையம் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் மிலிட்டர சரவணன் உள்ளிட்டோர்உடன்இருந்தனர். தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக, கி.நாராயணசாமி, செய்தியாளர், சத்தியமங்கலம்.

சேலத்தில் ஆஷ்னா சில்க்ஸ் பட்டுசேலை கடை திறப்பு விழா- தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்பு

Image
சேலம் ஸ்வர்ணபுரி பகுதியில் ஆஷ்னா சில்க்ஸ் பட்டுச்சேலை கடை திறக்கப்பட்டது.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.கடையின் உரிமையாளரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.கே(எ)ஜி.ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.மேலும் இந்நிகழ்வில் தொழிலதிபர் ராசி சரவணன்.மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆடைகளுக்கு மூன்று நாட்களுக்கு 20% பொதுமக்களுக்கு சிறப்பு தள்ளுபடி இருப்பதாக கடையின் உரிமையாளர் ஆர்.கே(எ)ஜி.ராஜ்குமார் தெரிவித்தார்.

சேலத்தில் இரத்ததான முகாம்

Image
  சேலம் அயோத்தியபட்டினம் தினேஷ் மெமோரியல் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலர் மணிபாரதி தலைமையில் ரத்ததான முகாம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 110 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானத்தை வழங்கினார்கள்.மேலும் சேலம் பிளட் டோனர் குழு இணைந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை வழங்கினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காரிப்பட்டி உதவி ஆய்வாளர் வேல்முருகன், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்திர கேசவன், அயோத்தியாபட்டினம் கிராம உதவி ஆய்வாளர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.மற்றும் வீடுகட்டும் சங்கம் டைரக்டர் மாரிமுத்து,இளம்பரிதி, ஜெயச்சந்திரன்,சதீஷ் குணா,ஹரி,கேசவமூர்த்தி, தினேஷ்குமார்,சேட்டு சூர்யா,ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கால பைரவாஷ்டமி விழா.!

Image
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் திலுள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் காலபைரவாஷ்டமி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து 9  மணி அளவில் காலபைரவருக்கு பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் சந்தனம் குங்குமம் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் கரும்புச்சாறு போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு மகா பைரவ  யாகம், ருத்ர யாகம்  வளர்க்கப்பட்டு ஒரு நாற்பத்தி சமர்ப்பிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் தங்களது கைப்பட கலச பூஜைகள் செய்தனர் அறுபத்தி நான்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பைரவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு வடை மாலை சூட்டி சிறப்பாக அலங்காரம் செய்திருந்தனர் இதனை தொடர்ந்து பல்வேறு விதமான தீபாராதனை காட்டப்பட்டது பின்பு பைரவர் ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்...

சேலம் 21 அடி காசி கால பைரவருக்கு பைரவாஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை.!

Image
சேலம் மாவட்டம் தாரமங்கலத்திலிருந்து சின்னப்பம்பட்டி வழி பைபாஸ் பஸ் ஸ்டாப்  இலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் மிக பிரமாண்டமாக 21 அடி  ஸ்ரீ காசி காலபைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பைரவாஷ்டமி விழா முன்னிட்டு  மாலை 3 மணி முதல் மகா மிளகாய் யாக பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அஷ்டபைரவர் களுக்கு பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் சந்தனம்,குங்குமம், விபூதி, இளநீர்,தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு மற்றும் சொர்னாபிஷேகம்  செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 7 மணி அளவில் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீ காசி கால பைரவர் சக்திராஜா முனீஸ்வரர் மகா பீடம் தவத்திரு ஆறுமுக சுவாமிகள் குருஜி மாரியப்பன் சிறப்பாக செய்திருந்தார்.  சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர். தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்க...

ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்.

Image
ஆண்டிபட்டி, நவ.29  தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனுக்களை அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் மற்றும்  கம்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மனும் ஆண்டிபட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான லோகிராஜன், ஒன்றிய குழு துணை தலைவரும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான வரதராஜன் ஆகியோரிடம்  விருப்ப மனுக்களை வழங்கினர் . விருப்ப மனுக்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் 1500 செலுத்தி பதிவு செய்து கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, விருப்ப மனுக்களை அளித்தனர். தேனி செய்தியாளர் சிவபாலன்

தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போனை திருடியவர் கைது.!

Image
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  முத்துநகர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த 16 வயது சிறுவனிடம் இருந்து, லூகாஸ் கிளின்டன் (23)  த/பெ. பிச்சையா புதுத்தெரு தூத்துக்குடி  என்பவர் செல்போனை நேற்று பறித்து  சென்றுள்ளார். இதுகுறித்து  16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சிவராஜா வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி லூகாஸ் கிளின்டனை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 16,000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் தங்க மோதிரம்.!

Image
உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர திமுக இளைஞரணி சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் மதியழகன் தலைமையில் நகர இளைஞர் அணி  அமைப்பாளர் கே.மகேந்திரன், சிறுபான்மையினர் நல உரிமை அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி கலந்துகொண்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர,ஒன்றிய திமுக நிர்வாகிகள் சேதுரத்தினம், ராஜகுரு,கணேசன், முனியசாமி, காளியப்பன், அன்பழகன்,ராமமூர்த்தி, மாரிச்சாமி, ரவீந்திரன்,மணி, அண்ணாதுரை, புஷ்பராஜ்,சசிகுமார்,சரவண குமார்,ஹரிஹரன், டீக்கடை சந்திரசேகர், மகேஷ் ராசுக்குட்டி, பூக்கடை கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம்

Image
  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து   திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம் இன்று நடைபெற்றது.    திருப்பூர் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், பாண்டியன் நகர் பகுதியில் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.  இந்த பிரச்சாரத்துக்கு  திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சேர்மன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் ராமசாமி, மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர் தீபிகா அப்புகுட்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சகாயமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக வீடு வீடாக சென்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்கள். 

சு.வெங்கடேசன் குறித்த அமைச்சர் கே.என்.நேரு பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்

Image
மதுரை MP வெங்கடேசன் குறித்து கே.என்.நேரு ஒருமையில் பேசிய பேச்சு அரசியல் நாகரீகமற்றது என சிபிஎம் கண்டனம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

Image
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யோகா மற்றும் ஸ்கேட்டிங் அசத்தி வரும் சிறுமி - சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கி பாராட்டு.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ரவீணா.(வயது 7 )எடுஸ்டார் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அவள் தனது 4.5 வயது முதல் யோகா  மற்றும் ஸ்கேட்டிங் கற்று வருகிறார்.  இவர் தான் கற்று கொண்ட யோகா வில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டு இருக்கிறார். இவர் மேலும் மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பல யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  இரண்டு ஆண்டுகளாக  கொரோனா என்ற கொடிய நோயிடம் இருந்து நம்மை காக்க கூடிய முதல் மாமருந்து யோகா மற்றும் மூச்சு பயிற்சி தான் என்பதை பல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு எடுத்து உரைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இதுவரை இச்சிறுமி கண்ணாடி,மண்பானை, செங்கல் போன்ற வற்றில் பல யோகா ஆசனங்கள் செய்து உள்ளார். இதுவரைக்கும் அவர் யோகா வில் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.கடந்த ஜூன் மாதம் நடந்த உலக யோகா தினத்தில் 75 ஆசனங்கள் 10 நிமிடங்களில் செய்து எல்லோரையும் அசத்தி உள்ளார்.  இவர் மேலும்  ஓவியம் மற்றும் ஸ்கேட்டிங் பயின்று வருகின்றார். அதில் ஒரு நிகழ்வாக 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாய...

திருச்செந்தூரில் 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது- கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  மார்க்கெட் ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில்,  அதில் இருந்த 1) இசக்கி ராஜா (32), த/பெ. சண்முகம், ராமையன்பட்டி, திருநெல்வேலி,  2) கதிரேசன் (25), த/பெ. பிச்சைபழம், ராஜகோபாலபுரம், நாங்குநேரி, திருநெல்வேலி,  3) பிரபாகரன் (35), த/பெ. பரமசிவன், சங்கர் நகர், திருநெல்வேலி,  மற்றும்; 4) பிரசாந்த் (25), த/பெ. கல்யாணம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்,  ஆகிய 4 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 4 பேரையும் கைது செய்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 1300 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய  சரக்கு வாகனத்தையும் (TATA ACE TN 03 Z 2728) பறிமுதல் செய்தனர்.  மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை ...

யானைகள் உயிரிழப்புகள் குறித்த விசாரணை அறிக்கை என்னவானது? கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் கேள்வி.!

Image
கோவை நவக்கரையில், ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் யானைகள் இருப்புபாதையை கடக்கையில் உயிர்ப்பலியாவது தொடர்ந்து வருகிறது. குறிப்பிட்ட இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலையளிக்கிறது.   இந்தப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தை 30 கிலோ மீட்டருக்கு குறைவான வேகத்தில்தான் கடக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளது. ரயில்வே நிர்வாகம் இதனை கண்காணிக்கிறதா? இந்த நடை முறைகளை மீறும் போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்கிற கேள்வி எழுகிறது.  மேலும், இத்தனை வருடங்கள் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் சமீப காலங்களில் மட்டும் ஏன் இப்படி யானைகள் இருப்புப் பாதைகளை கடக்கிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. யானைகளின் வலசை பாதைகளை மறித்து கட்டிடங்கள், நிறுவனங்கள் கட்டப்பட்டது குறித்து வனத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.  அப்படியான விதி மீறல்களை உடனடியாக பாரபட்சமில்லாமல் இதன் மீது நடவடிக்கை எடுத்து, வீதிமீறல் கட்டிடங்களை அகற்ற வேண்டும்.  மேலும் கோவை மாவட்டத்தில் யானைகள் தொடர் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் ஒரு ...

மாநகரம் முழுவதும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது - கனிமொழி கருணாநிதி எம்.பி.!

Image
கனமழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் ஆன குமரன் நகர், ஹவுசிங் போர்டு, காமராஜ் நகர், ராம் நகர், ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி  உள்ளிட்ட  பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது இதனை இன்று ஆய்வு மேற்கொண்ட  திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அங்குள்ள மக்களிடம் தெரிவித்தனர்.  தொடர்ந்து  மழைநீர் வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அதிகாரியிடம் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள அனைத்து மழை நீரையும் அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் புனிதப்படுத்தும் உள்ளன...