Posts

Showing posts from November, 2025

சொந்த பயன்பாட்டு வாகன பதிவின்போது ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வர தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Image
  புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது அதை ஆர்டிஓ ஆபிசுக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. தமிழகத்தில் தினமும் டூ - வீலர்கள், கார்கள், கனரக வாகனங்கள் உட்பட 8,000 வாகனங்கள் ஆர்டிஓவில் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே 3,000 முதல் 4,000 வரை. அந்த வாகனத்தின் ஓனரோ அல்லது விற்பனை பிரதிநிதியோ, ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டு வாகன பதிவின்போது ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமல் இருந்தது. இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி இதில் விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

சிவகங்கை அருகே கோர விபத்து: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலி.!

Image
  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி - காரைக்குடி சாலையில்  இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகேயுள்ள கும்மங்குடியில் இன்று மாலை இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் நடந்தது. ஒரு பஸ் திருப்பூரில் இருந்து காரைக்குடி சென்று சென்றுள்ளது. எதிர் திசையில் இன்னொரு அரசு பஸ், திண்டுக்கல் நோக்கி வந்துள்ளது.இரு பஸ்களும், திருப்புத்துார் சாலையில், சமத்துவபுரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இரு பஸ்களில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். பயணிகளில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் இணைந்து மீட்பு பணி மேற்கொண்டனர். காயம் அடைந்தவர்கள், அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. விபத்...

திருநெல்வேலி அருகே தடை 500 கிலோ செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது.!

Image
  திருநெல்வேலி அருகே உள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பொன்னாங்குடி பாலம் அருகே முன்னீர் பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ், உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம், எட்வின் அருண்ராஜ் மற்றும் காவலர்கள் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையின் போது வேகமாக வந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனம் ஓட்டி வந்த கொங்கத்தான் பாறை அதிபன் பாலாஜி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் வாகனத்தை சோதனை செய்த பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருளான கணேஷ் புகையிலை, கூல் லிப், விமல் பான் மசாலா, v1 டோபாக்கோ ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் வெள்ளை முட்டையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை முன்னீர்பள்ளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்த போது மேலும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட பொருட்கள் சுமார் ஏறத்தாழ 500 கிலோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது பெரிய மூட்டை 43, சிறிய மூட்டை 8 மேலும் காவல்துறையின் விசாரணையில் மேலும் ஒருவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ...

டித்வா புயல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 556மி.மீ மழை பதிவு - அதிகபட்சமாக காயல்பட்டிணத்தில் 70மி.மீ மழை பதிவு.

Image
  வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்போது வரை தூறல் மழையும், ஆங்காங்கே சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடியின் வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை தொட்டு குளிர் நிலவுகிறது. நேற்று காலை 6.30 மணி முதல் இன்று அதிகாலை 12.30 மணி வரையான 18 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 556. 70. மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டிணத்தில் 70மி.மீ மழை பதிவாகியுள்ளது. சூரங்குடியில் 63மி.மீ, திருச்செந்தூர் 59.40  மி.மீ, வைப்பார் 49 மி.மீ, குலசேகரப் பட்டிணம் 48.மி.மீ, ஸ்ரீவைகுண்டம் 30.70 மி.மீ, சாத்தான்குளம் 28.60 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.  

"சாதி என்பது உண்மையா? நிஜமான ஒன்றா? என கேளுங்கள்.. கேட்டால் தான் உங்களால் மாற்ற முடியும்" - மாணவர்கள் மத்தியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு.

Image
  தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அஹமதாபாத் தேசிய புத்தாக்க மையம் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி ஆகியவை இன்ஸ்பயர்-மானக் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நேற்றுகோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. இந்த விழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார். கண்காட்சியை தொடங்கி வைத்து கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசியதாவது: ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் போது அதற்கான முன் அனுபவம் முக்கியமானது. ஏனென்றால் போட்டியில் வெற்றி பெறுவது அல்லது இந்த முறை அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் போவது என்பது பெரிய விஷயம் கிடையாது. அனைத்தையும் தாண்டி அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் போது கிடைக்கும் அனுபவம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கி தரக்கூடிய ஒன்றாக இருக்கும். இதில் அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும், வேறு வாய்ப்புகள் உள்ளன. இதுவே கடைசி என்று எண்ணி விடக்கூடாது.  உலகத்துக்கே முன்மாதிரியாக 3d பிரின்டரில் 64 கிராமில் செயற்கைக்கோள் தயாரித்தது ...

தூத்துக்குடி மாநகராட்சி மாற்றுத்திறனாளி நியமண கவுன்சிலா் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்றாா்.

Image
  தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆறுமுகம்  பதவி ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி குறிஞ்சி நகாில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பொறுப்பேற்றிருக்கும் ஆறுமுகத்தை, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி சந்தித்தாா் அப்போது கனிமொழி எம்.பி பணி சிறக்க வாழ்த்தினார்.  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், கவுன்சிலா் பவாணி, வட்டச்செயலாளர் ரவிசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

அதிமுக ஆட்சியில் 3 வழித்தடம், திமுக ஆட்சியில் 11 வழித்தடம் எந்தஆட்சி சிறந்தது -அதிமுக உறுப்பினருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பதிலடி.!

Image
  தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் அனைத்து பணிகளும் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. துப்புரவு பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், துப்புரவு பணியாளர்களுக்கு அடுத்த மாதம் 3 வேளையும் உணவுகள் வழங்குவதற்கென்று ரூ.2 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கென்று மாநகராட்சி சம்பந்தப்பட்ட 30 இடங்களில் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 19, 20, 21 ஆகிய 3 நாட்களில் பெய்த கனமழையால் எங்கும் மழைநீர் பெரிய அளவில் தேங்க வில்லை. ஒரு சில இடங்களில் தான் தேங்கியது அதையும் மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. கோக்கூர் குளம், புலிபாஞ்சான்குளம் அமைந்துள்ள பகுதி தாழ்வான பகுதி அதனை சரிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 450  காலி மனைகள் உள்ளது அங்க...

தூத்துக்குடி : 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 15 கிராம ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவு.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலர்கள் 15 பேரை  நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் பானு உத்தரவிட்டுள்ளார்.

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை - தூத்துக்குடிக்கு விமான சேவை ரத்து.!

Image
  டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் நாளை (நவ.29) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடுமையான மழை பொழிவு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - தாமிரபரணி ஆற்றின் தண்ணீரின் அளவை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு.!

Image
  வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று 28.11.25 ஏரல் பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் வழியாக செல்லும் தண்ணீரை பார்வையிட்டு தொடர்ந்து தண்ணீரின் அளவை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கன மழை காரணமாக நாளை தமிழ் நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் மழையை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வ.உ.சி. துறைமுகம் அம்புஜா சிமெண்ட் (அதானி குழுமம்) கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் கிளிங்கர் கப்பலை வரவேற்றது

Image
வ.உ.சி. துறைமுகம் 19.11.2025 அன்று குஜராத்தைச் சேர்ந்த அம்புஜா சிமெண்ட் லிமிடெட்டுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, முதல் கிளிங்கர் சரக்கை பெற்றுள்ளது. குறைந்தபட்ச உத்தரவாத சரக்கு (Minimum Guaranteed Tonnage-based Incentive Scheme) திட்டத்தின்படி அமைந்துள்ள இந்த ஒப்பந்தத்தில், வருடத்திற்கு 2,50,000 மெட்ரிக் டன் கிளிங்கர் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தின் மூலம் கொண்டுவரப்படும் என்று உறுதி வழங்கப்பட்டது. அதானி குழுமம் கடந்த வருடம், அதன் விரிவாக்க இயக்கத்தின் ஒரு பகுதியாக சிகே பிர்லா குழும நிறுவனமான ஓரியண்ட் சிமெண்டை ரூ.8,100 கோடி மதிப்பீட்டில் கையகப்படுத்துதியது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 24.11.2025 அன்று, வடக்கு சரக்குத்தளம்-2 (North Cargo Berth-II) கப்பல் தளத்தில் முதன் முதலாக MV Lima Trader என்ற கப்பல் மூலமாக கிளிங்கர் சரக்கு வந்தடைந்தது. குஜராத்திலுள்ள சாங்கி துறைமுகத்திலிருந்து 56,440 மெட்ரிக் டன் கிளிங்கர் இந்த கப்பல் மூலமாகக் கொண்டு வரப்பட்டது. 13.1 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்தக் கப்பலுக்கு M/s Seaport Shipping கப்பல் முகவராகவும், M/s Seaport Logistics சரக்க...

இலங்கை சந்தித்த மிக மோசமான வானிலை பேரழிவுகளில் ஒன்றாக அமைந்த டிட்வா புயல் : 56 பேர் உயிரிழப்பு, அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்.!

Image
  இலங்கை முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள நிலையில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இலங்கை அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இலங்கை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர், 23 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) அறிவித்துள்ளது. மத்திய டீ பயிரிடும் படுகலா மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர். இது சமீப காலங்களில் இலங்கை சந்தித்த மிக மோசமான வானிலை பேரழிவுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. புயலின் தாக்கத்தால் இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஒரு நாளில் 300 மி.மீ.க்கும் மேல் மழை பெய்தது, இதனால் நிலச்சரிவுகள், வெள்ளம் ஏற்பட்டன. DMC தகவல்படி, 43,991 பேர் பள்ளிகள், பொது இடுகள்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் கூரைகளில் ...

தூத்துக்குடி: 2 பெண்களிடம் 6½ பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Image
  File Photo தூத்துக்குடி ரஹ்மத்துல்லா புரத்தைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி அமுதா (41) இவர் நேற்று இரவு 9.50 மணியளவில் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த சுமார் 28 வயது மதிக்கப்பட்ட ஒரு வாலிபர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த  3½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து அமுதா மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு டெலிபோன் காலனியைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி கிறிஸ்டி (30). இவர் நேற்றிரவு 9.30 மணிக்கு டியூஷனில் இருந்து மகனை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.  இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருக்ன வழக்குப் பதிந்து ...

கன மழை எச்சரிக்கை- இன்று 28.11.2025 முதல் நாளை 29.11.2025 பிற்பகல் வரை தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்- அனைத்து கள அலுவலர்களும் முழு அளவில் தயார் நிலையில் இருக்க ஆட்சியர் உத்தரவு.!

Image
  வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக இன்று 28.11.2025 முதல் நாளை 29.11.2025 பிற்பகல் வரை தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.  அனைத்து  கள அலுவலர்களும் முழு அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று முன் எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கை.!

துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 101 பேருக்கு வேஷ்டி சேலை அாிசி ஓன்றிய செயலாளர் ஓட்டப்பிடாரம் இளையராஜா வழங்கினாா்.

Image
  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாா்.  அதன்படி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் 101 பயனாளர்களுக்கு வேட்டி– சேலை மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவித் தொகுப்புகளை ஒட்டப்பிடாரம் மேலமடம் கட்சி அலுவலகத்தில் வைத்து ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.!

Image
  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து தாய்மார்களுக்கு ஊட்டசத்து பரிசு பெட்டகங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிா்மல்ராஜ், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர துணைச்செயலாளர் கனகராஜ்,  பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணைத்தலைவர் செந்தில்குமாா், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி,  மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஷ்வரன்சிங், வழக்கறிஞர் அணி துணை ...

தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயா் ஜெகன் பொியசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்.!

Image
  தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றம் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி பழைய அண்ணா பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மண்டலத்தலைவர் கலைச்செல்வி, வட்டச்செயலாளா் கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேயா் ஜெகன் பொியசாமி கேக் வெட்டி பொதுமக்கள் ஆட்டோ தொழிலாளா்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கினார்.  விழாவில் மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளா்கள் ராஜ்மோகன்செல்வின்,  ஆறுமுகம், துணை மேயா் ஜெனிட்டா, மாநகர துணைச்செயலாளா்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் பழனி, அருண்குமாா், அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, குபோ்இளம்பாிதி, அருணாதேவி, பிரபு, நாகராஜன், நிக்கோலாஸ்மணி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன். சக்திவேல், செல்வக்குமாா், பகுதி செயலாளர...

தூத்துக்குடி மாற்றுத்திறனாளி மாநகராட்சி நியமண உறுப்பினர் பொறுப்பேற்பு மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ரியங்கா வாழ்த்து.!

Image
  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனை பேணி பாதுகாத்து மக்கள் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் வழங்கி அவா்களுக்கான குறைகளை மக்கள் மன்றத்தில் தொிவிப்பதற்கு ஏதுவாக உள்ளாட்சிகளில் நியமண உறுப்பினா் தமிழகம் முழுவதும் நியமணம் செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டு அதை அரசானையாக வௌியிட்டபின் தூத்துக்குடி மாநகராட்சியில் நியமண உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அலுவலா்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் தோ்வு செய்யப்பட்ட திரேஸ்புரத்தை சோ்ந்த ஆறுமுகத்திற்கு மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி முன்னிலையில் ஆணையா் ப்ரியங்கா உறுதிமொழியை படிக்க உறுப்பினா் அதை படித்தாா். பின்னா் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டாா். மாற்றுத்திறனாளி நியமண உறுப்பினருக்கு மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ரியங்கா கவுன்சிலா் சந்திரபோஸ், வாழ்த்துக்களை தொிவித்துக்கொண்டனா்.  பின்னா் நியமண உறுப்பினா் ஆறுமுகம் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் துணை முதலமைச்சா் உதயநிதிஸ்டாலின், கனிமொழி...

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பாா்வையிட்டாா்.!

Image
  தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் பள்ளமான சில பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் அதை அப்புறப்படுத்தி சாலை அமைத்து தரும் படி அப்பகுதிமக்கள் கோாிக்கை விடுத்ததையடுத்து நோில் சென்று பாா்வையிட்டு தற்காலிக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.  மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், பகுதி திமுக செயலாளர் ஜெயக்குமாா், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உடனிருந்தனா்.

“இலங்கை அருகே உருவாகும் “டித்வா” புயல் சென்னை நோக்கி வரும்; சென்னை அருகே கரையைக் கடக்குமா, கடலிலேயே நீடிக்குமா என இனிதான் தெரியும்”

Image
  நவ.29 ஆம் தேதி நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் மிக கனமழையும், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு இன்று (27.11.2025) அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று எதிர்வரும் 29.11.2025 அல்லது 30.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மலாக்கா ஜல சந்திக்கு அருகில் தோன்றியுள்ள புயலுக்கு சென்யார் எனப் பெயரிடப்பட்டுள்ளமையால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலானால் அதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த  டித்வா( Ditwah)- இயற்கையால் அமைந்த ஏரி- எனப் பெயரிடப்படும்

துணை முதல்வருக்கு பிறந்தநாள் பரிசு: இளைஞரணி சார்பாக ஜோயலின் பாடல் வரியில் ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ - மூன்றாம் படைப்பு வெளியீடு.

Image
2021 தேர்தலில் "ஸ்டாலின் தான் வர்றாரு" என்ற பாடல், பொதுமக்களிடையே எழுச்சியை பெற்றது. இதனை தொடர்ந்து ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ என்ற புரட்சி பாடல் வருகின்ற 2026 தேர்தலில் தொண்டர்களை உச்சாகபடுத்த காத்திருக்கிறது என்கின்றனர் திமுக இளைஞரணியினர்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் எஸ்.ஜோயல் பாடல் வரிகளில் ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ என்ற பாடல் வெளியீட்டு விழா நேற்று 25ம்தேதி நடைபெற்றது. இந்த விழாவில், ‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’ என்ற பாடலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் அதை பெற்றுக்கொண்டனர். தி.மு.க. இணைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நவம்பர் 27ம் தேதி! ஆனால், நவம்பர் 25ம் தேதியே தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அறிவாலயத்தில் அனைவரும் எழுச்சியுடன் காணப்பட்டனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொ...

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்பு.!

Image
  நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் is ப்ரியங்கா முன்னிலையில் இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டிைன இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சாா்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல் அரசியல் நீதி, எண்ணம், அதன் வௌியீடு கோட்பாடு சமயநம்பிக்கை வழிபாடு இவற்றில் தன்னுாிமை சமுதாயப்படிநிலை வாய்புநலம் இவற்றில் சமன்மை ஆகிவற்றை எய்திடச் செய்யவும், அவா்கள் அனைவாிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஓற்றுமை ஓருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புாிமையிணை வளா்க்கவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்று வாசிக்க அதனை தொடர்ந்து இந்திய அரசமைப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.  மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், ஆகியோா் உடனிருந்தனா்.

"ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின்"- கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் பேச்சு.!

Image
கோவில்பட்டி: ஆதித்தமிழர் கட்சி சார்பில், திராவிடத்தின் எழுச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான சமூக நீதி பயணம் கன்னியாகுமரியில் கடந்த 21ம் தேதி துவங்கியது.இந்த பயணம் கோவில்பட்டி வந்தடைந்தது. கோவில்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு, ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். தென்மண்டல ஊடகப் பிரிவு செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கழுகுமலை குமரேசன் பகுதியில் தொடங்கி மந்திதோப்பு கிராமம், கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகர், ஸ்டாலின் காலனி, கரிசல்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதித்தமிழர் கட்சி நிறுவனத்தலைவர் ஜக்கையன் திறந்த வேனில் பேசுகையில்: மனிதர்களை ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக பார்ப்பதுதான் திராவிடம். திமுக., ஆட்சி மீண்டும் வந்தால் தான் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாகவும், சுயமரியாதையாகவும் இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் தான். 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி ...

தூத்துக்குடியில் மழைக்காலத்தில் 24மணி நேரமும் கண்காணிப்பு- மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.!

Image
  தூத்துக்குடியில் எந்த மழை வந்தாலும் சமாளித்து எதிர்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.  தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தார். முகாமில் மேயர் பேசுகையில் "மாநகராட்சி பகுதியில் கடந்த 21 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் அடிப்படையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.  இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் சூழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  கடந்த நான்கரை ஆண்டுகளாக த...

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு தலா 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை!

Image
  11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 4 பேருக்கு தலா 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் நாசரேத் பகுதியைச் சேர்ந்தவர்களான தர்மராஜ் மகன் தினேஷ் (33), முருகன் மகன் இசக்கிமுத்து (33), சீனிராஜ் மகன் ஸ்டாலின் (38) மற்றும் முத்துராமன் மகன் ஐக்கோர்ட்துரை(33) ஆகிய 4 எதிரிகளை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 2,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் க...

கிராம உதவியாளர் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு

Image
  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய ஒன்பது வட்டங்களில் 2025-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னர், 01.11.2025 (சனிக்கிழமை) முதல் 15.11.2025 (சனிக்கிழமை) வரையிலும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இந்நேர்வில் 17.12.2025 (புதன்கிழமை) அன்று நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்தும் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத்  தெரிவித்துள்ளார...

"லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை, தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கோழி தான் இருக்கிறது" - சார் பதிவாளர் அலுவலகத்திற்க்கு வந்த விவசாயியால் பரபரப்பு.!

Image
தன்னுடைய நிலம் முறைகேடாக தனியார் நிறுவனத்திற்கு பத்திர பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேள தளம் முழங்க தலையில் தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை, கோழியை சுமந்து விவசாயி மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்த கிராமத்தில் இவரது குடும்பத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 35 சென்ட் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலம் சில மாதங்களுக்கு முன்பு தனியார் சோலார் நிறுவனம் (ஸ்பீடு பூமி ப்ரோமோட்டர்ஸ்) ஒன்றிக்கு பத்திர பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ்  இது தங்களுடை சொந்தம் நிலம், அதற்குரிய ஆவணங்கள் தங்களிடம் இருக்கும் போது, எப்படி தனியார் நிறுவனத்திற்கு பத்திர பதிவு செய்ய முடியும், முறைகேடாக செய்யப்பட்டுள்ளதாக கொப்பம்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.  இதற்கிடையில் நேற்று முன்தினம் அந்த தனியார் நிறுவனத்தினர் இவர் விவசாய நிலத்தில் பயிரிட்டு இருந்த பயிர்...

வேலூர் மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம் - மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி பங்கேற்பு.!

Image
  வேலூர்மாவட்டம் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி முன்னிட்டு வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியில் இன அனி சார்பில் மாவட்டத் தலைவர் ஏகே டிவி நிறுவனர் சரவணகுமார், தலைமையில்  வேலூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த பாபா ஷாகிப் அம்பேத்கர், திருவுருவப்படத்திற்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதையும் செலுத்தினார்.பின்னர் அரசியலமைப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.  இதில் மாவட்ட சிறுபான்மை தலைவர் காட்பாடி கே, ஜி,குட்டி, பாஜக வேலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட பொது செயலாளர் சரவணகுமார், மண்டல தலைவர் ஜெய், காகிதப்பட்டறை பழனி, உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர்  கலந்து கொண்டனர். செய்தி: வெங்கடேசன்                                ...

குடியாத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா.!

Image
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் வார்டு எண் - 32ல் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 11.00 இலட்சம் மதிப்பீட்டில்  பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி  ஏற்பாட்டில் நகராட்சி மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன்‌ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலூர்  வடக்கு மாவட்ட பொறுப்பாளர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கதிர் ஆனந்த் எம்பி கலந்துக்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் ஒன்றிய கழக செயலாளர்கள்  கள்ளூர் ரவி,  லோ. இரவிச்சந்திரன், கே.சீதாராமன், ஆர்.முருகேசன்,  நகர மன்ற உறுப்பினர்கள், கோபாலகிருஷ்ணன். மனோஜ். தீபிகா தயாளன். லாவண்யா குமாரன் நகர கழக துணை செயலாளர் ஜம்புலிங்கம் மற்றும் நிர்வாகிகள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் விவேகானந்தன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். செய்தி: வெங்கடேசன்                                வேலூர் மாவட்ட செய்தியாளர்

வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரர்கள் தேர்வு வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது - மாவட்ட சங்க தலைவர் நறுவீ சம்பத் தகவல்.

Image
  வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரர்கள் தேர்வு வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆர்வமுள்ள 12 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி. வி. சம்பத் தெரிவித்துள்ளார்.  இது சமந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த கிரிக்கெட் வீரர்களாக உருவாக்கும் பணியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதன்படி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு12 வயதுக்குட்பட்ட இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு வரும் 30-ம் தேதி (30.11.25) காலை 10 மணிக்கு வேலூர் புதிய பைபாஸ் சாலை ராஜேஸ்வரி அம்மையார் வளாகத்தில் உள்ள வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அகாடமியில் நடைபெறுகிறது. இதில் 01.09.2013 அன்றோ அதற்கு பிறகோ பிறந்து 12 வயதுக்கு உட்பட்டவர்கள் உரிய வயது சான்று, ஆதார் கார்டு மற்றும் கிரிக்கெட் உடையுடன் பங்கேற்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்வு பற்றிய தகவல்களை மாவட்ட கிரிக்கெட் சங்க கௌரவ செயலாளர் ஸ்...

தீயணைப்புத்துறை லஞ்ச வழக்கில் அதிகாரியை சிக்க வைக்க திட்டம் - தூத்துக்குடி தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றுபவர் உட்பட இருவர் கைது.!

Image
  நெல்லை: தீயணைப்புத்துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்க வைக்க, அலுவலகத்தில் பணம் வைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை நடந்த நாளின் முந்தைய நாளன்று இரவில் மர்ம நபர், அலுவலகம் வந்து செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரிக்க தூத்துக்குடி தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஆனந்த் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: 69 வயது பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

Image
  ஏரல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்ட்டார்.  தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர் பன்னீர்செல்வம் (வயது 69). இவர் ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ரூ.10கோடி முறைகேடு: தூத்துக்குடி மாநகராட்சியின் உதவி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு.!

Image
  தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் உதவி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம் பிரிக்க, 2018ல் 'பயோமைனிங்' முறையில், 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்கு, குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஒப்பந்தம் இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி, 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது.  பின், புதிய நிறுவனத்துக்கு, 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க, 10.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும், 5,000 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, 10.60 கோடி ரூபாய் பில் தொகையை வாங்கியுள்ளார். அதற்கு, 8, 328 யூனிட் மின்சாரத்தை பயன் படுத்தியுள்ளனர். இதில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தஞ்சாவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் ...

"திருட வந்தால் வீட்ல காசு வைக்க மாட்டீங்களா ? எதற்கு இத்தனை கேமரா? போங்கடா வெண்ணைகளா" - கடுப்பான திருடன்.!

Image
திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜேம்ப்ஸ் பாண்ட். இவர் மதுரையில் வசித்து வருகிற தனது மகளை பார்ப்பதற்காக குடும்பத்தோடு சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டிலிருந்த பீரோ மற்றும் பிற பொருட்களை உடைத்து, ஏதேனும் நகை மற்றும் பணம் இருக்கிறதா என தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் வீட்டில் எடுத்து செல்ல ஏதும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன், வீட்டின் உரிமையாளருக்கு 4 பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில், ‘வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. அடுத்த தடவை என்னை மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற்ற வேண்டாம். காசு வைக்கவும். எதற்கு இத்தனை கேமரா? போங்கடா வெண்ணைகளா...என்னை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு திருடன்” என்று எழுதியுள்ளார். பணம், நகை ஏதும் இல்லாததால், கடைசியாக அங்கிருந்த ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உண்டியலை மட்டும் எடுத்துச் சென்ற திருடன், தான் யார் என்பதை கண்டுபிடித்துவிடக் கூடாது என சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் கழற்றிச் சென்றுள்ளார். மதுரையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய ஜேம்ஸ் பாண்ட், வீ...

கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீருடை வழங்கினாா்.

Image
  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூரை சோ்ந்த லவ்லி பிரன்ட்ஸ் கிாிக்கெட் அணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா ஏற்பாட்டில் தூத்துக்குடி கணேஷ்நகாில் உள்ள தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகத்தில் கிாிக்கெட் வீரா்களுக்கு சீருடைகள் வழங்கினார்.  பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்:- விளையாட்டு என்பது எல்லோருக்கும் இளமைபருவத்தில் தேவையான ஓன்றுதான் அதில் ஓவ்வொரு வகையான போட்டிகளை தோ்வு செய்து விளையாடி வருகின்றனா். பலா் தங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்து தங்களது பொழுதுபோக்கை திறமைகளின் மூலம் வௌிப்படுத்துவது வழக்கமான ஓன்று அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டியை சிறப்பாக செய்து ஊக்குவிக்கும் வகையில் இதை முன்னெடுத்து வழங்கிய ஓன்றிய செயலாளர் இளையராஜாவை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தை பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுதுறையை பொறுப்பேற்ற நாள் ம...

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது" - அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!

Image
  வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டு மாநகரில் சூழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், புஷ்பாநகா், முல்லை நகா், அம்பேத்கா் நகா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்:-  "தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில் தாழ்வான பகுதிகளான மாநகராட்சிக்குட்பட்ட 16,17வது வார்டு பகுதியான கதிர்வேல் நகர், தபால் தந்தி காலனி, பாரதி நகர், புஷ்பா நகர் கோக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இந்த பகுதிகளில் மழை நீைர அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாக சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் துறைமுக தீயணைப்பு வாகனம் த...

தூத்துக்குடி கிள்ளிக்குளம் மாணவ மாணவிகள் மூலம் விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி.!

Image
  தூத்துக்குடி வல்லநாடு அருகே கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பார்த்தீனியம் என்ற விஷப்பூண்டு செடியை அகற்றும் பணி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.   பின்னா் கல்லூரியின்  நாட்டு  நலப்பணித்திட்ட அலுவலர் புவனேஸ்வரி மாணவ மாணவர்களிடம் கூறுகையில்  "பார்த்தீனியம் மனிதர்களின் தோல் அழற்சி மற்றும் ஆஸ்துமாப் போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கால்நடைகள் இதனை உண்ணும் போது அதன் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. பாலின் தரம் குறைகிறது. இது வேகமாகப் பரவி, மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனை தொடக்க நிலையிலே அகற்ற வேண்டும் ,இல்லையெனில் வளர்ந்து வெடித்து பரவும் தன்மை கொண்டது. இதனால் மற்ற செடி, கொடிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் இதனை  ஒரு லிட்டர் தண்ணீரில் அட்ரசின் 4 கிராம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 8 கிராம் 2,4-டி கலந்து தெளிப்பதன் மூலம் தவிர்க்கலாம். மேலும் எளிமையான முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் 200 கிரா...

தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.!

Image
  வங்கக்கடலில் நாளை புயல் உருவாவதை ஒட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம். திடீரென காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலைக்கு துறைமுகம் உள்ளாகக் கூடும் என்பதை இது குறிக்கிறது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை

எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை : இந்தியாவை நோக்கி நகரும் சாம்பல் மேகம்.!- கொச்சியில் இருந்து துபாய், ஜித்தா செல்லும் ஆகாசா ஏர், கேஎல்எம், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து.!

Image
  எரிமலை வெடிப்பு எச்சரிக்கையைப் பின்பற்றுமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் DGCA அறிவுறுத்தல்களை வெளியிட்ட பிறகு, பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட வழித்தடம் வழியாக செல்லும் விமானங்களை ரத்து செய்தன. எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக அமைதியாக இருந்த ஹேலி குப்பி எரிமலை கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்த நிலையில் , மிகப் பெரிய ஒரு பெரிய சாம்பல் மேகம் வட இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இந்த வெடிப்பு அருகிலுள்ள அப்தேரா கிராமத்தை தூசியால் மூடியது, மேலும் மேகம் கிழக்கு நோக்கி நகர்வதற்கு முன்பு செங்கடலின் குறுக்கே ஏமன் மற்றும் ஓமன் நோக்கி அடர்த்தியான புகைமூட்டங்களை உண்டாக்கியது. துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (VAAC) கூற்றுபடி, வெடிப்பு காலை 8.30 மணியளவில் UTC இல் தொடங்கியது என்றும், கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளில் இது முதன் முறை என தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு தற்போது நின்றுவிட்டாலும், "ஒரு பெரிய சாம்பல் புகை வட இந்தியாவை நோக்கி நகர்கிறது" என்று துலூஸ் VAAC கூறியது, இதனால் வானிலை நிறுவனங்கள் அதன் பாதையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. யாருக்கும் காய...